Sunday, August 10, 2014

மகிமை மிக்க காயத்ரி மந்திரம்.!


















"ஓம் பூர்புவஸ் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.'


என்னும் காயத்ரி மந்திரம். "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும். 
கௌசிகன் எனும் மன்னர் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று பெயர் பெற்று விஸ்வத்திற்கே  வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர்.

பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற 
அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம்.

இதை "பிரம்ம தேஜோ பலம் பலம்' எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர். 
மகிமைவாய்ந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. 
ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் 
ஒரு யாகத்தைத் தொடங்கினார்.

அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், 
நான்முகன் தனது சக்தியால் ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.

காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள்.
பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் 

காயத்ரி தேவி செம்பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் 
ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள். 
காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம், அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது)கபாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள்; நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும்.

அதாவது "காய்' என்றால் கானத்திற்கு உரியது. 
பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி 
தியானித்தால் பெரும் பலன் உண்டு.

"த்ரீ' என்பது "த்ராயதே' என்று  விரிந்து "காப்பாற்று' எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் 
நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. 

இதில் கா- என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். 

ய- என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. 
இதற்கு அதிதேவதை விஷ்ணு. 

ஆ- என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ- எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும்

எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி 
வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்..

உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், 
கல்வி மனதைப்  பண்படுத்துவது போன்றும், 
காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது.
எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் 
பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. 

எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு..

சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே 
வேத மாதாவாக நாம் போற்றுகிறோம்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே  
காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். 

காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதி தேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும், மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். 

நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும்,  மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். 

காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் 
குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. 

ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு 
தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, 
காக்கும் கடவுளான  ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, 
அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி 
ஆகிய மூவரும் ஓருருவமாக- காயத்ரி தேவியாக விளங்கி 
நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். 

ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் 
ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன. 

காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள்ளார். 

12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச்சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம். வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52-ஆவது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ர நாமமும். நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. 

காயத்ரி மஹாத்மியத்தில் 24 சுலோகங்களைக் கொண்ட 
காயத்ரி  ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. 

காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும்
பிரம்மலோகத்தில் காயத்ரியாகவும், 
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் 
விளங்குவதாக இது குறிப்பிடுகிறது.
காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் 
ஜபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி 
சாதனை படைத்தவர்கள் பலர். 

மேலதிக விவரங்களுக்கு
தொடர்புடைய பதிவுகள்
சுபிட்சம் அருளும் காயத்ரிமந்திரம்

ஆன்ம நலம் பொழியும் ஸ்ரீகாயத்ரி தேவி






[gayatri-mantra047-copy.gif]

16 comments:

  1. வணக்கம்
    அம்மா
    காயதிரி மத்திரத்தின் மகின்மை பற்றி அறிந்தேன் படிக்கும் போது மனதில் ஒரு வித அமைதி தோன்றும் பகிர்வுக்கு நன்றி அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. காயத்ரி மந்திரத்தின் பொருள் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. நலம் தரும் காயத்ரி மந்த்ரத்தின் அருமைகளைக் கூறிய இனிய பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. மகிமை மிக்க காயத்ரி மந்திரத்தின் சிறப்பினை அறிந்துக்கொண்டேன்.சிறப்புமிக்க பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. காயத்ரி மந்திரத்தின் மகிமைகளை அழகாய் சொன்னீர்கள்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆவணி அவிட்ட நாளில் காயத்ரி மந்திரம் குறித்த தெளிவான விளக்கம் அருமை! பல புதிய செய்திகள் அறிந்துகொள்ள முடிந்தது! நன்றி!

    ReplyDelete
  7. காயத்ரி மந்திரகுத்தின் மகிமை அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  8. ’மஹிமை மிக்க காயத்ரி மந்த்ரம்’ என்ற தலைப்பினில் இன்று கொடுத்துள்ள தங்களின் பதிவு மிக அருமையாக உள்ளது.

    இன்றைக்கும் நாளைக்குமான மிகப்பொருத்தமான பதிவு.

    >>>>>

    ReplyDelete
  9. பதிவினில் தாங்கள் ஒவ்வொரு அட்சரத்தையும் விளக்கிக் கொடுத்துள்ள செய்திகள் ஒவ்வொன்றும் அட்சரலக்ஷம் பெறக்கூடியவை.

    >>>>>

    ReplyDelete
  10. படங்கள், காணொளிகள், தொடர்புள்ள சில இணைப்புகள் யாவுமே மிகவும் பயனுள்ளவைகளே.

    >>>>>

    ReplyDelete
  11. கடைசி படத்தில் நுணுக்கமான பல விஷயங்களை, நெருக்கமாகப் பொடிப்பொடி ஆங்கில எழுத்துக்களில் எழுதி அதை ஒரு புது டிசனைனாக கொடுத்துள்ளது மிக அழகாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. அனைத்துக்கும் என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ;) 1364 ;)

    ooOoo

    ReplyDelete
  13. great post about gayathri mantra thanks

    ReplyDelete
  14. காயத்திரி மந்திரம் சூரிய பகவானுக்கு உரியது என்று எங்கோ படித்த நினைவு. காயத்திரி தேவியின் கண்ணாடி ஓவியம் ஒன்று வரைந்து அருகில் இருக்கும் கோவிலுக்குக் கொடுத்திருக்கிறேன்.ஊரில் இல்லாததால் உடன் வர இயலவில்லை.

    ReplyDelete
  15. காயத்ரி மந்திரத்தின் சிறப்பினை மிக தெளிவாக, சிறப்பாக தெரிவித்தமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  16. காயத்ரி மந்த்ரம் மகிமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அம்மா ....

    ReplyDelete