Wednesday, January 18, 2012

அவசர உதவிக்கு அருளும் அருளாளன்





திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்ப
முரி திரை மாகடல் போல் முழங்கி மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே
காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் என்ற திவ்யதேசத்தில் திருமால் ஆதிகேசவன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருந்தார்..; 

திருமங்கையாழ்வார் இவரைத் தரிசித்தபோது, இவரின் வித்தியாசமான அமைப்பைக் கண்டு,  இவர் யார்? என்று  மனதில் நினைக்க,, பெருமானும்,"அட்டபுயகரத்தான்' என்று பதில் கூறியதாகவும்; அன்று முதல் அப்பெயராலேயே இப்பெருமாள் காட்சியளித்து வருவ தாகவும் செய்திகள் உண்டு.
வைணவத் திருக்கோவில்களில் திருமால் பொதுவாக நின்ற- இருந்த- கிடந்த கோலங்களில் நான்கு கரங்கள் கொண்டவராகக் காட்சியளிப்பதைக் காணலாம். 

ஆனால் காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் என்ற திவ்யதேசத்திலோ பெருமாள் எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதைத் தரிசிக்கலாம். இவரின் வலக்கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும்; இடக்கரங்களில் சங்கு, வில், கேடயம். தண்டாயுதம் ஏந்தியும் காட்சியளிக்கிறார். 


இதுபோன்ற காட்சியை வேறெந்த திருக் கோவிலிலும் காண முடியாது. பொதுவாக சக்கரத்தாழ்வார்தான் 4, 8, 16 கரங்களுடன் காட்சியளிப்பார். 

எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் இப்பெருமாளுக்கு சக்கரதரர் என்ற திருநாமமும் உண்டு. 
எட்டுகரங்களுடனவிளங்குவதால்  அட்டபுயகரத்தான் என்றழைக்கப்படுகிறார்.
கஜேந்திர மோட்ச வைபவம் இங்கு நடந்ததாகவும், அதனால் இங்குள்ள திருக்குளத்திற்கு கஜேந்திர புஷ்கரணி என்று பெயர் வந்ததாகவும் சொல்வர். 

இப்பெருமாளின் சந்நிதியில் கருடாரூடராக ஒரு பெருமாள் காட்சியளிக்கிறார்.  வைபவம் இங்கு நடந்தமைக்குச் சாட்சியாய் விளங்குகிறது 
[gajendra.jpg]
இத்திருக்கோவிலில் உற்சவமூர்த்தி சதுர்புஜம், அபய ஹஸ்தம் கொண்டு, இடக்கரத்தில் கதை யைத் தாங்கிய வண்ணம் ஸ்ரீதேவி- பூதேவியரு டன் காட்சியளிக்கிறார். 
உற்சவர் அஷ்டபுஜ பெருமாள்

 தனிக்கோவிலில் தாயாரான புஷ்பவல்லி வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.
வராகப் பெருமான் தனிச் சந்நிதியில் காட்சியளிக்க, திருமதி வைஜெயந்திமாலா திருக்கோவிலுக்குச் சமர்ப்பித்த ராமபிரானும் கலையம்சம் கொண்டவராகக் காட்சி தருகிறார். 

அனைத்து ஆழ்வார்களும் ஆசார்யப் பெருமக்களும் காட்சியளிக்கும் இத்தலத்தில் ஆண்டாள், அனுமன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

தினம் தினம் திருவிழா காணும் தலமாக விளங்கும் இத்தலம் பரிகாரத்தலமாகவும், பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கும் துலாபாரப் பிரார்த்தனை செய்ய வசதி உள்ளது.

காஞ்சியம்பதியிலுள்ள 14 திவ்யதேசங்களில் இங்கு மட்டுமே வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
சொர்க்க வாசல்

அவசர உதவிக்கு அருளும் அருளாளன் என்று இப்பெருமாளை சுவாமி தேசிகன் தன் அஷ்ட புஜாஷ்டகத்தில் போற்றுகிறார்.
[Image1]



24 comments:

  1. முதல் படம் அடடா அருமை!

    எப்படி? எப்படி? இப்படி இப்போது தரமுடிந்தது? வியப்போ வியப்பு எனக்கு!

    ReplyDelete
  2. நேரில் சென்று தரிஸிக்கும் பாக்யம் பெற்றிருக்கிறேன். அந்தக்கோயில் அமைந்திருக்கும் மிகச்சிறிய தெருவுக்கே (சந்து) அஷ்டபுஜப்பெருமாள் கோயில் தெரு என்றே பெயரிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. முதல் படத்தில் சூர்ய சந்திரன் சாட்சியாக, ஆதிசேஷன் குடை பிடிக்க, பிள்ளையார் முதல் ஹனுமன் வரை முப்பத்து முக்கோடி தேவர்களையும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவுடன் காட்டியிருப்பது வெகு அருமை.

    நாம் வழிபடும் தெய்வ விக்ரஹங்கள் வெவ்வேறாயினும் பரம்பொருள் ஒருவரே என்பதைப் பறைசாற்றும் படமாக உள்ளது.

    ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மார்பிலும், அபய ஹஸ்தத்திலும், செந்தாமரையில் வீற்றிருக்கும் அஷ்ட லக்ஷ்மிகள் காட்டப்பட்டுள்ளது அழகு.

    வஸ்திரத்தில் நாரதர், பிரும்மா முதலியவர்கள் இடம் பெற்றுள்ளதும், திருக்கரங்கள் அனைத்திலும், தஸாவதாரக்காட்சிகள் வரையப்பட்டுள்ளதும், ஒவ்வொரு கையிலும் வெவ்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றிருப்பதும் மிகச் சிறப்பாக உள்ளது.

    அருமையானதொரு படத்தேர்வு பதிவினை பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  4. மூன்றாவது படத்தில் உள்ள நீல மேக ஷ்யாமளன், அழகிய தலையலங்காரங்கள், ஜொலிக்கும் காதணிகளுடன், அழகிய தாமரை மலர்களுடன், பவளவாய் கமலச்செங்கணாகக் காட்சி தருவது, மனதைக் கொள்ளைகொள்கிறது.


    புது மாப்பிள்ளை போல மாலையணிந்து அழகாகக் காட்சிதரும் அவருக்கு ”மாப்பிள்ளை மகேஷ்குமார்” என்று நான் பெயர் சூட்டியுள்ளேன்.

    ReplyDelete
  5. புதிய தகவல்கள் புதிய படங்கள் நன்றி.

    ReplyDelete
  6. தன்னுடைய கூர்மையான மூக்குடன் இறக்கைகளை நன்கு அகல விரித்து, அழகிய பெருமாளை அதில் அமர்த்திக்கொண்டு, கையினில் தன் டிபன் ஐட்டமான பாம்பினுடனும் நட்பு பாராட்டி அதை அப்படியே தன் கூப்பிய இருகருங்களால் லாவகமாகப் பிடித்த வண்ணம் பறந்து வரும் கருடாழ்வார் படம் சூப்பரோ சூப்பர்! ;))))

    ஓம் நமோ பஹவதே வாஸுதேவாயா!

    ReplyDelete
  7. கஜேந்திர மோக்ஷப்படமும் தத்ரூபமாகவே காட்டியுள்ளீர்கள்.

    ஸ்ரீதேவி பூதேவி ஸமேத உற்சவர் அஷ்டபுஜப்பெருமாளும், வரப்பிரசாதியாகத் திகழும் தனிக்கோயில் கொண்டுள்ள புஷ்பவல்லித் தாயாரும் பிரமாதமாகத்தான் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. சுவாமி தேசிகன் தன் அஷ்ட புஜாஷ்டகத்தில் போற்றுகிற அவசர உதவிக்கு அருளும் அருளாளன் என்ற திருநாமம் இப்பெருமாளுக்கு மிகவும் பொருத்தமே.

    காசியம்பதியில் உள்ள 14 திவ்ய தேசங்களில் [மிகப் புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலிலும் இல்லாத] வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் அமைந்துள்ளது இங்கே மட்டுமே என்பது மிகவும் வியப்பில் ஆழ்த்தும் செய்தியாகவே உள்ளது.

    ReplyDelete
  9. கோயில் கோபுரம், படிக்கட்டுகளுடன் குளம்,எல்லாமே நல்ல கவரேஜ்.

    கீழிலிருந்து நாலாவது படத்தில் காட்டப்பட்டுள்ள மஹாவிஷ்ணு தனிச்சிறப்பாகவும் வெகு அழகாகவும் உள்ளது.

    கடைசி படத்தில் ஸ்ரீராமர்,ஸீதை, லக்ஷ்மணஸ்வாமி,ஹனுமன் தவிர வேறொருவர், கருடனாக இருக்குமோ?

    ReplyDelete
  10. புத்தாண்டு பிறந்து பதினெட்டாம் படியேறி, வெற்றிகரமாக பதினெட்டாம் பதிவும் வெளியிட்டு விட்டீர்கள்.

    வழக்கம் போல நல்ல படங்களுடன், நல்ல விளக்கங்கள். எப்படித்தான் ஆர்வத்துடனும் கடுமையான உழைப்புடனும், சிரத்தையாக தினம் ஒரு பதிவு தந்து எங்களை மகிழ்விக்கிறீர்களோ!

    தொடரட்டும் தங்களின் இந்த ஆர்வமும், விடாமுயற்சியும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,
    பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  11. அட்டபுய கரத்தான் தெரியாத தகவலுடன் அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  12. நல்ல பெருமாள் தரிசனம்.

    ReplyDelete
  13. அட்டபுயகரத்தானை நான்கு வருடத்திற்கு முன் சேவித்தோம்.

    இன்று உங்கள் பதிவின் மூலம் சேவித்தோம்.
    படங்கள் எல்லாம் இறைவன் நேரில் அருள்புரிய வந்தமாதிரி இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  14. அருமையான புகைப்படங்களுடன் அழகான ஆன்மீகப் படைப்பு. அற்புதம்

    ReplyDelete
  15. Too grateful to describe my feelings in words.
    thank you.

    subbu rathinam.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  16. இன்று காலையில் உங்கள் பதிவு படித்தேன். மன நிறைவு கொண்டேன். அவசர உதவிக்கு அருளாளன் இல்லை என்றால் நிலை என்னாவது?

    ReplyDelete
  17. அழகான படங்களுடன் நல்லதோர் பதிவு.

    ReplyDelete
  18. எட்டு கரங்களுடன் நம்மை ரக்‌ஷிக்க ஓடி வரும் அஷ்டபுஜ கரத்தான் பற்றிய பதிவு அருமை.படங்கள் மிச்சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  19. ஓம் நமோ பகவதே வாசுதேவாய

    ReplyDelete
  20. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete