Monday, January 30, 2012

நலம் தரும் ரதசப்தமி









ஓம் பூர் புவஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனப்ரசோதயாத்


காயத்ரி மந்திரம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மந்திரம்தான். "செங்கதிரோன் ஒளியைத் தேர்கின்றோம்; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!' என்பதே இந்த மந்திரத்தின் தமிழ்ப் பொருளாகும். 
இராமபிரான் இராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானைத் துதிக்குமாறு அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம் ..

காயத்ரி மந்திரமும் ஆதித்ய ஹ்ருதயமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்கக் கூடியவையாகும்.

வேதகாலத்திலிருந்து உயிர்கள் வாழ்வதற்கு தனது ஒளியினை வழங்கும் சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக திகழ்வதாக போற்றுகிறோம்..
சூரிய பகவானும் திருமாலும் ஒரு தெய்வாம்சத்தின் இருகூறுகள் என்ற அடிப்படையில் சூரியன், சூரிய நாராயணர் என்றே வழிபடப்படுகிறார்.

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப்படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.


சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிக்கும் நாள் ரதசப்தமி.. 

ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. 

சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார். 

தமிழகத்தில் உள்ள நவகிரகத் தலங்களில் முதன்மையான சூரியனார் கோவில் சூரியனுக்குரிய ஆலயமாகும். கேரள மாநிலம், ஆதித்யபுரம் என்ற சிறிய கிராமத்தில் சூரியனுக்கு ஒரு தனி ஆலயம் உள்ளது. 

சிவபெருமானின் மூன்று கண்களில் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாக வும், நெற்றிக் கண் அக்னியாகவும் விளங்கு கின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில்தான் சிவாலயங்களுக்குள் இறைவனை நோக்கியபடி வலது- இடது புறங்களில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சூரியனுக்குரிய ரதசப்தமி நாளன்று அவருக்குரிய எருக்குச் செடியின் ஏழு இலைகளை உச்சந் தலையின்மீது வைத்துக் கொண்டு ஆறு, குளங்களில் மூழ்கி எழ வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம் ஆகும்.  
Hindu Devotees Offer Prayers to the Sun God at Sunset Framed Photographic Print
வைவஸ்வத மனுவின் (விவஸ்வான் என்ற சூரிய பகவானின் வழித்தோன்றல்) ஆட்சியின் முதலாம் நாள் இந்த ரதசப்தமி நாளாகும். 

இது மகாசப்தமி என்றும்; ஜயசப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைந்தால் அது மிகப்பெரிய புண்ணிய தினமாகக் கருதப்படுகிறது. 
திருப்பதி போன்ற வைணவ ஆலயங்களில் ரதசப்தமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உற்சவருக்குரிய வாகனங்கள் சூரியப் பிரபை, சந்திரப் பிரபையென்று இரண்டு உண்டு. 

சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.
“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை,
“சப்தமி திதி’ என்கிறோம்.

 திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். 

ரதசப்தமி நாளன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சூரிய நாராயணராக மக்களுக்கு அருள்பாலிக்கிறார்!
Govardhana Giridhari-Chandra Prabhai.JPG

Sunrise Over the Caribbean Sea, Playa Del Carmen, Mexico Photographic Print

“அர்த’ என்றால், “பாதி!’. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார்.

 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.


ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் சூரிய பகவானை பூஜிக்க வேண்டும்.
சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. அந்தச் சக்கரத்தில் `மகாக்ஷம்' என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரமே `ஸம்வத்ஸரம்' எனப்படும் காலச் சக்கர சொரூபமாக உள்ளது.

உலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வது போல சூரியனின் ஏழு வகையான கிரணங்களும் எருக்கன் இலைகளில் ஊடுருவிச் செல்லும். அதனால் இந்த இலைகளை தலையில் வைத்து நீராடுவது உடல் நலத்திற்கு நலத்தை விளைவிக்கும்.

இப்படி நீராடும் பொழுது,

ஸப்த ஸப்திப்ரியே தே3வி

ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம் 
மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து 
ஸப்தமீ நெளமி ஸப்தமி !

தே3வி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம் 
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன 
மம பாபம் வ்யபோஹய ! 


என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.


14 comments:

  1. ரத ஸப்தமியான இன்று [30.01.2012 அன்று] மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  2. ரத ஸப்தமியன்று வீட்டு வாசலில் போடப்படும் ஒற்றைச்சக்ர தேர்க்கோலம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது,பதிவுக்கு தனிசிறப்பும் அழகும் தருகிறது.

    ReplyDelete
  3. ரத ஸப்தமியன்று சொல்லப்படும் ஸ்நான ஸ்லோகமும், ஏழு எருக்க இலையை சிறிது அக்ஷதையுடன், தலையில் வைத்து ஸ்நானம் செய்வதன் தாத்பர்யம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. //ஆதித்ய ஹிருதயமும், காயத்ரி மந்திரமும் அனைத்து வெற்றிகளையும், உடல் ஆரோக்யத்தையும் தரவல்லது.//


    அழகான மகிழ்ச்சியூட்டும் தகவல்கள். ;)))))

    ReplyDelete
  5. சிவாலயங்களில், அவரின் முக்கண்களில் இரண்டான சூரியனுக்கு ச்ந்திரனுக்கும் தனித்தனி சந்நதிகள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளதின் தாத்பர்யம் இப்போது இந்தப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    நான் அநேகமாக தினமும் சென்று வழிபட்டுவரும் “ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலிலும் இது போலவே சூர்ய சந்திரர்களுக்கு, தனித்தனி சந்நதிகள், சிவனைப்பார்த்தபடி வலதுபுறமும் இடதுபுறமும் அழகாக அமைந்துள்ளது.

    இனி வழிபடச்செல்லும் போது, இந்தப்பதிவின் நினைவு எனக்கு வந்து மகிழ்வளிக்கும்.

    ReplyDelete
  6. படங்கள் யாவும் வழக்கம்போல் அருமை.

    ஏழு குதிரைகள், ஏழு பிரகாரங்கள், ஏழாம் நாள் ஸப்தமி, ஏழு வகையான சூர்யனின் கிரணங்கள் என பல்வேறு தகவல்களை “தகவல் களஞ்சியத்திடமிருந்து” நாங்கள் பெறவும், அதை பொறுமையாக வாசித்து மகிழவும், ஏழேழு ஜன்மத்தில் ஏதோ கொஞ்சூண்டு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

    இதை எழுதி இன்று வெளியிட்டுள்ள தங்களின் தங்கக்கைகளுக்கு என் மானசீக நமஸ்காரங்கள், நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ரத சப்தமி பற்றிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி மேடம்!!

    ReplyDelete
  10. ஆரோக்கியம் வேண்டும் என்றால் சூரியனை வணங்க வேண்டும். என் அம்மா சொல்லி வெகு காலமாய் ஞாயிற்றுக் கிழமை விரதம் இருந்து வருகிறோம் நானும் என் கணவரும்.

    சூரியனின் ரதசப்தமி விழா படங்கள் எல்லாம் அழகு.

    எருக்கன் இலை குளியல் விளக்கம் அருமை.

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete