குயில்கூவிக் கொண்டிருக்கும்;
கோலம் மிகுந்தமயிலாடிக் கொண்டிருக்கும்;
வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்;
கண்ணாடி போன்றநீர்ஊற்றுக்கள் உண்டு;
கனிமரங்கள் மிக்க உண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்று
தேனீக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்;
தேனீக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக் களிக்கும்;
என்னும் புரட்சிக்கவி பாரதிதாசன் கவிதை மொழிக்கு சாட்சியாக கட்டியம் கூறும் காட்சி மனம் மயக்கும் ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை..
இயற்கையை ரசித்தல் என்றும் இன்பமயமானது
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் மண்ணில் விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
மலர்கடலில் மலர்ந்த மணமிகு
வண்ண வண்ண எழில் மலர்களால் ...
மரங்களின் மவுன மொழி தென்றலுக்கு....., மட்டும் தான் தெரியும்.......
மேகங்களின் கருணை மொழி மழைதுளிக்கு......,மட்டும் தான் தெரியும்........
மலர்களின் அழகு மொழி அனைவருக்கும் புரியுமே !
கதிரவன் கண் மலரும் பொன்வான ஒளியின் கீழ்
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும் நதியோர கரையோரம் !!
செவ்விதழ் தாமரை மலர்ந்திடும் நதியோர கரையோரம் !!
sako!
ReplyDeletekankollaaa kaatchi.....
mikka nantri!
This comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் தேனடை போல வரிசையாக அடுத்தடுத்துக் காட்டப்பட்டுள்ள 5 படங்களும் திறக்காமல் உள்ளன.
ReplyDeleteஅதனால் என்னால் இப்போது முழுவதுமாக தேன் அருந்த முடியவில்லை.
பிறகு ஒருவேளை, தேன் கிடைத்தால் மீண்டும் வந்து தகவல் சொல்வேன். ;)
>>>>>>
அடுத்த படத்தில் தேன் நிரம்பிய கோப்பைகள் போலவே உள்ள்ன
ReplyDeleteஅந்த சிவந்த மலர்கள். ;)))))
அய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்கூஊஊஊ
>>>>>>
அதற்கடுத்த இயற்கைக்காட்சியும் அழகோ அழகு ..... செவ்வானம், மலைகள், பசுமையான தாவரங்கள், அருவியெனக்கொட்டிடும் நீல நிற நீர்.
ReplyDeleteஅசத்திவிட்டீர்கள், அனைத்தையும் அப்படியே இயற்கை அழகாகக்காட்டி! ;)))))
>>>>>>>>
குயில் கூவ மயில் ஆட என ஆரம்பிக்கும் தங்களின் சொல்லாடல் மனதை மயங்க வைக்கிறதூஊஊஊ
ReplyDeleteஇயற்கையை ரசித்தல் போன்றதே தான் உங்களின் அன்றாடப் பதிவுகளை ரசித்தலும் ..... இன்பமயமானது.
>>>>>>>>
பட்டு மெத்தையும் பஞ்சணையும் விரித்தாற்போல மலர்ப்படுக்கையாக அந்தப்படம் மனதை மயக்குதே!
ReplyDelete[வண்ண வண்ண எழில் மலர்களால் என்ற வரிக்குக்கீழே உள்ள படம்]
”பாலிருக்கும் பழமிருக்கும்
பசி இருக்காது ......
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது ......”
என்ற பாடல் போல இவற்றை எல்லாம் இனிமையாகப் பார்த்தாலே பசிதீரும் பொல உள்ளதே !
>>>>>>>>
மேலே பட்டு மெத்தையில் படுத்துறங்கிய பெண்கள், அதிகாலை எழுந்து குளியல் முடித்து, தலையில் துண்டைச்சுற்றிக்கொண்டு, முகம் முழுவதும் ஒருவித நாணத்துடன் சிரிப்பது போன்ற, அழகிய மலர்களாகக் காட்டியுள்ளது அடுத்த படத்தினில் அதை விட சிறப்பு தான் உள்ளது .;))))))
ReplyDeleteபார்க்கவே மிகவும் பரவஸமாகத்தான்!
>>>>>>>>>>
//மலர்களின் அழகு மொழி அனைவருக்குமே புரியுமே//
ReplyDeleteஆம் புரிய வைத்துப்புரட்சி செய்துள்ளீர்கள்.
ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>>>>>
//கதிரவன் கண் மலரும் பொன்வான ஒளியின் கீழ்
ReplyDeleteசெவ்விதழ் தாமரை மலர்ந்திடும் நதியோர கரையோரம் !!//
ஆஹா, என்ன அற்புதமான வர்ணனை !
”செந்தாமரையே செந்தேன் நிலவே” பாட்டுப்போல ;)))))
>>>>>>>>>
பூக்களாலேயே வரையப்பட்டுள்ள இரண்டு பட்டாம் பூச்சிகள்,
ReplyDeleteஜொலிக்கும் ப்ட்டாம்பூச்சிகள்,
கலர் கலரான மீன்கள்,
பூக்களின் கோலம் போன்ற பல்வேறு டிசைன்கள்
என மிக அழகான படத்தேர்வுகள்,
வழக்கம் போல ஒரே அசத்தல்.
அனைத்துக்கும் மனம் மகிழ்வுடன் பாராட்டுக்கள்.
அன்பான இனிய வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
பூக்களாய் மலரட்டும் தங்களுக்கு இந்த நாள் ஓர் இனிய நாளாக !
ooooooooo
கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான பதிவு !
ReplyDeleteரம்மியமான படங்கள்...
ReplyDeleteமிக மிக அழகு படங்கள்.வர்ணங்கள் கண்ணையும் மனதையும் கொள்ளை கொண்டது.
ReplyDeleteஅழகான படங்கள்.மனதை மயக்கும் மலர்கள். மனதுக்கு இதமாய் இயற்கையின் படைப்பை தந்ததற்கு நன்றிகள்.
ReplyDeleteஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையும், நீர்வீழ்ச்சியும், புரட்சிக் கவியின் பாடல் பகிர்வும், மலர் கண்காட்சியும், வண்ணத்து பூச்சிகளின் களிப்பும் மீன்களின் நாட்டியமும் எதை சொல்வது எதை விடுவது! எல்லாம் அருமை.
ReplyDeleteசகோதரி! வர்ணிக்க வார்த்தை இல்லாத, வார்த்தைகளுக்குள் கட்டுப்படாத இயற்கை அன்னையின் இளமை.
ReplyDeleteஅழகு, அருமை, அற்புதம்.
ReplyDeleteஎனக்கு அவ்வப்போது சில மின் அஞ்சல்கள் அருமையான படங்களுடன் வரும். அப்போதெல்லாம் இவை உங்களிடம் இருந்தால் அழகான பதிவுகளாகுமே என்று மனம் நினைக்கும். வாழ்த்துக்கள்.
இயற்கையை இனிதே ரசித்தேன்! நன்றி
ReplyDeleteஅருமையான அழகான பகிர்வு.
ReplyDeleteVery nice natural scenery.
ReplyDeleteRam Ram Lakshmi Narasimhan, Erode
கண்களை குளிரவைக்கும் அருமையான புகைப்படங்கள். இரசித்தேன்.
ReplyDeleteமனதை கொள்ளை கொண்ட படங்கள்.
ReplyDeletealaku poonthoddam. nanru.
ReplyDeleteVetha.Elangathilakam.