தங்கின தங்கத் தருணங்கள்..
சில ஆண்டுகளுக்கு முன் மலேசிய சிங்கப்பூர் சுற்றுப்பயணத்திற்காக நாற்பது பேர் கொண்ட குழு கோவையிலிருந்து கிளம்பினோம்.
அப்போது சென்னையிலிருந்துதான் விமானம். இரவு கிளம்பிய ரயில் முன் சென்ற ரயில் சில பிரச்சினைகளால் மேற்கொண்டு செல்லாமல் நின்று விட எங்கள் ரயிலும் நடுக்காட்டில் நின்றுவிட்டது.
அனைவரும் லக்கேஜ்களை சுமந்து கொண்டு ரயில் பாதையின் சரளைக் கற்கள் வழியே நடந்து சாலையின் அருகில் ஓரத்தில் கொளுத்தும் வெயிலில் அந்த வழியாக பேருந்து ஏதும் வருகிறதா என பார்த்தவாறு காத்திருந்தோம்.
இனியும் காத்திருந்தால் சென்னையில் விமானம் கிளம்பிவிடுமே என்று என் கணவர் அருகில் இருந்த நகரான திருச்செங்கோட்டிற்கு பஸ்ஸில் சென்று தனியார் வேன் அமர்த்தி வந்தார்.
அந்த வேன் எரி பொருள் போட பெட்ரோல் பங்க் சென்ற போது வேன் கதவை ஓட்டுநர் திறக்க பின்னால் வந்த வாகனம் ஒன்று மோதி கதவு உடைந்து விட்டதாம்.
அருகில் இருந்த உறவினர் கண்கலங்க சகுனம்சரியாகத் தெரியவில்லை. தயவுசெய்து பயணத்தை நிறுத்திவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அங்கு இருந்த ஆபத்காத்த விநாயகர் கோவிலுக்கு எலுமிச்சம்பழமும்,பூவும் கொண்டுபோய் அர்ச்சனை செய்து ஆபத்து ஏதும் சம்பவிக்காமல் இனிது பயணம் நிறைவேற பிரார்த்தித்துக்கொண்டு வேறு வாகனம் ஏற்பாடு செய்து அனைவரும் வேகமாக சென்னை விமான நிலையம் அடைந்து அவசரமாக செக் இன் செய்து விமானம் ஏறும்வரை டென்ஷன்.. அவசரம்.
மனம் கவர்ந்த மலேசியா, அழகிய சிங்கப்பூர், கோவை அளவே இருந்தாலும் உலகப் பொருளாதாரத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் ஹாங்காங் என்று அருமையான சுற்றுலாவாக
அமைந்தது.
மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோயில்
உலகின் மிகப்பெரிய முருகன் சிலை
மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில்முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் ..
இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் ..
இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார்.
பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ள தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார்.
கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார்.
பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது.
மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது..
ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும்.
எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது ...
பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ள தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார்.
கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார்.
பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது.
மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது..
ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும்.
எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது ...
1938 ஆம் ஆண்டில் மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது.
தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி.
உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன..
தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் உண்டு
தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம்
ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம்
ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.
பத்துமலை திருக்குமரனை
ReplyDeleteதங்கள் தயவால் தரிசித்தோம்
படங்களும் விளக்கங்களும்
வழக்கம்போல் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
நல்ல தகவல்கள். பாலம் படம் அழகு.
ReplyDeleteஅதிசயமாய் பார்த்து ரசித்தேனுங்க.. அருமையான படங்களின் பிரவாகிப்பு...
ReplyDeleteDear thozi,
ReplyDeleteYour article is rendering marvellous attitude.
@Ramani said...
ReplyDeleteபத்துமலை திருக்குமரனை
தங்கள் தயவால் தரிசித்தோம்
படங்களும் விளக்கங்களும்
வழக்கம்போல் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
சுவர்ணபூமி சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்
ReplyDeleteஎல்லா படங்களும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு
ReplyDelete@ ஸ்ரீராம். said...
ReplyDeleteநல்ல தகவல்கள். பாலம் படம் அழகு.//
கருத்துக்கும் ரச்னைக்கும் நன்றி
@ ♔ம.தி.சுதா♔ said...
ReplyDeleteஅதிசயமாய் பார்த்து ரசித்தேனுங்க.. அருமையான படங்களின் பிரவாகிப்பு.//
அதிசயமாய் அருமையாய் கருத்துக்கு நன்றிங்க.
This comment has been removed by the author.
ReplyDelete@ tamilvirumbi said...
ReplyDeleteDear thozi,
Your article is rendering marvellous attitude.//
நன்றி ஐயா.
@ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteசுவர்ணபூமி சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்//
எல்லா படங்களும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு//
நன்றி ஐயா.
முருகா..முருகா.... ;-))
ReplyDeleteகண்ணையும் மனதையும் கவரும்
ReplyDeleteபடங்கள் அருமையான விளக்கங்கள்.
பத்துமலை முருகரை உக்காந்த இடத்தி
லிருந்தே தரிசனம் செய்யவைத்து விட்
டீர்கள். நன்றி
பத்துமலை திருக்குமரனை
ReplyDeleteதங்கள் தயவால் தரிசித்தோம்..
நன்றி..
//அங்கு இருந்த ஆபத்காத்த விநாயகர் கோவிலுக்கு எலுமிச்சம்பழமும்,பூவும் கொண்டுபோய் அர்ச்சனை செய்து ஆபத்து ஏதும் சம்பவிக்காமல் இனிது பயணம் நிறைவேற பிரார்த்தித்துக்கொண்டு வேறு வாகனம் ஏற்பாடு செய்து அனைவரும் வேகமாக சென்னை விமான நிலையம் அடைந்து அவசரமாக செக் இன் செய்து விமானம் ஏறும்வரை டென்ஷன்.. அவசரம்.//
ReplyDeleteபடிக்கும்போது எனக்கே ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. ஆபத்காத்த அந்தத்தொந்திப்பிள்ளையாருக்கு நன்றி.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று பல்வேறு தகவல்கள் தொகுத்து அளித்து,அழகான படங்கள் வெளியிட்டு, எங்களையும் அங்கெல்லாம் தங்களுடன் கூடவே அழைத்துப்போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
//சுவர்ணபூமி விமான நிலைய வெளிப்புறத் தோற்றம் //
ReplyDeleteபெயருக்கு ஏற்றாற்போலவே சுவர்ணபூமியே தான். அழகோ அழகு.
Rich ஓ Rich. பாஸ்போர்ட், விசா, பயணக்களைப்பு, பணச்செலவு ஏதுமின்றி வீட்டிலிருந்தபடியே எல்லாம் கண்டு களிக்கிறோம். எல்லாம் உங்கள் தயவில் தான், என்பதில் சந்தேகமில்லை. நன்றி.
//1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது.//
ReplyDeleteஅவர்கள் அமைத்தது ஒருபுறம் இருக்கட்டும். அதை அழகாக எங்களுக்குப்படம் பிடித்துக் காட்டியுள்ளீர்களே, அதுதான் மிகச்சிறப்பாகத்தோன்றுகிறது, எனக்கு.
@ RVS said...
ReplyDeleteமுருகா..முருகா.... ;-))//
நன்றி . முருகா..முருகா...
@Lakshmi said...
ReplyDeleteகண்ணையும் மனதையும் கவரும்
படங்கள் அருமையான விளக்கங்கள்.
பத்துமலை முருகரை உக்காந்த இடத்தி
லிருந்தே தரிசனம் செய்யவைத்து விட்
டீர்கள். நன்றி//
வாங்க அம்மா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிகப் பெரிய முருகன் சிலை அந்த முருகனைப்போலவே அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
ReplyDelete"தங்கின தங்கத் தருணங்கள்" என்ற தலைப்பு இங்கு பளிச்செனத்தெரிகிறது.
பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை முருகா, முருகா, முருகா; எங்கள் தெய்வீகப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களையும், அவர்களின் அன்பு வாசகர்களாகிய எங்களையும் காப்பாத்து, காப்பாத்து, காப்பாத்து!!!
பிரியமுடன் vgk
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபத்துமலை திருக்குமரனை
தங்கள் தயவால் தரிசித்தோம்..
நன்றி..//
கருத்துக்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteபடிக்கும்போது எனக்கே ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. ஆபத்காத்த அந்தத்தொந்திப்பிள்ளையாருக்கு நன்றி./
முருகனின் திருமணத்திற்கு வள்ளிக்கு உதவிய கணபதி எங்களுக்கும் அந்தப் பயணத்திற்கு அருளின நிகழ்ச்சி என்றும் நினைவு கொள்கிறோம். கருத்துக்கு நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteஎங்களையும் அங்கெல்லாம் தங்களுடன் கூடவே அழைத்துப்போவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.//
மகிழ்ச்சியான கருத்துக்கு நன்றி ஐயா.
@வை.கோபாலகிருஷ்ணன் said..//
ReplyDeleteஅனைத்து ஆதமார்த்தமான அருமையான கருத்துக்களுக்கும் பத்துமலை முருகன் அருளால் காக்க காக்க.. நன்றி.
அருமையான பதிவு.
ReplyDeleteஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.
வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்கள் எல்லா படங்களும் அழகு
ReplyDeleteபத்துமலை திருக்குமரனை
தங்கள் தரிசித்தோம் நன்றி
kudanthaiyur.blogspot.com
புகைப்படம் எல்லாம் அழகாக இருக்கிறது :)))
ReplyDeleteமுருகன் படங்கலும் பதிவுகலும் அருமை
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!.....
என்னதான் இடர்கள் வந்தாலும் உங்கள் ஆலய தரிசனம் சிறப்பாய் இருந்திருக்க வேண்டும். நல்ல தகவ்ல்களுடன் புகைப் படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி தரமான ஆக்கங்களைத்தருவதுடன் சளைக்காமல் பிறரது ஆக்கங்களுக்கும்
ReplyDeleteபின்னூடம் இட்டு கௌரவிக்கும் தங்களுக்கு
எனது அன்புப்பரிசு காத்திருக்கின்றது. என் வலைத்தளம் சென்று பாருங்கள்.வாழ்த்துக்கள்
601+6+1=608
ReplyDelete;))))) சிரத்தையான பதில்கள் படிக்க மகிழ்ச்சியாக உள்ளன. நன்றி ;)))))