Tuesday, January 24, 2012

பட்டையின் பராக்கிரமம்






லவங்கப்பட்டையை சமையலில் அதன் மக்த்துவம் தெரியாம்லே உபயோகித்திருக்கிறோம்..

ஒருமுறை கேரள சுற்றுப்பயணம் சென்றிருந்த்போது கணவரின் வியாபார நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர் தன் இல்லத்திற்கு அழைப்புவிடுத்தார்.. 

 ""நான் தங்கள் இல்லத்திற்குப் பலமுறை வியாபார ரீதியில் வந்திருக்கிறேன்.. என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட விசாரிக்காமல் ஒவ்வொருமுறையும் நன்கு உபசரித்திருக்கிறீர்கள்..என் மனைவியிடமும் தங்களைப்பற்றி சொல்லியிருக்கிறேன்..அவர் உங்கள் குடும்பத்தைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.. அவசியம் இல்லத்திற்கு வரவேண்டும்""..என்று என்னிடம் கூறி அழைத்துசென்றார்..

அரண்மனை போன்ற மிகப்பெரிய இல்லம்..
அருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது.... 

வில்வமரம் கிளைபரப்பி பழங்களுடன் காட்சியளித்தது வீட்டுத்தோட்டத்தில்..அந்த மாடுகளும் கன்றுகளும் வில்வப்பழத்தை மிக விரும்பிச்சாப்பிட்டது ஆச்சரியப்படுத்தியது..

அத்தனை பெரிய செல்வந்தர்களாக இருந்த போதிலும் கூட்டுக்குடும்பத்தில் அந்த சகோதரர்கள் தாங்களே அந்த மாடுகளையும் கன்றுகளையும் அதிகாலையில் குளிப்பாட்டி பூஜை செய்வார்களாம்..  

வீட்டுத்தோட்டத்தில் ஜாதிக்காய் மரம் செழித்து வளர்ந்திருந்தது..
  
லவங்கப்பட்டை மரங்கள் பூத்துக்குலுங்கின..
அந்த மரத்தில் ஆண்மரம் என்றும் பெண்மரம் என்றும் இருப்பதாகவும் நிறையப்பேர் அது தெரியாமல் ஒரே வகையான மரம் வளர்த்து பூக்கள் காயாகாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்..அவை வளர்ந்து பூக்கும் தருணத்திலேயே இனம் காணமுடியுமாம்..

அதிர்ஷ்ட்ட வசமாக அவர் நட்ட இரண்டு மரங்களும் ஆண் மற்றும் பெண் மரமாக அமைந்ததில் பரம சந்தோமும் லாபமும் அவருக்கு..
அதன் இலைகள் பிரியாணியில் சேர்க்கும் பிரியாணி இலையாம்..

Fake cinnamon tree picture


அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகம்..
சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள்

உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.

கருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டை செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. 

தமிழில் லங்கப்ப்ட்டை 
ஆங்கிலத்தில்- Cinnamon
மலையாளத்தில் கருவாப்பட்டை
தெலுங்கில் லங்கப்ப்ட்டா
Sanskrit - Twak
Hindi - Dalchini
BotanicalName - Cinnamomum verum என்றும் அழைக்கப்டும் அருமருந்து..

இலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது. இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.

இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

அகத்தியர் குணபாடம்

தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்

பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்

ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற

ஓட்டுமில வங்கத் துரிசன்னலவங் கப்பட்டை தான் குளிர்ச்சி யுண்டாக்கும்

இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்

உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்கந்தமிகு பூங்குழலே! காண் -- என்றுரைக்கிறது...


லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. 

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு  சிறந்த மருந்தாக.கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் வெகு விரைவில் சாதாரண நிலைக்கு வருவார்கள்..

லவங்க பட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், 
நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். 
ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.

அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர்.
 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.

* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.

நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.



ஆஸ்திரேலியாவில் இந்த பட்டைப்பொடியின் உபயோகம் அதிகம் இருப்பதை கண்டேன்.. சர்க்கரையுடன் கலந்து தூவி கொடுக்கிறார்கள்
சுவையும், மணமும் அருமையாக இருக்கிறது..
காலையில் பட்டைப்பொடியும் , தேனும்,  எலுமிச்சை சாறும் சேர்த்து ஆரோக்கிய பானமாக அருந்துகிறார்கள்..
ஆக பட்டையை உணவில் சேர்த்து பட்டையைக் கிளப்புவோம்!

Hot christmas drink glogg with cinnamon sticks

Hot christmas drink glogg with cinnamon sticks Stock Photo - 6056813

lemons, lemonade, honey, comb,cinnamondrinks, cup, mug, cloves, ..




muscle recovery, black tea, cinnamonDrinktea

cinnamon drink

Cinnamon And Orange Pudding
20110120-133268-cinnamon-orange-pudding.JPG


Cinnamon Bark Essential Oil, ORGANIC - Click Image to Close
Cinnamon Nutmeg Waffles
Cinnamon Nutmeg Waffles


Dark Chocolate Cinnamon Truffle Tart


Apple Cinnamon Whole Wheat Pancakes



Apple Cinnamon Bread


Apple Cinnamon Bread




Cinnamon Walnut Crown Cake


Cinnamon Walnut Crown Cake

Cinnamon Streusel Brunch Cake




Cinnamon Spice Biscotti




26 comments:

  1. இலவங்கப்பட்டை பற்றிய அரிய தகவல்கள் .இங்கே சின்னமன் டீ கிடைக்கிறது சுடு நீரில் டீபேகை போட்டு அருந்தவேண்டும்
    அதன் அருமைகள் தெரியாமலேயே இத்தனை நாட்கள் அருந்தி வந்திருக்கிறேன்ALSO ITS A blood purifier, blood sugar regulator,
    பட்டை மரத்தின் இலைகள் மரம் படம் இப்பதான் பார்க்கிறேன்

    ReplyDelete
  2. படங்கள் யாவும் பட்டையைக் கிளப்புவதாகவே உள்ளன.

    முழுவதும், ஒரு முறை எனக்காகவும் மறு முறை என் மனைவிக்காகவும் படித்துக்காட்டி விட்டு மேலே வந்து, பட்டையைக்கிளப்பிய பட்டையின் தலைப்பை மீண்டும் பார்த்ததும் தான் அதன் பராக்கிரமத்தையே அறிய முடிந்தது.

    பீமனின் பராக்கிரமம் போலவே,
    சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளும் உங்களின் சாதுர்யமும் சாமர்த்தியமும் கண்டு வியந்தேன்.

    ReplyDelete
  3. எதுக்கெல்லாமோ நல்ல பெயர் வச்சாங்க முன்னோர்கள்..இந்த பட்டைக்கு ஒரு நல்ல பேர் வச்சிருக்க கூடாதா?

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. //அரண்மனை போன்ற மிகப்பெரிய இல்லம்..
    அருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது....

    வில்வமரம் கிளைபரப்பி பழங்களுடன் காட்சியளித்தது வீட்டுத்தோட்டத்தில்..அந்த மாடுகளும் கன்றுகளும் வில்வப்பழத்தை மிக விரும்பிச்சாப்பிட்டது ஆச்சரியப்படுத்தியது..

    அத்தனை பெரிய செல்வந்தர்களாக இருந்த போதிலும் கூட்டுக்குடும்பத்தில் அந்த சகோதரர்கள் தாங்களே அந்த மாடுகளையும் கன்றுகளையும் அதிகாலையில் குளிப்பாட்டி பூஜை செய்வார்களாம்..

    வீட்டுத்தோட்டத்தில் ஜாதிக்காய் மரம் செழித்து வளர்ந்திருந்தது..//

    அந்த சூழ்நிலையை அப்படியே கற்பனை செய்து பார்த்தேன்.
    கற்கண்டாய் இனித்தது.

    பசுமாடுகளும், அவற்றின் ’கன்னுக்குட்டி செல்லக்கன்னுக்குட்டி’ களும், நிறைய மரங்கள் அடர்ந்த தோட்டமும், தினமும் கோபூஜையும் நடக்கும் வீடும் என்றால், தெய்வீக அழகுக்குக் கேட்கவா வேண்டும்!;))

    எல்லாவற்றையும் விட தம்பதி ஸமேதராய் தங்களின் தங்கமான வருகை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்திருக்குமே! ;))))

    ReplyDelete
  5. திரு மணிராஜ்
    பதிவு மிகவும் அருமை தேவையானதும் இதுவரை அறியாததுமாக உள்ளது அனைத்தையும் விட அற்புதமான கலைநயனத்துடன் பிரசுரிக்கப்பட்ட அருமையான கலர் போடோக்கள் அருமை தொடரட்டும் தங்கள் பணி நீரழிவு இருதய நோய் உள்ள அனைவரும் படிக்கவேண்டியதும் வருமுன் காப்பதற்கும் தேவையானது
    licsundaramurthy@gmail.com
    www.salemscooby.blogspot.com

    ReplyDelete
  6. //லவங்கப்பட்டை மரங்கள் பூத்துக்குலுங்கின..
    அந்த மரத்தில் ஆண்மரம் என்றும் பெண்மரம் என்றும் இருப்பதாகவும் நிறையப்பேர் அது தெரியாமல் ஒரே வகையான மரம் வளர்த்து பூக்கள் காயாகாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்..அவை வளர்ந்து பூக்கும் தருணத்திலேயே இனம் காணமுடியுமாம்..//

    அடடா! எவ்வளவு ஒரு அழகான புதிய தகவல் இது. ;)))))

    ReplyDelete
  7. //அதிர்ஷ்ட்ட வசமாக அவர் நட்ட இரண்டு மரங்களும் ஆண் மற்றும் பெண் மரமாக அமைந்ததில் பரம சந்தோமும் லாபமும் அவருக்கு..//

    மரங்களும் தம்பதி ஸமேதராய் அமைந்தது உண்மையிலேயே அவர்களின் அதிர்ஷ்டம் தான்.

    அதைத் தாங்கள் நேரில் போய்ப் பார்த்து, பதிவு செய்து எங்களையும் கண்குளிரக்காணச் செய்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டமே! ;))))

    ReplyDelete
  8. //நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.//

    மிகவும் புத்திசாலிகள் தான்.
    சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  9. அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடிய இலவங்கப்பட்டை

    நீரிழிவு நோய்க்கு

    வாய் துர்நாற்றம் நீங்க

    செரிமான சக்தியைத் தூண்ட

    இருமல், இரைப்புக்கு

    விஷக்கடிக்கு

    வயிற்றுக் கடுப்பு நீங்க

    குழந்தை பிரஸவித்த பச்ச உடம்புப் தாய்மார்களாகிய பெண்களுக்கு

    என அனைத்துக்கும் அனைவருக்கும் சர்வரோக சஞ்சீவி மருந்தென்றல்லவா சொல்லியுள்ளீர்கள்!

    உடனே நாளைக்கே போய் வாங்கி வரலாம் என்று எனக்கோர் எழுச்சி ஏற்பட்டுவிட்டது.

    ReplyDelete
  10. //கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.//

    கசந்து போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பல சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் இனிப்பான செய்தி இது.

    ReplyDelete
  11. //ஆஸ்திரேலியாவில் இந்த பட்டைப்பொடியின் உபயோகம் அதிகம் இருப்பதை கண்டேன்.. சர்க்கரையுடன் கலந்து தூவி கொடுக்கிறார்கள்
    சுவையும், மணமும் அருமையாக இருக்கிறது..

    காலையில் பட்டைப்பொடியும் , தேனும், எலுமிச்சை சாறும் சேர்த்து ஆரோக்கிய பானமாக அருந்துகிறார்கள்..//

    கொடுத்து வைத்தவர்கள் தான். ;)))))

    அதனால் தான் கங்காரு போல சுறுசுறுப்புடன், வேகத்துடன், ஆற்றலுடன் பாய்ந்து பாய்ந்து பணியாற்றுகிறார்களோ! ;)))))

    இருக்கலாம் இருக்கலாம் .....

    எப்போதோ ஓரிரு முறை சென்று வந்த தங்களுக்கே இவ்வளவு ஆற்றல்கள் என்றால், அங்கேயே தங்கி இதுபோல ஆரோக்கிய பானம் தினமும் அருந்துபவர்களைப்பற்றி கேட்கவா வேண்டும்!!

    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சும்மாவா சொன்னார்கள். ;)))))

    ReplyDelete
  12. இங்க மும்பையில் டீ போடும்போது லவங்கபட்டை சேர்த்துதான் கொதிக்க வைக்கிரோம் கூடவே ஏலக்காய் லெமன் க்ராஸ்னு ஒரு புல் எல்லாம்போட்டுதான் கொடுப்போம் சுவை சூப்பரா இருக்கும் பிரியாணி இலைபத்தி இப்பதான் தெரிந்துகொண்டேன் நனறி

    ReplyDelete
  13. //ஆக பட்டையை உணவில் சேர்த்து பட்டையைக் கிளப்புவோம்! //

    ஆக, இந்தத்தங்களின் 405 ஆவது பதிவையும் வித்யாசமானதொரு முறையில் எழுதி, பட்டையைக் கிளப்பியிருக்கிறீர்கள். சபாஷ்! ;)

    தொடரட்டும் இதுபோன்ற தங்கள் எழுத்துப்பணி!

    தங்களின் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் என்றாவது எந்த வகையிலாவது அளிக்கும், இந்த எழுத்துலகம்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்பான் வாழ்த்துகள்.
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    vgk

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவுங்க. நன்றி.

    ReplyDelete
  15. பட்டையைக் கிளப்பியிருக்கீங்க :-)))

    பட்டை இலைகளை இங்கே கரம்மசாலாவுக்கு கண்டிப்பா பயன்படுத்துவாங்க. அதுவும் அசைவம்ன்னா கேக்கவே வேணாம். முழு இலையை அப்டியே போட்டு சமைப்பாங்க.

    ReplyDelete
  16. லவங்கப் பட்டை என்றால் கறுவாவா?பார்க்க அப்படித் தானே தெரிகிறது. நல்ல பதிவு. நிறைந்த தகவல். மிக்க நன்றி.
    வேதா.இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  17. நாங்களும் இலங்கையில் கறுவா என்றுதான் சொல்வோம்.இங்கே சுவிஸ்லும் நீங்கள் படத்தில் காட்டியிருப்பதுபோல கேக்,தேனீர்,சலட் எல்லாத்துக்கும் பாவிக்கிறார்கள்.மரத்தில் ஆண்,பெண் என இப்போதுதான் கேள்விப்படுகிறேன் !

    ReplyDelete
  18. லவங்கப்பட்டை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது....

    டீ போடும் போது இந்த பட்டையை போடுவோம்.....
    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  19. பட்டையின் பயன்களை தெரிந்து கொண்டோம்.
    நன்றி.

    ReplyDelete
  20. ப‌ட்டை ப‌ற்றிய‌ அனைத்து த‌க‌வ‌ல்க‌ளும் மிக‌ உப‌யோக‌மாயிருக்கிற‌து ந‌ன்றி!

    ReplyDelete
  21. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  22. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  23. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி!
    http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_17.html

    ReplyDelete
  24. அந்தக் கால சித்த வைத்தியர்கள் மருந்துகளை ரகசியமாக வைத்து தன் சிஸ்யர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அழித்தது போல் நீங்கள் உங்கள் பக்கங்களை காப்பி பேஸ்ட் பண்ணவிடாமல் சேவ் பண்ணவிடாமல் செய்துள்ளீர்கள். ஏனிந்த சுயனலம்.

    ReplyDelete