கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று..
திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும்,தோகையோடு கூடிய கரும்பு கட்டி அலங்காரம் செய்வது வழ்க்கம்..
கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்பது தமிழர் கருத்து.
தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழக்கம்..
தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழக்கம்..
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? -என
கரும்புத் தமிழில் பயின்றுவரும் பழமொழிகளும் இனிமைதான்..
கரும்பமுதம்,
கரும்பமுது,
கரும்பரசி,
கரும்பழகி,
கரும்பிசை,
கரும்பூராள்,
கரும்பெழிலி,
கரும்பு,
கரும்புநகை,
கரும்புமொழி,
கரும்புவில்,
கரும்புவிழி. என்றெல்லாம்
கன்னல் மழலைகளுக்குப் பெயர் சூட்டி
களிப்புறுவது கண்கூடு..
வான் கலந்த மாணிக்க வாசக நின் ! வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால், நற் கருப்பஞ் சாற்றினிலே,
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’
என்று இராமலிங்க அடிகளாரும் வியந்து பாடியுள்ளார்.
கணபதியின் இருப்பிடமே கருப்பஞ்சாற்றுக் கடல் என்றொரு கூற்று உண்டு.
ஸ்ரீகரும்பாயிரம் கொண்ட விநாயகர் கரும்பு விரும்பும் களிறு!
ஈசன், விஷ்ணு, பிரம்மா, சக்தி, விநாயகர், முருகன்- என பல ரூபங்களில் இறைவன் காட்சியளித்தாலும், ஒவ்வொரு மானுடன் வாழ்விலும் இனிப்பாய் வந்து நிறைபவன் அந்த பரம்பொருளான இறைவனேயன்றி வேறில்லை.
முழுமுதற் கடவுளாய் வணங்கப்படும் கணபதி கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் வராஹப் பிள்ளையார் என்று இருந்தவருக்கு இப்போது “ கரும்பாயிரம் பிள்ளையார் என்ற தித்திக்கும் திருநாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது.
முழுமுதற் கடவுளாய் வணங்கப்படும் கணபதி கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் வராஹப் பிள்ளையார் என்று இருந்தவருக்கு இப்போது “ கரும்பாயிரம் பிள்ளையார் என்ற தித்திக்கும் திருநாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது.
கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலில் பெருமையுடன் அருள்கிறார் .கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.
பரம்பொருள் ஒன்றே. ஆத்மலயம் கொண்ட ஞானிகள், யோகிகள், ரிஷிகள் அனைவரின் ஒரே கருத்து ஏகம் பரம்பொருள் என்பதேயாகும்.
ஒரு சின்னஞ்சிறு பாலகன் முகத்தில் கருணையும் ஒருவித குறும்பும் மிளிர....
எதிரே வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி வரும் வண்டிக்காரனைப் பார்த்து ஒரு இளம்பிள்ளை வேடத்தோடு துணிச்சலாய் வண்டியை மறித்து, "ஒரு கரும்பு கொடேன்' என்று வண்டிக்காரனிடம் கேட்டான்.
யானைக்கே கரும்பு என்றால் குஷிதான். ஆனைமுகனுக்குக் கேட்க வேண்டுமா?
வண்டிக்காரனோ, "விலகிச் செல். அதெல்லாம் தரமுடியாது!' என்றான்.
வண்டிக்காரன் "இது வேறு மாதிரி யான கரும்பு. இது உப்புக் கரிக்கும். சுவைக்கச் சிறக்காது' என்றான்.
சிறுவன் அருகிலுள்ள ஆலயத்துக்குள் சென்று மறைந்துவிட்டதை சிலர் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
வண்டிக்காரன் கொண்டு சென்ற தித்திக்கும் கரும்பு, திடீரென சாறற்ற சக்கைக் கரும்பாயிற்றதைக் கண்ணுற்ற வண்டிக் காரன் அதிர்ந்துபோய், தான் பாலகன் கேட்ட கரும்பைக் கொடுக் காமல் தவறு செய்து விட்டதாய் உணர்ந்தான்; உருகினான். விநாயகப் பெருமானை வேண்டினான். விநாயகர் மீண்டும் வண்டிக்காரன்முன் பாலகனாய்த் தோன்றினார்.
பாலகன் பாதங்களில் வண்டிக்காரன் சரணா கதியடைந்தான். மீண்டும் சக்கையான கரும்புகள் தித்திக்கும் தேன்கரும்பாய் மாறின.
பாலகன் பாதங்களில் வண்டிக்காரன் சரணா கதியடைந்தான். மீண்டும் சக்கையான கரும்புகள் தித்திக்கும் தேன்கரும்பாய் மாறின.
ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான்.
ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று இனிமையுடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
மூலவர் கரும்பாயிரம் பிள்ளையார்
கள்ளம் கபடம் நிறைந்த கசப்பு மனம் கொண்டோரையும் இனிப்பாய்க் கவர்ந்திழுக்கும் விநாயகரைத் தொழுவோம்.
தீராத வினைகளும் விக்னேஸ்வரால் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றிதான். இனி வாழ்வெல்லாம் வசந்தம்தான்.
விக்னேஸ்வரனின் ஆசி இருந்தால் விக்ணங்கள் அகலும். மஞ்சளிலும் பிள்ளையார் பிடிக்கலாம் ஏன் மார்கழி மாதத்தில் பசுச் சாணத்தில் பிள்ளையாரை பிடித்து கோலத்தின் நடுவில் வைத்து அதன் மேல் பூ வைப்பார்கள். மறுநாள் பிள்ளையாராக பிடித்து வைத்திருந்த சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் முன் தெளித்தால் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும் என்கிறது சாஸ்திரம்.
மூட்டுவலியைப் போக்கும் வெல்லம்...
சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, நான்கையும் ஒன்றா கச் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும். இதில் வேளைக்கு 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட மூட்டுவலிகளும் உடனே குணமாகும் அதிசயத்தை உணரலாம்..
கரும்பின் சுவை போலவே படங்களும் பதிவும் சுவையாக இருந்தது. நன்றி
ReplyDeleteபடங்களும், பதிவும், பெயர் விளக்கமும், கதையும் எல்லாமே வழக்கம் போல் அருமை.
ReplyDeleteபாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.
கதைகளுக்கு நன்றி.
ReplyDeleteபிள்ளையார் ரொம்ப க்யூட்.
esp மூன்றாவதாக இட்ட பிள்ளையார்.
கரும்புப் பிள்ளையாரோடு மருந்தும் கலந்து பதிவு பக்தியோடு இனிக்கிறது !
ReplyDeleteஜொலிக்கும் பிள்ளையாயார் படத்தைத்தாண்டிப் போகவே மனசில்லை.எல்லாப்படங்களும், பதிவும்அருமை.
ReplyDeleteஇந்தப்பதிவு வெளியிட்டு அதை நான் படித்த வேளை, வரும் ஞாயிறு [29.01.2012] அன்று கும்பகோணம் வரை போய் வரவேண்டியதோர் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ReplyDeleteஒருவேளை போகுமிடத்தில் நேரமிருக்குமானால், நிச்சயம் இந்தக் கரும்பாயிரப் பிள்ளையாரையும் தரிஸித்து விட்டு வருவேன்.
கரும்பாயிரப் பிள்ளையாரை தரிஸிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தால், இதை தகுந்த நேரத்தில் வெளியிட்ட பதிவரையும், படித்த அனைவரையும் நினைத்துக்கொண்டு எல்லோருக்காகவும் பிரார்த்தித்து வருவேன்.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - பிள்ளையாரைப் பற்றிய பதிவு அருமை - படங்களின் அழகு - நப்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஎல்லாப்படங்களும், பதிவும்அருமை.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDelete;) ஸ்ரீராமஜயம்
ReplyDelete2131+3+1=2135
ReplyDelete