Tuesday, September 24, 2013

மங்களங்கள் மலரும் மங்கள சண்டிகா


ரட்ச ரட்ச ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா
ரட்ச ரட்ச ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்க்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும் 
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை 
ஒன்பது வாரம் சொல்லுவதாலே 
உமையவள் திருவருள் சேரும்.  

படைப்பவள் அவளே காப்பவள் அவளே 
அழிப்பவள் அவளே சக்தி - அபயம் 
என்று அவளை சரண் புகுந்தாலே 
அடைக்கலம் அவளே சக்தி - ஜெய ஜெய 
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள் 
அம்பிகை பைரவி சிவ சிவசிவ சங்கரி 
சக்தி மகேஸ்வரி திருவருள் தருவாள் தேவி.   

கருணையில் கங்கை கண்ணனின் தங்கை 
கடைக்கண் திறந்தால் போதும் 
வல்வினை ஓடும், பலவினை ஓடும்
அருள்மழை பொழிபவள் - நாளும் 
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் 
காளி எனத் திரிசூலம் எடுத்தவள் 
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள் 
நாமம் சொன்னால் நன்மை தருபவள் 
நாமம் சொன்னால் நன்மை தருபவள். 

மகிமை வாய்ந்த மங்கள சண்டிகை துதி. 
நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி நாளிலும்  இதைப் பாராயணம் செய்வதால் நன்மை உண்டாகும். 

அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேற தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை படிப்பதும் வழக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்த அந்த மங்கள சண்டிகை துதி சொல்லி நலம் பல பெறலாம்..!

 
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே 
ஹும், ஹும், பட் ஸ்வாஹா

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே

ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே

மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி

ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே
இந்த உலகத்தைக் காத்து அருள்கின்ற தாயே; 
ஆபத்துகள் வராமல் காத்து நிற்பவளே: 
ஆபத்துக்கள் வந்துவிட்டாலும் அகற்றுபவளே: 

மங்கள தினமான செவ்வாய்க்கிழமை தோறும் 
வணங்கத் தக்க மங்கள உருவானவளே: 

இந்த உலகின் மங்களத்திற்கு மூலகாரணமாய் விளங்குபவளே; 
எல்லா நிலைகளிலும் மங்களத்தைத் தருபவளே; 

புண்ணியம், பாவம் ஆகியவற்றைக் கடந்து நிற்பவளே; 
ஒவ்வொரு மங்கள வாரத்திலும் எனக்கு எல்லாவிதமான 
மங்களத்தையும் அளித்துக் காத்து அருள்வாயாக.
மங்கள சண்டிகா ஸ்தோத்திரத்தை 
ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் 
கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் 
சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். 

மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த மங்கள சண்டிகா மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது. 

முதலில் ருத்திரனும் பின் அங்காரக பகவானும் மங்களன் என்ற பேரரசனும் பூஜித்து, நினைத்த காரியத்தை அடைந்தனர். 
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 
108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. 

கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது 
திருமண பாக்கியமும் ,குடும்ப அபிவிருத்தியும் தரவல்லது 
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் 
துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். 
ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். 
நவக்ரக தோஷங்கள் , செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.



23 comments:

  1. மங்கள சண்டிகா மகிமை அறிந்தேன். நன்றி

    ReplyDelete
  2. Good Morning !

    ’மங்களங்கள் அருளும் மங்கள சண்டிகா’ வுக்கு அடியேனின் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  3. படங்கள் ஒவ்வொன்றும் வழக்கம்போல் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  4. இன்று செவ்வாய்க்கிழமை - மங்களவாரத்திற்கு ஏற்ற மங்களகரமான செய்திகள் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  5. மூலமந்திரம் + மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் கொடுத்துள்ளது மிகவும் பயனுள்ளது.

    பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  6. அருமை... வழக்கம் போல படங்கள் பிரமாதம்.

    ReplyDelete
  7. வழக்கம் போல் பக்தி மணம் கமழ, மனம் குளிர இருந்தது

    ReplyDelete
  8. எப்போதும் போல் பக்தி மணம் கமழ மனம் குளிர இருந்தது..

    ReplyDelete
  9. அருமையான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. arumaiyana anavarum padikavendiya pathivu,

    ReplyDelete
  11. Very good article. Must ready every one.

    ReplyDelete
  12. மங்களகரமான தரிசனமும் தகவலுக்கும் நன்றி அம்மா

    ReplyDelete
  13. மங்களசண்டிகா மாண்பு அறிந்தேன்.
    படங்களும் நன்கு தெளிவு தருபவை.
    மிக நன்றி.

    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. நல்லா இருக்கு அனைத்தும். நேற்று சங்கடஹர சதுர்த்தி எனத் தெரியாமல் போச்செனக்கு :(.

    ReplyDelete
    Replies
    1. முழு நிலவு நாளன்றே அடுத்த நாள் பிரதமை ,
      இரண்டாம் நாள் துவிதியை ,
      மூன்றாம் நாள் திரிதியை
      நான்காம் நாள் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி
      என்று நினைவுபடுத்திக்கொண்டால் மறக்காதே..! பௌர்ணமியன்றே வானில் முழுமதிதோன்றும் போதே கவனம் கொள்ளுங்கள் அதிரா..
      கருத்துரைக்கு இனிய நன்றிகள்..வாழ்க வளமுடன்..

      Delete
  15. படங்களும் தகவல்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. மனம் நிறைந்த மங்களகரமான பதிவு!.. மங்கள சண்டிகா தேவி எல்லாருக்கும் அருள் புரிவாளாக!..

    ReplyDelete

  17. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. மங்கள சண்டிகா தோத்திரம் படித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.
    செவ்வாய் கிழமை ராகு காலத்தில் கூட்டு வழிபாடு செய்வோம், இங்கு இருப்பதால் முடியவில்லை, ஆனால் உங்கள் பதிவு மூலம், அந்த குறை நீங்கி விட்டது. துர்கா தேவி படங்கள், பாடல்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. information about chandiga is new

    ReplyDelete
  20. மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படங்கள் ,தகவல்கள் எல்லாமே அருமை.சண்டிகா துதி குறித்துக்கொண்டேன்.நன்றிகள்.

    ReplyDelete