Monday, January 16, 2012

காப்புக்கட்டுதல்



Windy Trees




பூளைப்பூ வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது.

போகிப் பொங்கல் அன்று பூளைப்பூ கட்டினை, வீட்டின் கூரையில் வைப்பது மரபு..

பொங்கல் சமயத்தில் காப்புக்கட்டு நோன்பு அன்றுவீடுகளம் தொழுவம் எல்லா இடத்திலும் வேப்பிலை, ஆவரைபூ இலையுனும், மாவிலையுடனும் இணைத்துக் கட்டப்படுகிறது

சுத்தமாக்கிய இல்லத்துக்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காக கட்டப்படுவதால் காப்புக்கட்டு என அழைக்கப்படுகிறது..

பொங்கலுக்கு வாசலிலும், மாடுகளுக்கும் கட்டும் மாலை பீளைப்பூ,  பொன்னாவரை , பிரண்டை, கரும்புத்துண்டுகள் ஆகியவற்றைக் நெற்றாளில் திரித்த கயிற்றில் கோர்த்து கட்டப்பட்டிருக்கும்.


இச்செடியை ‘தேங்காய்ப்பூச்செடி’ என்றும் அழைப்பார்கள்..





பூளைப்பூ ஆம் பிறவி - பூளைப்பூப் போன்ற நொய்தாம் 
தன்மையுடைத்தாகும் பிறவி. பூளை - நொய்தாகிய பூவுடைய 
செடிவகை. அற்பமாகக் கழிவதால் பிறவிக்குப் பூளைப்பூவை 
உவமித்தார். "மாருதமறைந்த பூளையாமென." என்பது திருநாளைப்போவார் பாடல்..
poolappoo-Thanks to Kasi http://kasiblogs.blogspot.com/
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த ... முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு, பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள 

சடைத் திரு ஆல வாயன் அளித்தருள் அற்புத முருகோனே ... சடையைக் கொண்ட மதுரைப் பிரான் ஆகிய சொக்கேசர் ஈன்றருளிய அற்புதமான முருகோனே, 




கோவையில் இருக்கும் பீள மேடு இந்தப் பூவின் பெயரால் ஆனது. பூளைச்செடியை javanese wool plant என்றும் சொல்லுவார்கள். இது ஒருவித silk cotton. silk cotton தான் கோவைப் பகுதியின் துகில்த் (textile) தொழிலுக்குத் தொடக்கம்.


நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி
கடியலூர் உருத்திரங் கண்ணனார் சொல்லுவார். (நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவை குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகச் சொல்லுவார்.) சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றிலும் இந்தப் பூ எடுத்துக் காட்டப் பெறும்.

தலையணை செய்ய பூளைப்பூ மருத்துவ உள்ளீடு. ராகிப் பொட்டு இட்டும் தயாரிப்பதுண்டு.. தலையில் நீர்கோர்த்து தலைபாரமானால் இந்தலையணை உப்யோகித்தால் தலைபாரம் குறையும்.. ஆகவே இது ஒருவகையில் பருத்திப் பஞ்சுக்கு முன்னோடி/மாற்று 

பூளைமேடு போலவே கோவையில் ஆவாரம்பாளையம் உள்ளது.



aavaarampoo-Thanks to http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.htm[avarai.jpg]


ஆவாரை பூத்திருக்க சாவரைக் கண்டதுண்டோ என்பது ஔவை வாக்கு..
ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்

தங்கம் எனவே சருமத்திற்குக் காந்திதரும்

ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

மார்கழி கடைசியில் பூக்கத்துவங்கி பங்குனி சித்திரைவரை நெடுஞ்சாலையின் ஒருமருங்கிலும் பூத்துகுலுங்கும் ஆவாரம்பூ கண்கொள்ளாக்காட்சி.

 ஆவாரம்பூ நீரழிவு நோய்க்குக் கைகண்ட மருந்து. பூவை வாணலியில் இட்டு நீரூற்றிக் கருக்க வைத்துக் காய்ச்சி அதன் சாற்றைக் குடித்தால், தமிழ் மருத்துவ முறையில் நீரழிவைக் குறைக்க முடியும்.


ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.

பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும்.


வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.





கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.

காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். ‘கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.

மாவிலைகள் ‘புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் ‘புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.

மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

கோவில் கும்பாபிஷேகங்களிலும் கும்பகலசங்களில் உள்ள மந்திர சக்திவாந்த தீர்த்தத்தை மாவிலைக்கொத்தில் நனைத்து தெளிக்கின்றனர்.
யாகத்தீயிலும் மாவிலையால் நெய்வார்ப்பது உண்டு





மற்ற மரங்களை விட வேப்ப மரத்திற்கு அலாதியான மருத்துவ குணங்கள் உண்டு.

திருக்குடந்தைக்காரோணம், புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவில், திருவாட்போக்கி என்னும் ஐயர் மலை ஆகிய திருக்கோவில்களில் வேம்பு தலமரமாக ஆகியுள்ளது.
அதிகமான மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக தொற்று நோய்களுக்கு வெள்ளைக்காரர்கள் ஆய்வகத்தில மருந்து தேடிக்கொண்டிருந்த போது வேப்பிலையை பிடுங்கி நோயை விரட்டி அடித்தவர்கள் நம்மூர் பாட்டிகள்.
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்படும் தத்துவம்  வேம்பை சுற்றி 1நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளது., காற்று தூய்மையுறும் 

வேப்பிலை தெய்வீக மூலிகையாக கருதப்படுகிறது .

மகாத்மா காந்தி அவரின் ஆரோக்கிய ரகசியமாக வேம்பை கூறுகிறார் .அவரது உணவில் வேம்பு சட்னி தவறாமல் இடம் பெற்றது .







33 comments:

  1. நேற்றைய என் கேள்விக்கு பதிலாகத் தனிப்பதிவேவா? நன்றி.

    ReplyDelete
  2. முதல் படத்தில் அசைந்தாடும் அந்த மிகப்பெரிய மரம் வெகு அருமை.

    கடைசி படத்தில் ஒரு இஞ்ச் கூட நகராமல் வேகவேகமாகப் பாய்ந்து ஓடிச் செல்வதுபோல பாவ்லா காட்டும் மாடும் கூட! ;))))

    ReplyDelete
  3. காந்தி உணவில் வேம்பு இடம் பெற்றது எனக்குப் புதிய செய்தி .

    இலைகள் & பூக்கள் பற்றிய சிறந்த தகவல்கள் தந்த பதிவு.

    ReplyDelete
  4. தேங்காய்ப்பூச்செடி என்றும் அழைக்கப்படும் பூளைப்பூவைப்பற்றி மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக ஏராளமாகவும் தாராளமாகவும் சொல்லி அசைத்தி விட்டீர்களே!

    வெற்றியின் சின்னம்
    காப்புக்கட்டு
    கெட்ட சக்திகள் ஏதும் வராமல் தடுத்தல்
    திருநாளைப்போவாரின் பாடல் சான்று
    ஆறுமுகன் அணிந்த ஆறினில் ஒன்று
    பீள மேட்டின் பெயர் வரலாறு
    சில்க் காட்டன் வகை
    கடியலூர் உருத்திரங் கண்ண்னார் சொன்னது;
    சீவக சிந்தாமணி
    கம்ப இராமாயணம்
    பெரிய புராணம்
    ஆகியவற்றிலும் சொல்லப்படுவது
    மருத்துவ உபயோகம்
    தலையணை செய்ய பயன்படுத்தியது
    பஞ்சுக்கு முன்னோடி என
    அப்பப்பா....எத்தனைத் தகவல்களைத் திரட்டிக்கொடுத்து விட்டீர்கள்! ;))))

    சபாஷ்! YOU ARE VERY VERY GREAT !!

    ReplyDelete
  5. பூளைமேடு போலவே ஆவாரம்பாளையம் அதுவும் கோவையிலேயே!

    ஆவரம்பூ தங்க நிறம்;
    மங்கல மஞ்சள் நிறம்;
    கண்ணுக்குக் குளிர்ச்சி,

    உப்புத்தன்மையை நீக்கும்,
    சர்க்கரை வியாதியைப் போக்கும்,
    சரும நோய்கள் ஏதும் அண்டாது.
    மேனி பளபளக்கும்!

    அடடா!
    கோவைக்காரர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்! ;))))

    ReplyDelete
  6. மாவிலைத்தோரணம் கட்டாத விழாக்களும் உண்டோ?

    மாவிலையில் மகத்துவங்களை வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

    சுவாச நோயைப்பரவாமல் தடுக்கிறது;
    கூட்ட நெரிசலில் நச்சுக்காற்றினால் யாரும் பாதிக்காமல் காக்கிறது.
    காற்றின் மூலம் பரவும் தொத்துக்கள் கிருமிகள் பாக்டீரியாக்களால் யாரும் பாதிக்காமல் இருக்கவே நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைப் பயன் படுத்தியுள்ளனர்.

    புரோஹிஸ்பிடின் என்னும் வாயுவை மாவிலைகள் காற்றினில் பரவச்செய்கின்றன. அது நோய் கிருமிகளையும் பாக்ட்டீரியாக்களையும் அழிக்கிறது, அருமையான தகவல்கள்.

    கும்பாபிஷேகம், ஹோமம் முதலியவற்றிலும் இந்த மாவிலையே பயன் படுத்தப்படுகின்றன. எவ்வளவு சந்தோஷமான தகவல் பகிர்வுகள்!;)

    ReplyDelete
  7. வேப்பிலை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

    வேப்பிலை என்றாலே மஹாமாயீ மாரியம்மனே நினைவுக்கு வரும்.
    மிகச்சிறந்த மருத்துவப்பொருளே!

    வேப்பங்கொழுந்துகளையும், வேப்பம்பூக்களையும் மரத்திலிருந்து பறித்து அலம்பிவிட்டு அப்படியே நான் தின்று விடுவேன்.

    கொழுந்துகள் கிடைக்காத நிலையில் முற்றிய இலையைக் கூட ஒன்றிரண்டு கடித்துத் தின்பதுண்டு. ஆரம்பத்தில் கசக்கும். போகப்போக அதுவே ருசியாக இருக்கும்.

    ReplyDelete
  8. இன்றையப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சியாக, கருத்துக்கு இனிமையாக, மொத்தத்தில் ஒரு வித்யாசமானதாகவும், விரும்பத்தகுந்ததாகவும் அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  9. சிறந்த தகவல்கள் தந்த பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வேப்பம்பூ இருந்தாலும் இனிமையா இருக்கு இடுகை.. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  11. அரிய தகவல்களால் கட்டி காப்பிட்ட பதிவு, மிக சிறப்பு

    ReplyDelete
  12. அருமை சகோ.பல தகவல்கள் அறிய முடிந்தது.இயற்கையின் மகத்துவ‌த்தை நம் முன்னோர்ர்கள் அறிந்து ஆக்கபூர்வமாக தங்கள் வாழ்வு முறையில் பயன் படுத்தினார்கள் என்பதை பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    தாங்களிடம் இது போன்று இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றேன்.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இதுவரை தெரிந்திராத தகவல்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  15. நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும் நல்ல பல அர்த்தங்கள் உள்ளன. "காப்புக்கட்டுதலை" நல்லாவிளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  16. நம் முன்னோர்கள் வழி வழியாக செய்த பல செயல்களுக்கும் நல்ல பல அர்த்தங்கள் உள்ளன. "காப்புக்கட்டுதலை" நல்லாவிளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  17. மாவிலை பற்றி தென்னமெரிக்காவிலும் அதே நம்பிக்கை.

    ReplyDelete
  18. தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி மேடம்!

    ReplyDelete
  19. அசைந்தாடும் மரம் அருமை.பல தெரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  20. பூளைப்பூ,ஆவாரம்பூ மாவிலைத் தோரணம் அகியவற்றைப்பற்றி அரிய தகவல்கள தொகுப்பு அருமை.படங்கள் கண்ணுக்கு விருந்தாய் உள்ளது.

    ReplyDelete
  21. பூளைப்பூ, ஆவாரம்பூவின் மகிமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. தகவல்களுக்கு மிக்க நன்றி. எங்கள் வீட்டிலேயே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை பூளைப்பூ நிரப்பிய தலையணையும் புளிச்சநார்க்கயிறு எனப்படும் ஒருவகை நார்க்கயிறு கொண்டு பின்னப்பட்ட கயிற்றுக் கட்டிலும்தான் உபயோகித்துவந்தோம்.

    ReplyDelete
  23. தைப்பொங்கலுக்கு வழுக்குமரம் ஏறுவது எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தம். இந்தப் படம் எந்த ஊரில் பிடித்தீர்கள். இன்றுகூட எங்கள் பகுதியில் வழுக்குமரம் ஏறினார்கள். உளுந்து வெந்தயம் சோற்றுக்கற்றாழை கிரீஸ் ஆகியவை கொண்டு பூசி மேலே ஏறும்போது சுற்றிலும் இருந்து தண்ணீரும் ஊற்றுவார்கள்

    ReplyDelete
  24. பூளைப்பூ- இந்தப் பூவை கிராமப்புறங்களில் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறேன். அங்கே அதனை போங்கல்பூ என கூற கேட்டிருக்கிறேன். பூவின் பெயர் படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி. விசேஷங்களும் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  25. காப்பு கட்டுதலின் அர்த்தம், வேம்பு, மா, பூளைப் பூவின் மகிமை எல்லாம் சொன்னதற்கு நன்றி.
    இளைய தலைமுறைக்கு இது எல்லாம் தெரிய வேண்டும்.
    இங்கு பூளைப் பூ கிடைக்காது, மா, வேம்பு, பூ சேர்த்து காப்பு கட்டுவேன் வாசலில். மதுரை, கோவையில் தெருவில் விற்பார்கள் வாங்கி கட்டிக் கொள்ளலாம்.

    படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  26. நல்ல பகிர்வு.

    நாங்கள் இங்கு தேங்காய்ப்பூக் கீரை என்போம்.

    ReplyDelete
  27. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  28. காப்புச்செய்யுள்
    *********************
    பூவால் நோய்வினைபோகும் எனப் பூவைக் கட்டடா
    பூவாய் வெளியிடைஏகும் எனத்தாழ்வாரம் வையடா
    பூளாய் உடலாகி ஆவாரமென மேனியும் இளவேப்பம்
    பூவாய் எதிர்ச்சக்தி கூட்ட முப்பூவாய் காப்புக் கட்டடா

    ReplyDelete
  29. மஞ்சள் தங்கும் ஆவாரம் பூவினையும்
    மஞ்சம் சுரக்கும் பூளைப் பூவினையும்
    நஞ்சு தவிர்க்கும் வேப்பம் பூவினையும்
    "ஆபூவே" என "வேபூஆ" என மகிழும்
    காப்புக்கட்டுவோம்,மனவுறுதிகட்டுவோம்

    ReplyDelete