கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை.
அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி;
மணியும் பொன்னும் முதலாயின செல்வம் அல்ல.
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு
ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல. ---அதற்கு கல்வியே துணைபுரியும் ..
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
அத்தகு சிறப்பு நிறைந்த கல்வியை உடையார் முன் இல்லார்
போல் ஏக்கற்றும் கற்பதே அறிவுடைமை ஆகும் ..
நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினமான செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் ..!
ஆசிரியராக இருந்து சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர்.
நல்ல கல்வியாளர்.
நல்ல கல்வியாளர்.
ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணி என்பது தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி.
ஆசிரியப்பணியே அறப்பணியே அதற்கே உன்னை அர்ப்பணியே
என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் சமுதாயத்தை தாங்கிப்பிடித்து உயர்த்தும் அருந்தொண்ட்டாற்றும் ஆசிரிர்களை மதித்துப்போற்றும்
திரு நாளாகத் திகழ்கிறது ..!
ஒவ்வொரு நாளும்எந்த நல்ல காரியம் துவங்கும் போதும் குருவந்தனம் செய்வது நம் நாட்டின் வழக்கம்.
தெய்வத்துக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களை நினைத்து வணங்குவதே நமது பண்பாடு.
பாரத கலாசாரத்தில் பெரிய ஆளுமைகளாக இருந்த பலரும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஜகத்குரு – உலகாசிரியன் என்றே சொல்கிறோம். ஆதிசங்கரர், ராமானுஜர், என்று பலரும் குருமார்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் ஆசிரியர்களே.!!.
ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் பதிவு மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது. மிக்க நன்றி சகோதரியாரே.
ReplyDeleteஆசிரியபணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று சொல்லுவதற்கு இணங்க எங்கள் குடும்பத்தில் நிறைய பேர் ஆசிரியர்கள்.
ReplyDeleteஅதில் பெருமிதம் கொள்கிறது மனம்.
அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
அக இருளை போக்கி ஞானஒளி ஏற்றிய குருக்களுக்கு வந்தனம்.
உங்கள் பதிவு அருமை.
வாழ்த்துக்கள்.
ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் வழக்கம்போல தனிச்சிறப்பானவைகள் தான்.
ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் என்னும் தூண்களுக்கு, இன்றும் உண்மையிலேயே வைரம் பாய்ச்சுகின்ற ஆசிரியர்களுக்கு மட்டும் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன் மனம் கவர்ந்த ஆசிரியர்களைப் பற்றி
ReplyDeleteநினைவு கூற வைத்து விட்டீர்கள்.
நன்றி !
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் தோழி ..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
பதிவு மிக அருமையாக உள்ளது அனிமேசன் படங்கள் மிகமிக அருமை
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
குறிப்பு- தீபாவளித் திருநாளை முன்னிட்டு மா பெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. பதிவுப் பார்வைக்கு
https://2008rupan.wordpress.com
http://dindiguldhanabalan.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குருவே நமஹ:..ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteஹா..ஹா..ஹா.. கனம்.. ஆசியர் பூஸாருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் தின சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சிறப்பான பகிர்வு. நம்மைச் செதுக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்திடுவோம்.
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள்!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியர் தினம் – வாழ்த்துக்கள்!
ReplyDeleteHappy teachers day wishes,
ReplyDeleteVetha.Elangathilakam.