எங்கள் வாரிசு பெற்ற சான்றிதழ்களும் ,பரிசுகளும்...
ஸ்ரீநேரு வித்யாலயா பள்ளி, கோவை நலச்சங்கத்தின் குழுவினரால்
பதினொரு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று
சுமார் மூவாயிரம் மாணவர்கள் பயிலும் பள்ளியாகத் திகழ்கிறது.
ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து பொன் விழாக்கொண்டாட்டத்தில்
விளையாட்டுப்போட்டிகள் மிகவும் பெரிய அளவில் நடைபெற்றது.
பள்ளியின் விளையாட்டு அமைப்பு நிர்வாகக்குழுவில் ஒருவரான
எங்கள் முன்னோர்களின் பெயரிலேயே எண்டோண்மெண்டாகஇயங்கிவருகிறது.
பெருமை மிகு பாரம்பரியத்தின் சிறப்புமிகு வாரிசுகளாக திகழ்வதை பரிசுகள் சான்றளிக்கின்றன.
ஸ்ரீநேரு வித்யாலயாபள்ளியின் வெள்ளி விழா ஆண்டு பரிசாக கோவை நல சங்க குழுவினரால் ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா
என்னும் கல்லூரியை சமுதாயத்திற்கு பரிசாக அன்பளித்தது.
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியும் இதே தருணத்தில்
வெள்ளி விழா கொண்டாடி மகிழ்கிறது.
வெள்ளி விழா கொண்டாடி மகிழ்கிறது.
கல்வியை வித்யாதானமாத்தான் தரவேண்டும் என்கிற உயரிய
நோக்கில் பாரம்பரியமாக இன்றளவும் பள்ளி மற்றும்
கல்லூரி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
நோக்கில் பாரம்பரியமாக இன்றளவும் பள்ளி மற்றும்
கல்லூரி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
பள்ளி,மற்றும்கல்லூரி வளாகத்தில் அபயஹஸ்த அனுமன்
ஆலயங்கள் அமைத்து சிறப்பான முறையில் நடத்திக்
கொண்டு வருகிறது கோவை நலச்சங்க குழு.
ஆலயங்கள் அமைத்து சிறப்பான முறையில் நடத்திக்
கொண்டு வருகிறது கோவை நலச்சங்க குழு.
கல்லூரி அனுமன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏழாயிரம் பேருக்கு
இடைவிடாமல் அன்னதான கைங்கர்யம் நிகழ்ந்ததும் சிறப்பு.
பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க
சுமார் 100 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று
பரிசுகள் பெற்றனர்.
சுமார் 100 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று
பரிசுகள் பெற்றனர்.
பொன்விழாஆண்டு விளையாட்டு விழாவிற்கு மகுடம் சூட்டினாற்போல் சிறப்பாக ஸ்ரீநேரு வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி சிறப்பித்திருக்கிறார்கள்.
தத்தம் குழந்தைகள் முன் பெற்றோர்கள் திறமையை வெளிப்படுத்தி பெருமிதம் நிறைந்த சந்தோஷமடைந்தனர்.
பரிசுகள் பெறும் பெற்றோர்களை அவர்கள் குழந்தைகள் ஊக்குவித்து ஆரவாரப்படுத்தியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டியில் பங்குகொள்ளவும், கண்டு ரசிக்கவும் வந்த அனைவருக்கும் சிறப்பான உணவளித்து கொளரவப்படுத்தியிருக்கிறார்கள் கோவை நலச்சங்கத்தினர்.
இப் போட்டிகளில் எங்கள் வாரிசும், வாரிசின் வாரிசும் பங்கேற்று பரிசுகள் வென்றது மேலும் சிறப்பு.
ஜெய் அனுமன் படம்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா இன்னும் பல நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட - ஒன்பது வயது முதல் எழுபத்து மூன்று வயது வரை உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பங்குகொண்ட -
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு - மாரத்தான் போட்டி வெகு
சிறப்பாக நடைபெற்றது..!
ஆம்புலன்ஸ் , நர்ஸ், டாக்டர்கள் கொண்ட குழு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பங்கேற்ற அனைவருக்கும் உணவு என சிறப்பான ஏற்பாடுகள் அனைவராலும் பாராட்டுப்பெற்றன..
வாரிசின் வாரிசு வென்றவை
விளையாட்டு மட்டுமின்றி அறிவியல் போட்டியிலும் வாரிசின் வாரிசு கலந்துகொண்டு பரிசு வென்றது பெருமை.
Pudita Thalaimura i Certificat e
Pudita Thalaimura
மரங்களை வெட்டாமல் பெயர்த்து வேறு இடத்தில் நடுவதற்காக செய்த
அறிவியல் மாதிரி சிறப்பு பரிசினை வென்றது பெருமை.
tree replanter model
ஆறாம் வகுப்பில் நடனமங்கை வேடம்..!
ஆஸ்திரேலியாவில் மருமகள் கைவண்ணத்தில் தோசையும் சட்னியும்..!
தண்ணீரில் மிதக்கும் தாமரைகளுடன்
தங்கத்தாமரையாக சின்னதேவதை - ஸ்ரீதியா
அடுத்த வாரிசு -.விஸ்வநாதன் ஆனந்த்..!
வித்யா தானம்!.. மிகச்சிறந்த சமூகப்பணி!..
ReplyDeleteவாழையடி வாழையாய்த் தொடர வேண்டும் நற்பணிகள்..
இனியதொரு பதிவு.. வாழ்க நலம்..
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteவாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும்
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
தங்களது சமூகப்பணியும், கல்விப்பணியும் சிறப்புற அமைய எல்லாம் வல்ல திருவருளைப் பரவுகின்றேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteவாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும்
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
சிறப்பான பணி..... வாழ்த்துகள்.....
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteவாழ்த்துரைகளுக்கு மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
பள்ளி மற்றும் கல்லூரி நடத்தி கல்விப்பணி செய்து வரும் கோவை நலச் சங்க குழுவிற்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் சேவை! வாரிசின் வாரிசு பெற்ற வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்! உண்மையிலேயே தங்கத் தருணங்கள்தான்!
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
தவழும் ஸ்டேஜில் உள்ள குட்டிக் குழந்தைகளுக்கு ஜலம் என்றாலே ஒரே குஷி தான். ஏதோ கடலில் இறங்கி நீச்சல் அடிப்பதுபோல பிஞ்சுக்/குஞ்சுக் கைகளால் துளாவும், தொப் தொப் பென்று அடிக்கும் அழகே அழகு.
ReplyDeleteஅந்தக்காணொளியையே சுமார் 50 முறைகள் திரும்பத்திரும்பப்போட்டு கண்டு களித்தேன். எவ்ளோ சந்தோஷமாக உள்ளது .... தெரியுமா ! ;)))))
ஜலத்தில் இப்படி அலையும் குழந்தைக்கு சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கோ.
>>>>>
சுத்தமான வீட்டுத்தரையும் அந்த புத்தம் புதிய பித்தளைப் பாத்திரமும் சும்மா ஜொலிக்குது. பார்க்கவே பொறாமையாக உள்ளது. சுத்தம் ..... படு சுத்தம் .... பவித்ரம் ..... தங்கமே தங்கம் ;)
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் உள்ளது அதே போன்ற பாத்திரம். அதற்கு ’கல்யாணி’ என்று பெயர். ஆனால் அதில் இருபுறமும் காதுகள் கிடையாது. உங்களிடம் உள்ளது காதுகள் உள்ள புத்தம்புதிய கல்யாணி.
இந்தப்பதிவு இடுவதற்காகவே கடைக்குப்போய் புதிதாக வாங்கி வந்திருப்பீர்களோ ! ;)))))
>>>>>
ஸ்ரீதியாவையும் ஸ்ரீ விஸ்வநாத் ஆனந்தையும் ஆனந்தமாகத் தூக்கிக் கொஞ்சி மகிழ வேண்டும் போல ஆசை ஆசையாக உள்ளதுங்க ! ;)))))
ReplyDelete>>>>>
சுழலும் நாற்காலியில் ஏறி எம்பியுள்ள ’வி.ஆ.’ வை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கோ.
ReplyDeleteஅதுதான் பாட்டி அமர்ந்து பதிவுகள் வெளியிடும் நாற்காலியோ ? மகிழ்ச்சி. ;)))))
அந்த நாற்காலிக்கே ஒரு நமஸ்காரம் செய்யலாம் போல எனக்குத் தோன்றுகிறதே !
அருகே மேலே முரட்டு சைஸ் பெருமாள் படம் வேறு உள்ளது.
>>>>>
ஆஸ்திரேலிய மருமகள் செய்து சமர்ப்பித்துள்ள தோசையும் சட்னியும் சூப்பர். அவர்களுக்கு என் பாராட்டுக்களைச் சொல்லவும்.
ReplyDeleteஒரேயொரு தோசை மட்டும் தான் செய்தாரா? அதை செய்யவே அவாளுக்கெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்குமோ.
மாமியாரா லக்ஷணமா நிறைய தோசை செய்து காட்டச்சொல்லுங்கோ. சம்சாரியாத்துக்கு ஒரு தோசை எந்த மூலைக்கு...... ;)
24 மணி நேரமும் கணினியிலேயே இருக்கும் மாமியாருக்கு இந்த ஒரு தோசையை புட்டு வாயில் போட்டுக்கொள்ளவே நேரம் இருக்காது.
அதையும் யாராவது ஊட்டி விட்டால் தேவலாம் தான். ;)))))
>>>>>
@ Gopalakrishnan:
Deleteநான் தான் அந்த ஆஸ்ட்ரேலிய மருமகள்.
அது சாதாரண தோசை இல்லை. அதில் உள்ள சட்னி சிறப்பு மிக்கது. இது இவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சட்னி வகை ஆகும். அதனால் செய்து முடித்தவுடன் இவருக்கு புகைப்படம் அனுப்பினேன். அது என்ன அதிர்ஷ்ட படமோ இவர் பிலோகில் இடம் பெற்று விட்டது. மற்றபடி தோசை தோசை தான்.
கடல் தாண்டி வந்தாலும் நம்ம ஊரு தோசை இட்லியை விட முடியுமா? அதுவும் இங்கு விற்கப்படும் தோசை $6.50. இது இந்திய கணக்கு படி சுமார் 325 ரூபாய். இப்படி இருக்க வீட்டில் செய்வது தானே லாபம்? அன்று மட்டும் நானும் என் கணவரும் கிட்டத்தட்ட எட்டுக்கும் மேல் உண்டு இருப்போம்.
தங்கத்தமிழுக்கும் ,தங்கமான தோசைக்கும் ,
Deleteசிறப்பான சட்னிக்கும் அருமையான கருத்துரைக்கும்
மனநிறைவான வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
Unknown has left a new comment on the post "என்றும் தங்கும் தங்கத் தருணங்கள்,":
Delete@ Gopalakrishnan:
//நான் தான் அந்த ஆஸ்ட்ரேலிய மருமகள். //
தங்களின் அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம். தாங்கள் சாதாரண மருமகள் அல்ல. ஆஸ்ட்ரேலிய மருமகள் மட்டுமல்ல. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அதிர்ஷ்டக்கார மருமகள். தங்களுக்கு மாமியாராக அமைந்தவர் அவர்களை வைத்துத்தான் இந்த இவ்வளவு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக என மிகவும் அதிகமான மிக மிக போட்டுள்ளேன். அவர்கள் ஒரு தெய்வீகப் பிறவியாக்கும். தங்களுக்கே இது விஷயம் தெரிந்திருக்கும். தெரியாவிட்டால் என்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கோ.
//அது சாதாரண தோசை இல்லை.//
அது எப்படி சாதாரண தோசையாக இருக்க முடியும்? சாதாரணமானவனாகிய என்னால் தான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் தாங்கள் இதுபற்றி விளக்கிச்சொன்னது அசாதாரண அழகு.
//அதில் உள்ள சட்னி சிறப்பு மிக்கது.//
’சட்னி’யில்லாவிட்டால் ’பட்னி’ என்ற கொள்கையுடையவனே நானும். எங்கள் ஆத்திலும் காரசாரமாக பலவிதமான சட்னிகள் செய்து அசத்துவார்கள்.
தேங்காய் சட்னி, தக்காளிச்சட்னி, வெங்காயச்சட்னி, கொத்துமல்லிச் சட்னி என விதவிதமாகத் தான் செய்வார்கள்.
இந்த தங்களின் ஆஸ்திரேலிய சட்னிக்குப்பெயர் : ’சிட்னி சட்னி’ என நாம் வைத்துக்கொள்ளலாம். ;)
//இது இவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சட்னி வகை ஆகும்.//
இவர் என்றால் மாமியாரா? OK .. OK.
இங்கெல்லாம் இவர் என்று ஒரு பெண்மணி சொன்னால் அந்தப் பெண்மணியின் கணவரைக் குறிக்குமாக்கும்.
தங்களிடம் பகிர்ந்து கொண்டது மிகப்புனிதமான மஹா மஹா புத்திசாலியான தங்கள் மாமியார் என்றால் அந்தச் சட்னியின் மஹிமைப்பற்றி நாம் பேசவே வேண்டாம். அது [சிட்னி-சட்னி] நிச்சயம் தெய்வீகச்சட்னியாகவே .... தேவாமிர்தமாகவே தான் இருக்கக்கூடும். மகிழ்ச்சி.
//அதனால் செய்து முடித்தவுடன் இவருக்கு புகைப்படம் அனுப்பினேன்.//
இங்கும் இவருக்கு என்றால் ‘தங்கள் மாமியாருக்கு’ என எடுத்துகொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
புகைப்படம் தானா? நேரில் கோவைக்கே வந்து தாங்கள் செய்ததோ என நினைத்துத்தான் அப்படி எழுதியிருந்தேன்.
//அது என்ன அதிர்ஷ்ட படமோ இவர் பிலோகில் இடம் பெற்று விட்டது.//
அது என்ன அதிர்ஷ்டமோ, இவரின் BLOG’s தீவிர ரஸிகனான எனக்கும் தங்கள் தோசையை இன்று [தங்கமான தங்கள் மாமியார் பகிர்ந்த பக்குவத்துடனான சிட்னி-சட்னியுடன்] கண்ணால் கண்டு தரிஸித்து மகிழமுடிந்தது.
// மற்றபடி தோசை தோசை தான். //
ஆஹா, தோசை தோசை தான். அதன் மேல் நமக்கும் எப்போதும் ஆசை ஆசை தான் ! ;)
//கடல் தாண்டி வந்தாலும் நம்ம ஊரு தோசை இட்லியை விட முடியுமா?//
அது எப்படி முடியும்? முடியவே முடியாது தான்.
//அதுவும் இங்கு விற்கப்படும் தோசை $6.50. இது இந்திய கணக்கு படி சுமார் 325 ரூபாய். இப்படி இருக்க வீட்டில் செய்வது தானே லாபம்? //
நிச்சயமாக. இங்கேயே [திருச்சியில்] பல ஹோட்டல்களில் ரூ. 50 க்குக் குறையாமல் ரூ. 150 வரையிலும் பலவிதமான தோசைகள் விற்கப்படுகின்றன. அங்கு ஆறரை டாலருக்கு விற்கப்படுவது ஆச்சர்யமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது அங்கே மிகவும் மலிவு தான் என்பேன்.
வீட்டில் செய்வதில் லாபம் மட்டுமல்ல. சுத்தம் + சுவை + சுகாதாரம் + ஆத்ம திருப்தி முதலியனவும் அடங்கியுள்ளன. மேலும் சாப்பிடுபவர்களுக்கும், தயாரித்தவருக்கும் உண்மையான அன்பு, பிரியம், பாசம், நேசம், ஈவு, இரக்கம் போன்றவை அதிகரிக்கவும் இதனால் குடும்ப நல்லுணர்வு நன்கு வளரவும் இதில் வழிவகைகள் உள்ளன.
//அன்று மட்டும் நானும் என் கணவரும் கிட்டத்தட்ட எட்டுக்கும் மேல் உண்டு இருப்போம். //
அடடா, இதெல்லாம் வெளியே சொல்லாதீங்கோ. திருஷ்டியாகி விடும்.
நான் சும்மா விளையாட்டுக்குத்தான் எழுதினேன். ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்கோ. நானும் வயிற்றுக்கு வஞ்சகமே செய்ய மாட்டேன். மனதுக்குப்பிடித்தும் வாய்க்கு ருசியாகவும் இருந்தால் போதும் .... ஒருகைப் பார்த்துவிடுவேன்.
இதுபோல ஏதாவது புதுமையாக வித்யாசமாக வேடிக்கையாகப் பின்னூட்டங்கள் எழுதி தங்களின் அருமை மாமியார் அவர்களின் அன்றாடப் பதிவுகளுக்கு அனுப்பி வைப்பதே என் அன்றாட முக்கியமான வேலையாக நான் வைத்துக்கொண்டுள்ளேன். இதெல்லாம் தங்களுக்குத்தெரியுமோ தெரியாதோ.
Anyhow All the Best.
மனமார்ந்த நல்வாழ்த்துகள் + ஆசிகள்.
V.Gopalakrishnan
நடன மங்கை வேஷத்தில் ஸ்ரீ தர்ஷன் அசல் அப்படியே உள்ளார்.
ReplyDeleteவருங்கால இளம் விஞ்ஞானியான அவருக்கும் என் பாராட்டுக்களைச் சொல்லவும்.
>>>>>
பாட்டியில் ஆரம்பித்து பேரன் பேத்தி வரை அனைவரும் பரிசாக வென்று குவிக்கும் பரம்பரை போலிருக்கு.
ReplyDeleteபாட்டிக்கும், பாட்டியின் வாரிசுக்கும் மேலும் சில ஸ்வீட் நியூஸ்கள் இன்றோ நாளையோ கிடைக்க உள்ளன. ;)))))))))))))))))))
>>>>>
விளையாட்டுப்போட்டியில் முதல் பரிசுக்கான மெரிட் சர்டிஃபிகேட் பெற்றுள்ள திரு. பரத் சாருக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லவும்.
ReplyDelete>>>>>
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteஉற்சாகமான நிறைவான, அருமையான கருத்துரைகளுக்கும்,
ஆசிகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த
இனிய நன்றிகள்
அந்த ஜெய் ஹனுமான் வர வேண்டிய இடத்துக்கே வந்துள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))
ReplyDelete>>>>>
ஜெய் அனுமன் ஆலயங்கள் கட்டும் வேளையில் இராமபிரானுக்கு பாலம் அமைக்க மணல் நிரவிய அணிலாக எங்கள் குடும்பமும் பங்கு பெற்றதில் ஆன்மீக அதிசய அனுபவங்களும்,
Deleteநிறைய ஆலயத்தொடர்புகளும் அமைந்தது..
அறிவு வாய்ந்த தங்கள் முன்னோர்கள் பெயரில் இன்றும் நடைபெற்று வரும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் என கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteஅவர்களின் அதே அறிவும், தெளிவும், விடா முயற்சியும், சுறுசுறுப்பும், ஆக்க பூர்வமான எழுத்துக்களும், ஆற்றலும், திறமைகளும், மென்மையும், மேன்மையும் தங்களிடமும் அப்படியே அமைந்துள்ளதில் வியப்பேதும் இல்லை. எல்லாம் அவர்களின் ஆசீர்வாதம் + பரம்பரை கீர்த்தியும் புகழுமே.
மிகவும் பெருமையாக உணர்கிறோம்.
>>>>>
இவ்விழாவினை வெற்றிகரமாக நடத்தியுள்ள இன்றைய கோவை நலச்சங்கக் குழுவினருக்கும், 50 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டுவரும் ஸ்ரீ நேரு வித்யாலயாப்பள்ளிக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.
ReplyDelete>>>>>
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும்
பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
உரியவர்களுக்கு அறியத் தருகிறோம்..
பதிவுக்கும் பகிர்வுக்கும் அனைத்தும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்கள் குடும்பம் ஆலமரமாக பல விழுதுகளுடன் என்றும் விளங்கி, மேலும் மேலும் பல பேரன் பேத்திகள் தங்களுக்குப் பிறந்து, அவற்றைத் தாங்கள் கொஞ்சி மகிழ்ந்து, தாங்கள் அவற்றையெல்லாம் பதிவாக்கி எங்களுக்கும் தந்து நீடூழி வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!
;) 1356 ;)
ooo ooo ooo ooo
//பதிவுக்கும் பகிர்வுக்கும் அனைத்தும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். //
Deleteஅனைத்தும் = அனைத்துக்கும் !
[ ஹுக்க்க்க்க்க்கும் !! ]
மிகவும் உயரிய சேவை. தாங்களின் வாரிசுகளும்,வாரிசுகளின் வாரிசுகளும் வென்றெடுத்த பரிசுகளுக்கு வாழ்த்துக்கள். தாங்களின் இப்பகிர்வு மிகவும் சிறப்பானதொன்று. சிறப்பான பணி.தொடரட்டும் சேவை. ஸ்ரீதியா, ஆனந்த் இருவரும் மிக அழகான சூட்டிகையான சுட்டிகள்.
ReplyDeleteஉங்களுக்கு இறைவன் பூரண ஆசியை வழங்கவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். நன்றிகள்.
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteவாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும்
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
சாதனைக்குடும்பத்துக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இளம்விஞ்ஞானியின் அறிவியல் மாதிரி இன்றைய சூழலுக்கேற்ற சிறப்பான முயற்சி. அதற்கு சிறப்பு பரிசு தரப்பட்டிருப்பதில் வியப்பில்லை. குட்டிப்பாப்பா தண்ணீரில் கும்மாளம் போடுவதைப் பார்க்க சிட்டுக்குருவிகள் தண்ணீரில் சிறகடித்துக் குளிப்பதைப் போலுள்ளது. குழந்தைகளுக்கு என் அன்பும் ஆசிகளும்.
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteநல்வாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் ,அன்புக்கும் ஆசியுரைகளுக்கும்
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
பிள்ளைகள் திறமை வெளிப்படும் போது எல்லோருக்கும் எழும் மகிழ்ச்சி! அதை பிறரோடு பகிர்வதில் இன்னும் நெகிழ்ச்சி! நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கத்தருணங்கள் மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteகுழந்தை ஸ்ரீதியா தண்ணீரில் விளையாடும் காணொளி மிக அருமை.
வாரிசுகளுக்கும், வாரிசுகளின் வாரிசுகளுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
வாரிசுகளுக்கும் வாரிசின் வாரிசுகளுக்கும் வாழ்த்துக்கள்.(உங்களுக்கும்.)
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteவாழ்த்துகளுக்கும் , கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
அருமையான பதிவு. மலரும் நினைவுகளை நீங்கள் பதிவு செய்திருக்கும் விதமே தனி அழகு . அவ்வளவு அழகுடன் பதிவு செய்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத் தருணங்களை தங்கத்தமிழில் வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
கருத்துரைகளைப்பார்த்தே தாங்கள் பதிவுலகில்
முதல் அடிஎடுத்து வைத்தமை அறிந்தோம்.. மகிழ்ச்சி..
சிறப்பாக பதிவிட வாழ்த்துகள்..! தங்கள் சமூகப்பணிகள்
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்..
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்!!
ReplyDeleteஎழுத்தறிவித்தவன் இறைவன்! எங்களுக்கு இறைவனையும் என்றென்றும் இனம் காட்டும் தங்கள் பரம்பரைப் பெருமை அறிந்து மகிழ்ந்தோம். வாழையடி வாழையாக அறப் பணி ஆற்றி வரும் மேன்மைக்கு தலை வணங்குகிறோம். கல்வி தானம், அன்னதானம் பற்றிய செய்திகளை வாசிக்கும் எமக்கும் ஸ்ரீ தியாவின் விளையாட்டுக் காணொளி மனசுக்கு ஊக்க பானம்!
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
Very nice. May the good Moments flow in Moore :)
ReplyDelete@ Gopalakrishnan:
ReplyDeleteநான் தான் அந்த ஆஸ்ட்ரேலிய மருமகள்.
அது சாதாரண தோசை இல்லை. அதில் உள்ள சட்னி சிறப்பு மிக்கது. இது இவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சட்னி வகை ஆகும். அதனால் செய்து முடித்தவுடன் இவருக்கு புகைப்படம் அனுப்பினேன். அது என்ன அதிர்ஷ்ட படமோ இவர் பிலோகில் இடம் பெற்று விட்டது. மற்றபடி தோசை தோசை தான்.
கடல் தாண்டி வந்தாலும் நம்ம ஊரு தோசை இட்லியை விட முடியுமா? அதுவும் இங்கு விற்கப்படும் தோசை $6.50. இது இந்திய கணக்கு படி சுமார் 325 ரூபாய். இப்படி இருக்க வீட்டில் செய்வது தானே லாபம்? அன்று மட்டும் நானும் என் கணவரும் கிட்டத்தட்ட எட்டுக்கும் மேல் உண்டு இருப்போம்.
வாழ்க வளமுடன்..!
Deleteதமிழில் கருத்துரை கண்டதும் தங்கத்தருணமாக
மகிழ்ந்து நிறைந்தேன்..
சட்னி குறிப்பு பகிர்ந்த உடனே சட்னியும் தோசையுமாக படம் வந்த வேகம் ஆச்சர்யமளித்தது..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
புகைப்படங்கள் தெரியவில்லை! பரிசுகளை வென்ற தங்களின் இல்ல உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் ! தங்களின் சந்தோஷப் பகிர்வை உறவினர்களாக எங்களையும் பாவித்து பகிர்ந்தமை மனதிற்கு அளவில்லா சந்தோசம் தருகிறது. நன்றியும் பாராட்டுடன் வாழ்த்துக்களும்!
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும் , கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
தங்கத் தருணங்கள் நிரந்தரமாக உங்கள் குடும்பத்துடனேயே
ReplyDeleteதங்கிட வேண்டுமென வாழ்த்துகிறேன்!
கண்களை வேறு எதையும் பார்க்கவிடாமல் கவரும் குட்டீஸ்
அசத்தலாக இருக்கின்றனர்! சுற்றிப் போட்டுவிடுங்கள்!
அழகிய அருமையான தருணங்கள்!
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteதங்கத்தருணங்களை வாழ்த்தியமைக்கும்
அழகிய அருமையான கருத்துரைகளுக்கும்
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..
தங்கத் தருணங்கள்
ReplyDeleteஎன்றும் நிலைக்கட்டும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
வணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteநல்வாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் ,
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
உங்கள் வாரிசுகளுக்கு இனிய வாழ்த்துக்கள். ஸ்ரீதியா தண்ணீரில் விளையாடி மனதைக் கொள்ளையடித்து விட்டாள். அவளைத் தூக்கிக் கொள்ள மனம் விழைகிறது.
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteநல்வாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் , பாராட்டுக்களுக்கும் ,அன்புக்கும் ஆசியுரைகளுக்கும்
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..
வாரிசுகள் பெற்ற பரிசுக்கும் .கோவை நலச்சங்க குழுமதித்ற்கும் என் வாழ்த்துக்கள் .!தொடருங்கள் வாழ்த்துக்கள் தோழி ....!
ReplyDeleteவணக்கம் ,,வாழ்க வளமுடன்..
Deleteநல்வாழ்த்துரைகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் ,
மனம் நிறைவான இனிய அன்பு நன்றிகள்..