Tuesday, August 19, 2014

என் இந்திய தேசம் இது




















–ராஜராஜேஸ்வரி ஜெகமணி.
சுதந்திரதினம்











இறையாண்மைக் கொண்ட இந்தியாவின் சுதந்திரம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, 
தேசப்பற்றை வளர்க்கிறோம்..
தேசவிடுதலைத்தியாகிகளின் கண்ணீராலும் செந்நீராலும் பெற்றுப் பேணி வளர்த்துப் பலன் தரும்  இன்னரும் மதுரமான கனிமரம் தித்தித்திக்கும் சுதந்திரம்  ..!
அதனை வந்தே மாதரம் .. வந்தேமாதரம் என்று உணர்ச்சி பொங்க வாழ்த்தி திருநாளாகக் கொண்டாடுகிறோம்..
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த 
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
என்று ஞான பாரதத்தை வணங்குகிறோம்..!
ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் 
ஓதுமினோ வேதங்கள்!ஓங்குமினோ!ஓங்குமினோ! 
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்; 
வேதனைகள் இனி வேண்டா;
என திண்ணமாக வாழ்த்தொலிகள் முழக்குகிறோம்..
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமிது
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமிது
..
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவின்று புதிய இந்தியா
சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
காந்தி மகான் கொண்ட கண்ணிய பூமி இது
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்

வல்லமை மின் இதழில் வெளிவந்த ஆக்கம் .. 



ஸ்ரீநேருவித்யாலயா பள்ளி புதிய லிம்காசாதனை..!

1129 ஜவகர்லால் நேரு...

ஒரு பிரத்யோக முயற்சியாக கோயமுத்தூர் ஸ்ரீநேருவித்யாபயா பள்ளி மாணவர்கள் தங்களது ஐம்பதாவது பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில்  இந்தியநாட்டின் முதல் பிரதமர் ஜவர்கர்லால் நேருவைப்போல் உடை அணிந்து அணிவகுத்து புதிய சாதனை படைத்தனர்,,!

இப்புதிய சாதனையை 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை உள்ள 1129 மாணவர்கள்  பங்கேற்றுஉருவாக்கினார்கள்..!

புதுதில்லி லிம்காசாதனைகள் நிறுவனத்திலிருந்து 
திரு.எம்.எம்.வி . மூர்த்தி அவர்கள் வந்திருந்து இந்த 
சாதனையைக் கண்டு களித்து பதிவாக்கி தீர்ப்பளித்தார்..!

ஆதாரங்களின்படி 1129 மாணவ்ர்கள் ஒன்று சேர்ந்து  
ஒரே சமயத்தில் ஜவர்கர்லால் நேரு போன்ற நிகழ்வை 
நிகழ்த்தியது இதுவே முதல் முறை ..

ஸ்ரீநேருவித்யாலயா பள்ளி மற்றும் ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கல்லூரியை இயக்கும் கோவை நலச்சங்கம் இந்த குறிப்பிடத்தக சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்பது பெருமைப்படத்தக்கது..!

கோயமுத்தூர் நலச்சங்க நிர்வாகிகள் , பள்ளி முதல்வர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்..
























Displaying Makkal Kural_17Aug14.jpg
மாலையில் உற்சாகமான கலை நிகழ்ச்சியும் , விருந்தும் சிறப்பாக நடைபெற்றது .














ஸ்ரீநேருவித்யாலயா பள்ளி வளாகத்துள் அமைந்துள்ள
 ஸ்ரீஜெய் அனுமன் ஆலயத்தில் தினமும் மாலை ஆறுமணி அளவில் 
விஷ்ணு சகஸ்ரநாமங்களும்,அனுமன்சாலீசாவும் 
சகஸ்ரநாம குழுவினரால் வாசிக்கப்படுகிறது..!





19 comments:

  1. படங்கள் அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்.

      ,கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  2. தெய்வ பக்தியும் தேச பக்தியும் விளைவதைக் கண்டு மனம் நிறைந்து மகிழ்ச்சியாகின்றது. நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன.

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்.

      பாராட்டுகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் நிறைந்த நன்றிகள்..

      Delete
  3. தங்களுக்கும் இனிய (தாமதமான) வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்.

      இனிய வாழ்த்துகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  4. என் இந்திய தேசம் இது

    மிக அருமையான தலைப்புடன் கூடிய
    அற்புதமான பதிவு.

