எங்கள் ஊரைப்பற்றி தொடர் பதிவு எழுத வாய்ப்பளித்த தேவதைக்கு முதற்கண் ந்ன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலத்திற்குப்பக்கத்தில் இருக்கும் ஊர்.
வடகிழக்குப்பகுதியில் ஏரியும் தென்மேற்குப்பகுதியில் திருப்பதி சிலாதோரணம பகுதியில் காணப்படும் பாறைகளுக்கு இணையானகுன்றுப்பகுதியும் கொண்டு வாஸ்து சிறப்பு பெற்ற ஊர்.
எட்டுப்பட்டி மாரியம்மன கோவிலில் நடைபெறும் ஆடிமாத மாரியம்மன் பண்டிகையும் அன்று நடைபெறும் வண்டி வேடிக்கை,முளைப்பாலிகை மாவிளக்கு, , கரகாட்டம், ஒயிலாட்டம், பிரபலங்களின் பாட்டுக் கச்சேரி என திருவிழா நிகழ்ச்சிகள் களைகட்டும்.
பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அப்போதெல்லாம் நடைபெறும்.
காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேர்விழா விமரிசையாக நடைபெறும். காவடிகள் ஆடிவரும்.
பாம்பு கடித்தவர்களை புளிய மர நிழல் படாமல் கோவில் பிரகாரத்தில் கொண்டுவந்து திருநீறு கொடுத்தால் விஷம் இறங்கிவிடும் என்பது நம்பிக்கை. மிகவும் சக்தி வாய்ந்த முருகன் திருத்தலம்.
முனியப்பன் கோயில், ஊஞ்சக்காட்டு பெருமாள் கோயில், ஆற்றுப்பிள்ளையார் கோயில், புற்றுக்குப் பொங்கல் என்று அடிக்கடி பொங்கலுக்குத் தேவையான பொருள்களுடன் சென்று பொங்கல் வைத்து படையல் போட்டு வருவோம்.ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடும். கையால் சுற்றப்பட்ட முறுக்கு,மரவள்ளிக்கிழங்கு அப்பளம் , அதிரசம் எல்லாம் சுவையுடன் கிடைக்கும்.
பள்ளியில் படிக்கும் போது வழியில் இருக்கும் ஞானானந்தகிரி ஆஸ்ரமத்தில் இருக்கும் அழகான முருகன் கோவிலுக்குச் சென்று வணங்கிய பின்பே பள்ளி செல்வது வழக்கம். அங்கே பல சமயங்களில் ஞானானந்தகிரி சுவாமிகள் தங்கி இருப்பார்.
பள்ளியில் ஆறு தன் வரலாறு கூறுதல் பற்றி கட்டுரை எழுதச் சொல்ல நொய்யல் ஆறு பற்றி எழுதினேன்.
எல்லோரும் கோனார் தமிழ் உரையை மனப்பாடமாக எழுதியிருக்க, சொந்த நடையிலான என் கட்டுரையைப் பார்த்து வியந்துபோன தமிழாசிரியர் அழகான கட்டுரையை அனைத்து வகுப்புகளுக்கும், தலைமை ஆசிரியருக்கும் காட்டி பாராட்டினார்.
அன்று நான் நினைத்தேனா கோவை என் புகுந்த ஊராகும் என்று!!
சிறுவாணித்தண்ணீரின் சுவையும் , ஈரப்பதமுள்ள காற்றும் தவழும் ஊர். ஊட்டி அருகில் இருப்பதால் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்கிறோம் என்று வாகனத்தை எடுத்தால் பலமுறை ஊட்டிக்குச் சென்று விடுவதுண்டு.
குன்னத்தூர் வழியாக கோவை வருவதற்கும், சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் அடைவதற்கும் நிறைய பேர் தயங்கி நேர்வழி பேருந்தை நாடுவார்கள்.
எனக்கோ அந்தப்பயணங்கள் மிகவும் பிடிக்கும்.மலைப்பாதைகளின் இடையேயான பயணக் காட்சிகளை ரசிப்பேன்..
கல்லூரி படித்தது நாமக்கல். நாமகிரி என்று அழைக்கப்படும் 65 அடி உயரமுள்ள பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது.
ஊரே அந்தக் கல்லைச் சுற்றித்தான் உருவாகி யிருக்கிறது.
வழக்கமாக ஆற்றைச் சுற்றிலும் ஊர் உரு வாகும்; இங்கே கல்லைச் சுற்றி ஊர். அதிசயம்தான்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் எதிரில் ஒரு திருமண மண்டபத்தின் அருகே அப்போது மாணவியர் தங்கும் விடுதி இருந்தது.
நாமகிரி லட்சுமி தாயாரின் தரிசனமும், குடைவரை கோவிலான நரசிம்மரின் தரிசனமும் அற்புதமானது. . உள்ளே சென்றாலோ மிக அற்புதமான புடைப்புச் சிற்பக் கவிதைகளை, பார்க்கப் பார்க்கச் சலிக்காத சிற்ப எழிலைத திகட்டத் திகட்டக் காணலாம்
இந்தப் பாறையின் மீது நாயக்கர் காலத்தைய கோட்டை ஒன்று இருக்கிறது;
கமலாலயம் கரையில் இருக்கும் கார்க்கோடக சயன ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதரின் காலடியில் இருந்து ஊற்றெடுக்கும் நீரே கமலாலயக் குளம் என்று சொல்வார்கள்.
என் கணவரின் தந்தை ஒவ்வொரு சித்திரை மாத முதல் நாளும் திருச்செந்தூருக்கும், கார்த்திகை பௌர்ணமிக்கு திருவண்ணாமலையும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருதார்.
அவர் மறைவிற்குப் பின் கணவரும் திருவண்ணாமலை தரிசனத்திற்கு செல்ல அரம்பித்தார்.
அவரிடம் ஞானனந்தகிரி சுவாமிகளைப் பற்றிக் கூற, திருக்கோவிலூரில் இருக்கும் ஞானானந்த தபோவனத்திற்கு சென்று தரிசித்து வந்தார்.
ஏற்காட்டில் இருக்கும் ஞானானந்தகிரி ஆஸ்ரமத்தில் தங்கினோம் ., சுவாமிகள் தங்கி இருந்த அறையில் அவரது உருவப்படத்தின் முன் தியானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஏற்காட்டில் இருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் அருமையாக பராமரிக்கிறார்கள்.
சேர்வராயன் மலைக்குகை கோவில் சுரங்கப் பாதை அதிசயப்படவைத்தது.
மகன்கள் படிக்க, உத்தியோகம் பார்க்க என்று ஆஸ்திரேலியா சொல்ல, அவர்களைப் பார்க்க சென்ற நாடு கவர்ந்தது.
வியட்நாமிய மார்க்கெட் எல்லாக் காய்கறிகளும் கிடைத்தன. கீரை வகைகள் தோட்டத்திலேயே சுத்தம் செய்யப்பட்டு சதுரவடிவத்தில் க்ட்டிகளாகப் பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகின்றன. இரண்டு பாக்கெட் வாங்கினால் ஒன்று ஃப்ரீயாம்.
நிறைய பேரை நாய்களுடன் பார்க்கமுடிந்தது.
ஒரு அழகுப் பெண்மணி மூன்று மிக அழகிய ஒரேமாதிரியான குட்டிநாய்களை திரிசூலம் மாதிரியான சங்கிலியில் இணைத்து நடத்திச் சென்றதை கண்கொட்டாமல் கடந்து சொல்லும் வரை பார்த்து மகிழ்ந்தேன்.
நாய்கள் குரைக்கும் சத்தமோ காரின் ஹார்ன் சத்தமோ கேட்டதே இல்லை. நாய்கள் குரைக்கிறதென்று யாராவது புகார் கொடுத்தால் சிட்டி கவுன்சிலின் நடவடிக்கை பாயுமாம்.
(பெங்களூரில் அலுவலகம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே நாய்களின் ஓயாத குரைப்பொலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது குளிபதன வசதியையும் மீறி....
பக்கத்து பூங்காவில் நோயுற்ற நாய்களைப் பராமரிக்கிறார்களாம்.
