Thursday, June 30, 2011

யானைக் கொண்டாட்டம்..


[guruvayurappan.jpg]


Elephant alphabet 4dru animated letter gif alpha

யானை யானை அழகர் யானை !!! 

அழகரும் சொக்கரும் ஏறும் யானை !!!

அல்லி குளத்தை கலக்கும் யானை !
ஆற்றில் நீரை உறிஞ்சி பீச்சி அடிக்கும் யானை

உச்சி மர இலையையும்உறித்து உண்ணும் யானை
பாடி ஆடும் சிறுவர்களோடு பந்தடிக்கும் யானை....... 

குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம் !
பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சாம் !

என்று எத்தனை முறைபாடினாலும் அலுக்காத பாடல். 

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று
ஆனை கட்டிப் போரடித்த வரலாறு நம்நாட்டிற்குண்டு.

சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளித்த பெருமை மிகுந்தது. 





























குருவாயூருக்கு அருகில்அமைக்கப்பட்டுள்ள ஆனக் கொட்டாரத்தில் நூறுக்கு மேற்பட்ட யானைகள் இருந்தன. யானைத்தாவளம் என்றும் அழைக்கிறார்கள். 

எல்லாம் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தன. 

அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும்...!


அங்கிருந்த ஒரு அழகான குட்டி யானைக்கு தன்னை சங்கிலியால் பிணைத்திருப்பது  பிடிக்கவில்லை போலும்.  
சகாக்கள் எல்லோரும் கட்டின்றி இருக்க தன்னைக் கட்டி வைத்திருப்பதை ஆட்சேபித்துப் பிளிறி சங்கிலியைச் சுட்டிக்காட்டி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

[2860790170078118862BQBnNc_fs.jpg]


[DSCN0123.jpg]
[DSCN0120.jpg]
[DSCN0126.jpg]
[DSCN0115.jpg]


ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன.

 நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. 

இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். 



எல்லாயானைகளும் சுக சிகிச்சை அளிக்கப்பட்டு அருமையான கவனிப்பில் இயற்கை சூழலில் கண்கொள்ளக் காட்சியாக காட்சிப்பட்டன. 

அம்மா அளித்த யானை ராஜ உபசாரத்துடன் கம்பீரமாக இருந்தது.

குருவாயூர் கோவில் யானை ஓட்டத்தில் அதுதான் முதலாவதாக வந்ததாம்.

21 comments:

  1. ஸ்ரீ குருவாயூரப்பன் திருவுருவப்படம்.

    மழலை மொழியில் “யானை யானை அழகர் யானை” ப்பாட்டுடன் துவக்கமே அருமை. அதுதான் உங்களின் தனித்தன்மை. காதுகளை ஆட்டியபடி யானையின் சிட்டிங் போஸ் அடடா .. துதிக்கை அருகே தைர்யமான 2 பட்டர்ஃப்ளை வேறு .. தூள் கிளப்புது.

    ReplyDelete
  2. யானையைக்கட்டி போரடித்த நம் முன்னோர்களின் செல்வச்செழிப்பான காலம். சேரத்து தந்தங்கள் பரிசளித்ததாக பாரதி பாடிய பாடல். எப்படித்தான் இணைக்கத்தோன்றியதோ? சபாஷ். அறிவுக்கொழுந்து இங்கு சுடர் விட்டு எரியக் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. ஆனைகட்டாவுக்கு என்னை மீண்டும் அழைத்துச்சென்று, அந்த யானைகளைக் கண்டு களிக்கச்செய்து, அவற்றுடன் ஆனந்தக்குளியல் செய்ய வைத்து, பல அரிய தகவல்களும் அளித்து அசத்தி விட்டீர்கள்.

    நிறைய யானைகள் கட்டிப்போடப்படாமல் சுதந்திரமாக உலவி வருவதால், அருகில் செல்லும் நமக்கு ஆசையாகவும், அதே சமயம் அச்சமாகவுமே உள்ளது.

    இந்தப்பதிவு சற்றே சின்னதாக இருந்தாலும், யானைகள் தங்களின் பிரும்மாண்ட உருவத்தால், மிகப்பெரிய பதிவாகக் காட்டி விட்டன.

    மொத்தத்தில் “யானை பலம் கொண்ட” தங்கள் எழுத்துக்களுக்கும், யானை போன்ற தங்களின் ஞாபக சக்திக்கும்,
    தலை வணங்குகிறேன்.


    நன்றி, நன்றி, நன்றி!!!

    ReplyDelete
  4. யானையார் கலக்குறார்

    ReplyDelete
  5. நீங்கள் குறிப்பிட்டுருப்பதைப்போல
    படத்தில் பார்த்தால் மிக அழகுதான்
    நேரில்என்றால் நடுங்குவோமா இல்லை
    ரசிப்போமா எனத் தெரியவில்லை
    கூட்டத்தோடு குளிக்கிற காட்சி அற்புதம்
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல புகைப்பட விளக்கத்துடன்கூடியா அருமையான
    படைப்பு!...பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  7. ஆனக் கொட்டார வர்ணனை அருமை!அழகிய புகைப்படங்கள்!பாரதி மேற்கோள் வேறு!விருந்துதான்!

    ReplyDelete
  8. kavitendral panneerselvam
    யானைக் கொண்டாட்டமும் , மழலைக் கவிதையும் நன்றாக இருந்தது !//

    நன்றி

    ReplyDelete
  9. ஆனந்தமான கவிதையுடன் தொடங்கிய அற்புதப் பதிவு
    யானைகளைப்பற்றி தங்களின் பிரமாண்ட எழுத்துநடையில்
    பதிந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது , சின்ன வயதில் போனது மீண்டும் ஒருமுறை போய்வர வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிய பதிவு, நன்றி

    நீண்ட முயற்சிக்கு பின் இன்றிலிருந்து உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வர துவங்கி இருக்கின்றன

    ReplyDelete
  10. படங்களுடன் தகவல்களை அளிப்பதில் நீங்கள் ராணி ராஜராஜேஸ்வரியாக இருக்கிறீர்கள் ... இன்று பழைய அப்டேட்ஸ் எல்லாம் சேர்ந்து வந்தது .. அனைத்தும் படித்து கொண்டுள்ளேன் ...நன்றிகள் பல .....

    ReplyDelete
  11. யானைக் கொண்டாட்டம் அமர்க்களமாக உள்ளது. நல்ல தகவல்கள்.
    என் டாஷ்போர்டிலும் உங்கள் பதிவுகளின் அப்டேட்ஸ் வந்து விட்டது. விடுபட்டதை படிக்கிறேன்.

    ReplyDelete
  12. அத்தனை யானைகளையும் ஒருங்கே காணும் வாய்ப்பு குருவாயூரிலும். திருச்சூர் பூரம் அன்றும் கிடைக்கும். ஆனைக் கொட்டாரத்தில் யானை வால் முடி யானை விலை குதிரை விலைக்கு யானைப் பாகர்கள் விற்கிறார்கள்.யானையும் கடல் அலையும் பார்க்கப் பார்க்க தெவிட்டாதது. பகிர்வுக்கு நன்றி. பராட்டுக்கள்.

    ReplyDelete
  13. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  14. படத்தொகுப்புகள் அருமை.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  15. //உச்சி மர இலையையும்
    உறித்து உண்ணும் யானை
    பாடி ஆடும் சிறுவர்களோடு
    பந்தடிக்கும் யானை....... என்று
    எத்தனை முறைபாடினாலும் அலுக்காத பாடல். //
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. விளக்கத்துடன்கூடியா அருமையான
    படைப்பு!...பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  17. குருர்-ப்ரும்மா குருர்-விஷ்ணு
    குருர்-தேவோ மஹேஷ்வர:

    குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    ReplyDelete
  18. Greate post. Keep posting such kind of info on your site.
    Im really impressed by your blog.
    Hey there, You've performed an excellent job. I'll definitely digg it and in my
    opinion recommend to my friends. I am confident they'll be benefited from this site.
    Visit my web-site : speed up computer

    ReplyDelete
  19. This is a topic that is close to my heart... Many thanks!
    Where are your contact details though?
    Feel free to visit my webpage wohnungen alanya

    ReplyDelete