    >>>>>

    ReplyDelete
  5. //என் இந்திய தேசம் இது
    Published August 14, 2014 |
    By ராஜராஜேஸ்வரி ஜெகமணி //

    எதில் வெளியிடப்பட்டது எனவும்
    சொல்லியிருக்கலாமே !

    ஜெகமணி போல அனைவரும்
    அறிய அரியதோர் வாய்ப்பாக
    அமைந்திருக்குமே !!

    OK OK அதற்கும் ஏதாவது காரண காரியங்கள்
    பிரத்யேகமாக இருக்கக்கூடும். பரவாயில்லை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்.

      கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..

      வல்லமை மின் இதழில் வந்த ஆக்கம் எனக்குறிப்பிட்டிருக்கிறேன்..

      தங்கள் ஓய்வில்லாத பணிச்சுமைகள் காரணமாக இன்றைய பதிவு முழுமையும் தங்கள் கவனத்திற்கு வரவில்லை எனத் தெரிகிறது..!

      Delete
    2. //வல்லமை மின் இதழில் வந்த ஆக்கம் எனக்குறிப்பிட்டிருக்கிறேன்..//

      ஆமாங்க ! மன்னிச்சுக்கோங்கோ.

      நான் அதை இப்போது தான் கவனித்தேன்.

      //தங்கள் ஓய்வில்லாத பணிச்சுமைகள் காரணமாக இன்றைய பதிவு முழுமையும் தங்கள் கவனத்திற்கு வரவில்லை எனத் தெரிகிறது..!//

      மிகவும் அதிபுத்திசாலி ..... சமத்தோ சமத்து வேறு ...... இந்த விஷயத்தை துல்லியமாக கவனித்து எடை போட்டுள்ளத் தங்களைத்தான் சொல்கிறேன் ......

      எனக்கு இன்றும் நாளையும் ஏதோ ஒரு அவசரம் + டென்ஷன்
      எதிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் அவ்வளவு ஒரு Tight Schedule of Time ! ஆக உள்ளது. Very Sorry ..... Madam.

      ஜெய்ஹிந்த் !

      Bye for now .....

      Delete
  6. படங்கள் எல்லாமே அழகோ அழகு

    >>>>>

    ReplyDelete
  7. விரிவான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை அருமை.

    >>>>>

    ReplyDelete
  8. அனைத்துக்கும் என் நன்றிகள்.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
    வாழ்க !

    ;) 1373 ;)

    ooOoo

    ReplyDelete
  9. அழகிய படங்களுடன் அருமையான பதிவு. நேரு பள்ளி வித்யாலயா மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. வாழ்க வளமுடன்.

      பாராட்டுகளுக்கும் ,கருத்துரைகளுக்கும் நிறைந்த நன்றிகள்..

      Delete
  10. தெய்வ பக்தியும், தேச பக்தியும் இரு கண்கள் போன்றவை.என்பதை வல்யுருத்தும், நேரு வித்யாலயா மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, கொள்ளை அழகு படங்கள்.
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  11. கோகுலாஷ்டமி வாழ்த்துகளில் காட்டியுள்ள ஜோடிக்குழந்தைகள் இரண்டும் மிகவும் ஜோர் ஜோர் .... நல்ல கஷ்குமுஷ்கு .... நம் பேரன் பேத்திகள் போலவே !

    ReplyDelete
  12. வணக்கம்.... உங்களது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வலைபதிவில் கண்டோம் (அதிகம் பேர் உள்ள) , அது போல ஒரு புகைப்படம் எங்களுக்கு தேவைபடுகிறது (அளவு 20க்கு 20க்கு இன்ச்) என் நண்பரும் பல இடங்களில் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. எனவே தயவு செய்து எங்களுக்கு அந்த புகைப்படம் பற்றிய விவரங்களை சொன்னால் நன்றாக இருக்கும். என்னுடைய நண்பரும் தற்போது கோவையில் தான் வசித்து வருகிறார். (திரு.செல்வராஜ் - 9943105020) இவரிடம் நீங்கள் தகவல் சொன்னாலும் போதும். இல்லையென்றால் உங்களுடைய அலை பேசி எண்ணை கொடுத்தாலும் உங்களிடம் அவரை பேச சொல்கிறேன். எங்களுக்கு உடனடியாக தேவை. நன்றி.......உங்களது சேவை மென்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்

      தங்கள் e mail id தாருங்கள்..படம் அனுப்பி வைக்கிறோம்..

      Delete