Wednesday, October 26, 2011

சீதா கல்யாண வைபோகமே !



Deepavali Greetings
Deepavali Nal Vazhthukal!


சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!


சீதா கல்யானத்திற்குப் பிறகு ராமரும் சீதையும் தலைதீபாவளியை எங்கே கொண்டாடினார்கள்?
SeethaKalyanam
சீதையின் தாய் நாடான மிதிலையிலா?
புகுந்த நாடான அயோத்தியிலா?

ராமாவதாரத்தின் போது தீபாவளி கொண்டாடும் வழக்கமே வரவில்லையே..

பத்துமாதம் சிறையிருந்த சீதையின் ஏற்றத்தை கண்ணுற்று தானும் சிறையிலிருந்த தேவகியின் கர்ப்பத்தில் பத்துமாதம் சிறைப்பட்டு அவதரித்த கிருஷ்ணாவதாரத்தின் போதுதானே தாய் சத்யபாமாவின் துணையோடு மகன் நரகாசுரனை வதைத்து அந்த நாள் தீபாவளி கொண்டாட்டமாக வரம் பெறப்பட்டது! 
யத்ர யத்ர ரகு​நாத கீர்த்​த​னம் 
தத்ர தத்ர கிரு​தம் ஹஸ்த காஞ்ச​லிம்
 பாஷ்​ப​வாரி பரி​பூர்ண லோச​னம்
​ மாரு​திம் நமத ராஷ​ஸôந்​த​கம்'

எங்​கெல்​லாம் ராம நாமம் ஜபிக்​கப்​ப​டு​கி​றதோ அங்​கெல்​லாம் இருந்து கொண்டு நாம கீர்த்​த​னத்​தைக் கேட்​கும் சுகத்​தில் திளைப்​ப​வர் ஆஞ்​ச​நே​யர்.

சூரிய பகவானின் சஞ்சாரத்தை பின்பற்றியே ஓடிக் கொண்டு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை கற்ற பேரறிவாளன் 
ஸ்ரீ இராம பக்த ஹனுமான்.

அனுமன் சர்வ தேவதைகளின் வடிவம். எல்லா தேவதைகளும் அவருள் அடக்கம். 

இராம நாம மகிமையினையும் தூய பக்தி மற்றும் ஞானத்தையும், உயர்ந்த பக்தி நெறி நின்ற வாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமானே அனுமனாக அவதரித்தார்.

வாயு புதரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்றவன், நித்திய பிரம்மச்சாரி மாருதி.

அண்ணனால் விரட்டப்பட்ட சுக்ரீவனையும் சீதா தேவியை பிரிந்து அன்னையை தேடி வந்த இராமரையும் நண்பர்களாக்கியவன் சொல்லின் செல்வன் அனுமன்.

தென்னிலங்கை சென்று தேவியைக் கண்டு கணையாழி கொடுத்து மாதாவின் துயர் தீர்த்து சூடாமணி பெற்று வந்த வீர தீரன் ஹனுமந்தன்
Jai hanuman
இலக்குவன் மயங்கிக் கிடந்த போது சஞ்சிவி கொணர்ந்து 
அண்ணல் துயர் தீர்த்தவன் சங்கடஹரன்.

யுத்த களத்தில் இராம லக்ஷ்மண்ருடன் தோளோடு தோள் 
சேர்ந்து போரிட்டு வெற்றி பெற செய்தவன் அனுமன்.

இராம தூதனாக சென்று இராவணனுக்கு அறம் உரைத்து , கற்பரசி சீதையை கவர்ந்து வந்த பாபத்திற்காக குலமெல்லாம் பூண்டுடனே கரியுமென சாபமிட்டவன் ஆஞ்சனேயன்.

இலங்கைதனை தன் வாலிலிட்ட தீயால எரித்து அழித்தவன் பஜ்ரங்கபலி.
அரக்கன் அனுமன் வாலுக்குத்தான் தீவைத்தான்
அனுமன் தீவைத்தான் இலங்கைத் தீவைத்தான்

 காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு
கஷ்டங்களை போக்கடிக்கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன்.

பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி காலமெல்லாம் பரந்தாமானருளால் பரமபதமளிப்பவன் கதைதனைக் கையில் கொண்து கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான்.
Hanuman
பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர் ஆஞ்சநேயர் ... 

புத்திர பாசத்தினால் வாயுவையும், 
ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியதால் ஆகாயம், சமுத்திரம் இரண்டையும், 
பூமியைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன் பூமாதேவியின் மடியில் அவதரித்த சீதாதேவியின் பூரண அருள் பெற்றதால் பூமியையும் வசப்படுத்தியவர் இவர். 

இராவணனின் ஆணைப்படி இவர் வாலில் வைக்கப்பட்ட நெருப்பினால் இலங்கையையே அழித்தவர்.

 நெருப்பும் இவர் வசமானது. இதனால் 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' என்கிறார் கம்பர். 


பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனுமனின் பெயர் கேட்ட மாத்திரத்தித்திலேயே நடு நடுங்கி ஒழிந்து போகும்.
கோரிய வரங்களை தடையின்றி தந்தருளும் அனுமன் 
எல்லா மதத்தவர்களாலும் வழிபடப்படுகின்ற ஒரு தெய்வம். 

அவரை வழிபடுவதால் எல்லாப் பிணிகளும் நீங்கி 
வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஐயமில்லை. 

“புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுடன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை வழிபடுவோருக்கு அமையும்
[namakkalanjaneyar.jpg]
பஞ்ச பூதங்களை மட்டுமன்றி பஞ்சேந்திரியங்களையும் வசப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 

ஓயாமல் எப்போதும் சலனப்படும் தன்மை கொண்டது வானர இனம். 

இதில் தோன்றியவரான அனுமன் தன் இயல்பிலிருந்து மாறி இயற்கை இடையூறுகளை வென்றதுடன் ஓயாமல் பக்தி பூண்டதால் இவரை ஜிதேந்திரியன் என்றும் குறிப்பிடுவர்.
தாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன் அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் - சுந்தரன் ஆனான்! 
அதனால் தான் சுந்தரகாண்டம் வந்தது.


அனு​மான் சிரஞ்​சீ​வி​யாய் ​(மர​ண​மற்​ற​வ​ராய்)​ இருந்து கொண்டு நமக்​கெல்​லாம் ராம நாமத்​தின் மீது ருசியை உண்​டாக்கி,​ தானும் மகிழ்ந்து நமக்​கும் அருள் புரிந்து வரு​கி​றார்.

பக்த ஆஞ்சநேயர், வஜ்ர கவசம், உடுப்பி

அனுமன் பெற்ற அற்புத வரங்கள்!


அனுமன் சீதை சந்திப்பு

விழுதல்,விம்முதல்,மெய் உற வெதும்புதல், வெருவல்,  எழுதல்,ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித்
 தொழுதல்,சோருதல்,துவங்குதல்,துயர் உழந்து உயிர்த்தல்,
 அழுதல்,அன்றிமற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்"

 தணலில் சுருண்டு கிடந்த பூங்கொடி,தழைக்கும் வண்ணம்

மிருதுவான குரலில். தசரதகுமாரன் ஆன ராமன், மிகச் சிறந்த வில்லாளி, மனிதர்களில் உத்தமர், தர்மத்தின் காவலர், என ஆரம்பித்து, மிகச் சுருக்கமாய் ராமன் பட்டாபிஷேகம் தடைப்பட்டு,  ராமன் வனம் வர நேரிட்ட கதையையும், பின்னர் சீதை அபகரிக்கப் பட்டு, தற்சமயம் சீதையைத் தேடி வருவதையும், அதன் காரணமாகவே தான் கடல் தாண்டியதையும் சொல்லி முடித்தார்.

