ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே
பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்..
மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்தாராம்..
வனமாலி கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகிஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாசுதேவோபிரக்ஷது
ஸ்ரீ வாசுதேவோபிரக்ஷது ஓம் நம இதி
விஷ்ணுசகஸ்ரநாமத்தின் சாரமான முக்கிய ஸ்லோகத்தினால் சாரங்கபாணியைத் தொழுத பீமனிடத்தில் 12 ருத்ராக்ஷங்கள் அத்துடன் சில குறியீடுகள் கொடுத்து காட்டில் தன்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு பீமனின் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு ருத்ராக்ஷமும் ஒரு குறியீடு பேப்பர்துண்டும் சேர்த்து கீழே போடு என அருளினாராம் ...ஸ்ரீமான் நாராயணன் ஆன மஹாவிஷ்ணு...
குறியீடு என்று இருந்த அதன் பொருள் என்ன என்று பீமன் பணிவுடன் கேட்க, அதன் பொருள் சொல்லிவிட்டால் மந்திரம் பலிக்காது. எனவே கேட்காதே என்று மந்திரப் புன்னகையுட்ன் மாயவன் கூறிவிட்டாராம்..
பூவுலகில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுக்கும் கடமை தனக்கிருப்பதால் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ். பி. கோகுலாக பூவுலகம் வந்தாராம்.....
Sir,எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்... விஷ்ணு...
என்கிற குறிப்பு அவரது மேஜையில் வரவேற்றதாம்...அதே நேரத்தில் விஷ்ணுவிடமிருந்து அழைப்பும்..
நாரதர் இந்த இக்கடான நேரத்தில் வழக்கம் போலத்தோன்றி
நாராயண !நாராயண!! என்ன சாரங்கபாணியாக கோகுலத்தில் லீலைகள் புரிந்த தங்களுக்கு விஷ்ணு இன்பார்மர் என செய்தி வருகிறதே என கேட்டாராம்.
பரவாசுதேவராகிய மஹாவிஷ்ணு எப்போது என்ன அவதாரம எடுக்கவேண்டும் என இன்பார்ம் பண்ணுவார்.. -மந்தாரமலையைத் தாங்க கூர்ம அவதாரமா, வேதங்களைக்காக்க ஹயக்கிரீவ அவதாரமா, இராவணனை வதைக்க இராம அவதாரமா, நரகாசுரனை அழிக்க கிருஷ்ண அவதாரமா, ஹிரண்யனைக் கொல்ல நரசிம்ம அவதாரமா என்பதை இன்பார்ம் செய்வதால் விஷ்ணு இன்பார்மர் -- என விளக்கினாராம்.. எஸ். பி. கோகுல்!
புருஷாமிருகத்தின் சிவபக்தியின் பெருமையை உலகோர் அறிந்துகொள்ளவும், பீமனின் கர்வம் அடங்கவும், தர்மரின் நீதிநெறிதவறாத தீர்ப்பை வெளிகொணரவும் தான் மஹாவிஷ்ணுவான தான் இந்த
அவதாரத்தில் தவறான மந்திரப்பிரயோகம் கொடுக்கச் செய்தேன். கவலை வேண்டாம். சரியான குறியீடு பேப்பரில் தோன்றும்... என்று கூறினாராம் செல்போனில் விஷ்ணு இன்பார்மர்..
பீமனும் காட்டிற்கு உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு போட்டி அறிவித்தானாம்...
தன் எல்லையான காட்டின் எல்லையை விட்டு பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இரையாவதாக ஒப்பந்தமாம்..
பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டதாம்...
உடனே கோகுல் கொடுத்த ஒரு ருத்ராக்ஷமும் மந்திரக்குறியீடு எழுதிய பேப்பரையும் கீழே போட சிவன் கோயிலாக மாறியதாம்....
சிவபக்தி மிக்க புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட பீமன் விடாமல் ஓடுகிறானாம் ..-
பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகிறதாம்...
இப்படியே 12 குறியீடுகளும் ருத்ராஷங்களும் பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியே வந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது - புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் .வாதாடுகின்றானாம்...
எஸ்.பி கோகுலின் அலுவலகத்தில்
Sir,
எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்... விஷ்ணு... என்று பார்த்து பதறிய அதே வேளையில் மஹாவிஷ்ணுவிடமிருந்து செல்போனில் அழைப்பு..
மந்திரக்குறியீடு வேண்டுமென்றே சிறிது தவறாக அளித்ததால் பீமன் புருஷாமிருகத்திடம் முழுதாகப்பிடிபடாமல் பாதி பிடிப்பட்டு வாதாடிக்கொண்டிருக்கிறானாம்....
Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு
இதனை தர்மரிடம் கூறி மனதில் உச்சரித்து சரியான தர்ம்மான தீர்ப்பு கூறினால் தப்பிக்கவழி உண்டு.. என்று மேஜையில் தோன்றிய மந்திரக்குறியீட்டை டெலிபதியில் யுதிஷ்டிரரிடம் கூற அவரும் மந்திரத்தை பயபக்தியுடன் உச்சரித்து தீர்ப்பாக பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விட்டதாம்...
இந்த கதை யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி நடத்தும் சவால் சிறுகதை-2011 போட்டிக்காக எழுதப்பட்டது.படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்..நன்றி..
வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅய்யா முடியல, இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா?
ReplyDeleteபுராணகதை போல நவீனமாக (modern) இன்றைய ஸ்டைலில் சொல்லி யிருக்கும் விதம் அருமையாக உள்ளது.
ReplyDelete:-)) Vetri pera vazhthukkal!
ReplyDeleteஇரண்டு கதைகளையும் அருமையாக இணைத்துள்ளீர்கள், பீமனின் கதை நிஜ புராணக்கதையா?
ReplyDeleteமான் வீடியோ சூப்பர்!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இதையும் ஆன்மீகமாக்கிவிட்டீங்களே!
ReplyDeleteகதை ரொம்ப நன்றாக இருக்கு.வித்யாசமா யோசிச்சு இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
cheena (சீனா) said...
ReplyDeleteவெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
நல்வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
suryajeeva said...
ReplyDeleteஅய்யா முடியல, இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா?/
நன்றி.
வியபதி said...
ReplyDeleteபுராணகதை போல நவீனமாக (modern) இன்றைய ஸ்டைலில் சொல்லி யிருக்கும் விதம் அருமையாக உள்ளது/
வியக்கவைத்த கருத்துரைக்கு நன்றி..
middleclassmadhavi said...
ReplyDelete:-)) Vetri pera vazhthukkal!
வாழ்த்துகளுக்கு நன்றி
நம்பிக்கைபாண்டியன் said...
ReplyDeleteஇரண்டு கதைகளையும் அருமையாக இணைத்துள்ளீர்கள், பீமனின் கதை நிஜ புராணக்கதையா?
மான் வீடியோ சூப்பர்!
வெற்றி பெற வாழ்த்துக்கள்/
வாழ்த்துகளுக்கு நன்றி..
சிவராத்திரி அன்று கோவிந்தா.. ..கோபாலா ,,என்று கூவிக்கொண்டு 12 சிவாலயங்களுக்கு ஓடும்
சிவாலய ஓட்டம் என்னும் பிரார்த்தனை ..நினைவு படுத்துவது
இந் நிகழ்வின் அடிப்படையிலேயே!
பீமன் போட்ட 12 ருத்ராட்சங்களும் சிவாலயமாக மாறிய 12 ஸ்தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் வழ்க்கம் இன்றும் உண்டே1
RAMVI said...
ReplyDeleteஇதையும் ஆன்மீகமாக்கிவிட்டீங்களே!
கதை ரொம்ப நன்றாக இருக்கு.வித்யாசமா யோசிச்சு இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்./
வாழ்த்துகளுக்கு நன்றி
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteவெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்./
இனிய வாழ்த்துகளுக்கு நன்றி
மஹாபாரதத்தில், என்றும் தர்மம் தவறாது விளங்கிய யுதிஷ்டிரராகிய தருமரின் கண்களுக்கு யாரைப் பார்த்தாலும், மிகவும் நல்லவர்களாகவே தெரியுமாம். ஒரு கெட்டவர் கூட அவர் கண்களுக்குத் தெரியவில்லையாம்.
ReplyDeleteஅதுபோலவே, தெய்வாம்சம் பொருந்திய, எப்போதும் தெய்வ சிந்தனைகளையே வளர்த்துக்கொண்டுள்ள தங்களுக்கு, இது போன்ற ஒரு கதை கற்பனையில் உதித்தது எனக்கொன்றும் ஆச்சர்யமாகத் தோன்றவில்லை.
இந்தத் தங்களின் கதையின் மூலமாக பல்வேறு புராண சம்பவங்களை நாங்களும் அறிந்து கொள்ளவோ, ஏற்கனவே அறிந்த சிலவற்றை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளவோ செளகர்யமாக இருந்தது.
மாறுபட்ட கற்பனையுடன் நல்லதொரு பதிவிட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
போட்டியில் கலந்து கொண்டதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கெடுத்துக் கொள்வது என்பதே வெற்றியின் முதல் படியாகும்.
இனிய நல்வாழ்த்துக்கள். vgk
@வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துக்கள் அளித்து பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
உங்கள் பாணியில் ஆன்மீகம் கலந்து அசத்தலாக கொடுததிருக்கீறீர்கள்..
ReplyDeleteவெற்றிப்பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்படியுமா மனிசர் யோசிப்பாங்க நீங்க தெய்வம்
ReplyDeleteverri pera vaazththukaL
ReplyDeleteஎப்படியோ பீமன் தப்பிவிட்டார்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.அன்புடன் ஜீஎம்பி.
ReplyDeleteகதை அருமையாக உள்ளது .வெற்றிபெற என் வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........
ReplyDeleteவெற்றி உங்களுக்கே. நாராயணாநாராயணா
ReplyDeleteஆஹா!!.. ரூம் போட்டு யோசிச்சீங்களா?
ReplyDeleteகதை செமயா இருக்கு :-))))
ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அபாரம்!
ReplyDeleteஇதுவரை யாரும் அணுகாத எல்லை என்று நினைக்கிறேன்.
விஷ்ணு இன்பார்மர் கோகுல் என்றவுடன் கள்ளன் என்று நினைத்தோம், நீங்கள் கண்ணன் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் இப்படித் தோன்றுவானேன் என்று யோசித்த போது..வை.கோ அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து சரி.
ReplyDeleteஇப்படியொரு களத்திலும் கதையை நகர்த்தலாமோ?
ReplyDeleteசெல்போன் அங்கெல்லாம் பரவிடுச்சா?
நல்ல கற்பனை.
கதை களம அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய கதைதளம்.. வாழ்த்துகள்.
ReplyDeletereally nice. Differant approch.congrats for win the competition
ReplyDeleteசவால் போட்டிக்கான அடித்தளம் புராண காலத்திலேயே இருக்கிறதா? புராணக்கதைகளை உல்டா செய்து குழந்தைகளுக்கு சொல்லுவது போன்ற டெக்னிக் நன்றாக இருக்கிறது. நவீன மகாபாரதம்.. வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteஆமாம்.... புருஷா மிருகம் என்றால் சாபர்டூத் தானே.
சாகம்பரி said...
ReplyDeleteசவால் போட்டிக்கான அடித்தளம் புராண காலத்திலேயே இருக்கிறதா? புராணக்கதைகளை உல்டா செய்து குழந்தைகளுக்கு சொல்லுவது போன்ற டெக்னிக் நன்றாக இருக்கிறது. நவீன மகாபாரதம்.. வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.
ஆமாம்.... புருஷா மிருகம் என்றால் சாபர்டூத் தானே.//
saber tooth tiger பொருந்திவருகிறது.
பாதி மனிதனும் பாதி மிருகமும் கலந்தது என்று கேட்டிருக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteravi said...
ReplyDeleteபுதிய கதைதளம்.. வாழ்த்துகள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி.
வெண் புரவி said...
ReplyDeleteகதை களம அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி.
சத்ரியன் said...
ReplyDeleteஇப்படியொரு களத்திலும் கதையை நகர்த்தலாமோ?
செல்போன் அங்கெல்லாம் பரவிடுச்சா?
நல்ல கற்பனை./
கருத்துரைக்கு நன்றி..
அப்பாதுரை said...
ReplyDeleteவிஷ்ணு இன்பார்மர் கோகுல் என்றவுடன் கள்ளன் என்று நினைத்தோம், நீங்கள் கண்ணன் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு மட்டும் இப்படித் தோன்றுவானேன் என்று யோசித்த போது..வை.கோ அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து சரி./
யோசித்ததற்கும் கருத்துரைக்கும் நன்றி..
அப்பாதுரை said...
ReplyDeleteரசிக்காமல் இருக்க முடியவில்லை. அபாரம்!
இதுவரை யாரும் அணுகாத எல்லை என்று நினைக்கிறேன்./
அருமையான ரசிகத்தன்மைக்கு வாழ்த்துக்கள்.
கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteஅமைதிச்சாரல் said...
ReplyDeleteஆஹா!!.. ரூம் போட்டு யோசிச்சீங்களா?
கதை செமயா இருக்கு :-))))//
அமைதிச்சாரலின் அருமையான கருத்துரைக்கு நன்றி.
சிவகுமாரன் said...
ReplyDeleteவெற்றி உங்களுக்கே. நாராயணாநாராயணா/
நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா
வாழ்த்துரைகளுக்கு நன்றி.
அம்பாளடியாள் said...
ReplyDeleteகதை அருமையாக உள்ளது .வெற்றிபெற என் வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........//
வாழ்த்துரைகளுக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி சகோதரி.
G.M Balasubramaniam said...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.அன்புடன் ஜீஎம்பி./
அன்புடன் வாழ்த்திய கருத்துரைகளுக்கு நன்றி ஐயா..
shanmugavel said...
ReplyDeleteஎப்படியோ பீமன் தப்பிவிட்டார்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாழ்த்துரைகளுக்கு நன்றி.
வைரை சதிஷ் said...
ReplyDeleteverri pera vaazththukaL//
வாழ்த்துரைகளுக்கு நன்றி
கவி அழகன் said...
ReplyDeleteஇப்படியுமா மனிசர் யோசிப்பாங்க நீங்க தெய்வம்//
கருத்துரைகளுக்கு நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteவெற்றிப்பெற வாழ்த்துக்கள்...//
வாழ்த்துரைகளுக்கு நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஉங்கள் பாணியில் ஆன்மீகம் கலந்து அசத்தலாக கொடுததிருக்கீறீர்கள்..//
கருத்துரைகளுக்கு நன்றி
போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆறுதல் பரிசு..வாழ்த்துக்கள்
ReplyDeleteபழமையும், புதுமையும் கலந்த கலவை நல்லா இருக்குங்க. ம்ம்ம்ம் எப்படிலாம் யோசிக்குறீங்க...,
ReplyDelete1235+2+1=1238
ReplyDeleteதங்களின் பதிலுக்கும், திரு அப்பாதுரை அவர்களின் கருத்துக்களுக்கும் நன்றி.