அந்த பூங்காகுழந்தைகள் விளையாடும் விளையாட்டுச் சாதனங்களோடும் அழகிய மரம் செடி கொடிகளோடும் அருமையாக பராமரிக்கப்பட்டு இருந்தது. சில விலங்குகள் கூண்டுகளில் . தனி இடத்தில் ஆக்ரோஷமாக நாயகள் விதவிதமாக கத்திக்கொண்டு.)
ஆஸ்திரேலியாவில் மகன்கள் வரவேற்பறையில் உலக வரைபடத்தையும் , உலக உருண்டை மாதிரியையும் கொண்டு வந்து வைத்தனர். அம்மாவுக்கு உலகம் தெரியவில்லை என்று உலகத்தைப் புரிய வைக்கும் முயற்சியாம்.
ஏனோ அங்கு இருந்தவரை பூமிப்பந்தின் ஓ,,,,ரத்தில் ஒருகால் மட்டும் பதிந்திருதிருந்த அந்நிய உணர்வு. அங்கிருந்தபோது வியந்தது முழுநிலவு இந்தியாவில் காணப்படுவதை விட பெரிதாகவும் அதிக ஒளியுடனும் இருந்ததும், வானவில் அடிக்கடி காட்சிப்பட்டதும், நிமிடத்திற்கொரு அழ்குத்தோற்றம் காட்டும் அழகிய வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதோ என்று தோன்றவைத்து மிகக் கவர்ந்தது.
கோவை விமானநிலையம் வந்து பாதம் தொட்டபின்பே நிம்மதி வந்தது.
உங்களுக்கு தொடர்புடைய பல ஊர்களின் நினைவுகளை சுவையாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஊரின் பெருமையை அழகாய், அருமையாய் எழுதிவிட்டீர்கள்.
ReplyDeleteசேலம் ஊத்துக்குளி முருகன் எனநினைக்கிறேன் பார்த்தோம். அழகிய சிறிய முருகன். மலை மேல் இருந்து பார்த்தால் ஊரின் அழகு தெரியும்.
கந்தாஸ்ரமம் அழகுதான் உங்கள் ஊரில்.
"சொர்க்கமே என்றாலும் ....நம்ம ஊரு pola varuma"
ReplyDeleteTrue periyamma
family, relatives, friends, food, work..
Thumbs up! Good work periyamma!
ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் உங்க ஊர்
ReplyDeleteபற்றிதெரிந்து கொந்ததில் சந்தோஷம்.
பகிர்வுக்கு நன்றி
கண்ணைக் கவரும் நிழற்படங்களுடன் தாங்கள் பகிர்ந்தெழுதிய வரிகள் எங்கள் கண்முன்னே நிஜம் போல விரிகின்றது. என் துணைவியாரின் ஊர் குன்னூர். சிறு பிராயத்தில் நான் வசித்தது திருக்கோவிலூரில். ஆதலாலோ என்னவோ இப் பதிவில் உள்ளத் தகவல்கள் இன்னமும் சுவாரசியமாகத் தென்படுகின்றது.
ReplyDeleteவழக்கம்போல பல்வேறு ஊர்கள், பல்வேறு தகவல்கள், ஆன்மீகம் கலந்த அற்புதமான சமையல். நல்ல விருந்துண்ட மகிழ்ச்சி எங்களுக்கு.
ReplyDeleteபள்ளியில் படிக்கும்போதே, சொந்த
நடையில், ஆறு பற்றிய கட்டுரை.
விளையும் பயிர் முளையிலே என்று சும்மாவா சொன்னார்கள்!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
/;//பள்ளியில் ஆறு தன் வரலாறு கூறுதல் பற்றி கட்டுரை எழுதச் சொல்ல சிறுவாணி ஆறு பற்றி எழுதினேன். எல்லோரும் கோனார் தமிழ் உரையை மனப்பாடமாக எழுதியிருக்க, சொந்த நடையிலான என் கட்டுரையைப் பார்த்து வியந்துபோன தமிழாசிரியர் அழகான கட்டுரையை அனைத்து வகுப்புகளுக்கும், தலைமை ஆசிரியருக்கும் காட்டி பாராட்டினார்.///
ReplyDeleteஅன்று தொடர்ந்த பாராட்டு உங்களுக்கு இன்று வரை தொடர்கிறது
அருமையான பகிர்வு , நன்றி
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கண்ணைக் கவரும் நிழற்படங்களுடன் தாங்கள் பகிர்ந்தெழுதிய வரிகள் எங்கள் கண்முன்னே நிஜம் போல விரிகின்றது.அருமையான பகிர்வு.
