Monday, August 18, 2014

வண்ணங்கள் ஜொலிக்கும் ஸ்ரீஷண்முகர்கோவில்





ஏறுமயில்  ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
பெங்களூரில் குறிஞ்சி கடவுள் முருகனுக்கு ஒரு சிறிய குன்றின் மேலே ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகனையும் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் வகையில்  மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள பெம்ல் லே அவுட்டில் (beml லே அவுட்)ஷண்முகர் கோவில் அமைந்துள்ளது..
.
சிருங்கேரி சங்கராச்சார்யா சுவாமிகளின் உத்தரவு படி 
அருணாச்சல முதலியார் என்பவர் இந்த கோவிலை உருவாக்கி உள்ளார்.
சற்று தொலைவில் இருந்து பார்த்தாலும் குன்றின் மேல் 
ஆறு முகங்களும் தெரியும்படி கோபுரம் அமைந்துள்ளது .
முருகன் சன்னதிகள் குன்றின் மேல் வட்டவடிவத்தில் அமைத்துள்ளார்கள் .கீழே பஞ்சமுக விநாயகர் சன்னதி உள்ளது.

கோவிலின் உச்சியில் சூரிய ஒளியை உள்வாங்கும் நான்கு உணரிகள் பொருத்தி உள்ளார்கள்.இதில் இரண்டு உணரிகள் பக்கவாட்டிலும் இரண்டு செங்குத்தாகவும் பொருத்தி உள்ளார்கள் .

உணரிகள் காலை முதல் மாலை வரை அதிக பட்ச சூரிய ஒளியை உள்வாங்கும் திசைக்கு தானாகவே இடம் மாற்றி கொள்கிறது.

இப்படி உள்வாங்கப்படும் சூரிய ஒளி காலை முதல் மாலை வரை 
மூல விகரகத்தின் மேலும் விழும் படி அமைத்து சூர்யா கிரண அபிஷேகம் நடைபெறுவது மிகவும் வியப்பளிக்கிறது.. .

கோபுர உச்சியிலும் ஒரு பளிங்கு குவிமாடம் 42 அடி உயரத்தில் அமைந்து அதில் ஒரு அங்குல அகலத்தில் 2500 பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.. .
பகல் நேரத்தில் சூரிய ஒளி இந்த கற்களின் மேல் படும் பொழுது அழகிய வானவில் நிறங்களை  வர்ணஜாலமாக வாரி வழங்குகிறது..

இரவில் 27 வாட் LED விளக்குகளால் ஒளிமயமாகிறது .அப்பொழுது இந்த பளிங்கு கற்களில் இருந்து 16 விதமான வண்ணங்கள் ஜொலிக்கிறது.

ஏறக்குறைய 138 விதமான வெவ்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது .

பளிங்கு கோபுரம் நல்ல உயரத்தில் குன்றின் மேல் இருப்பதால் சுற்று வட்டாரத்தில் 10 கி.மீ ஆரத்திற்கு இந்த ஒளிமயமான காட்சிகள் தெரியுமாம் 
                                          Shanmukha Temple 1

Shanmukha Temple 2

ஆலய இணையதளம்




22 comments:

  1. அற்புதம் சகோதரியாரே
    அற்புதம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நீங்க சொல்லும்போதே சண்முகனை பார்க்கவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது.. பார்ப்போம், சந்தர்ப்பம் அமையும் போது செல்ல வேண்டும்.. நன்றி அம்மா!

    ReplyDelete
  3. ஷண்முகன் திருக்கோயிலைப் பற்றிய விவரங்களும் அழகிய படங்களும் மனதைக் கவர்கின்றன. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. கண்கொள்ளாக் காட்சி சகோதரி!

    அழகன் முருகன் அமருமிடமும் சூழலும் அற்புதம்!

    அழகிய பதிவும் பகிர்வும் கண்டு கண்கள் குளமாயின.
    நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  5. என்றுமே முருகன் என் இஷ்ட தெய்வம்.

    சூரிய கிரணத் தகவல்கள் அற்புதம்.

    பிரம்மாண்ட முகங்களும் பிரமிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  6. அற்புதமான காட்சி.பார்க்க பரவசமாக உள்ளது. ஆறுமுகசுவாமியின் படங்கள் மனதைகொள்ளைகொள்ளுகிறது.அழகாக படங்கள். நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  7. இதுவரைக் கேள்விப்படவில்லை. பார்க்கக் கூடுமா என்று பார்க்க வேண்டும் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அற்புதம் அற்புதம் ! நேரில் கண்டு களிக்க மனம் ஏங்குகிறது. எங்கள் நல்லூர் முருகன் கோவில் திருவிழா தற்போது நடை பெற்றுகொண்டிருக்கும், இவ்வேளை விரத காலத்தில் அவர் தரிசனம் கண்டு மனம் பரவசம் கொண்டது தோழி மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  9. மிக அழகாக அமைந்துள்ளது! படங்களும் காணொளிகளும் தந்து அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. தலைப்பினைப்போலவே ஸ்ரீஷண்முகர்
    கோயிலில் வண்ணங்கள் ஜொலிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  11. Replies
    1. ஆறுமுகத்தில் முன்று அல்லது நான்கு மட்டுமே பார்க்க முடிகின்றன.

      Delete
  12. Replies
    1. கடைசியில் காட்டியுள்ள மயில் படம் நன்னா இருக்கு.

      Delete
  13. எல்லாப்படங்களும் ஜோராக இருக்கின்றன.

    கடைசி மயிலுக்கு முன்பு உள்ள படம் நல்ல கவரேஜ்

    >>>>>

    ReplyDelete
  14. காட்டியுள்ள காணொளிகளும்,
    அனைத்து விளக்கங்களும்
    சுவாரஸ்யமாகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  15. Replies
    1. பெங்களூர்>>>>>மைசூர் ரோடு போய் உள்ளேன். அங்கு எங்கள் BHEL Factory யின் ஓர் பிரிவும் உள்ளது.

      அங்குள்ள அந்த நகருக்கும் ஏதோ ஒரு வேலையாகப் போய் இருக்கிறேன். இருப்பினும் இந்தக்கோயில் இருப்பது தெரியாததாலும், நேரமின்மையினால் செல்ல முடியவில்லை என நினைக்கிறேன்.

      Delete
  16. அனைத்துக்கும் என் நன்றிகள்.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    வாழ்க!

    ;) 1372 ;)

    oooOooo

    ReplyDelete
  17. காட்டியுள்ள காணொளிகளும்,
    அனைத்து விளக்கங்களும்
    சுவாரஸ்யமாகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  18. பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். இந்த கோவிலைப் பற்றி இன்றுதான் உங்கள் பதிவின் வழியே முதன்முதல் கேள்விப் படுகிறேன். அடுத்தமுறை உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது இந்த கோயிலுக்கு அவசியம் செல்ல வேண்டும். படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete