அனைத்து அவதிகளையும் அகற்றும் இரட்டை ஆஞ்சனேயர்!
ராமாயண காலத்தில் பாலம் கட்ட உதவிய வானரங்கள்போல, இந்த மூங்கில் பாலம் கட்ட உதவிய இரண்டு மனிதக் குரங்குகளை அப்பகுதி மக்கள் ஆஞ்சனேயராகவே நினைத்தனர்.
பல ஆண்டுகளுக்குமுன் செம்பனார் கோவிலுக்கு மேற்கே உள்ள ஆறுபாதி என்ற கிராமத்தில், ஒரு ஆலமரத்தின் கீழ் இரண்டு மனிதக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. செம்பனார் கோவிலுக்கும் மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் எப்போதும் நீர் வற்றாமல் ஓடியதால், அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்த ஆற்றில் இறங்கியே அக்கரைக்குச் சென்று வந்தனர். அதிக வெள்ளம் வந்த காலங்களில் அக்கரைக்குப் போக முடியாத நிலையும் இருந்தது.
மேலப்பாதியில் வாழ்ந்த பெருநிலக் கிழார்கள், ஆறுபாதியில்
ஆலமரத்தடியில் இருந்து வந்த அந்த இரண்டு மனிதக் குரங்குகளின் உதவியுடன் மேலப்பாதி- செம்பனார் கோவிலை இணைத்து மூங்கில் பாலம் ஒன்றை அமைத்தனர்.
மூங்கில் பாலம் கட்டியதால் சோர்வடைந்திருந்த அந்த மனிதக் குரங்குகள் அருகே இருந்த காட்டுத் திடலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தன. சில மணி நேரம் கழித்துப் பார்த்தபோது அவை அந்த இடத்தில் இல்லை. எப்படியோ மாயமாக மறைந்து விட்டன.
உள்ளூர் மக்கள் உதவியுடன் மேலப்பாதியில் அந்தக் குரங்குகள் நினைவாகக் கோவில் கட்டப்பட்டு இரட்டை ஆஞ்சனேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
இந்த ஆஞ்சனேயர்கள் வேண்டுவோருக்கு வேண்டிய எல்லா நற்பலன்களையும் தரக்கூடியவர்கள். நோய், வறுமையைப் போக்கக் கூடியவர்கள்.
திருமணமாகாதவர்கள் இக்கோவிலின் தென்கரையில் ஓடும் பொன்னி நதியில் நீராடி, இக்கோவிலுக்கு வந்து இரட்டை ஆஞ்சனேயர் சந்நிதிமுன் அமர்ந்து தியானம் செய்து வேண்டினால், ஓர் ஆண்டுக்குள் திருமணம் நடக்கும்.
திருமணம் முடித்தவர்கள் கணவனும் மனைவி யுமாக இக்கோவிலுக்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடனைச் செலுத்துவர். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமானோர் வந்து இந்த இரட்டை ஆஞ்சனேயரைத் தரிசித்து பலன் பெறுகின் றனர்.
சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சனேயர்களுக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, பழமாலை சாற்றப்படுகிறது. அமாவாசை நாட்களில் வெண்ணெய்க் காப்பு சாற்றப்படுகிறது. பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.
இக்கோவில் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலுக்கு வடக்கே, மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது. இந்த மேலப்பாதிக்கு புதன் ஸ்தலமான திருவெண்காட்டிலிருந்தும், கேது ஸ்தலமான கீழ்ப்பெரும்பள்ளத்திலிருந்தும் செல்லலாம்.
தற்போதுகூட அந்த மனிதக் குரங்குகள் தங்கியிருந்த ஆலமரத்தை இரட்டைக் குரங்கு ஆலமரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்த மூங்கில் பாலம் தற்போது இல்லை.
I think they're great!
மனித இனத்தின் முன்னோர்கள் எனச் சொல்லப்படும்
ReplyDeleteகுரங்கினம் ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால்,
நமது இனத்தை விட "அன்பு சார் வழியைப்" பின்பற்றி இருப்பது
உங்கள் பதிவில் இருந்து புலப்படுகிறது.
இன்று நான் முதன்முதலில் பார்த்தது உங்கள் பதிவு.
அது என்னவோ சனிக்கிழமைகள் அன்று என் கண்களில் முதன் முதலாக
காட்சி அளிப்பவர் அனுமன் தான்.
துஷ்டக்ருஹ வி நாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹே என்பர்.
தீய க்ருஹங்களின் தொந்தரவு நீங்க அனுமனின் அருள் எல்லோரும்
பெற ஸ்ரீ ராமபக்த ஹனுமனை துதியுங்கள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
படங்களுடன் பல அரிய விஷயங்களை தாங்கி நிற்கிறது உங்கள் பதிவு நன்றி!
ReplyDeleteஆஞ்சனேயர் பற்றிய பகிர்விற்கு நன்றி. புகைப்படங்கள் கூடுதல் கதை சொல்கின்றன.
ReplyDeleteபுது விடயங்களை அறிந்து கொண்டேன் ..
ReplyDeleteமிக்க நன்றிங்க மேடம் ..
படம் அருமை ..
எப்படித்தான் புது புது விஷயங்களாக தேடிப்பிடித்து பதிவு போடுரீங்களோ? பொருத்தமா படங்களும் அமையுது
ReplyDeleteபுது விஷயம் படங்கள் சூப்பர்
ReplyDeleteமுதல் படத்தில் உள்ள சஞ்சீவி மலையை இடது கையால் தூக்கிக்கொண்டு வலது கையில் க(Gha)தையுடன் கூடிய ஹனுமார் வெற்றியின் சின்னமாக பார்க்கவே பரவசமாக காட்சியளிப்பது எனக்கு மிகவும் பிடித்த படம்.
ReplyDeleteஇதையும் நான், என் சிறிய வயதில் மிகப்பெரிய படமாக அழகாக வரைந்து, கலர் கொடுத்து, மிகவும் ஆசைப்பட்டு கேட்ட பெரியவர் ஒருவருக்குக் கொடுத்து விட்டேன். அவர் இப்போது இந்த ஊரில் இல்லை. படமும் பத்திரமாக வைத்திருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
இதைப்பார்த்ததும் எனக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.
ஆறாவது படத்தில் உள்ள இரட்டைக் குரங்குகள் அருமை. வாலை வைத்துக் கொண்டு சும்மா இருக்கா பாருங்க! வம்பும், குறும்பும் ஜாஸ்தியாக உள்ளது. இடதுபுறக் குரங்கு திரும்பித்திரும்பி பாவம் கழுத்தே சுளுக்கிவிடும் போல உள்ளது.
ReplyDeleteமந்திக்குரங்குகள் தண்ணீரோ வெந்நீரோ சுடுதா என்று பரிசோதிக்க குட்டிக்குரங்குகளின் வாலை தண்ணீரில் முதலில் நுழைத்துப் பார்க்குமாம். அதுபோலத் தான் இதுவும் உள்ளது.
தலைகீழாகத் தொங்கும் குரங்குகளும் நல்லா நகைச்சுவையா இருக்கு. ஏற்கனவே ஒரு முறை கூட வெளியிட்டிருந்தீர்கள். ஞாபகம் உள்ளது.
ReplyDelete’வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்’ பாட்டு ஞாபகம் வந்தது, அந்த டமாரம் அடிக்கும் இரண்டு குரங்குகளையும் பார்க்கும் போது.
சின்னக்குழந்தையாய் இருந்த போது என் பேரன் பேத்தி இருவருக்கும் தினமும் ஒரு முறை இந்தப்பாட்டையும் அதற்கான கதையையும் நான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி அதிக சுவையாக சொல்வதுண்டு.
அந்த ஞாபகம் தான் வந்தது, இதைப் பார்த்ததும்.
நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு left right என குதியாட்டம் போடும் 4-5 கருங்குரங்குகள், நாலு கயிற்றினிலே ஏறி இரங்கும் நாலு கலர்/குட்டிக்குரங்குகள் குதூகுலப்படுத்துகின்றன.
ReplyDeleteஒரு கருங்குரங்குக்குட்டி, மற்றொன்றை குளத்தில் பிடித்துத்தள்ளிவிட, தாய்க்குரங்கு இரண்டையும் ஒரே அள்ளாக அள்ளிச்செல்வது அருமையோ அருமை. தாய்ப்பாசம் என்பது எல்லா உயிரினங்களிலும் இபபடி அழகாகக் காணப்படுவது இயற்கையின் அழகல்லவோ!!
அடுத்த படத்தில் முகம்பார்க்கும் கண்ணாடியோ, புது எவர்சில்வர் தட்டோ, எப்படி தன் அழகைத் தானே கண்டு கண்டு மகிழ்கிறது பாருங்களேன்.
அடுத்தபடம் பாவம் அந்த குரங்காட்டி. அடடா, அந்தக்குரங்கு அவன் மண்டையைப்பிளந்து விட்டுத்தான் மறுகார்யம் பார்க்கும் போலிருக்கிறதே!!
அடுத்தப்படத்தில் காலைப்பிடித்து கெஞ்சுவது போல வாலைப்பிடித்து கொஞ்சுகிறதோ!
சொரிவது போலவே மிகவேகமாக பிடில் வாசிக்கிறாரோ!
கோழிக்குஞ்சின் தலையைத் தட்டிப்பார்க்கும் பூனையாரும் ஜோர் ஜோர். தேங்காய் வாங்கும் முன் தட்டிப்பார்ப்பார்களே, அது போலவா!
அல்லது நிஜமாவே கோழிக்குஞ்சின் மேல் பூனைக்கு அன்பு தானோ!
இரண்டும் எதிரியல்லவோ!!
அம்பால் முதுகுக்கு அழுத்தம் கொடுத்து, கண்ணடிக்கும், கடைசி பட வெள்ளை அனுமார் என்ன சொல்கிறாரோ?
குரங்குகளைக்கூட அழகுடன் வெளியிட உங்களால் மட்டுமே முடியும்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
வாலால் வம்பிக்கிழுக்கும் அந்தக் குரங்கை எனக்கு ரொம்பப் பிடித்தது!
ReplyDeleteபதிவு - படங்கள் - பகிர்வுக்கு நன்றி!
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துக்கள்.
sury said...
ReplyDeleteமனித இனத்தின் முன்னோர்கள் எனச் சொல்லப்படும்
குரங்கினம் ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால்,
நமது இனத்தை விட "அன்பு சார் வழியைப்" பின்பற்றி இருப்பது
உங்கள் பதிவில் இருந்து புலப்படுகிறது........//
அருமையான தகவலுடன் அற்புதமான ஆத்மார்த்தமான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
விக்கியுலகம் said...
ReplyDeleteபடங்களுடன் பல அரிய விஷயங்களை தாங்கி நிற்கிறது உங்கள் பதிவு நன்றி!/
அரிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
சாகம்பரி said...
ReplyDeleteஆஞ்சனேயர் பற்றிய பகிர்விற்கு நன்றி. புகைப்படங்கள் கூடுதல் கதை சொல்கின்றன.
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
அரசன் said...
ReplyDeleteபுது விடயங்களை அறிந்து கொண்டேன் ..
மிக்க நன்றிங்க மேடம் ..
படம் அருமை ./
அரசனின் அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
Lakshmi said...
ReplyDeleteஎப்படித்தான் புது புது விஷயங்களாக தேடிப்பிடித்து பதிவு போடுரீங்களோ? பொருத்தமா படங்களும் அமையுது/
பொருத்தமான அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
வைரை சதிஷ் said...