ReplyDeleteஊர் பற்றிய அருமையான தகவல்கள். நல்ல நினைவலைகள். திருக்கோவிலூர் என் அப்பா சிறு பிராயத்தில் இருந்த ஊர். நானும் ஒரு முறை சென்றிருக்கிறேன். உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.
ReplyDeleteநினைவுகள் பகிர்ந்ததற்கு நன்றி தோழி,,
ReplyDeleteஊரின் பெருமையை அழகாய், அருமையாய் எழுதிவிட்டீர்கள்.
ReplyDeleteபற்பல புதிய தகவல்கள் ,படங்களும் அருமை .மொத்தத்தில் பல்சுவை விருந்து .
ReplyDeleteநல்ல பல தகவல்களை அறிய முடிந்தத பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஎங்க ஊர்'னதும் நம்ம கோவை பத்தி எழுதி இருக்கீங்கன்னு நம்பி ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே....ஹா ஹா... சும்மா சொன்னேன்... சேலத்தை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சிங்க...:)
ReplyDelete//அம்மாவுக்கு உலகம் தெரியவில்லை என்று உலகத்தைப் புரிய வைக்கும் முயற்சியாம்//
அழகு தான் போங்க..:)
//முழுநிலவு இந்தியாவில் காணப்படுவதை விட பெரிதாகவும் அதிக ஒளியுடனும்//
வாவ்... உங்களுக்கும் இப்படி தோணுதா? நான் இதை சொன்னா எல்லாரும் கிண்டல் பண்றாங்க... இங்கயும் நிலவு பெருசா தெரியுது.. நிஜம் தான்... :)
//கோவை விமானநிலையம் வந்து பாதம் தொட்டபின்பே நிம்மதி வந்தது//
அதான் சொல்றது... சொர்கமே என்றாலும்....:)))
Super post madam
ReplyDeleteபடங்கள் பதிவு இரண்டுமே நல்லாய் இருக்கு
ReplyDeleteவணக்கம் ராஜேஸ்வரி மேடம்.. உங்கள் பதிவு ரொம்ப நன்றாக உள்ளது.கோவில்களை பற்றி நீங்கள் எழுதுவது நாங்களே அங்கு நேரில் சென்று தைய்வ தரிசனம் செய்துவிட்டு வந்த உணர்வை கொடுக்கிறது...
ReplyDeletefrom kavitendral panneerselvam
ReplyDeleteவணக்கம்.. வாழ்க வளமுடன்..
கட்டுரையை படித்து முடிக்கும் வரை
நான் சொர்க்கத்தில் இருந்ததாக ஓர்
இனிய அனுபவம் ! /
நன்றி.
என்னுடைய ஊர் சுசீந்தரத்திற்கு வாங்க.......... தாணுமாலய பெருமாள் சாமியின் அருள் பெற்று அத்தலத்தை பற்றியும் எழுதுங்கள்
ReplyDelete;)
ReplyDeleteகுருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
குருர்-தேவோ மஹேஷ்வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
672+2+1=675
ReplyDeleteஅன்புடையீர், தாங்கள் ஊர் பெயரின் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். முருகன் கோவில் எங்குள்ளது? சுவாமிகள் எங்கு இருந்தார்? விவரம் தெரிவிக்கவும். தங்களுக்கு சுவாமியிடன் பெற்ற அனுபவங்கள் என்ன? மிக்க நன்றி. என்.ஆர்.ரங்கனாதன். 9380288980
ReplyDeleteஅன்புடையீர், ஞானானந்தகிரி ஸ்வாமிகளைப் பற்றி சில தகவள்கள் கேட்டேன். பதில் இல்லை.
ReplyDeleteN.R.Ranganathan. id nrpatanjali@yahoo.com