தேவியருடன் சனி பகவான் அருளும்
ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம்!
தஞ்சாவூர், பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கில் 30 கி.மீட்டர் தொலைவில் விளங்குளம் அமைந்துள்ளது.
பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோயிலுக்குச் செல்லலாம். கல்வெட்டு ஆராய்ச்சிகளின்படி, சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.
காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அட்சய திருதியை தினத்தில் தரிசிக்க வேண்டிய திருத்தலம்
ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம் - ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்.-
தாயார் : அபிவிருத்தி நாயகி
தல விருட்சம் : வில்வமரம்
தெய்வானை வள்ளி
விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உண்டு..
கோயில் பிரகாரம்
பைரவர்
பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும்.
மூலவர் விமானம்
அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.
சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும்.
நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய திருக்கோலம் ..
வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் பகை காரணமாக சனி பகவானின் காலில் எமதர்மன் ஓங்கி அடிக்க... சனி பகவான் கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தபோது விளா மரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளா மரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் சனி பகவான். விழுந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள்.
சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகிவிட்டது. விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பூச புதன் நேசம் தரும் என்பது பழமொழி.
புதன் என்பது சனீஸ்வரரைக்குறிக்கும்,
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும்.
தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும்.
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் ..
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் ..
சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசம் .
இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ..
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார்.
வள்ளலார் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்,
தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்,
உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
சனிவழிபாடு:
அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்.
பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லலெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலியானார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனிபகவானே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!
என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப் பெற்று நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும்.
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்தத் தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.
குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலைகொண்டார். இறைவன் அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உட்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.
சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்துகொண்டு அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார். இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் வகைத் துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும்; திருமணத் தடைகளும் விலகும்.
கோயில் தீர்த்தம் பூச ஞான வாவி தீர்த்தம்
சனி பகவானின் நட்சத்திரம் பூசம். பூச மருங்கர் எனும் சித்தர், சனிப்பரணி சித்தரை சத்குருவாகக் கொண்டவர். பூச மருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் - விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.
சனி இந்தத் தலத்தில் சாப விமோசனம் பெற்று ஊனம் நீங்கியதால் - பூச நட்சத்திரத்திலும், சனிக்கிழமைகளில் பிறந்தவர்களும் தமது வாழ்நாளில் கட்டாயம் பூஜிக்கவேண்டிய தலம்!
சுனாமி நிதிக்கு வந்த பொருளை மதவேறுபாடின்றி அனைத்து மத அன்பர்களும் அளித்து குறிப்பிட்ட கால்த்திற்கு முன்பே கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்ற சிறப்பு வாய்ந்தது.
ஆலயத் தொடர்புக்கு: 98653 70743
அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும்.
பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்குப் புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.
இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர்.
செல்வம் தரும் சாஸ்தா:
பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம்.
அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்த்ர கருத்துக்களை அழகாக, ஐயப்ப பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள்.
ஐயப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர்.
ஐயப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது. ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது.
எதைப் படிக்க வேண்டுமோ, அதைப் படிக்காததால் நாம் துன்பப்படுகிறோம்'. படிக்க வேண்டியதைப் படி, அந்த ஆனந்தம் நீ தான்' என்பதைத் தான் ஐயப்பன் சொல்லிக் கொடுக்கிறார்.
தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் ஐயப்பன். மெய்ஞானத்தைக் கற்றுக் கொடுப்பவர் ஐயப்பன்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள், நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப் போல் பிறரும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள்.
உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரகாரர்கள் சாஸ்தாவை வழிபட்டால் சகல யோகங் களும் பெறலாம்
பூச நட்சத்திரகாரர்ககள் ஐயப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக் கொண்டே இருக்க. காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
என்றோ ஒரு நாள் நிம்மதி வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது வரப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கப் பழக வில்லை என்றால் நிம்மதி ஒரு நாளும் வராது. நிம்மதி வர வேண்டும் என்றால் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
1. விடாமல் புண்ணியம் செய்ய வேண்டும்.
2. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி
ReplyDelete@ எல் கே said...
ReplyDeleteநன்றி//
Thank you Sir.