ReplyDeleteபுது விஷயம் படங்கள் சூப்பர்/
சூப்பர் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் உள்ள சஞ்சீவி மலையை இடது கையால் தூக்கிக்கொண்டு வலது கையில் க(Gha)தையுடன் கூடிய ஹனுமார் வெற்றியின் சின்னமாக பார்க்கவே பரவசமாக காட்சியளிப்பது எனக்கு மிகவும் பிடித்த படம். ......//
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என மல்ரும் நினைவுகளோடு அருமையான ஆத்மார்த்தமான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஆறாவது படத்தில் உள்ள இரட்டைக் குரங்குகள் அருமை. வாலை வைத்துக் கொண்டு சும்மா இருக்கா பாருங்க! வம்பும், குறும்பும் ஜாஸ்தியாக உள்ளது. இடதுபுறக் குரங்கு திரும்பித்திரும்பி பாவம் கழுத்தே சுளுக்கிவிடும் போல உள்ளது.
மந்திக்குரங்குகள் தண்ணீரோ வெந்நீரோ சுடுதா என்று பரிசோதிக்க குட்டிக்குரங்குகளின் வாலை தண்ணீரில் முதலில் நுழைத்துப் பார்க்குமாம். அதுபோலத் தான் இதுவும் உள்ளது./
அருமையாய் ரசித்து அளித்த கடுத்துரைகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. நன்றி ஐயா.
அன்புச் சகோதரி
ReplyDeleteஉங்ஙளை எவ்வளவு பாராட்டி
னாலும்தகும்
படங்கள் காட்டும் வித்தைகள்
அட்டா!அருமை அருமை!
வேங்கடவன் அருளால் நீங்கள்
வாழ்க வாழ்க எனவாழ்த்துகிறேன்
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதலைகீழாகத் தொங்கும் குரங்குகளும் நல்லா நகைச்சுவையா இருக்கு. ஏற்கனவே ஒரு முறை கூட வெளியிட்டிருந்தீர்கள். ஞாபகம் உள்ளது.
’வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்’ பாட்டு ஞாபகம் வந்தது, அந்த டமாரம் அடிக்கும் இரண்டு குரங்குகளையும் பார்க்கும் போது.
சின்னக்குழந்தையாய் இருந்த போது என் பேரன் பேத்தி இருவருக்கும் தினமும் ஒரு முறை இந்தப்பாட்டையும் அதற்கான கதையையும் நான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி அதிக சுவையாக சொல்வதுண்டு.
அந்த ஞாபகம் தான் வந்தது, இதைப் பார்த்ததும்./
ஆஹா அருமையாய் சுவையாய் கதை கூற அற்புதமான தாத்தா கிடைத்த பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநின்ற இடத்திலேயே நின்றுகொண்டு left right என குதியாட்டம் போடும் 4-5 கருங்குரங்குகள், நாலு கயிற்றினிலே ஏறி இரங்கும் நாலு கலர்/குட்டிக்குரங்குகள் குதூகுலப்படுத்துகின்றன.....//
குதூகலாய் ரசித்து அளித்த கருத்துரைகள் பதிவுக்கு பெருமை சேர்க்கின்றன. மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
middleclassmadhavi said...
ReplyDeleteவாலால் வம்பிக்கிழுக்கும் அந்தக் குரங்கை எனக்கு ரொம்பப் பிடித்தது!
பதிவு - படங்கள் - பகிர்வுக்கு நன்றி!/
நன்றிங்க. அழகாய் கருத்துரை வழங்கியமைக்கு.
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துக்கள்./
அற்புதமான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஅன்புச் சகோதரி
உங்ஙளை எவ்வளவு பாராட்டி
னாலும்தகும்
படங்கள் காட்டும் வித்தைகள்
அட்டா!அருமை அருமை!
வேங்கடவன் அருளால் நீங்கள்
வாழ்க வாழ்க எனவாழ்த்துகிறேன்
புலவர் சா இராமாநுசம்/
ஆஹா. கருணை மிகுந்த இராமநுசர் வேங்கடவனை அருள வேண்டி வாழ்த்திய அருமையான வாழ்த்துக்கு மனம்நிறைந்த நன்றிகள்>
பதிவு + படங்கள் = அருமை
ReplyDeleteஅருமையான படங்களுடன் ஆஞ்சநேயரின் அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteநன்றியுட்ன
சம்பத்குமார்
படங்களும் ரசிக்கும் படியாக
ReplyDeleteபதிவும் பல அரிய விஷயங்களைத்தாண்டி
மிக அருமையாகத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
I dont know how to appreciate you.
ReplyDeleteReally a fine post.'
I enjoyed the m
little monkey fallingdown and mothers love to protect the little monket.
Really a very touching animation.
All the pictures are really specking a lot.
Thanks Rajeswari for the post.
viji
படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteஇரண்டிரண்டு படங்கள் அருமை மேடம்
ReplyDeleteரசித்தேன்
அஞ்சிலே ஒன்று பெற்றவனின் அருள் இப்பதிவைப் படித்தவர்க்கெல்லாம் கிடைக்கட்டும்.
ReplyDeleteபடங்களில் கலக்குகிறீர்கள்,சூப்பர்.
ReplyDeleteமனோஜபம் மாருத துல்யவேகம்
ReplyDeleteஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம்
வாதாத்மஜம் வானர தூத முக்யம்
ஸ்ரீராம தூதம் சரணம் ப்ரபத்யே....
முதல்லயே இரட்டை அனுமன் தரிசனம்
அதன்பின் வெல்கம் அழகிய க்ளிட்டரில்...
அதன்பின் க்யூட் மனித குரங்குகளின் உதவியால் கட்டிய மூங்கில் பாலம் பற்றிய கட்டுரை பகிர்வு....
உதவிய களைப்பில் இரண்டும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்க திரும்ப போய் பார்த்தபோது மாயமாகி இருக்கின்றன.. இறைவனின் கட்டளை முடித்தப்பின் இங்கே இருக்க அனுமதி இல்லையோ என்னவோ...
இன்றும் மக்கள் வழிபடுவதும் வேண்டுவதும் எல்லாமே நிறைவேறுவதை படிக்க மனம் நிறைகிறது...
அதன்பின் சியரப் என்று சொல்லி குரங்குகளின் க்யூட் அட்டகாசங்கள்...
ஒரு குட்டி இன்னொரு குட்டியை தள்ளிவிட நீரில் உடனே பெரிய குரங்குகள் ஓடி வந்து அப்படியே காத்து அணைத்து செல்வதை பார்க்கும்போது உள்ளத்து அன்பை குரங்குகளிடமிருந்து நாம் கற்கவேண்டும் போலிருக்கிறது...
க்யூட்டாக திரும்பி விருட்டுனு பார்க்குது கண்சிமிட்டி வாலை ஆட்டி...
ஒன்னு ட்ரம்ஸ் அடிக்குது, ஒன்னு கிடார் வாசிக்குது.. நீரில் இருந்து ஹையா ஜம்ப் செய்யுது....
அடேங்கப்பா...வரிசையா கயிறு பிடித்து ஏறும் லாவகம்...
பிசாசுத்தனமா உருட்டைக்கட்டை வெச்சு ஆளின் மண்டையில் போடும் வரை அத்தனை படமும் அசத்தல்பா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
படங்களுடன் கூடிய அற்புதமான ஹனுமான் படைப்பு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteREVISED Comment:
ReplyDelete1148+5+1=1154 ;)))))
அனைத்தையும் ரஸித்து அனைத்துக்கும் பொறுமையாகவும் அருமையாகவும் பதில் அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
சந்தோஷம். நன்றிகள்.