Sunday, October 16, 2011

வானில் வண்ண வண்ணக்கோலங்கள்


File:USCG Animation of aircraft.gif
விமானப்படையின் 75வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில், ஒரு மணி நேரம் பல லட்சம் மக்கள்  மெய் மறந்து ரசித்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 சாகச நிகழ்ச்சி தொடக்கமாக பெங்களூரிலிருந்து பறந்து வந்த ஜாகுவார் விமானம் சாகசம் நிகழ்த்தி விட்டு மீண்டும் பெங்களூருக்கே திரும்பிச் சென்றது.

 இந்துஸ்தான் ஏரேநாட்டிக்ஸ் நிறுவனத்தின் எச்.பி.டி 32 ரக விமானங்கள் ஒரு சேர அணிவகுத்துப் பறந்து கூட்டத்தினரை மகிழ்ச்சிப்படுத்தின. 9 விமானங்கள் மூவண்ண புகையைக் கக்கியபடி வானில் பல சாகசங்களை நடத்தின.

பறவை போல பறப்பது, குறுக்கும் நெடுக்குமாக வேகமாக செல்வது என பல சாகசங்களை செய்து காட்டிய சூரிய கிரண் சாகம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

எதிரும் புதிருமாக அதிக வேகமாக வந்து அப்படியே விலகிச் சென்றபோது பார்வையாளர்கள் திரில்லில் உறைந்தனர்.

 பார்வையாளர்கள் மத்தியில் காணப்பட்ட உடன் பிறப்புகள் உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது உதயசூரியன் போல சூரிய கிரண் விமானங்ள் விரிந்து பறந்து வானில் சாகசம் செய்தபோது ..

தேங்க்ஸ் தமிழ்நாடு என்பதைக் குறிக்கும் வகையில் டி வடிவில் விமானங்கள் பறந்து பார்வையாளர்களிடமிருந்து நன்றி கரகோஷத்தைப் பெற்றன.

 சாரங்க் ஹெலிகாப்டர் குழுவினர் நிகழ்த்திய சாகசமும் அனைவரையும் குதூகலப்படுத்தியது. பாராசூட் வீரர்கள் தங்கள் பங்க்குக்கு விண்ணிலிருந்து குதித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இறுதியில் விமானப்படையினரின் சிம்பொனி இசை நகிழ்ச்சியும் நடந்தது.

நிழ்ச்சிகளை பார்வையாளர்கள் சரியாகப் பார்க்கும் வகையில், பல இடங்களில் ராட்சத திரைகளும் வைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன.


விமானப்படை சாகச நிழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக சென்னை மட்டுமல்லாது அக்கம் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடி விட்டதால் மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் மக்கள் வெள்ளம்தான்.

மக்களின் வசதிக்காக ஏராளமான சிறப்புப் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Plane Animation MilitaryCartoon plane 4
தென் மாவட்டங்களில் முதல் முறையாக மதுரையில் இந்திய விமானப்படையின் பவள விழாவையொட்டி  சூரிய கிரண் விமான சாகசம் மதுரை மக்களை மயக்கியது.

விரகனூர் அணை-ரிங் ரோடு சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

எள் விழுந்தால் எண்ணெய் ஆகி விடும் அளவுக்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் விமான சாகசத்தைக் காண திரண்டிருந்தது.

இதில் ஒரு விமானம் வானிலேயே இதயம் போன்ற வடிவத்தை புகையால் உருவாக்கிக் காட்டியபோது கூடியிருந்த மக்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சாகச நிகழ்ச்சி நடந்தது.
Animated Gifs of PlanesAnimated Gifs of Planes
ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவாக கருதப்படுவது 
``ஏரோ இந்தியா'' என்ற சர்வதேச விமான கண்காட்சியாகும். 
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விமான திருவிழா, பெங்களூர் எலகங்காவில் உள்ள இந்திய விமானப்படை விமான நிலையத்தில் ....... 

உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 160 நாடுகள் பங்கேற்றன.

விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விமான திருவிழாவையொட்டி நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறறன.

 விமானக் கண்காட்சி நடக்கும் பகுதி முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதிநவீன போர் விமானங்கள், மிகப்பெரிய பயணிகள் விமானம், அசுரவேகத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கும் போர் விமானங்கள் என்று
 27 வகையான விமானங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து .

விமானங்களின் வியாபாரமும் நடைபெற்றது.

விமான கண்காட்சியையொட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளையும் ,காதைப் பிளக்கும் சத்தத்துடன் காற்றைக் கிழித்தபடி மின்னல் வேகத்தில் பறந்து சென்று வானத்தில் பல்டி அடித்து சாகசங்கள் நிகழ்த்திய விமானங்களையும் பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..

இதையொட்டி தினமும் 2 முறை அதாவது காலை 10 மணி முதல் மதியம் வரையிலும், பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விமான கண்காட்சியில் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
 

இந்திய விமானப் படையின் போர் விமானங்களின் சாகஸங்களுடன் இந்த கண்காட்சி தொடங்கியது. சுகோய் 30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21, ஹாக் ஆகிய விமானங்களும், கிரண் ரக பயி்ற்சி விமானங்கள், இந்தியா தயாரித்துள்ள எல்சிஏ தேஜாஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மலைக்க வைக்கும் சாகஸங்களை நிகழ்த்திக் காட்டின.

நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் காட்டி பார்வையாளர்களை குதூகலமிட வைத்தது இந்திய விமானப் படை.
 
விமானங்கள் இயங்குவது மற்றும் அவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் விமான கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக நீண்ட வரிசையில் நின்று கண்டு களித்தோம். .

விழாவின் முக்கிய அம்சமாக அமெரிக்க போர் விமானத்தில் (எப்-16) பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் இந்த விமானத்தில் பறக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

Restored Messerschmidt crash-lands at BerlinAir Show















Aero Doncaster: Finningley Air Show





34.gif

34 comments:

  1. வண்ண வண்ணக் கோலங்கள் கண்ணைக் கவரும் படங்களுடன் புதிய தகவல்கள்.

    ReplyDelete
  2. புதிய தகவல்களுடன் வண்ணத்தில் புகைப்படங்கள்.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நேரில் கண்டுகளித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ...

    ReplyDelete
  4. மெரினா கடற்கரையா அது!
    சுவையான விவரம், படங்கள்.

    நடுவில் விமானம் சுடப்படும் படமும் ட்வின் டவர்ஸ் இடிபடும் படமும் பொருந்தவில்லையே?

    ReplyDelete
  5. அருமையான தகவல்களுக்கு நன்றி, தேவை இல்லாத படங்கள் தவிர்க்கபட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.. இது பெரிய வியாபார சந்தை என்று பதிவு செய்ததும் அருமை

    ReplyDelete
  6. அழகிய படங்களுடன் அருமையான தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள் படங்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. சென்னையிலே இருந்தும்
    சிறப்பா விமான விளையாட்டுகளைப் படவழிப்
    பார்க்கச் செய்த தங்களுக்கு
    நன்றி!

    an identity


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வண்ணமயமான வானவேடிக்கை!

    ReplyDelete
  10. படங்கள் அருமை.ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள் படங்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. இன்றும் படங்களுடன் அருமை

    ReplyDelete
  13. தகவலிற்கு மெருகூட்டும் அழகிய படங்களுடன் நல்ல பதிவு. ஒரே படத்தை பலதடவைகள் இணைத்ததை தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  14. வானில் வண்ணக் கோலங்கள்! அத்தனையும் அழகு!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰⋰⋰
    ⋰⋰⋰≣≣≣≣≣⋰⋰⋰≣⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰
    ⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰⋰≣≣⋰⋰≣≣≣≣≣≣⋰⋰⋰≣≣≣≣≣⋰⋰⋰⋰⋰≣≣≣≣≣⋰⋰⋰⋰≣≣≣⋰⋰≣≣≣≣⋰≣⋰⋰⋰⋰≣≣⋰⋰
    ⋰⋰⋰≣⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰⋰≣≣⋰⋰≣≣⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰
    ≣≣≣≣≣≣≣≣≣≣≣≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣≣≣≣≣≣≣≣⋰⋰≣≣≣≣≣≣≣≣⋰⋰≣⋰≣⋰⋰≣⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰
    ⋰≣⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰⋰⋰⋰≣⋰⋰≣⋰≣⋰≣⋰⋰≣⋰⋰≣⋰⋰≣⋰⋰⋰≣⋰⋰≣⋰
    ⋰⋰≣≣≣≣≣≣⋰⋰⋰≣⋰≣≣≣≣≣≣≣≣⋰≣⋰⋰⋰≣⋰⋰⋰≣≣≣≣⋰⋰≣⋰⋰⋰≣≣≣≣⋰⋰≣⋰⋰≣≣⋰⋰⋰≣⋰⋰≣⋰⋰≣≣≣≣≣≣≣≣⋰
    ⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰≣⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰
    ⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰⋰







    வானில் வண்ணக் கோலங்கள்! அத்தனையும் அழகு!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. மிகவும் அழகான அட்டகாசமான அற்புதமான பதிவு. படங்கள் யாவுமே சூப்பரோ சூப்பர்.

    ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன.

    வானில் வண்ணவண்ணக்கோலங்கள் வரைந்துள்ள உங்கள் பிஞ்சு விரல்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், கண்குளிரக் காணச் செய்தமைக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அவற்றின் அழகு ஒவ்வொன்றையும் வர்ணிக்க எனக்கு வார்த்தைகளை கிடைக்கவில்லையே! அழகோ அழகு!!

    vgk

    ReplyDelete
  17. வித்தியாசமான அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. நானும்
    என்
    wife
    என்
    பிள்ளை
    ஆக,
    அனைவரும்
    ரசித்த பதிவு ....
    கலக்கல் .
    சூப்பர் .
    அருமை .

    ReplyDelete
  19. நானும்
    என்
    wife
    என்
    பிள்ளை
    ஆக,
    அனைவரும்
    ரசித்த பதிவு ....
    கலக்கல் .
    சூப்பர் .
    அருமை .

    ReplyDelete
  20. நேரில் காண முடியாததை போட்டோவில் காண வைத்தீர்கள் நன்றி

    ReplyDelete
  21. அமர்க்களம்! அட்டகாசம்!

    ReplyDelete
  22. சுவாரஸ்யம். படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  23. கடைசியில் காட்டியுள்ள பஜன் செய்யும் குரங்கு பொம்மையைப் பார்த்து வீட்டில் அனைவருக்கும் ஒரே சிரிப்பு.

    ReplyDelete
  24. இத்தனை படங்கள் தேடிப் பதிவோடு இணப்பதே பெரிய வேலை அற்புதம் தோழி !

    ReplyDelete
  25. விமானப்படையின் 75 வது ஆண்டு விழாவை நேரில் பார்த்து மகிழ்ந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  26. இத்தனைப் படங்களும் விபரங்களும் தந்து அசத்தி விட்டீர்கள்.
    எப்படி இதெல்லாம் முடிகிறது உங்களால்?
    .. மதுரையிலும் நடந்ததா? .. தெரியாமல் போய்விட்டதே.

    ReplyDelete
  27. வண்ண வண்ண கோலங்கள்.
    கண்களை கவரும் வகையில்.
    அனிமேட்டட் படங்கள் அத்தனையும்
    அருமை.

    ReplyDelete
  28. ஆ... சூப்பர்... படங்கள் அனைத்தும் சூப்பர். ரெட் அரோஸ்... சாகசங்கள் கலக்கல்.

    அனைத்தையும் சீரியசாகப் பார்த்து வந்தேன்.... முடிவில் கைதட்டுபவரைப் பார்த்து நானும் சிரித்திட்டேன்... அவரும் சூப்பர்.

    ReplyDelete
  29. 1185+3+1=1189 ;)

    என் பின்னூட்டப்படி கடைசியில் ஒரு பஜனை செய்யும் குரங்கு பொம்மை இருக்க வேண்டும். ஆனால் அது இப்போது காணோம் ;(

    கடைசி கமெண்ட்டில் கீழிருந்து மூன்றாவது வரியைப் படியுங்கோ ‘ஞான வித்யேஸ்வரி இராஜராஜேஸ்வரி’ அவர்களே ! ;)

    ReplyDelete
  30. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  31. இதைப் போன்ற விமான சாகசங்களையெல்லாம் இன்னும் நேரில் பார்க்கும் துணிவு வரவில்லை. படங்களில் பார்த்து ரசிக்கலாம். ரசிக்கவைக்கும் படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete