மாடு என்றால் செல்வம் என்கிற பொருளும் உண்டு..
மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்யும் வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.
"செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும்சிறுகோலே"என்றுரைத்த கம்பர், "உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி" என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான்இவர்கள்!
எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது.
"மேழிச் செல்வம் கோழைபடாது" என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தைஆட்கொண்டிருக்கிறது.
இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன.
இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும்உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்தசமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!
வரப்புயர நீருயரும்!நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!குடியுயர கோனுயர்வான்!.
அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப்பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்தபொருத்தமான செயல்!.
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி.
இத்தகைய தொன்மைக்காலவரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச்சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம்.
பொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடுகொண்டாடப்பட ஒரு பெருவிழா
ஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர்.
அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர்.
அதனால் தேவதைகள்மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர்.
இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களைதுன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான்.
இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன்மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை.." என்று பொங்கல் வரலாறு துவங்கியது..
அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர்.
அதனால் தேவதைகள்மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர்.
இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களைதுன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான்.
இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன்மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை.." என்று பொங்கல் வரலாறு துவங்கியது..
போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா தனிப்பெருந்திருவிழாக்கோலம் பூணுகிறது.
பால் பொங்கிற்றா ?
ReplyDeleteபடங்களையும் கட்டுரையையும்
மிகவும் ரசித்தேன் வழக்கம் போல்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி !
படங்களும் பதிவும் நல்லா இருக்கு. மாடுகளுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் அழகா சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteஇனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் !
ReplyDelete”செல்வப் பொங்கல்” என்ற தலைப்பு அருமை. அனைத்துச் செல்வங்களும் அள்ளித்தரும் என்பதாகவே நினைத்து மகிழச்செய்கிறது.
ReplyDeleteமுதல் படத்தில் ஏழு வெண்குதிரைகளுடன் தேரில் ஏறி, வெற்றியையும் செல்வத்தையும் வாரி வழங்க வரும் சூர்ய நாராயண ஸ்வாமியை காட்டியிருப்பது தங்கள் சாமர்த்தியத்திற்கு எடுத்துக்காட்டு.
அவர் தீமைகளைச் சுட்டெறித்து, இனி நன்மைகளை மட்டுமே வாரி வழங்குவார் என்று நம்புவோமாக!
அடுத்த படம் Happy Pongal இல் அந்தத்தலையாட்டுத் தங்கமான மாடு (செல்வம்) வேடிக்கைதான்.
ReplyDeleteஅடுத்த படத்தில் அந்தத் திருவண்ணாமலை நந்தியார் சூப்பர்!
காமதேனுவை அதனருகில் ஒரு கன்றுக்குட்டியையும் காட்டியுள்ளது
சிறப்பு.
கட்டிக்கரும்புகளைக் கட்டுக்கட்டாகக் காட்டி, அதன் கீழே உழவர்களின் பெருமைகளை அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளது மிகவும் அருமைதான்.
ReplyDeleteதமிழ்ச்சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இந்த விழா எடுக்கப்படுகிறது என்பதும் உண்மையே. பாரம்பர்யம் மிக்க நல்லதொரு விழா என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.
வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!
எவ்வளவு எளிமையான அருமையான கருத்து இது. அதை இங்கே ஞாபகமாகக் கொண்டு வந்துள்ளது தனிச்சிறப்பு தான்.
முதல் படம் மிக அழகு!
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
இந்திரனின் கர்வத்தை அடக்க, ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தமலையைத் தூக்கி, மக்களைக்காத்ததும், அன்று முதலே ”கோபூஜை” சிறப்புப்பெற்றதும் எனக் குறிப்பிட்டது மிகவும் நல்ல செய்தியே.
ReplyDeleteதொடர்பதிவுகள் போல இந்தப்பொங்கலும் தொடர்விழாவாக நான்கு ஐந்து நாட்களுக்கு நடைபெறுவது இதன் தனிச்சிறப்பு தான்.
வாகனங்கள் செல்லும் பாதையில் நடுநடுவே அழகான பொங்கல் பானைகளையும், தோரணங்களையும் கட்டிக் காட்டியிருப்பது நன்றாக உள்ளது. எந்த நாடோ? எந்த ஊரோ? தெரியவில்லையே!
தன் கொம்புகளுக்கு இடையே குடம் வைத்துள்ள காளைமாடு? நல்ல கலர்கலராக ட்ரெஸ் அணிந்து கொண்டு
ReplyDeleteமுகத்தில் மஞ்சள் குங்கும மேக்-அப் உடன் போஸ் கொடுப்பதும் அருமை.
சீறிப்பாய்வதற்கு முன்பாக இருக்குமோ?
மொத்தத்தில் பண்டிகைகள் யாவுமே மனமகிழ்ச்சியையும், சமுதாய ஒற்றுமையையும், பொருளாதார மேம்பாடுகளையும் ஏற்படுத்தி, இறைவனையும் இயற்கையையும் சிந்திக்க வைப்பதாகவே உள்ளன.
அவ்வப்போது இதுபோல ஏதாவது பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் இல்லாவிட்டால் புத்துணர்வும், புது எழுச்சியும் ஏற்படாமல், வாழ்வே மிகவும் டல் அடித்து விடும். பிறகு நம்மால் புதுப்புது பதிவுகள் எழுதவோ, படிக்கவோ முடியாமலும் போய் விடும். பாரம்பர்ய பழக்க வழக்கங்களும், இளம் தலைமுறையினருக்கு மறந்து போகும்.
எனவே அனைத்துப் பண்டிகைகளையும் வரவேற்று மகிழ்வோம்.
பொங்கல் விழாத் தொடர்ச்சியாக வந்திருக்கும் தங்களின் இன்றைய பதிவு, சுருக்கமான தகவல்களுடன், திகட்டாத படங்களுடன், சிறப்பாகவே அமைந்துள்ளது.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
மகிழ்ச்சியான பகிர்வு.
தை பிறந்த வேளை அனைவரையும் அனுதினமும் மனமகிழ்ச்சியுடன் வைக்கட்டும்.
வாழ்த்துகள். பகிர்வுக்கு உளமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் இந்த விடாமுயற்சிகள்.
பிரியமுள்ள vgk
பொங்கல் பற்றிய எத்தனை விளக்கம்.படங்களே பொங்குகிறது.இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் !
ReplyDeleteஎத்தனை எத்தனை படங்கள். வழக்கமாக உங்கள் பதிவு என்றாலே அதிகமான படங்களை பார்க்கலாம். இதிலும் அப்படியே! "செல்வப்பொங்கல்" வித்தியாசமான விளக்கம்
ReplyDeleteகட்டுக்கட்டாக் கரும்பு.. ஹைய்யோ ஊர் நினைப்பை கிளறுறீங்க ராஜேஸ்வரி :-))
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
அருமைப்பொங்கல்.
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
Nice post Rajeswari.
ReplyDeleteThe thalaiattum madu...............
Oh super.
I always enjoy your writing as well as pictures. Pictures are also speeking.
viji
மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDeleteJAI HANUMAN ;)
ReplyDeleteVGK
2020+7+1=2028
ReplyDelete