தினமும் காலையில் முதல் பதிவாக
ReplyDeleteஉங்கள் பதிவைத் தேடும் பழக்கம் வந்துவிட்டது
எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
(முழு பதிவையும் படித்துவிட்டு பின்னூட்டமிடத்தான்
தாமதமாகிவிடுகிறது)
@ Ramani said...
ReplyDeleteதினமும் காலையில் முதல் பதிவாக
உங்கள் பதிவைத் தேடும் பழக்கம் வந்துவிட்டது
எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
(முழு பதிவையும் படித்துவிட்டு பின்னூட்டமிடத்தான்
தாமதமாகிவிடுகிறது)//
சந்தோஷம் ஐயா.
முழுமையாகப் படித்துவிட்டு இயன்றபோது கருத்துரை இடுங்கள். காத்திருக்கிறேன் த்ங்கள் பின்னூட்டங்களை அறிந்து கொள்ள . நன்றி.
//எதைப் படிக்க வேண்டுமோ, அதைப் படிக்காததால் நாம் துன்பப்படுகிறோம்'. படிக்க வேண்டியதைப் படி, அந்த ஆனந்தம் நீ தான்'//
ReplyDeleteஅதனால் தான் உங்கள் பதிவை மட்டும் தவறாமல் வரிக்குவரி ரசித்து ருசித்துப் படித்து வருகிறேன். ஆனந்தம் அல்ல பரமானந்த பரவசம் ஏற்படுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன் sa//
ReplyDeleteஅதனால் தான் உங்கள் பதிவை மட்டும் தவறாமல் வரிக்குவரி ரசித்து ருசித்துப் படித்து வருகிறேன். ஆனந்தம் அல்ல பரமானந்த பரவசம் ஏற்படுகிறது.//
வரிக்கு வரி தங்கள் பின்னூட்டம் இடும் பொருள் பொதிந்த கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.
இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம் - ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்.
ReplyDeleteதாயார் : அபிவிருத்தி நாயகி
ஆஹா, பெயரிலேயே நல்ல பொருத்தமான தம்பதிகளாக ஈசனும், ஈஸ்வரியும். அட்சய என்றாலே விருத்தி அபிவிருத்தி என்று தான் பொருள்!
//இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.//
ReplyDeleteதொந்திக்கணபதிக்கு எங்கு பார்த்தாலும் திரும்பிய இடமெல்லாம் கோயில். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர்கள். விஜய விநாயகர் என்பதும் விஜயலக்ஷ்மி போல அழகாகவே உள்ளது.
அழகிய முருகன் படம். கோவிலின் பழைமை சொட்டும் புகைப் படம் கவர்கிறது.
ReplyDeleteபெயர்ப் பொருத்தம் பற்றிய வைகோ அவர்களின் கமெண்ட் ரசிப்புக்குரியது.
//நீங்கள் நிம்மதியாக இருக்கப் பழக வில்லை என்றால் நிம்மதி ஒரு நாளும் வராது. நிம்மதி வர வேண்டும் என்றால் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
ReplyDelete1. விடாமல் புண்ணியம் செய்ய வேண்டும்.
2. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.//
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். அப்படியே செய்வோம்.
இன்று சனிக்கிழமை விளாம்பழப்பச்சடி போல விளங்குளம் சனிபகவான் பற்றிய அருமையான சரித்திரம் சொல்லி அசத்தி விட்டீர்கள்.
[ஆனால் விளாம்பழம் எனக்கு பிடிக்காத ஒரு ஐட்டம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்]
பிரியமுள்ள vgk
இவ்வளவு தகவல்கள் எப்படி தொகுக்கிறீர்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது...
ReplyDeleteகோயிலின் வரலாறு..
நட்சத்திர வழிபர்டு,
அவற்றின் சிறப்பு வழிப்பாடுகள் ஆலயம் செல்வதற்கான வழிகள்
அவற்றின் தொலைபேசி எண் போன்றவற்றை கொடுத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்...
@வை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDeleteஆஹா, பெயரிலேயே நல்ல பொருத்தமான தம்பதிகளாக ஈசனும், ஈஸ்வரியும். அட்சய என்றாலே விருத்தி அபிவிருத்தி என்று தான் பொருள்!//
பொருத்தமான அழகிய கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.
அருளும் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானும் அருள்பாவிப்பது சிறப்புதான்...
ReplyDeleteஅற்புதமான பதிவு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
@ஸ்ரீராம். said...
ReplyDeleteஅழகிய முருகன் படம். கோவிலின் பழைமை சொட்டும் புகைப் படம் கவர்கிறது.
பெயர்ப் பொருத்தம் பற்றிய வைகோ அவர்களின் கமெண்ட் ரசிப்புக்குரியது.//
ரசிப்புக்குரிய தங்கள் கருத்துக்கு நன்றி.
@ வை.கோபாலகிருஷ்ணன் s//
ReplyDeleteஆனால் விளாம்பழம் எனக்கு பிடிக்காத ஒரு ஐட்டம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்]//
விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே என்ற பழமொழி படி பிடிக்காததை விட்டு விட்டு பிடித்த நெல்லிக்காய் பச்சடியை துவாதசியில் சாப்பிடலாமே ஐயா.
@# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅருளும் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானும் அருள்பாவிப்பது சிறப்புதான்...
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..//
இரண்டு சிறப்பான கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
அட்டமத்தில் சனி இருப்பவர்களும், பூச நட்சத்திரக்காரர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தொல்லைகள் குறைவதோடு நன்மையுண்டாகும்//
ReplyDeleteகும்ப ராசி,சிம்ம ராசி,துலாம் ராசி,கன்னி ராசிக்காரர்கள் உடனே போய் வழிபடுங்கள் தொல்லைகள் குறையும்!
பயனுள்ள ஆன்மீகத் தகவல்கள்..
ReplyDelete@கும்ப ராசி,சிம்ம ராசி,துலாம் ராசி,கன்னி ராசிக்காரர்கள் உடனே போய் வழிபடுங்கள் தொல்லைகள் குறையும்!//
ReplyDeleteமேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஐயா.
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபயனுள்ள ஆன்மீகத் தகவல்கள்..//
கருத்துக்கு நன்றி ஐயா.
I never heard about this place dear.
ReplyDeleteVery well written.
I learnt a lot from your write up.
Thanks for the post dear.
Being a saturday, morning, i came to know lot by Sasatha and saneeswaran.
Thanks dear.
viji
என்றோ ஒரு நாள் நிம்மதி வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது வரப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கப் பழக வில்லை என்றால் நிம்மதி ஒரு நாளும் வராது. நிம்மதி வர வேண்டும் என்றால் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
ReplyDelete1. விடாமல் புண்ணியம் செய்ய வேண்டும்.
2. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.3.தங்களின் பதிவை தவறாமல் காணவேண்டும்----பத்மாசூரி.
அருமையான பதிவுகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@ viji said...//
ReplyDeleteவாங்க விஜி. தங்கள் கருத்துக்கு நன்றி.
@ சந்திர வம்சம் said...//
ReplyDeleteவாங்க ! வாங்க!! சந்திர கிரணங்கள் போல் அமுதமாய் பொழிந்த கருத்துக்கு நன்றி.
@ Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவுகள்.
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா.
@FOOD said...
ReplyDeleteபகிர்வு அருமை. பட்ங்கள் சூப்பர்.//
கருத்துக்கு நன்றி.
இந்த கோவிலுக்கு நான் 2005 ஆம் ஆண்டில் சென்றிருக்கிறேன் ஆனால் அப்போது இவ்வளவு தகவல்கள் தெரியாது
ReplyDeleteஅறிய தகவல்களை தந்த உங்களுக்கு நன்றி அம்மா
"என்றோ ஒரு நாள் நிம்மதி வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது வரப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கப் பழக வில்லை என்றால் நிம்மதி ஒரு நாளும் வராது. நிம்மதி வர வேண்டும் என்றால் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.
1. விடாமல் புண்ணியம் செய்ய வேண்டும்.
2. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.""
சத்தியமான வார்த்தைகள்
அறிய வேண்டியதை அறிந்து
செய்ய வேண்டியதை செய்தால்
பெற வேண்டியதை பெறலாம்
@A.R.ராஜகோபாலன் said...//
ReplyDeleteஅரிய கருத்துரைகளுக்கு நன்றி.
@kavitendral panneerselvam to me
ReplyDeleteவிஜய விநாயகர் நமக்கெல்லாம் வெற்றிதரும் விநாயகர்!
அழகிய படங்கள் ! நேரில் பார்த்த உணர்வு . வாழ்த்துக்கள்!//
நன்றி.
JAI HANUMAN ! ;)
ReplyDeleteVGK
547+5+1=553
ReplyDelete;))))) தங்களின் பதில்கள் மகிழ்வித்தன. நன்றிகள்.