Sunday, January 1, 2012

கோபியர் கொஞ்சும் ரமணா

WEB TITLE
Happy new Year




கணபதியானை வணங்கி  
வலைப்பூவில் 2012 வருடத்தைத் துவங்குகிறோம்!

கணபதியே வருவாய் அருள்வாய் மனம் மொழி மெய்யாலே 
தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட

தூக்கிய துதிக்கையால் காத்திட வேண்டும்
துங்கக்கரிமுகத்து நாயகனே விநாயகனே 
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா

WEB TITLE
தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா

வைணவ பக்த கோடிகள் இராமாவதாரத்தைப் “பூர்ண” அவதாரம் என்றும், கிருஷ்ணாவதாரத்தைப் “பரிபூர்ண” அவதாரமென்றும் சிறப்பித்து 
பேசுவர். அந்த ‘அவதாரம்’ செய்த லீலைகளை விரித்துரைப்பதுதான் பாகவதம்

இந்தப் பக்தி ‘ரசம்’ சொட்டும் பாக-வதத்தை மரணத்தின் பிடியில் இருந்த பரீட்சித்து (அபிமன்யு மகன்) அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்னும் முனிவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான். 

"பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான் கண்ணன்...

உத்தவர் மஹா ஞானி... கண்ணனின் தோழன், கோபியரின் மகத்துவம்
 பற்றி கண்ணனிடம் கேட்டாராம்.

இதை விளக்கும் நோக்கோடு கண்ணன் தனக்கு தீராத தலைவலி என்று சொன்னாராம். துடித்து போன உத்தவன், பரமாத்மாவிடம், நான் என்ன செய்ய வேண்டும், நீயே சொல் ஜகத்பதி என்று கேட்க..
கண்ணன், ”உத்தவா, உன் பாத தூளிகை (காலடி மண்) எடுத்து நான் ஸ்வீகரிக்க வேண்டும் அப்போது தான் இந்த வலி தீரும், கொஞ்சமே கொஞ்சம் உன் பாத தூளி தருகிறாயா”என்று ஸ்ரீ ஹரி கேட்டாராம்.

அதிர்ச்சியில், உத்தவர் மறுத்து விட்டாராம்.

அதெப்படி தன் காலடி மண்ணை எடுத்து பெருமான் தரிப்பதா என்று அவருக்கு ஒரே குழப்பமாம்.தனக்கு பாபமல்லவா சேரும் என்று மறுத்துட்டாராம் ..

 ”இதுதான் பக்தனின் மகத்துவம். இப்போது கோபியரின் அன்பின் மகத்துவம் பார்க்கிறாயா?” என்று அவர்களிடம் அழைத்துப்போனாராம்.

கோபியரிடம் கண்ணன் கேட்ட மாத்திரத்தில் மூட்டை மூட்டையாக காலடி மண் கிடைத்ததாம்! உத்தவர் அவர்களிடம் கேட்டாராம், ”உங்களுக்கு அறிவில்லையா? பெருமான் உங்கள் பாத தூளி கேட்கிறார்.இப்படி மூட்டை மூட்டையாக தருகிறீர்களே? நீங்கள் எல்லோரும் மஹா பாவம் செய்கிறீர்கள்.” என்றாராம்.

கொஞ்சம் கூட கவலையே படாமல் கோபியர்கள் சொன்னார்களாம், ”எங்களுக்கு பாவம் வந்து சேர்வதைப்பற்றிய கவலை இல்லை, கண்ணனின் தலை வலி தீர்ந்தால் அதுவே போதும், எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம்” என்றார்களாம்.

இதல்லவோ உண்மையான மெய் சிலிர்க்கும் அன்பு, தாய்மை! கோபியரின் சிறப்பை உத்தவர் உணர எம்பெருமான் கண்ணன் எடுத்துக்காட்டிய விதம் தான் எத்தனை மதுரம்.

அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்_ மதுராதிபதே ரகிலம் மதுரம்

வசனம் மதுரம் சரிதம் மதுரம்_ வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்_ மதுராதிபதே ரகிலம் மதுரம்


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம்..  என்று வாழ்ந்தவர்கள் கோபியர்கள்..

கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!

பாலின் சாரம் வெண்ணெய்.
வாழ்வின் சாரம் கண்ணன்.ஆய்ச்சியர் தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுக்கிறார்கள்.
வாழ்க்கையைக் கடைந்துதான் ஆன்மீக ஞானத்தைப் பெற வேண்டும்.
நாடி வருகின்ற அன்னையர்க்குக் கண்ணன்நவநீத கிருஷ்ணனாகிறான்.

வாழ்க்கையின் சாரத்தை கீதையில் கண்ணன் கொடுத்திருக்கிறான்



srikrishna2.jpg Sri Krishna image by HadaiNitya
Krishna With Flowers In Hand
yashoda_krishna_QD28_l.jpg lord krishna image by Sainath459

Download the Free Radha Krishna Wallpaper

50 comments:

  1. மாதவனின் படங்கள் ஒவ்வொன்றும்
    கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு அழகு.

    ReplyDelete
  2. பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு அழகாய் மலர மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. அருமையான படங்கள். தனித்தனியாகப் பார்த்தால் தேவாம்ருதமாக இருக்கிறது. ஆனால் ஒன்றாகப் பார்க்கும்போது திகட்டுகிறது. ஒவ்வொன்றாக வாரம் ஒரு படமாக இந்த வருடம் முழுவதும் அனுபவிக்கவேண்டும். அதற்கு எங்கே விடுகிறீர்கள். நாளைக்கே இன்னொரு கலயம் அமிர்தம் வந்து விடுகிறதே.

    என் தனிப்பட்ட அனுபவம் இது.

    ReplyDelete
  4. வண்ணப் படங்கள் அனைத்தும்
    எல்லைய‍ல் அழகு!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. அருமையான படங்கள்
    அருமையான விளக்கங்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான விளக்கங்கள் அருமையான படங்கள் நன்றி

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துகள். வழக்கம் போல் அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. என் கண்ணனின் பல கோணங்களில் படம்பிடித்து காட்டியுள்ளீர்களே. அனந்த கோடி நன்றி.........

    நெஞ்சத்தில் ப்ரசினா படம் ரொம்பவும் பதிந்துவிட்டது. கதை புதிது...நன்றி...

    அவன் மேல் காதல் கொண்டுள்ள என்னை, என்று அவன் தன்னுடன் இணைத்துக் கொள்கிறானோ அன்று என் ஜன்மம் ஈடேறும்.

    காத்திருப்பேன்..நன்றி.

    ReplyDelete
  9. அன்பின் இராஜராஜேஸ்வரி - வழக்கம் போல படங்களீன் அணிவகுப்பு - அழகாக - கண்ணுக்குக் குளீர்ச்சியாக - கண்டு மகிழ - மாமனையும் மருகனையும் விளயாட வீட்டு - மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - ஆமா எங்கே வை.கோ >

    ReplyDelete
  10. Gopalakrishnan Valambal

    Important mainly

    "பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான் கண்ணன்...//



    மிகவும் அழகான எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

    ReplyDelete
  11. கோபியர்களின் தன்னல மில்லாத பக்தி நெஞ்சை நெகிழ வைத்து, கண்களில் கண்ணீரைத்தந்தது. அருமையான படங்கள் பதிவிற்கு மேலும் மெருகை தந்தது.

    ReplyDelete
  12. Aha Aha Aha.....
    Nakarthu pogave mansu varamattenguthu Rajeswari. Oneoneuum muthuthan. Thanks for sharing.
    Happy new year.
    viji

    ReplyDelete
  13. நன்று.

    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  14. கோபியர் கொஞ்சும் ரமணா !

    ஆஹா தலைப்பே வெகு அருமையாக
    சொக்க வைக்குதே! ;)))))

    [கேட்டதும் கொடுப்பவனே .......
    கிருஷ்ணா! கிருஷ்ணா!!
    கீதையின் .........................
    என்று பாடத்தோணுது]


    வை. கோபாலகிருஷ்ணன் //

    இனிய கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  15. செந்தாமரையில் வீற்றிருக்கும் முதல் லக்ஷ்மியும்
    இருபுறமும் எரியும் தீபங்களும் மிக அருமை.
    இந்த ஆண்டின் முதல் பதிவே லக்ஷ்மிகரமாக
    அமைந்து விட்டது. எல்லோருடைய வாழ்க்கையும்
    அமோகமாக இருக்கப்போகிறது என்பதன் அறிகுறியாக! ;))))

    வை. கோபாலகிருஷ்ணன் //

    அமோகமான கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  16. ஆஹா அடுத்த படத்தில் நம் தொந்திப்பிள்ளையார்
    அருளாசி கூறுவது அற்புதமாக உள்ளது. எரியும் தீபம்.
    வாழைப்பழ சீப்பு. பூர்ணகும்பம் எல்லாமே மங்களகரமாக! ;))))

    வை. கோபாலகிருஷ்ணன் /

    மங்களகரமான கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  17. HAPPY NEW YEAR அழகாக ஜொலிக்குதே அடுத்த படத்தில், அடடா!

    வை. கோபாலகிருஷ்ணன் /

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  18. ஆஹா, பளப்பளா வெள்ளியில் மீண்டும் பூர்ணகும்பம் நல்ல அழகு!
    பக்கத்தில் இரு குத்துவிளக்குகள் எரிய, பழத்தட்டுக்களுடன்
    பார்க்கவே பரவஸமாக மங்களகரமாகக் காட்டி அசத்தியுள்ளீர்களே! ;)))

    வை. கோபாலகிருஷ்ணன் //

    மங்களகரமான கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  19. அடடா! அடுத்த படத்தில் குட்டிப்பயல் மாமனும் மறுமானுமா?
    ஸ்ரீகிருஷ்ணனுக்கே லட்டு தருகிறாரா, அந்தப்பிள்ளையாரப்பா?
    கீழே தட்டு நிறைய லட்டு, அந்த எலியார் வேறு! ;))))

    வை. கோபாலகிருஷ்ணன் /

    நிறைந்த கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  20. கணபதியே வருவாய் அருள்வாய் பாட்டுடன் சூப்பர் ஆரம்பம் தான்! ;))))

    வை. கோபாலகிருஷ்ணன் //

    நன்றி ஐயா..

    ReplyDelete
  21. அடுத்தபடத்தில் யானையார் (கஜேந்திரன்) ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்யும்
    அபிஷேகம் ஜோர் ஜோர்! ;))))


    பின்னால் முதலை தன் காலைப்பிடித்தாலும் கவலையில்லையே அவருக்கு!

    வை. கோபாலகிருஷ்ணன் /

    ஜோர் ஜோர் கருத்துரைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  22. //கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
    மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா

    மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா//



    அடடா ! என்ன அற்புதமான வரிகள்.

    மெய்மறந்து, மெய்சிலிர்த்துப்போனேனே!! ;)))))



    வை. கோபாலகிருஷ்ணன் //


    கருத்துரைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  23. //தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்



    தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா//



    ஆஹா, ஜொலிக்கிறாரே! முகுந்தன், ஸ்ரீ வைகுந்தன்.



    வை. கோபாலகிருஷ்ணன் /

    ஜொலிக்கும் கருத்துரைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  24. அந்த அஷ்டமி அன்று பிறந்த இந்தப்புத்தாண்டுக்கு

    பொருத்தமான படம் தான் அந்த எட்டாவது படம்.

    அது அழகோ அழகு - நல்ல அழகு. வைத்தகண் வாங்காமல்

    பார்க்கச்சொல்லுதே என்னை! ;)))))



    ஒன்பதாவது படம் மட்டுமென்ன! சூப்பர் அல்லவா!



    புல்லாங்குழல் கொடுக்கும் மூங்கில்களே......

    அந்தப்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.....

    என்றல்லவா நம்மை பாட வைக்குது! ;))))))



    வை. கோபாலகிருஷ்ணன் //

    அழகோ அழகு கருத்துரைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  25. உத்தவர் எப்பேர்ப்பட்ட பக்தி கொண்டவர்.

    அவரையே மிஞ்சிவிட்டனரே இந்த கோபிகைகள்.

    எல்லாம் அந்த மாயக்கண்ணன் செய்த லீலைகள்

    தானே.



    அற்புதமாக விளக்கியுள்ள உங்களின்

    அன்பும் தாய்மையும் என்னால் நன்கு உணரமுடிகிறது.



    இந்தப்பதிவினை அளித்து உத்தவரின் பக்தியையும்,

    அந்த கோபிகைகளின் பிரேம பக்தியினையும் நாங்களும்

    அறியச்செய்துள்ளது தங்களின் தனிச்சிறப்பு தான்.

    சபாஷ்.



    ஸ்ரீ ஆண்டாளையும், கோபிகைகளையும் இன்று

    உங்கள் ரூபத்தில் நாங்கள் தரிஸிக்க முடிகிறது.

    மிக்க மகிழ்ச்சி.





    வை. கோபாலகிருஷ்ணன் //

    மகிழ்ச்சி நிறைந்த கருத்துரைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  26. கோபிகைகளின் நடனப்படமும் வெகு அருமையாகவே

    காட்டப்பட்டுள்ளது.



    //கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!



    பாலின் சாரம் வெண்ணெய்.வாழ்வின் சாரம் கண்ணன்.ஆய்ச்சியர் தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுக்கிறார்கள்.வாழ்க்கையைக் கடைந்துதான் ஆன்மீக ஞானத்தைப் பெற வேண்டும்.நாடி வருகின்ற அன்னையர்க்குக் கண்ணன் நவநீத கிருஷ்ணனாகிறான்.


    வாழ்க்கையின் சாரத்தை கீதையில் கண்ணன் கொடுத்திருக்கிறான்//



    வெகு அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். மிகுந்த மனமார்ந்த பாராட்டுக்கள்.





    வை. கோபாலகிருஷ்ணன் //

    பாராட்டுரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா

    ReplyDelete
  27. கடைசி ஆறு படங்களும் கூட நல்ல அழகு தான்.

    புத்தாண்டுக்கு மிக நல்ல விருந்தாகவே கண்களுக்கும்,

    செவிகளுக்கும் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.



    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றிகள்.

    நீங்கள் நீடூழி வாழ்க! வாழ்க!! வாழ்க!!! vgk




    வை. கோபாலகிருஷ்ணன் //


    அடாது பிளாக்கர் சரியில்லாவிட்டாலும்
    விடாது இ மெயிலில் கருத்துரைகள் நல்கி பதிவினை ஜொலிக்கச்செய்த அனைத்து கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  28. //அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்
    ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்_ மதுராதிபதே ரகிலம் மதுரம்

    வசனம் மதுரம் சரிதம் மதுரம்_ வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
    சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்_ மதுராதிபதே ரகிலம் மதுரம்



    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்

    உனக்கே நாம் ஆட்செய்வோம்.. என்று வாழ்ந்தவர்கள் கோபியர்கள்..



    கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!//







    மிகவும் மதுரமான வரிகள்.



    வை. கோபாலகிருஷ்ணன்/

    மிகவும் மதுரமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  29. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  30. கோபியர் கொஞ்சும் ரமணாவுக்கு
    மேலும் ஒரு பின்னூட்டம்:

    கீழிருந்து ஆறாவது படம் மிகவும் அருமை.

    பக்தி ரஸத்தினை இந்தப்பதிவின் மூலம் எங்கள் மேல் தாங்கள் பீய்ச்சியுள்ளதை அந்தப்படம் சிம்பாலிக்காகக் காட்டுகிறது. ;))))))

    அந்தப்படத்தில் உள்ள “கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி” யையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அந்த பசுமாடும் நல்ல அழகு. மயில்களும் அழகு. கறந்து வைத்துள்ள பாலும், பால் பாத்திரங்களும், பின்னால் உள்ள மரங்களும், மெய்மறந்து மயங்கியுள்ள யசோதாவும், மயக்கிய அந்தக் கண்ணனும் எல்லாமே அழகோ அழகு! ;))))))



    வை. கோபாலகிருஷ்ணன்/

    அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  31. மகேந்திரன் said...
    மாதவனின் படங்கள் ஒவ்வொன்றும்
    கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு அழகு./

    அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  32. ஹேமா said...
    பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு அழகாய் மலர மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !/

    வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் பிறந்திருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு அழகாய் மலர மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்

    ReplyDelete
  33. கவி அழகன் said...
    Happy new year

    நன்றி..
    தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  34. Palaniappan Kandaswamy said...
    அருமையான படங்கள். தனித்தனியாகப் பார்த்தால் தேவாம்ருதமாக இருக்கிறது. ஆனால் ஒன்றாகப் பார்க்கும்போது திகட்டுகிறது. ஒவ்வொன்றாக வாரம் ஒரு படமாக இந்த வருடம் முழுவதும் அனுபவிக்கவேண்டும். அதற்கு எங்கே விடுகிறீர்கள். நாளைக்கே இன்னொரு கலயம் அமிர்தம் வந்து விடுகிறதே.

    என் தனிப்பட்ட அனுபவம் இது./

    அமிர்தக்கடலில்தான் என் வாசம்..

    கருத்துரைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் said...
    வண்ணப் படங்கள் அனைத்தும்
    எல்லைய‍ல் அழகு!

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!


    புலவர் சா இராமாநுசம்/

    வாழ்த்துரைக்கும் அழகான கருத்துரைக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. Ramani said...
    அருமையான படங்கள்
    அருமையான விளக்கங்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்/


    அருமையான வாழ்த்துரைக்கும்
    அழகான கருத்துரைக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  37. Lakshmi said...
    அருமையான விளக்கங்கள் அருமையான படங்கள் நன்றி


    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  38. கோவை2தில்லி said...
    புத்தாண்டு வாழ்த்துகள். வழக்கம் போல் அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு./

    வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்..

    தங்களுக்கும் தங்கள்
    இனிய குடும்பத்திற்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. Shakthiprabha said...
    என் கண்ணனின் பல கோணங்களில் படம்பிடித்து காட்டியுள்ளீர்களே. அனந்த கோடி நன்றி.........

    நெஞ்சத்தில் ப்ரசினா படம் ரொம்பவும் பதிந்துவிட்டது. கதை புதிது...நன்றி...

    அவன் மேல் காதல் கொண்டுள்ள என்னை, என்று அவன் தன்னுடன் இணைத்துக் கொள்கிறானோ அன்று என் ஜன்மம் ஈடேறும்.

    காத்திருப்பேன்..நன்றி./


    அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  40. cheena (சீனா) said...
    அன்பின் இராஜராஜேஸ்வரி - வழக்கம் போல படங்களீன் அணிவகுப்பு - அழகாக - கண்ணுக்குக் குளீர்ச்சியாக - கண்டு மகிழ - மாமனையும் மருகனையும் விளயாட வீட்டு - மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - >/

    மகிழ்ச்சியான நல்வாழ்த்துகளுக்கும், அருமையான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  41. A.R.ராஜகோபாலன் said...
    கோபியர்களின் தன்னல மில்லாத பக்தி நெஞ்சை நெகிழ வைத்து, கண்களில் கண்ணீரைத்தந்தது. அருமையான படங்கள் பதிவிற்கு மேலும் மெருகை தந்தது./

    மெருகூட்டும் இனிய நெகிழ்ச்சியான அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ...

    ReplyDelete
  42. viji said...
    Aha Aha Aha.....
    Nakarthu pogave mansu varamattenguthu Rajeswari. Oneoneuum muthuthan. Thanks for sharing.
    Happy new year.
    viji/

    ஆத்மார்த்தமான
    இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் விஜி..

    ReplyDelete
  43. சென்னை பித்தன் said...
    நன்று.

    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்./

    பொலிவுடன் இனிய வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. // பாலின் சாரன் வெண்ணெய்.... அன்னையருக்கு அவன் நவநீத கிருஷ்ணன்.///

    அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள் மிக்க நன்றி.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. அருமையான பதிவு..
    புகைப்படங்களையும் கணினியில் சேமிக்க போகிறேன்..
    நன்றிகள் பல.

    ReplyDelete
  46. ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम
    ;) श्री राम राम

    ReplyDelete
  47. 1869+18+1=1888 ;)))))

    ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பன்று, அடியேன் மெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க முடிந்த அனைத்துப் பின்னூட்டங்களையும் சிரத்தையாக வெளியிட்டு மகிழ்வித்து உதவியுள்ளதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  48. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/10.html

    ReplyDelete