சீதைக்குத் தாள முடியாத வியப்பு.
உடனேயே அங்கிருந்து கீழே இறங்கிய அனுமன் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு சீதைக்கு வணக்கம் தெரிவித்து வணங்கி நின்று,

"குற்றமற்ற பெண்மணியே, நீ யார்? ராவணனால் கடத்தி வரப்பட்ட ராமனின் மனைவி சீதை நீதானா? எனில் அதை என்னிடம் சொல்லு! உனக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகட்டும்" எனச் சொல்கின்றார்.

சீதை மனம் மகிழ்ச்சி அடைந்து, "தசரதன் மருமகளும், ஜனகனின் மகளும், ராமனின் மனைவியும் ஆன சீதை நான் தான்." என்றுசொல்லிவிட்டு, அயோத்தியை நீங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளையும், தான் கடத்தி வரப்பட்டதையும் சொல்கின்றாள். 



அனுமன் மனம் மகிழ்ந்து, நெகிழ்வுடன், "ராமசாமியின் தூதனாய்த் தான் நான் வந்திருக்கின்றேன். ராமன் நலமே. உங்களைப் பற்றிய கவலையன்றி வேறே ஒரு கஷ்டமும் இல்லை அவருக்கு. லட்சுமணனும் நலமே. உங்கள் கஷ்டத்தின் போது காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தமே அவருக்கு." என்று சொல்லி

இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் அமிர்த கணையாழி!
அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி!  ஆழ ஆழி!
 சுயம்வரத்தின்போது அத்துணை தேச மனனர்களும் வெண்ணிலா மண்ணிலா என சீதையின் அழகில் சொக்கிப்போய் செயலற்றிருக்க அண்ணலும் நோக்கி அவளும் நோக்க கற்பினுக்கு அரசினை,பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை"   அணிவித்த முதல் ஸ்பரிசம் பெற்ற பரிசல்லவா அந்தக்கணையாழி!

அன்னையை கண்ட ஆனந்தத்தில் ஆஞ்சநேயன்...தற்கொலைக்கு முயன்று அன்னை தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...அசோக மரத்தடியில், 
அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...

அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...
இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!

தன் மனம் என்னும் மேடையில், சீதையும் ராமனையும் ஏற்றி,
 பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா
 அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
 அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
 அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
 இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
 அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

.
இராமனது கணையாழியைக் கண்ட சீதை இராமனையே நேரிற் கண்டதாக எண்ணி மகிழ்ந்தாள். அனுமனைப் பலவாறு புகழ்ந்து போற்றினாள்.

அனுமன் இராமனுக்குக் காட்ட அடையாளம் எதுவேனும் தந்து தன்னை அனுப்பும்படி வேண்டினான்.

உடனே சீதை தன் ஆடையின் ஒரு மூலையில் முடித்து வைத்திருந்த தலையுச்சியில் சூடும் ஆபரணமான சூடாமணியை எடுத்து அனுமன் கையில் கொடுத்து "என்னை இராமனோடு சேர்த்துவைத்து என் துயரைத்துடைக்கும் பொறுப்பினை உன்னிடமே ஒப்புவிக்கிறேன், உன்னை நம்பி இனி உயிர் வாழ்வேன். உன் பணி வெல்க" என்று வாழ்த்தினாள்.

வந்த காரியம் வெற்றியாக முடிந்தது பற்றி அனுமன் மகிழ்ந்தான்.

எல்லையற்ற உலகங்களையும் தன் சொல்லினால் சுடும் ஆற்றல் பெற்ற அருந்தவச்செல்வி -தன் நாயன் பெயருக்கு இழுக்கு நேரக்கூடாது என்ற ஒரேகாரணத்திற்காக துன்பங்களைத் தாங்கி தவக்கனலால் கண்ணீரில் ந்னையும் ஆடை உலரும் வண்ணம் சகித்துக்கொண்ட கற்பின் கனலி.
விருந்து கண்டபோது எண்ணுறுமோ ராமனின் நெஞ்சம் என்று விம்மும் மனது...!

ராவணன் ஒரு வருடமே வைத்திருந்த கெடுவும் இப்போது முடியப் போகின்றது.

ராமன் விரைந்துசெயல்படவில்லை எனில் அதற்குள் என் உயிர் பிரிந்துவிடும் என ராமனிடம் நீஎடுத்துச் சொல்வாய்.

விபீஷணன், ராவணனின் தம்பி, என்னை ராமனிடம் திரும்பச் சேர்க்குமாறு பலமுறை எடுத்துச் சொல்லியும் ராவணன் மறுத்துவிட்டான். 
மேலும் ஓர்கற்றறிந்த நன்னடத்தை பொருந்திய அரக்கன் ஆன "அவிந்த்யன்" என்பவனும்ராவணனுக்கு எடுத்துச் சொன்னான்.
ராவணன் அவனையும் மதிக்கவில்லை."

என்று சொல்லவே, அனுமன்அவளைத் தன் தோளில் அமரச் சொல்லிவிட்டுத் தான் தூக்கிச் சென்று கடலைக் கடந்துராமனிடம் சேர்ப்பிப்பதாயும் தன்னை நம்புமாறும் கூறுகின்றான். 

தன்னுடையவேகத்துக்கு ஈடு கொடுத்துத் தன்னைத் தொடர்ந்து வரக் கூடியவன் இந்த இலங்கையில்இல்லை எனவும் சொல்கின்றான்.

அதைக் கேட்ட சீதை, மகிழ்ச்சி அளிக்கக் கூடியவார்த்தைகளையே சொல்லும் அனுமனின் இத்தனை சிறிய உருவைப் பார்த்து சந்தேகம்கொண்டு கேட்கின்றாள்."இத்தனை சிறிய உருப்படைத்த நீ எவ்வாறு கடலைக் கடப்பாய்,அதுவும் என்னையும் சுமந்து கொண்டு?" என்று கேட்கின்றாள்
 உடனேயே அனுமனின் விஸ்வரூபம் காண நேரிடுகின்றது அவளுக்கு.

நினைத்தபோது, நினைத்தவடிவைத் தான் எடுக்க முடியும் என சீதைக்குக் காட்ட வேண்டி, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் வளர்ந்து நிற்கின்றார் ஆஞ்சநேயர்,

வானர வீரன், வாயுகுமாரன், மங்களங்களை அள்ளித் தரும் சுந்தரன். மேலும், மேலும், மேலும் வளர்ந்து கொண்டே போகும் அந்த அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியக்கின்றாள் வைதேஹி.
அனுமன் சொல்கின்றான். "அம்மையே, உங்களை மட்டுமல்ல, இந்த நகரையும், நகரோடு உள்ள மக்களையும், ராவணனையும், அனைவரையும் சுமக்கக் கூடிய வல்லமை படைத்தவனே நான். ஆகவே தாங்கள் தயங்க வேண்டாம். உடனே என்னுடன் வருவீர்களாக.' என்று கூப்பிடுகின்றான். 


அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியந்த ஜானகி, "அப்பா, இப்போது நன்கு புரிகின்றது. ஒரு சாதாரண வானரன் எவ்வாறு கடல் தாண்ட முடியும் என நான் நினைத்தது, தவறு என்று தெரிந்து கொண்டேன். ஆனால், காற்றை விடக் கடினமாயும், வேகமாயும் பறக்கும் உன்னுடைய வேகத்தை என்னால் தாங்க முடியுமா?

வழியில் அரக்கர்கள் பின் தொடர்ந்தால், என்னையும் சுமந்துகொண்டு அவர்களோடு நீ எவ்விதம் சண்டை போடுவாய்?

உன் முதுகிலிருந்து நான் நழுவி விழுந்தாலும் விழலாம்,

அல்லது அரக்கர்கள் ஜெயித்தால் என்னைக் கொன்றாலும் கொல்லலாம்.

இப்படி எல்லாம் நடந்தால் உன்னுடைய முயற்சி வீணாகிவிடுமே? மேலும் ராமனின் பெருமைக்கும் இது களங்கம் அல்லவோ?

அதுவும் தவிர, வேறொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றதே,
ராமனைத் தவிர, வேறு யாரையும் நான் தீண்ட மாட்டேன்.

அப்படி எனில் ராவணனோடு வந்தது எப்படி என்கின்றாயா? அது பலவந்தமாய் அவன் இழுத்துக் கொண்டு வந்ததால், நான் வேறு வழி அறியாமல் இருந்துவிட்டேன்.

இப்போது நான் உன் முதுகில் ஏறிக் கொண்டு எவ்வாறு வருவேன்,அறிந்தே வரமுடியாது. 

ராமன் இங்கே வந்து அரக்கர்களோடு சண்டையிட்டுவிட்டு, அவர்களைத் தோற்கடித்து, ராவணனையும் வென்று என்னை அழைத்துச் செல்வதே சிறப்பானது, அவருக்கும், எனக்கும்.

ஆகவே அவரிடம் சென்று சொல்லி, சீக்கிரம் இங்கே வந்து இவர்களைத் தோற்கடித்துவிட்டு என்னை அழைத்துச் செல்லச் சொல்வாயாக!" என்றாள் ஜானகி.









http://moonramkonam.com/deepavali/?p=15  மூன்றாம் கோணம் -தீபாவளி மலரில் வெளியான கட்டுரை


வல்லமை மின் இதழில் வெளியான பேட்டி...
நன்றி. ராஜேஸ்வரி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 


தாங்கள் அனுப்பிய தலை தீபாவளி தம்பதியரின் பகிர்வுகளையும் இதில் காணலாம். நன்று. தொடர்ந்து எழுதுங்கள். வணக்கம்.









ஆஸ்திரேலியாவில் தங்கள் தலைதீபாவளியை இனிமையாகக் கொண்டாடும் தங்கள் மகன் பிரகாஷ்குமார்லட்சுமிதேவி தம்பதியர், தீபாவளியன்று ஆஸ்திரேலியா செல்வ விநாயகர் ஆலயத்தில் நடை பெறும் சிறப்புப் பூஜையில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றனர். இவர்களிடம் ஒரு சிறப்புப் பேட்டி எடுத்து அனுப்பியிருக்கிறார் நமது இராஜராஜேஸ்வரி.
லக்ஷ்மி கல்யாண வைபோகமே!
பிரகாஷ் கல்யாண வைபோகமே!!




















தங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காணும் உன்னதமான பண்புகள்?
அன்பான, அடக்கமான, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு, முக்கியமா மனசுக்கு ஏத்த மாதிரி, குறிப்பறிந்து நடந்து கொள்வது.
உங்களுக்குப் பொருத்தமான துணைதான் என்று உணருகிறீர்களா? எதனால்?
மனசுக்கு ஏத்த மாதிரி இருந்ததால். எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதம்.
உங்கள் மணவாழ்க்கையின் இனிமையான பகுதியாக உணர்வது என்ன? ஏன்?
குறிப்பறிந்து நடந்து கொள்வது. மற்றும் நான் பேச நினைப்பதெல்லாம், அவள் பேசுவதால்.
திருமணத்தின் சிறப்பாக நீங்கள் உணர்வது என்ன?
திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தின் , நாகரீகத்தின் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
தங்கள் கண்ணோட்டத்தில் தற்கால திருமணங்களுக்கும், முற்காலத் திருமணங்களுக்கும் வித்தியாசம் உணர்கிறீகளா?
அந்தக் காலத் திருமணங்களைப் போல, தற்காலத் திருமணங்கள் பழம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
வெற்றிகரமான திருமண வாழ்விற்கு அடிப்படை என்னவென்று கருதுகிறீர்கள்?
விட்டுக் கொடுத்துப் போதல். ஆணுக்குப் பெண் சமம் என்ற உண்மையை உணர்ந்து சம உரிமை மற்றும் மரியாதை கொடுத்தல்.
நினைத்து மகிழவோ, நினைவிலிருந்து நீங்கிட வேண்டுமென்று 
வேண்டிக் கொள்ளவோ ஒவ்வொருவரிடமும் விதவிதமான அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
Aravindkumar Jaghamani      said.....


இது என்ன கேள்வி....
தீபாவளிக்கு கேட்க வேண்டிய கேள்வியா இது?


சும்மா அதிரவேண்டாமா.... கேள்வினா இப்படி இருக்கனும்...

1. இது உங்களுக்கு எத்தனாவது திருமணம்?

2. மறுவாய்ப்பு கொடுத்தால், இதே துணைவரை மணப்பீரா? ஏன்?

3. உங்களுக்குப் பொருத்தமான துணைதான் என்று உணருகிறீர்களா? எதனால்??

சும்மா வெடிக்கும்மில்ல...

சரவெடிபோல் தீபாவளியை அதிரடியாய் கொண்டாடுங்கள்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...//


இராஜராஜேஸ்வரி.said.....


பட்டாசுகள் வீட்டின் வெளியே மட்டும் வெடித்தால் நலம்..

18 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  4. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  5. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    நேசமுடன் அம்பலத்தார்.

    ReplyDelete
  6. கலக்கல் தீபாவளி பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உங்கள் அனைவருக்கும் மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    அருமையான, மங்களகரமான படைப்பு.

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
    உறவினர்களிற்கும் !......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete
  10. என்ன அருமையான படங்கள்...வஜ்ராகவச ஆஞ்சநேயர் படம், இன்னும் பலப்பல படங்கள் சிறப்பு. தீபாவளி நல்வாழ்த்துகள்.பிரகாஷ்குமார்-லக்ஷ்மிதேவி தம்பதியருக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ராமனும் சீதையும் காட்டுல கொண்டாடினாங்கனு சொல்லவந்த்.... அட!
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அம்மாடி, எம்மாம்பெரிய பதிவு. பார்த்து முடிக்கவே பத்து நிமிஷம் ஆச்சு. எப்ப படிச்சு முடிக்கிறது?

    ReplyDelete
  13. தீபாவளிக்கு இனிய பதிவு.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ”சீதா கல்யாண வைபோகமே” பதிவு மிக அருமையாக உள்ளது. படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், தலை தீபாவளி கொண்டாடும் தங்கள் உடன்பிறப்புக்கும், அவர் மனைவிக்கும், மற்றும் இவ்வுலகில் தீபாவளிப்பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும், மகிழ்ச்சிகரமாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளி அமைய என் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஒரு முழுமையான (சம்பூர்ண ) பதிவு
    படங்களுடன் பதிவை குடும்பத்துடன் அனுபவித்துப் படித்து
    மிக மிக மகிழ்ச்சி கொண்டோம்
    தலை தீபாவளித் தம்பதிகள்
    எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்றுபோல்
    என்றும் மகிழ்வுடன் வாழ எங்கள் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. படங்களுடன் பதிவை பார்க்கும்பொழுது சங்க காலத்துக்கே சென்ற பிரமை ஏற்படுத்துகிறது... பகிர்வுக்கு நன்றி.. அப்புறம் அந்த தம்பதியினரின் பேட்டியில் பிடித்த வரிகள்...

    திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட , உறவு முறை அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தின், நாகரீகத்தின் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
  17. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete
  18. 1223+2+1=1226

    Rajarajeswari wrote on 25 October, 2011, 11:54

    //அது சரி!!… என் உடன்பிறப்பாயிற்றே. அப்படியொரு பராக்கிரமம் இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். தீபாவளி நல்வாழ்த்துகள்.//

    வல்லமையில் வேறு யாருக்கோ எதற்கோ தாங்கள் கொடுத்திருந்த மெற்படி ஏதோவொரு கமெண்டைப்படித்துவிட்டு, ஏதோ ஒரு குழப்பத்தில் Mr. Prakash Kumar அவர்களைத் தங்களின் உடன் பிறப்பு என்று தவறுதலாக எழுதியுள்ளேன். பிறகு அவர் யார் என்று நான் நன்கு புரிந்து கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

    தம்பதியினர் க்ஷேமமாக, சந்தோஷமாக, செளக்யமாக இருக்க மனம் நிறைந்த ஆசிகள்.

    ReplyDelete