Sunday, January 22, 2012

பிரகாசிக்கும் பூரண சந்திரன்!





யா தேவீ சர்வ பூதேஷ¤ சக்தி ரூபேன சம்ஸ்திதா
 நமஸ்தைஸ்யை நமஸ்தஸ்யை நமோஸ்தஸ்

தேவீ மாஹாத்மியம்..


அமாவாசையிலிருந்துதான் சாந்திரமான மாதம் பிறக்கும்.

ஆகம, வைதிக சம்பந்தப்பட்ட கிரியைகளுக்கு சாந்திரமான மாதம் முக்கியம்.

 சாக்த வழிபாட்டில் ஆழ்நிலை செல்லும்போது புருவமத்தியில் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றும். பூரணச் சந்திரமண்டலமாக இது தோன்றும்.

 சாக்தர்களுக்குப் பௌர்ணமி வழிபாடு மிகவும் முக்கியமானது.

அன்று இரவு, வானத்தில் தோன்றியிருக்கும் சந்திரபிம்பத்தில் அம்பிகையை மானசீகமாக ஆவாஹனம் செய்து மானசபூஜையை நிகழ்த்துவது மரபு. '

சந்த்ரமண்டலமத்யஸ்தா, சாருரூபா, சாருஹாஸா, சாருசந்த்ரகலாதரா, சராசரஜகந்நாதா' என்ற லலிதா சகஸ்ரநாம மந்திரங்களுக்கு ஏற்றவாறு வழிபாடு செய்வதுண்டு.

அம்பிகையின் தியானத்தில் அந்த சந்திரமண்டலம் சாட்சாத் அம்பிகையாக ஜொலித்துக்கொண்டிருந்த்தது..

பௌர்ணமி என்று சொன்ன அபிராமி பட்டரிடம். பூரண சந்திரனை இன்று இரவு காட்டவேண்டும். இல்லையெனில் உம்மை வெட்டி நெருப்புக்குழியில் போட்டுவிடுவோம்", என்று ஆணையிட்டார் சரபோஜி மன்னர்..

அபிராமி பட்டர்,
    "நாம் நாமாக ஏதும் சொல்லவில்லை. ஆக்ஞா சக்கரத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கும போது வந்த சொற்கள் அவை".
    "நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்".,

என்று மனதிற்குள் சங்கற்பித்துக்கொண்டு, அந்தாதியன்றை அபிராமியின் மீது உரியில் இருந்தவண்ணம் பாடினார்.  

    விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
    பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்ற 79-ஆம் பாடலைப் பாடும்போது அம்பிகைத் தன்னுடைய காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய 'தாடங்கம்' என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீசினாள்.
    
அது பூரண சந்திரனாக மாறிப் பிரகாசித்துத் தோற்றம் தந்தது.

நிலவே இல்லாத அந்த அமாவாசையில் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்பாளின் பேரருளால் அபிராமிப் பட்டர் என்ற பக்தரின் துன்ப துயரம்நீங்குமாறும் அவரது பக்தியின் சிறப்பு உலகத்திற்கு தெரியுமாறும் வானவெளியில் நிலவு எழுந்தது. பிரகாசித்தது.

கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம் பாடவியிற்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

சில ஆலயங்களில் இந்நிகழ்வினைச் சிறப்பிக்கும் முகமாக கொழுந்து
விட்டு எரியும் நெருப்பின் மேல் நூறு நூலால் பிணைக்கப்பட்ட உறியில்
பட்டரின் திருவுருவம் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிராமி அந்தாதி
பாடப்படும். 

ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு நூல் அறுக்கப்படும். 

79வதுபாடலான ‘விழிக்கே அருளுண்டு..’ என்ற பாடல் பாடப்பெறும் போது அம்பாளின்திருவுருவத்தை எழுந்தருளச் செய்து விஷேட தீபாராதனை செய்யப்பெறும்தொடர்ந்து நூறு பாடல்களும் பாடப்பட்டு அம்பாளும் பட்டர் பெருமானும்வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.



17 comments:

  1. அபிராமி அருள் பெற
    அதிசய வாய்ப்பு.
    இது எனக்கு ஒரு
    அற்புத ப்ரசாதம்.

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  2. அபிராமியின் அருள் கிடைக்கப் பெற்றோம்.

    ReplyDelete
  3. நல்ல நாளில் தகுந்த பதிவு மேடம்.கடைசிப்படம் பத்ரிநாத் செல்லும் படமா மேடம்?

    ReplyDelete
  4. அபிராமி அந்தாதியைப் பற்றி சிறப்பு மிக்க பதிவு. படங்கள் அருமை.

