Sunday, January 8, 2012

விருதுநகர் விஸ்வநாதர்




கண்கண்ட தெய்வங்களான பகலில் ஒளிரும் சூரியனும், இரவில் குளுமைமையான சந்திரனும் உலகத்திற்கு ஒளி வழங்குகின்றர்..விருதுநகர் மாவட்டம், சாத்தூர் விஸ்வநாதர் கோயிலில் தினமும் காலை,மாலையில் பூஜை நடக்கிறது.
மூன்று தரிசனம்: மார்கழி திருவாதிரை விழாவின்போது விஸ்வநாதர் சன்னதி நேரே நடராஜரையும், அவருக்கு எதிரே ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில் சிவன், நடராஜர் மற்றும் அவர் முன்புள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதனை நடக்கும். சிவன் ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவமில்லாதது), அருவுருவம் (முழுமையான வடிவம் இல்லாத நிலை) என மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதை உணர்த்தும் விதமாக இந்த பூஜை நடக்கும். 


கோயில் முகப்பில் அஷ்டலட்சுமிகளுக்கும் சுதை சிற்பம் உள்ளது. ருத்ராட்ச மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.


காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.
உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. 
[Gal1]
தை கடைசி வெள்ளியன்று ராகு காலத்தில் (காலை 10.30 - 12 மணி) இங்குள்ள துர்க்கைக்கு சுமங்கலி பூஜை நடக்கும். அன்று பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் ஆகிய மங்கலப்பொருட்களை பிரசாதமாக கிடைக்கிறது.

ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது. சிவன் சன்னதிக்கு இடப்புறம் பத்திரகாளியம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.
பத்ரகாளி
[Gal1]

 இங்கு சிறிய நாகர் சிலை ஒன்றுள்ளது. திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோயில் முகப்பில் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வணங்குகின்றனர். 

சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சன்னதியில் சகலகலாவல்லிமாலை பாராயணத்துடன் விசேஷ பூஜையும், மாணவர்களின் கல்வி சிறக்க வருடத்தில் ஓருநாள் ஸ்ரீவித்யா ஹோமமும் நடக்கும்.
அன்று சரஸ்வதிதேவி கோயிலுக்குள் வலம் வருவாள்.  மாணவர்களுக்கு எழுது பொருட்களைத் தருகிறார்கள்..

பல்லாண்டுகளுக்கு முன், இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது. பிற்காலத்தில், பக்தர்கள் இங்கு விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினார்களாம்... 

ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அருள்கின்றனர் .

காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடைபெறுகிறது..

[Image1]


[Gal1]


[Gal1]



[Gal1]

31 comments:

  1. I never heard about this temple. It is very nice to read. The pictures are very nice.
    viji

    ReplyDelete
  2. சாத்தூர் ஈஷ்வரனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - விருது நகர் விஸ்வநாதர் கோவில் வரலாறு அருமை. படங்களுடன் கூடிய பதிவு அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. பக்தியை பரவசமாக பரப்பும் பதிவு
    ஆனந்தம்.

    ReplyDelete
  5. ”விருதுநகர் விஸ்வநாதர்” என்ற தலைப்பில் ஊர் பெயரும் உம்மாச்சி பெயரும் “வி” இல் ஆரம்பித்திருப்பது வியப்பாகவும், வித்யாசமாகவும், விசித்திரமாகவும் உள்ளது.

    முதல் சுழலும் படத்தில் [கடுகு தாளித்ததுபோல] ஏராளமான நக்ஷத்திரங்கள் ஓடிச்செல்வது அருமையாகக் காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”விருதுநகர் விஸ்வநாதர்” என்ற தலைப்பில் ஊர் பெயரும் உம்மாச்சி பெயரும் “வி” இல் ஆரம்பித்திருப்பது வியப்பாகவும், வித்யாசமாகவும், விசித்திரமாகவும் உள்ளது.

    முதல் சுழலும் படத்தில் [கடுகு தாளித்ததுபோல] ஏராளமான நக்ஷத்திரங்கள் ஓடிச்செல்வது அருமையாகக் காட்டப்பட்டுள்ளது./

    ஒளிரும் கருத்துரைகளால் பதிவைப் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  7. viji said...
    I never heard about this temple. It is very nice to read. The pictures are very nice.
    viji/


    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள் தோழி..

    ReplyDelete
  8. தல விருக்ஷமாகிய ருத்ராக்ஷமரம், விஸ்வநாதரின் சிவலிங்கத்தோற்றம்
    கோபுர நுழைவாயில், தோளில் துண்டு போட்ட பளபளக்கும் நந்தியார், மாலையும் சேலையும் அணிந்துள்ள நவக்கிரஹங்கள் முதலியன நன்கு காட்டப்பட்டுள்ளன.

    ReplyDelete
  9. ரமேஷ் வெங்கடபதி said...
    சாத்தூர் ஈஷ்வரனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!/

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  10. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி - விருது நகர் விஸ்வநாதர் கோவில் வரலாறு அருமை. படங்களுடன் கூடிய பதிவு அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    அருமையான இனிய கருத்துரைகளுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்./

    வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. A.R.ராஜகோபாலன் said...
    பக்தியை பரவசமாக பரப்பும் பதிவு
    ஆனந்தம்./

    ஆனந்தமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தல விருக்ஷமாகிய ருத்ராக்ஷமரம், விஸ்வநாதரின் சிவலிங்கத்தோற்றம்
    கோபுர நுழைவாயில், தோளில் துண்டு போட்ட பளபளக்கும் நந்தியார், மாலையும் சேலையும் அணிந்துள்ள நவக்கிரஹங்கள் முதலியன நன்கு காட்டப்பட்டுள்ளன./

    அருமையான அவதானிபுடன் இனிய கருத்துரை..
    மனம் நிறைந்த
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. வடிவம், வடிவமில்லாதது, முழுமையான வடிவம் இல்லாதது என்ற விளக்கங்கள் அருமையாய்த் தரப்பட்டுள்ளது.

    உலகை சமன்படுத்த தென்திசைக்கு வந்து தெறிகு நோக்கி அமர்ந்த அகஸ்தியருக்கு, பெளர்ணமியன்று மாலையில் சிறப்பு பூஜைகள், தை கடைசி வெள்ளியன்று ராகு காலத்தில் சுமங்கலி பூஜை + மங்கலப்பொருட்கள் பிரஸாதம் கேட்கவே மன நிறைவளிப்பதாக உள்ளன.

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வடிவம், வடிவமில்லாதது, முழுமையான வடிவம் இல்லாதது என்ற விளக்கங்கள் அருமையாய்த் தரப்பட்டுள்ளது.

    உலகை சமன்படுத்த தென்திசைக்கு வந்து தெற்கு நோக்கி அமர்ந்த அகஸ்தியருக்கு, பெளர்ணமியன்று மாலையில் சிறப்பு பூஜைகள், தை கடைசி வெள்ளியன்று ராகு காலத்தில் சுமங்கலி பூஜை + மங்கலப்பொருட்கள் பிரஸாதம் கேட்கவே மன நிறைவளிப்பதாக உள்ளன.//

    மன நிறைவளிக்கும் இனிய கருத்துரை..
    மனம் நிறைந்த
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  16. சரஸ்வதி பூஜையன்று, சரஸ்வதி சந்நதியில், சகலகலாவல்லி பாராயணத்துடன் பூஜை; ))))

    ஸ்ரீவித்யா ஹோமம். சரஸ்வதி தேவியே நேரில் வலம் வந்து குழந்தகளுக்கு எழுது பொருட்கள் தருவது! ;)))))

    தினமும் காலை மாலை சூர்ய சந்திரருக்கு பூஜை நடப்பது ;))))

    மகிழ்ச்சியூட்டும் அழகான தகவல்கள்.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சரஸ்வதி பூஜையன்று, சரஸ்வதி சந்நதியில், சகலகலாவல்லி பாராயணத்துடன் பூஜை; ))))

    ஸ்ரீவித்யா ஹோமம். சரஸ்வதி தேவியே நேரில் வலம் வந்து குழந்தகளுக்கு எழுது பொருட்கள் தருவது! ;)))))

    தினமும் காலை மாலை சூர்ய சந்திரருக்கு பூஜை நடப்பது ;))))

    மகிழ்ச்சியூட்டும் அழகான தகவல்கள்./

    அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. கடைசி படத்தில் மும்மூர்த்திகளான ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீ ருத்ரன் முதலியோர் விநாயகருடன் அழகாக நடனமாட, தேவியர்களும் முனிவர்களும் வாத்யங்கள் இசைக்க, ஆட்டம் பாட்டம் ஏதுமில்லாமல அவர்களின் இந்த நடனத்தைக் எலியாரும், மயிலாரும், காளையாரும் மெய்மறந்து காணும் காட்சியும் நன்றாகவே உள்ளது.

    ReplyDelete
  19. மொத்தத்தில் இன்றைய பதிவு வழக்கம் போலவே அழகான படங்களுடன், அருமையான விளக்கங்களுடன், சுருக்கமாகவும், சுலபமாகவும், சுத்தமாகவும் தரப்பட்டுள்ளன.

    பலரும் இந்தக்கோயிலைப்பற்றி நன்கு அறிய முடிந்துள்ளது.

    பகிர்வுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசி படத்தில் மும்மூர்த்திகளான ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீ ருத்ரன் முதலியோர் விநாயகருடன் அழகாக நடனமாட, தேவியர்களும் முனிவர்களும் வாத்யங்கள் இசைக்க, ஆட்டம் பாட்டம் ஏதுமில்லாமல அவர்களின் இந்த நடனத்தைக் எலியாரும், மயிலாரும், காளையாரும் மெய்மறந்து காணும் காட்சியும் நன்றாகவே உள்ளது./

    நிறைவான ரசனையுடன் அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மொத்தத்தில் இன்றைய பதிவு வழக்கம் போலவே அழகான படங்களுடன், அருமையான விளக்கங்களுடன், சுருக்கமாகவும், சுலபமாகவும், சுத்தமாகவும் தரப்பட்டுள்ளன.

    பலரும் இந்தக்கோயிலைப்பற்றி நன்கு அறிய முடிந்துள்ளது.

    பகிர்வுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

    அழகான அருமையான பாராட்டுரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. நன்றி...முதல் படமும் கடைசி படமும் ரொம்பவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  23. விருது நகர் விஸ்வநாதர் கோவில் வரலாறு அருமை. பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  24. படங்களும் விருது நகர் கோவில் வரலாறும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  25. வை.கோபாலகிருஷ்ணன் said...

    ”விருதுநகர் விஸ்வநாதர்” என்ற தலைப்பில் ஊர் பெயரும் உம்மாச்சி பெயரும் “வி” இல் ஆரம்பித்திருப்பது......"

    தலைப்பைப் பார்த்ததும் எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி January 9, 2012 at 6.00 PM to VGK

      //தலைப்பைப் பார்த்ததும் எனக்கும் தோன்றியது//

      நாம் இதுபோலெல்லாம் அவ்வப்போது பாராட்டி தட்டி விட்டதனால், தலைவி இப்போதெல்லாம் தலைப்புகள் தேர்ந்தெடுப்பதில் இதே டெக்னிக்கை தான் தினமும் கையாண்டு வருகிறார்கள்.

      என்னுடன் ஒத்துப்போன தங்களின் கருத்துப்பகிர்வுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

      Delete
  26. இனிய புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. விருதுநகர் விஸ்வநாதரை சிறு வயதில் தரிசித்த நினைவு இருக்கிறது.

    பகலில், சூரியனுக்கும், இரவு சந்திரனுக்கும் பூஜை நடப்பது புது செய்தி.
    நன்றி.

    ReplyDelete
  28. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  29. 1955+8+1=1964 ;)))))

    அசத்தலான ஆறு பதில்கள் கொடுத்துள்ளது ஆறுதலாக உள்ளன. நன்றிகள்.

    ReplyDelete