Monday, January 23, 2012

அன்னையின் அருளாட்சி


தை மாதத்தில் வருகின்ற அமாவாசை
தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும்.

பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள்
உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
தை மாதத்தில் உத்தராயண காலத்தில் முன்னோர்கள் தேவலோகம் திரும்புகின்றனர் அவர்களை வழியனுப்பும் விதமாக நீர் நிலைகளில் தர்பணம் செய்கின்றோம்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது.

எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும்.

ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும்.

மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
அருள்மிகு அபிராமி அன்னை
அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம் 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. 


என அபிராமிபட்டர் அன்னையின் அருளொழுகு திருக்கோலத்தை வர்ணிக்கின்றார். 


அன்பர் என்பவர்க்கு நல்லன எல்லாம் தருபவனாக அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லியாக அன்னை பராசக்தி அருளாட்சி நடத்துகின்றாள். 

சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே கொலுவிருக்கும் அஞ்சுகமே
அம்மா!அபிராமி!உந்தன்  கழல் முதல் குழல் வரை பொங்கும் 
அழகின் அலைகளைப் பாடி  பாதமலர்  பணிகின்றோம்.


தை அமாவாசை  நிறைவுற்ற பின் திருநாங்கூரில் நடைபெறும் "பதினோரு கருட சேவையில் பங்கேற்கும் பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களையும் திருமங்கையாழ்வார், "மங்களா சாஸனம்' செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். 

சீகாழியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருநாங்கூர்.

இது தவிர எத்தனையோ சிவ-விஷ்ணு ஆலயங்களில் தை மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை அமாவாசை பிரசித்தி பெற்றது. 

தென்னகத்து காசி என்று இக்கோவில் போற்றப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் 
இங்கு வந்து செல்கிறார்கள்.
   கோதண்ட இராமர் தை அமாவாசை லக்ஷ தீபம்
[ramar7.JPG]


சோமாஸ்கந்தர்
[s2.JPG]





[tblfpnnews_6764948369[4].jpg]
tblfpnnews_9793817997

26 comments:

  1. அழகான தெய்வத்திரு உருவங்கள்.

    ReplyDelete
  2. தை மாதத்தின் சிறப்பினைக் கூறும்சிறப்புப் பதிவும்
    படங்களும் அற்புதம்
    தை அமாவாசையின் பெருமையினை தங்கள் பதிவால்
    தெளிவாகப் புரிந்து கொண்டோம்
    பகிர்வுக்கு நன்றி தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Azhagaana padangal! Arputha darisanam! Nanri.

    ReplyDelete
  4. ’அன்னையின் அருளாட்சி’ படங்களும் விளக்கங்களும் மிகவும் அற்புதமாக உள்ளன.

    மீண்டும் ஒருமுறை படித்து விட்டு பிறகு வந்து கருத்துக்கள் விரிவாகக் கூறுவேன்

    ReplyDelete
  5. கடைசிப்படத்தில் அம்பாள் வீற்றிருக்கும் கம்பீரமும், பாத தரிஸனமும், மடியில் கிடக்கும் செம்பவழ மாலையும், இடுப்பில் உள்ள நல்ல பட்டையான ஒட்டியாணமும், அதன் மேல் காட்டியுள்ள வெகு அழகான நீலக்கற்கற்களும், இருகைகளையும் தூக்கி அபயம் அளிப்பதும் சூப்பர்! ;))))

    ReplyDelete
  6. கீழிருந்து இரண்டாவது படத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் .. அடடா கொள்ளை அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

    அதுபோல கீழிருந்து மூன்றாவது படமும் தூள் டக்கர் தான்.

    அதே போல கீழிருந்து நான்காவது படத்தில் மேலே நாகரும், இருபுறமும் அன்ன பக்ஷிகளுமாக வீற்றிருக்கும் அம்மனின் விசிறி மடிப்புடன் கூடிய நவாப்பழக்கலர் புடவை தங்க ஜரிகை பார்டரில் ... First Class A1.

    ReplyDelete
  7. கீழிருந்து 2 ஆவது படம்:

    ரிஷபவாகனத்தில் ஸ்வாமியும் அம்பாளும் தூள் டக்கர் தான்.

    ReplyDelete
  8. கீழிருந்து 3 ஆவது படம்:

    வெகு அருமையாகவும் நல்ல Clarity யாக உள்ளது. குதிரை அருகில் நிற்கும் பொம்மை பளபளவென பீங்கான் போலவும் பீங்கானில் எண்ணெய் தடவியது போலவும் நல்ல மினுமினுப்புடன் வெகு அழகாக உள்ளது பாருங்கள்.;))))

    ReplyDelete
  9. கீழிருந்து 4 ஆவது படம்:

    தலையில் நாகருடனும், இரு புறங்களிலும் அன்ன பக்ஷிகளுடனும் வீற்றிருக்கும் அந்த அம்மன் புடவைக்கட்டைப் பாருங்கள்.

    நவாப்பழக்கலரில், தங்க நிற பார்டரில், விசிறி மடிப்புடன் எவ்ளோ அழகு பாருங்கள்! ;)))) சூப்பரோ சூப்பர் தான்!

    ReplyDelete
  10. சோமாஸ்கந்தரின் புஷ்பப்பல்லாக்கு அலரங்காரம் வெகு அருமையாக உள்ளது. வானவில் போன்று பல கலர்களில் வட்டவடிவமாக எப்படித்தான் பொறுமையாக தொடுத்துச் செய்தார்களோ! பூக்கள் மணம் வீசி என் மனதைக் கொள்ளை கொள்கிறதே! ;)

    ReplyDelete
  11. கோதண்ட இராமருக்கு தை அமாவாசையில் ஏற்றப்பட்டுள்ள லக்ஷ தீபத்தை வெகு அழகாகப் படமெடுத்து பதிவு செய்து நாங்களும் திவ்ய தரிஸனம் செய்யக் காட்டியுள்ள, உங்களை எப்படிப்பாராட்டுவது என்றே தெரியவில்லை. Thanks a Lot, Madam.

    ReplyDelete
  12. காய்கறி மாலைகளால் சாகம்பரியாகத் திகழும் அம்மன் படம் மிகவும் அசத்தலாக உள்ளது. நீளமான முழுப்புடலங்காயையும், கரும்பையும் இருபுறமும் வளைத்துக்காட்டியுள்ளது, அலங்காரம் செய்தவரின் Creativity ஐ நன்கு காட்டுகிறது. அவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. தை அமாவாசையன்று இராமேஸ்வரம் சேது சமுத்திர ஸ்நானம் செய்பவர்கள் போட்டோ கவரேஜ் மிக அருமை.

    திருநாங்க்க்ரில் நடைபெறும் பதினோரு கருட சேவை நல்ல அழகோ அழகு.

    [கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் என்னும் வெகு அழகான பெருமாள் கோயிலில், கல்கருடன் விசேஷம் என்கிறார்களே! அதைப்பற்றியும் என்றாவது ஒருநாள் தங்களிடமிருந்து பதிவு வெளிவரும் தானே!!]

    கழல் முதல் குழல் வரை பொங்கும் அழகுடன் விளங்கும் அந்த அபிராமி அம்மனை எவ்ளோ அழகாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள். அதற்கு ஓர் தனிப்பாராட்டு உங்களுக்கு. பார்க்கப்பார்க்க தீர்க்கமாக ரொம்ப ஜோராக உள்ளது அந்தப்படம்.

    ReplyDelete
  14. கோபுர தரிஸனங்கள் வழக்கம் போல கோடி புண்ணியம் தருவதாகத் தந்துள்ளீர்கள்.

    தை மாதம் பற்றியும், உத்தராயண புண்ணிய காலம் பற்றியும், இரு வேறு சக்திகளான [உஷ்ணம்+குளுமை] ஒன்றாக இணைவதே அமாவாசை என்ற அழகிய விளக்கமும், அன்று செய்யப்படும் பித்ரு கார்யங்களால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அமாவாசையே எந்த ஒரு பரிகாரம் செய்யவும் ஏற்ற நாள் என்பது பற்றியும் வெகு அழகாக தங்களுக்கே உள்ள தனித்திறமைகளை வெளிக்காட்டி எழுதியுள்ளது எனக்கு மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  15. அமாவாசை திதியின் சிறப்பு அறிந்து கொண்டேன்.
    நன்றி ராஜி !

    ReplyDelete
  16. உங்களின் வெற்றிகரமான 403 ஆவது பதிவாகிய இந்த ”அன்னையின் அருளாட்சி” என்ற பதிவினால், கைக்குழந்தை போன்ற நான் உண்மையிலேயே “என் அன்னையின் அருளாட்சி” பெற்றது போன்ற முழுத் திருப்தியை அடைந்தேன்.

    அனைத்துப் படங்களும், அருமையான விளக்கங்களும், வழக்கம் போல் மிகவும் சிறப்பாக உள்ளன.

    தொடரட்டும் தங்களின் இந்த தெய்வீகப்பணி.

    மனமார்ந்த பாராட்டுக்கள்
    அன்பான வாழ்த்துகள்.
    இதயபூர்வமான நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  17. //[கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் என்னும் வெகு அழகான பெருமாள் கோயிலில், கல்கருடன் விசேஷம் என்கிறார்களே! அதைப்பற்றியும் என்றாவது ஒருநாள் தங்களிடமிருந்து பதிவு வெளிவரும் தானே!!]//

    Sorry Madam. நீங்கள் இதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளீர்கள். இப்போது எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அதை மீண்டும் இப்போது ஒருமுறை தேடிப்போய் படித்து மகிழ்ந்தேன்.

    http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_11.html

    தலைப்பு:

    ”நலம் அருளும் நாச்சியார் செல்வாக்கு”

    மிக்க நன்றி!

    vgk

    ReplyDelete
  18. தைமாதமும், தை அமாவாசையின் சிறப்பும் தெரிந்துகொள்ள முடிந்தது. படங்களும் நல்லா இருக்கு, நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. படங்கள் பிரமாதம்.பகிர்வு அருமை.

    ReplyDelete
  20. அமாவாசை பரிகாரகங்களைப் பற்றியும், தை அமாவாசையின் சிறப்பையும் அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  21. நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete
  22. தை அமாவாசை பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி மேடம்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் தை அமாவாசை விசேஷமானது.

    ReplyDelete
  23. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete