ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உருவானாய் போற்றி
வழிபட்டு வருவோர்க்கு வாழ்வு என்றும் நிறைவாக்கும் முக்தித் தலங்கள் ஏழினுள் ஒன்று காஞ்சிபுரம்.
நான்கு வேதங்களும் மா உருவாக பூசித்த தலம் கச்சி ஏகம்பம்.
பஞ்சபூதத் தலங்களுள் மண்ணாக (பிருத்திவி) அருள் பாலிக்கும் ஆலயம் . ஏலவார்குழலி உடனாகிய திருஏகம்பப் பெருமான் ஒற்றை மாவடியின் கீழ் எழுந்தருளி இவ்வுலகைக் காத்து வருகிறார்..
காஞ்சியின் அமைப்பு மயிலைப் போன்று இருந்ததாக காளிதாசர் பெருமையுடன் குறிப்பிடுவார்..
கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இராஜகோபுரம் 192 அடி உயரமுடையது.
கோபுரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. .
கோபுரத்தின் கீழே மேற்குப் பக்கத்தில் ஆறுமுகப் பெருமானும், கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.
இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.
கோபுரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. .
கோபுரத்தின் கீழே மேற்குப் பக்கத்தில் ஆறுமுகப் பெருமானும், கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.
இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.
திருவேகம்பநாதர் ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இடது பக்கமாக கம்பா தீர்த்தம் அமைந்துள்ளது.
கங்கை, யமுனா, சரசுவதி ஆகிய நதிகளில் நீராடிய புண்ணியம் இத்தீர்த்தத்தில் கிடைக்கிறது.
விகட சங்கர விநாயகர் சந்நதி இருக்கிறது.
இங்குதான் இரட்டைப் புலவர்களால் மிகப்பெருமைவாய்ந்த
திருவேகம்ப நாதர் உலா பாடப்பட்டது.
நவராத்திரி காலங்களில், மக்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனைகளுடன் விளங்கும் பிரளயகால சக்தி சந்நிதி அமைந்துள்ளது.
உலக அழிவின்போது மக்களைக் காத்து இரட்சித்த அம்பாளாகையால் இந்த அம்பாளுக்குப் பிரளயகால அம்மன் எனப் பெயர் வழங்கப்படுகிறது.
அதையடுத்து பிரகாரத்தில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார்.
அதற்கருகில் 108 தனி லிங்கங்களும், ஒரே லிங்கத்தில் 1008 சஹஸ்ரலிங்க சந்நதியும் அமைந்துள்ளன.
சஹஸ்ரலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்! கேட்டது கிடைக்கும்!
ஏகாம்பரநாதர் ஆலயத்துள் தட்சணாமூர்த்தி சந்நிதி கிடையாது.
இவ்வாலயத்திற்கே சிறப்புத் தரும் பெரிய ஆலமரம் ஒன்று சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாமரத்தை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்டதாக வரலாறு!
இவ்வாலயத்திற்கே சிறப்புத் தரும் பெரிய ஆலமரம் ஒன்று சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது.
3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாமரத்தை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்டதாக வரலாறு!
மாவடியின் கீழ் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
பங்குனி உத்திரப் பெருவிழாவில் சுவாமி திருக்கல்யாணத்தின்போது மாவடியின் கீழே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெறக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
பங்குனி உத்திரப் பெருவிழாவில் சுவாமி திருக்கல்யாணத்தின்போது மாவடியின் கீழே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெறக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அம்பலவாணர் (நடராஜர்) சந்நிதி இங்கு உள்ளது.
நடராஜர் உருவம் ஐம்பொன்னால் ஆகிய மிகப்பெரிய திருமேனியாகும்.
நடராஜர் உருவம் ஐம்பொன்னால் ஆகிய மிகப்பெரிய திருமேனியாகும்.
ஆலயத்தின் உள்ளே ஏலவார்குழலியாகிய அம்பிகை இறைவனை அடையும் பொருட்டு கம்பா நதியில் மணலால் லிங்கம் உருவாக்கி, தவம் செய்து வழிபட்டாள்.
அப்போது இறைவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உருவாக்க, அம்பிகை பயந்து மணல் லிங்கத்தை மார்புறத் தழுவினாள் என்பது வரலாறு.
அப்போது இறைவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உருவாக்க, அம்பிகை பயந்து மணல் லிங்கத்தை மார்புறத் தழுவினாள் என்பது வரலாறு.
எனவே இன்றும் அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையார்க்கே நடைபெறுகின்றன.
மணல் லிங்கமாக எழுந்தருளியிருக்கும் திருவேகம்பப் பெருமானுக்குச்
சாந்து சாத்தித்தான் இன்னமும் வழிபாடு நடைபெறுகிறது.
மணல் லிங்கமாக எழுந்தருளியிருக்கும் திருவேகம்பப் பெருமானுக்குச்
சாந்து சாத்தித்தான் இன்னமும் வழிபாடு நடைபெறுகிறது.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார்.
பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமான் தழுவக் குழைந்தார் என்பர்.
ஆலயத்தின் பிரகாரத்தில் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்சந்நிதி இருக்கிறது.
மூலவருக்கு நிலாத் திங்கள் துண்டத்தான், சந்திர சூடப்பெருமாள் எனத் திருநாமங்கள் உண்டு.
சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை உடைய இங்கு வீற்றிருக்கும் தாயருக்கு
நேர் ஒருவரில்லா வள்ளி, நிலாத் திங்கள் துண்டத் தாயார் எனப் பெயர்கள் வழங்குகின்றன.
மூலவருக்கு நிலாத் திங்கள் துண்டத்தான், சந்திர சூடப்பெருமாள் எனத் திருநாமங்கள் உண்டு.
சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை உடைய இங்கு வீற்றிருக்கும் தாயருக்கு
நேர் ஒருவரில்லா வள்ளி, நிலாத் திங்கள் துண்டத் தாயார் எனப் பெயர்கள் வழங்குகின்றன.
பார்வதி தவத்தைச் சோதிக்க சிவபெருமான் மாமரத்தை எரித்தார்.
அண்ணன் தன் தங்கையின் பொருட்டு மாமரத்தைத் தழைக்கச் செய்தார்.
அவள் தாபத்தைத் துண்டித்தபடியால் நிலாத்திங்கள் துண்டத்தான்
என்ற பெயர் வழங்கலாயிற்று.
அண்ணன் தன் தங்கையின் பொருட்டு மாமரத்தைத் தழைக்கச் செய்தார்.
அவள் தாபத்தைத் துண்டித்தபடியால் நிலாத்திங்கள் துண்டத்தான்
என்ற பெயர் வழங்கலாயிற்று.
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார்.
அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார்.
இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம்
பாடி பெற்றதாக வரலாறு உண்டு.
அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார்.
இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம்
பாடி பெற்றதாக வரலாறு உண்டு.
நாயன்மார் மூவராலும் பட்டிணத்து சுவாமிகளாலும் பாடல் பெற்ற தலமாகும்.
பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.
அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
ஏகாம்பரேசுவரர் கோயில் மதில் அழகு என்பார்கள். கண்முன் கோயிலை நிறுத்திய உங்கள் நடை அழகு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅந்த மாமரம் மீண்டும் மனிதர்களின் ஆசையால் பட்டு போன விஷயத்தையும் சொல்லி இருக்கலாம்
ReplyDeleteஉங்கபக்கம் வந்தா நிறைய விஷய்ங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது. கூடவே அருமையான படங்களும் காணக்கிடைக்கிரது நன்றி
ReplyDeleteவழக்கம்போல அசத்தலான படங்களுடன் ஒரு அருமையான பதிவு..
ReplyDeleteநன்றி சகோ..
முதல் படத்தில் அம்பாளின் திருமாங்கல்யமும், காசு மாலையும், அபய ஹஸ்தங்களும் எவ்ளோ அழகா இருக்கு!
ReplyDeleteகோபுரங்கள், கோயிலின் குளங்கள், யானை வாகனம், நந்தி, கோயில் யானை, கொலுப்படிகள் + பொம்மைகள் முதலியன வெகு அழகாக படத்தில் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteநாங்கள் அழகா? உங்கள் தோழியின் பதிவு அழகா? என ஒளிந்து கொண்டு கேட்பதாக உள்ளது அந்த ஒரு ஜோடி பச்சைக்கிளிகள்.
ReplyDelete”நீங்கள் என்றுமே அழகு தான், ஆனால் உங்களை அடிக்கடி நான் பார்க்க முடியாதே, ஆனால் என் தோழியின் பதிவுகளை தினமும் பார்க்க முடிகிறதே! அந்தப்பதிவுகள் அனைத்துமே கிளி கொஞ்சுவதாக அல்லவா உள்ளன” என்றேன் நான்.
நீங்கள் சொல்வதும் சரிதான் என்று ஆமோதித்து கீ கீ என்று அவை கத்தியதை, கற்பனை செய்து பார்த்தேன். சந்தோஷமாகவே இருந்தது.
This comment has been removed by the author.
ReplyDeleteகடம்பவன குயில் said...
ReplyDeleteஏகாம்பரேசுவரர் கோயில் மதில் அழகு என்பார்கள். கண்முன் கோயிலை நிறுத்திய உங்கள் நடை அழகு. பகிர்வுக்கு நன்றி./
அழகான கருத்துரைக்கு நன்றி.
FOOD said...
ReplyDeleteநவராத்ரிக்கான நவரத்ன பதிவு.
நவரத்ன கருத்துரைக்கு நன்றி
suryajeeva said...
ReplyDeleteஅந்த மாமரம் மீண்டும் மனிதர்களின் ஆசையால் பட்டு போன விஷயத்தையும் சொல்லி இருக்கலாம்/
அப்படியா !,,. மீண்டும் தழைக்க பிரார்த்திப்போம்.
கருத்துரைக்கு நன்றி
Lakshmi said...
ReplyDeleteஉங்கபக்கம் வந்தா நிறைய விஷய்ங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது. கூடவே அருமையான படங்களும் காணக்கிடைக்கிரது நன்றி
அருமையான கருத்துரைக்கு நன்றி அம்மா.
This comment has been removed by the author.
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவழக்கம்போல அசத்தலான படங்களுடன் ஒரு அருமையான பதிவு..
நன்றி சகோ../
அசத்தலான கருத்துரைக்கு நன்றி
காட்டியுள்ள விக்ரஹங்கள், புறப்பாட்டு ஸ்வாமிகள்/அம்மன்கள் எல்லாமே மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
ReplyDeleteகாஞ்சீபுரத்தில் நான் பார்க்காத கோயில்களே இல்லை எனலாம். அதுவும் என் தாயாருடன் ஒவ்வொரு கோயில் ஒவ்வொரு சந்நிதி, ஒவ்வொரு குளம் என்று பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, ஒவ்வொரு வர்ருடமும் சுற்றோ சுற்றென்று சுற்றியுள்ளேன்.
கடந்த 12 வருடங்களாகத் தான் போகப்பிடிக்கவில்லை. என் தாயாரும் என்னுடன் இப்போது இல்லை. அங்கிருந்த மஹாபெரியவாளும் இப்போது அங்கில்லை.
ஆனால் இருவருமே என்னுடன் என் வீட்டில், என் மனதில், என் மூச்சில் இப்போதும் இருக்கிறார்கள். என்னை அழகாக நிம்மதியாக நல்வழியில் நடத்துகிறார்கள்.
அங்கு காஞ்சீபுரத்தில் கைலாஸநாதர் கோயில் என்ற பழைமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது, மேடம். அதில் ஒரு ஆள் மட்டும் ஊர்ந்து பல்லிபோல் நுழைந்து செல்லும் பாதையுண்டு. அதில் நானும் என் தாயாரும், என் அண்ணா ஒருவரும் நுழைந்து கைலாஸநாதரை பிரதட்சணம் செய்து வந்தோம். இப்போதுள்ள என் பாடியை வைத்துக்கொண்டு நுழைய முடியாது என்பது சர்வ நிச்சயம். அதில் புகுந்து பிரதட்சணம் செய்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்று ஐதீகம் சொல்லுகிறார்கள்.
மலரும் நினைவுகளை இன்றும் கிளறி விட்டு விட்டீர்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் அம்பாளின் திருமாங்கல்யமும், காசு மாலையும், அபய ஹஸ்தங்களும் எவ்ளோ அழகா இருக்கு!/
அழகான கருத்துரைக்கு நன்றி.ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகோபுரங்கள், கோயிலின் குளங்கள், யானை வாகனம், நந்தி, கோயில் யானை, கொலுப்படிகள் + பொம்மைகள் முதலியன வெகு அழகாக படத்தில் காட்டியுள்ளீர்கள்./
சிறப்பான கவனத்தை ஈர்த்த அருமையான கருத்துரைக்கு நன்றி.ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநாங்கள் அழகா? உங்கள் தோழியின் பதிவு அழகா? என ஒளிந்து கொண்டு கேட்பதாக உள்ளது அந்த ஒரு ஜோடி பச்சைக்கிளிகள்.
”நீங்கள் என்றுமே அழகு தான், ஆனால் உங்களை அடிக்கடி நான் பார்க்க முடியாதே, ஆனால் என் தோழியின் பதிவுகளை தினமும் பார்க்க முடிகிறதே! அந்தப்பதிவுகள் அனைத்துமே கிளி கொஞ்சுவதாக அல்லவா உள்ளன” என்றேன் நான்.
நீங்கள் சொல்வதும் சரிதான் என்று ஆமோதித்து கீ கீ என்று அவை கத்தியதை, கற்பனை செய்து பார்த்தேன். சந்தோஷமாகவே இருந்தது./
சந்தோஷமாகவே கிளிகளுடன் பேசிவிட்டீர்களா ? அருமை. நன்றி.
’நகரேஷூ காஞ்சியில் நவராத்திரி’ என்ற தலைப்பில் இன்று காட்டியுள்ள அனைத்துமே அருமையோ அருமை.
ReplyDeleteவரிக்குவரி பாராட்டத்தான் ஆசை.
முடியாமல் உள்ளது. மேலும் copy & paste வசதியும் இல்லை.
வரதாராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள முரட்டு தந்தங்களுடன் கூடிய மிகவும் கம்பீரமான யானையையும், அங்குள்ள சிறப்பு வாய்ந்த தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லிகளையும் காட்டியிருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டேன்.
பரவாயில்லை. நவராத்திரிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை தான். பிறகு தனிப்பதிவாகவே தரலாம் என்பது தங்கள் சித்தமாக இருக்கலாம்.
பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள்,
நன்றிகள்.
பிரியமுள்ள vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகாட்டியுள்ள விக்ரஹங்கள், புறப்பாட்டு ஸ்வாமிகள்/அம்மன்கள் எல்லாமே மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
காஞ்சீபுரத்தில் நான் பார்க்காத கோயில்களே இல்லை எனலாம்.......//
அருமையான மலரும் நினைவுகள் பகிர்வு ..சிறப்பாய் அற்புதமாய் ரசித்து அளித்த அத்தனைக் கருத்துரகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
இயற்க்கை இரம்யம் சிறப்பான பதிவு பாராட்டுகள்
ReplyDeleteநல்ல பகிர்வு. படங்களுடன் அற்புதமாக உள்ளது.
ReplyDeleteசிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வு.
ReplyDeleteஒருதடவை நேரடியாக தர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் தர்சித்ததில் மகிழ்ச்சி.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
காஞ்சி காமட்சியின் தரிசனம்
ReplyDeleteமிக மிக அற்புதம்
படங்களும் விளக்கமும் அதி அற்புதம்
தொடர வாழ்த்துக்கள்
இனிய நவாராத்திரி தின நல் வாழ்த்துக்கள்
நல்ல நவராத்திரிப் பதிவு சகோதரி. படங்களும் நன்கு அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www, kovaikkavi.wordpress.com
ஒன்றரை மணி நேரத் தொலைவில் இருக்கும் காஞ்சிக்குப் போய் ஆண்டுகள் ஆகி விட்டன.நீங்கள் அழைத்துச் சென்றதற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான
ReplyDeleteபடங்களுடன்
அசத்தலான
பதிவு...
நேரில் பார்க்கும்போது தெரியாத அழகு புகைப்படங்களில் பார்க்கிறேன்.தகவல்கள் அருமை.
ReplyDeleteமேடம்.. காஞ்சீபுரம் உலா பக்த்திபூர்வமாய் செய்திருக்கிறீர்கள்.. படங்களும் விவரங்களும் அற்புதம். அந்த காமாட்சி உங்களுக்கு அனைத்தும் அருளட்டும்.
ReplyDeleteஎத்தனை படங்கள் என்னென்ன தகவல்கள் பெயருக்கான காரணங்கள் என்று பலப்பல அரிய செய்திகள்! பாராட்டுக்கள்
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை. விவரங்களுக்கு நன்றி. கோபுரப் படத்தில் கிளிகள்...அழகு. நந்திதேவர் கம்பீரம். வழக்கம் போல படங்கள் அருமையோ அருமை.
ReplyDeleteஎன் சிறுவயது ஞாகங்களைக் கொண்டுவந்தது. நன்றிகள்.
ReplyDelete;)
ReplyDeleteஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வராநநே!!
1117+6+1=1124 ;)))))
ReplyDeleteபின்னூட்டங்கள் + நிறைய பதில்கள் மனநிறைவாக உள்ளன. மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றிகள்.
ஏனோ இப்போது இதைத் தொடர்வதில் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
அவசரமாக அவசியமாக கொஞ்சம் ஆறுதல் வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
காஞ்சி காமாக்ஷி தாயே .... அருள்வாய் .... நீயே !