அநாதி வேதமும் புராணமும் சொல்லும் அபூர்வ குண நாமம்
சதா என் நாவில் நிலாவியே எனை விடாத ஹரி நாமம்
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை விடாத ஹரி நாமம்
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம் உதித்த திரு நாமம்
பக்தி இல்லா தெனக்கு இசைந்தெனை விடாத ஹரிநாமம்
ஆதிமூல மெனும் மாமத யானையை அருள வந்த நாமம்
ஏதுமிலாத என் இதய புகுந்தெனை விடாத ஹரி நாமம்
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ..ஆராரோ..
ஆவணி ரோகிணி அஷ்டமி நாளினில் தேவகி வயிற்றில் ஜெனித்தவனே
அக்கணமே வசுதேவரின் மூலம் யசோதையின் வீட்டை அடைந்தவனே
பாவையாம் ரோகிணி பாலகனாம் பலராமனின் பின்பு பிறந்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.
என்னதவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்ருமம் அம்மாஎன்றழைக்க
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட -
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்ச வைத்தாய் தாயே - என்ன
சனகாதி முனிவர்கள் தவம்செய்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற - என்ன தவம் செய்தனை !!
ஸ்ரீவத்ஸ பூஷணம் நாராயணம் - நந்த கோவத்ஸ போஷணம் நாராயணம்
ஸ்ருங்கார நாயகம் நாராயணம் - பத கங்கா விதாயகம் நாராயணம்
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் தலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
ஞான ஒளிவீசு வேணுகோபாலவன்
வானில் ஒளிவீசும் சோலையிலே கண்ணன்
ஆடாது அசங்காது வா கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்தாடுதே எனவே - ஆடாது
ஆடலைக் காண தில்லை அம்பலத் திறைவனும்
தன் ஆடலைவிட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே ஒரு
மாமயில் இறகணி மாதவனே - நீ ஆடாது அசங்காது வா கண்ணா
பார்த்தனுக்கு சாரதியாய் பாண்டவர்க்கு வெற்றி தந்தாய்
பார்த்த சாரதியே என்றழைத்தால் பக்கத்துணை வருவாய்..
ஸ்ரீ ஆண்டாளுக்கருள் புரிந்த அரங்கனல்லவா -கண்ணன்
அன்பாலே நம்மையாளும் தெய்வமல்லவா
கீதை என்னும் பாடம்சொன்ன கண்ணனல்லவா - தெய்வ
கீர்த்தனைகள் நமக்கு தந்த கிருஷ்ணனல்லவா
ஆஹா
ReplyDeleteஆஹா! எந்தன் கிருஷ்ணன் அழகினில் மயங்கிடவா! அமுதூட்டும் அருந்தமிழில் அவனின் புகழில் மயங்கவா! அதிகாலையில் அவனைத் துதித்து தேனமுது தந்திட்ட தங்களின் அன்பினை எண்ணி மகிழவா!
http://www.krishnaalaya.com/2014/08/blog-post_16.html இதனையும் படித்து கருத்திடுங்கள் சகோதரி!
ReplyDeleteஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteகுழலூதும் கண்ணனிண் இனிய இசை நம் எல்லோரையும் மகிழ்வித்து நல்லாசி வழங்க வேண்டுவோம்!
ReplyDeleteபாடல் அற்புதம்...தமிழின் சுவையை ரசித்தோம்!
கிருட்டின ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDelete’கோகுலாஷ்டமி
ReplyDeleteகொண்டாட்டங்கள்’
என்ற இன்றைய தங்களின் தலைப்பே
கிருஷ்ணனின் கொண்டை போல
அழகோ அழகு !
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் சொக்க வைக்கின்றன.
Deleteஆயர்பாடி மாளிகையில் .....
ReplyDeleteகுட்டிக்கிருஷ்ணனோடு
நானும் சேர்ந்து மயங்கிப்போய்
தாய் _ _ _ _ மடியில் சொக்கித்
தூங்கிப் போனேன் ......
தா லே லோ ...... ;)
கணொளி இசை
அவ்வளவு அற்புதம்.
>>>>>
தாயே .... யசோதா ....
ReplyDeleteசுதா ரகுநாதனின் குரலில்
இனிமையோ இனிமை
>>>>>
ஆடாது அசங்காது வா ... கண்ணா !
ReplyDeleteவந்துட்டேன்......
ஓடோடி வந்துட்டேன் ....
நானும் ....
தங்கள் பதிவினைப்
படிக்க/பார்க்க
அசந்து போனேன்.
அசத்திட்டீங்கோ !
>>>>>
என்ன தவம் செய்தனை.....
ReplyDeleteஎன்ன தவம் செய்தேனோ
தங்களின் வலையுலக
உறவும் நட்பும் கிட்டிட .........
>>>>>
அனைத்துப்படங்களும் பதிவும் பாடல்களும் பாடல் வரிகளும் தங்களின் தங்கமான விளக்கங்களும் மிக மிக மிக மிக அருமை.
ReplyDeleteபிரஸாதங்கள் மட்டுமே ...... சின்ன குறை !
இருப்பினும் குறையொன்றும் இல்லை ....!!
என்றாவது ஒருநாள் கிடைக்கக்கூடும் .... !!!
நம்பிக்கை தானே வாழ்க்கையை ருசிக்க வைக்கிறது.
கற்பனையில் அந்த நம்பிக்கையே
எனக்குத் தும்பிக்கை போல
நிம்மதியைத் தந்து வருகிறது.
>>>>>
அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
;) 1371 ;)
oo oo 8 oo oo
அற்புதமான படங்கள்!.. குட்டிக் கண்ணனின் எழில் கொஞ்சும் முகத்தை விட்டுக் கண்களை எடுக்க இயலவில்லை.. அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும் அம்மா!
ReplyDeleteகண்ணனைக் கார்மேக வண்ணனை எண்ணிய துதிக்க வைத்த
ReplyDeleteஅருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி .
கண்ணன் கதைகள் படிக்கப் படிக்க இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமூட்டும். கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இன்று மாலை என் பதிவில் கிருஷ்ணாயணம்
ReplyDeleteமாயக் கண்ணனின் படங்கள் கொள்ளை அழகு.
ReplyDeleteகோகுலாஷ்டமி அன்று கோகுலத்துக்கே நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம் அருமை..
ReplyDeleteகோகுலாஷ்டமியை கண்ணனின் அழகு படங்களுடன் தங்கள் பதிவு சிறப்பாக...
ReplyDeleteஅழகான படங்களுடனான பகிர்வு. தங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா... அருமை அம்மா...
ReplyDeleteகண்ணனின் படங்கள் எல்லாமே கொள்ளை அழகு. கோகுலாஷ்டமியன்று அழகியபதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteIncredible Pictures Of Bhagawan Sri.Krishna God Sri Krishna bless the Artist & who brouht these Great Pictures to view all,
ReplyDelete