    ReplyDelete
  5. அபிராமியின் அருள் கிடைத்தது, அபிராமி அந்தாதி பாடப்படும் விதமும் தகவல் எனக்குப் புதியது.

    ReplyDelete
  6. அபிராமிப் பட்டரின்
    பெருமையினையும் அம்பாளின் அருளாசியினையும்
    ஒருங்கே சொல்லிப் போகும் பதிவு
    படங்களுடன் விளக்கங்களுடன் மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. ░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
    ▓▓▓▓▓░░░░▓▓▓▓░▓▓▓▓▓░░▓▓░▓▓▓░░▓░
    ▓░░▓░░░░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
    ▓░░▓░░▓░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
    ░░░░░░▓░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓▓░
    ░░░░░▓░░░░░░░░░░░░░░░░░▓▓▓░░░░░

    ReplyDelete
  8. கீழிருந்து மூன்றாவது படத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் அம்மன் வெகு அழகாக அமைந்துள்ளது. ;)))))

    கீழிருந்து இரண்டாவது படமும் நல்ல அழகான காட்சியே.

    ReplyDelete
  9. ஆதிபராசக்தி என்ற திரைப்படத்தில் [S V சுப்பைய்யா அவர்கள் அபிராமி பட்டராக நடித்தது] இந்தக்காட்சி வெகு அழகாக நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக காட்டியிருந்தார்கள்.

    சொல்லடி அபிராமி
    வானில் சுடர்வருமோ,
    இல்லை எனக்கு
    இடர் வருமோ ...
    என்ற் வரிகளுடன் அந்தப்பாடல் தொடங்கி மிக அருமையாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

    இதைப்படித்ததும், நான் என் சிறுவயதில் பார்த்து பிரமித்துப்போன அந்தப்பட பாடலும், அருமையான காட்சிகளும் நினைவுக்கு வந்தன.

    மலரும் நினைவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.! ;)))))

    ReplyDelete
  10. அபிராமி பட்டர் என்ற தூய பக்தனைப்பற்றி உலகறியச் செய்ய, அந்தத் திருக்கடவூரில் எழுந்தருளிய அபிராமி அம்பாள் பேரருளை தங்கள் மூலம் இன்று நாங்கள் நன்கு அறிய முடிந்தது.

    தங்களின் இந்தப்பதிவும்
    ’பிரகாசிக்கும் பூரண சந்திரன்’
    போன்றே நன்கு பிரகாசிக்கிறது.

    தேவீ மஹாத்மியம்,

    சாந்திரமான மாதம் பிறப்பது,

    சாக்த வழிபாட்டில் ஆழ்நிலையை எட்டும்போது நிகழ்வது,

    சாக்தர்களின் பெளர்ணமி வழிபாடு,

    அம்பிகையை தியானிக்கும் போது அந்த சந்திரமண்டலமே சாக்ஷாத் அம்பிகையாகக் காட்சியளிப்பது,

    அபிராமி பட்டரின் பக்தி,

    அவருக்காக அம்பிகையே தன் ஸ்ரீ சக்ர ரூபமாகிய ‘தாடங்கம்’ கழற்றி வீசி, விண்ணில் அமாவாசையன்று பூர்ண சந்திரன் போல பிரகாசிக்கச்செய்தது,

    79 ஆவது பாடலான ‘விழிக்கே அருளுண்டு’

    என பல்வேறு பன்ருட்டி பளாச்சுளை போன்ற சுவையான தகவல்களை அள்ளித்தெளித்து, அற்புதம் செய்துள்ளீர்கள், இந்தப்பதிவினில்.

    அன்று எனக்கு ஸ்ரீ ஆண்டாளின் வைரமூக்குத்தியாகத் தோன்றிய நீங்கள் இன்று பெளர்ணமியின் முழு நிலவாகக் காட்சியளிக்கிறீர்கள்.

    தினமும் இதுபோன்ற அற்புதமானப் பதிவுகளை தந்து மகிழ்விக்கும் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    இதுபோலவே தொடரட்டும் தங்களின் அன்றாட ஆன்மிகப்பணிகள்.

    பெரும் மகிழ்ச்சியுடன் vgk

    ReplyDelete
  11. நன்றி...நன்றி...நன்றி!

    ReplyDelete
  12. Just noe I returned from nearby Temple. Wherein we chanted Abirami anthadhi and seen the deeparathani and not yet releived from HER karunyam. On opening here SHE is sitting in Rishiba vahanam. What a pleasent surprise.
    I felt very emotional Rajeswari.
    Thanks for the post.
    viji

    ReplyDelete
  13. அபிராமி அம்மன் அருள் கிடைக்கப்பெற்றோம். நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete