


இந்தியாவின் நுழைவு வாயிலாக சிறப்பிக்கப்படும் மும்பை நகரின் செல்வச்செழிப்பை தன் அருள் கடாட்சத்தால் வர்ஷிக்கும் அன்னை மும்பாதேவி ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.
Gateway of India

![[Image1]](http://img1.dinamalar.com/Kovilimages/T_500_730.jpg)
அம்பிகையின் முன்பு இரண்டு விளக்குத் தூண்கள் உள்ளன. ஒன்று செங்கலாலும், மற்றொன்று கல்லாலும் ஆனது. கருவறை வெள்ளை மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டது. மும்பாதேவிக்கு மராத்திய பெண்கள் அணியும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது.


மும்பை நகரின் மத்தியப்பகுதியில் உள்ள முக்கிய கோயில்.இங்கு புதுமணத் தம்பதிகள் தங்கள் கோரிக்கைகளுடன் வருகின்றனர்.


ஒரு காலத்தில் மும்பையைச் சுற்றியிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இயற்கை சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள இறைவனை வேண்டினர்.

பராசக்தியான அம்பிகை அவர்களுக்கு அருள்புரிந்தார். இயற்கைச் சீற்றம் தணிந்தது. முங்கா' என்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பியதாக கூறப்படுகிறது.

மற்றொரு கதையின்படி முங்கா என்பவர்கள் மீனவ பெண்கள் என்றும், தங்கள் கணவன்மார் கடலுக்குசென்றுவிட்டு நல்லபடியாக திரும்ப அம்பிகையை வேண்டியதாகவும், முங்கா என்ற பெயர் நாளடைவில் திரிந்து மும்பா என மாறிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த தேவியின் உண்மையான பெயர் முங்கா தேவி என இருந்தது. காலப்போக்கில் மும்பா தேவி என மாறிவிட்டது.

சமஸ்கிருத புராணங்களில் மும்பாதேவியின் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. மும்பார்க் என்ற அசுரன் பிரம்மனை வணங்கி சாகா வரம் பெற்று இந்த பகுதியில் சக்திமிக்கவனாக இருந்தான். பூலோகத்தில் வசித்த மக்களையும் தேவலோக தேவர்களையும் துன்பப்படுத்தி வந்தான். அனைவரும் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_730.jpg)
விஷ்ணுவும், சிவனும் இணைந்து அந்த அரக்கனை அழிக்க திட்டமிட்டனர். தங்கள் உடலிலிருந்து ஒரு தேவியை உருவாக்கினர். அவளுக்கு மும்பார்க்கை கொன்றுவிட உத்தரவிட்டனர். அதன்படியே அம்பிகை மும்பார்க்கை கொன்று அனைவரையும் பாதுகாத்தாள். இதன் காரணமாக இந்த தேவி மும்பாதேவி என அழைக்கப்பட்டாள்.

ஒருகாலத்தில் அப்பகுதியில் இருந்த வீடுகள் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டன. எனவே கோயிலை கவனிக்க ஆளில்லாமல் போனது. அதன்பிறகு மீனவ மக்கள் ஒன்றுசேர்ந்து புதிய கோயில் அமைத்துத் தரும்படி அரசிடம் கோரியபடி அரசாங்கம் புதிய இடத்தில் கோயில் கட்டித்தந்தது.


![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_730.jpg)
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_730.jpg)
அன்னபூரணி: இந்தக் கோயிலில் அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது. செவ்வாய்க் கிழமைகளில் அதிகக்கூட்டம் வரும்.
மூலவர் மும்பா தேவி
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_730.jpg)
மும்பை மாநகர் முன்னர் ஏழு சிறு தீவுகளாக திகழ்ந்தது. தற்போது ஒரு தீபகற்பமாக உள்ளது. மீனவர்கள் தெய்வமான மும்பாதேவியின் பெயராலே மும்பை என வழங்கப்படுகிறது.மூலவர் மும்பா தேவி
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_730.jpg)
இடையில் ஆங்கிலேயரால் பம்பாய் என வழங்கப்பட்டு இப்போது மீண்டும் மும்பை என வழங்கப்படுகிறது.
வடமொழிச் சொல்லான மகா அம்பா என்பதிலிருந்து உருவானது. ஆய் என்ற மராத்திச் சொல்லும் இணைந்து மும்பாய் என்ற பெயர் உருவானது.

நவதானியங்கள் மற்றும் அரிசியை சன்னதி முன் பரப்புகின்றனர்.
வெண்கலபானை ஒன்றை வைத்து அதில் தண்ணீர் நிரப்புகின்றனர்.
அந்தப் பானைக்குள் ஐந்து வெற்றிலைகள், பாக்கு, செம்புத்தகடு, ஒரு காய்ந்த பேரிச்சம்பழம் ஆகியவற்றை போடுகின்றனர்.
இந்த அமைப்பை காட் ஸ்தாபனா' என்கின்றனர்.
நம்மூர் கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது செய்யப்படும் கடஸ்தாபனம் போன்று சற்று வித்தியாசங்களுடன் இவ்வழிபாடு உள்ளது.
மிகவும் கவனத்துடன் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
36 மணி நேரத்தில் நவதானியங்கள் முளைத்து விடுகின்றன.
நவராத்திரியின் முதல் நாள் இரவில் மராத்திய இசைக்கலைஞர்கள்
குழல் மற்றும் சாவ்கதா' என்ற டிரம்களால் இசை எழுப்புகின்றனர்.
மிகவும் கவனத்துடன் தரையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
36 மணி நேரத்தில் நவதானியங்கள் முளைத்து விடுகின்றன.
நவராத்திரியின் முதல் நாள் இரவில் மராத்திய இசைக்கலைஞர்கள்
குழல் மற்றும் சாவ்கதா' என்ற டிரம்களால் இசை எழுப்புகின்றனர்.
ஏழாம் நாள் அன்று கோயில் முன் சதுர வடிவ குழி தோண்டி, சுற்றிலும் செங்கற்களை அடுக்கி அழகாக கட்டி, அதில் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய்களை போட்டு நெருப்பு வைக்கின்றனர்.
குறைந்த அளவு தீயில் வெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர்.
இதில் கிடைக்கும் சாம்பலை ஆண்களும், பெண்களும் தங்கள்
புருவத்தில் கண்மை போல இட்டுக் கொள்கின்றனர்.
பத்தாம் நாள் தசரா திருநாளில் அம்மன் முன் ஆறு அங்குல உயரத்திற்கு வளர்ந்துள்ள தானியச் செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
இதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்ட சில பக்தர்களுக்கு தருகிறார்கள். பெண்கள் இதை தலையில் சூடிக் கொள்கிறார்கள். ஆண்கள் தலைப்பாகை கட்டி அதில் செருகிக் கொள்கிறார்கள்.





![[conch_shankh_at_mumbadevi_temple.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiF_rL006h0uAUWPmuQU5xJdPfBSzxhH6njC14RHewQ23GtUsqZqolBzuC2JL1SKU6KMr6GX_BEpgCmKWwcXASwDB5kJ-hPA_y4jiZvypm2GoiSf4dFUvhZ35zxuLITcSDbbs_GoD5ZMtg/s400/conch_shankh_at_mumbadevi_temple.jpg)
![[temple_shop_mumbadevi.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpd1boXMtHSqxz33yr-Bf6UvhNw2KYZchk5bgj_7Gl9XbzigQ_JhH_982TeXeph-pg53D9CrqGV9bXlyGUiAPwzJVEaRLjw9wXWsVmH9RmqNSRaZ3kaQZYJJqF0pmMYm0v-57UaHbkZ3QM/s1600/temple_shop_mumbadevi.jpg)
Idols of goddesses kept on a platform, outside Mumbadevi garden
![[indian_goddess_idol.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDcSmrE6CmTXd2M2ck3w1WFnY5ZR5oNQgYguYLctYXMJ7FdYVYeIYviOa7UQ_gJ2DbxED0AWKPJcwRZrlfx0thMulhYUkMKZNmoEg5D0YJV9-vc2qCClkF_eNxxd9FCY8YHlx2deI83nlO/s1600/indian_goddess_idol.jpg)
![[colorful_beads.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtRONEuCDNvu1NWth4oNaLD-mwlk0kgQytaQ9ubMRF28-kV56LJDqGTaLx8yHRDaaxRhrXXy9ZnxBd2-JvIalYttN_8Vj3gO5SkftXepvv2SSIg2wVh4zMWZkAltU5p5YsS3yQNfki2DSr/s1600/colorful_beads.jpg)
Night in Mumbra




மும்பையின் செல்வத்திருமகளை வெள்ளிக்கிழமையாகிய இன்று தரிஸிக்கச் செய்ததற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஅருமையான தரவுகள் .
ReplyDeleteதொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .
அசத்தலான படங்களுடன் அறிய தகவல்கள்..
ReplyDeleteநன்றி சகோ..
அருள்மிகு மும்பா தேவியைப் பற்றி அருமையான தகவல்கள்.. அசத்தலான படங்களுடன் அற்புதமான ஆன்மீக என்சைக்கிளோபீடியாவான உங்கள் தளத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமும்பை பெயர்க்காரண விளக்கம் அருமை
ReplyDeleteபுதிய அரிய தகவல்
படங்களும் பதிவும் அமர்க்களம்
தொடர வாழ்த்துக்கள்
ஆஹா எங்க ஊரு அம்பாள் தரிசனமா? இங்க ஒருபழக்கம் இன்னமும் நடை முறையில் இருக்கு. கல்யாணம் ஆனதும் முதலில் தேவியைத்தரிசனம் செய்யனும்னு.அதை அனைவருமே கடைப்பித்து வருகிரார்கள்.
ReplyDeleteவழக்கம் போல படங்களின் அணிவகுப்பு
ReplyDeleteசும்மா அசத்தலா இருக்கு சகோதரி...
செல்வா மாநகரத்தின் செல்வாம்பிகையின்
அருள் பெற்றோம்.
கோவிலின் கட்டிடக் கலையை விளக்கும் புகைப் படங்கள் அருமை. விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கனோஜி ஆங்கரே வழி பட்ட கோவில் இதுதானோ?
ReplyDeleteஸ்ரீராம். said...
ReplyDeleteகோவிலின் கட்டிடக் கலையை விளக்கும் புகைப் படங்கள் அருமை. விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கனோஜி ஆங்கரே வழி பட்ட கோவில் இதுதானோ?/
அரபிக் கடலி னுள் பல கோட்டைகள் சமைத்த சத்ரபதி சிவாஜியின் கப்பற் படைத் தளபதி கனோஜி ஆங்கரே பெயரில் மும்பையில் கப்பற் படைப் பயிற்சித் தளம் உள்ளது.
அவர் வழிபட்ட ஆலயம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமும்பையின் செல்வத்திருமகளை வெள்ளிக்கிழமையாகிய இன்று தரிஸிக்கச் செய்ததற்கு மிகவும் நன்றி.
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅருமையான தரவுகள் .
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் /
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
விக்கியுலகம் said...
ReplyDeleteஅழகிய படங்களும், பல அரிய தகவல்களுடன் பதிவு அருமை நன்றிங்க மேடம்!//
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅசத்தலான படங்களுடன் அறிய தகவல்கள்..
நன்றி சகோ../
கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
மாய உலகம் said...
ReplyDeleteஅருள்மிகு மும்பா தேவியைப் பற்றி அருமையான தகவல்கள்.. அசத்தலான படங்களுடன் அற்புதமான ஆன்மீக என்சைக்கிளோபீடியாவான உங்கள் தளத்திற்கு வாழ்த்துக்கள்/
கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
Ramani said...
ReplyDeleteமும்பை பெயர்க்காரண விளக்கம் அருமை
புதிய அரிய தகவல்
படங்களும் பதிவும் அமர்க்களம்
தொடர வாழ்த்துக்கள்//
அமர்க்களமான கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
Lakshmi said...
ReplyDeleteஆஹா எங்க ஊரு அம்பாள் தரிசனமா? இங்க ஒருபழக்கம் இன்னமும் நடை முறையில் இருக்கு. கல்யாணம் ஆனதும் முதலில் தேவியைத்தரிசனம் செய்யனும்னு.அதை அனைவருமே கடைப்பித்து வருகிரார்கள்./
அருமையான தகவலுக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.
மகேந்திரன் said...
ReplyDeleteவழக்கம் போல படங்களின் அணிவகுப்பு
சும்மா அசத்தலா இருக்கு சகோதரி...
செல்வா மாநகரத்தின் செல்வாம்பிகையின்
அருள் பெற்றோம்./
அசத்தலான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
FOOD said...
ReplyDeleteமும்பை பெயர் விளக்கமும்,மும்பா தேவி தரிசனமும் அருமை./
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅம்ச்சி மும்பைச்சி ஆயி :-))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க.
மும்பாதேவி பெயர் காரணம்,வரலாறு எல்லாமே அருமையான தகவல்கள்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு.கோவில் பிரம்மாண்டமாக உள்ளது.
நல்ல பதிவு அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் படங்கள் ஆத்திக விக்கிபிடியாதான்
ReplyDeletemiddleclassmadhavi said...
ReplyDeleteஅருமை! பகிர்வுக்கு நன்றி!/
கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
அமைதிச்சாரல் said...
ReplyDeleteஅம்ச்சி மும்பைச்சி ஆயி :-))
பகிர்வுக்கு நன்றிங்க.//
கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteநல்ல பதிவு அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் படங்கள் ஆத்திக விக்கிபிடியாதான்//
அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
அருமையான படங்கள் படப்பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅழகிய படங்களும்..தகவல்களுடன் அருமையான பதிவு ...அருமை.. அருமை..
ReplyDeleteஅருமை புகைப்படங்கள்.அசத்துகிறீர்கள்.தகவல்களும் நன்று.
ReplyDeleteவெள்ளியன்று மங்களப்பதிவு.
ReplyDelete;)
ReplyDeleteஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வராநநே!!
1145+2+1=1148 ;)
ReplyDelete