

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மகிமை மிக்க மஹாளய புண்ணிய காலமாக முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது.
மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும்.
அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச கால
புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.
இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும்,
அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும்
திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும்.

மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்..

மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசையன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்ப கோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர்.
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம்
பூலோகத்திற்கு வர இயலாது.
அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.
பித்ருக்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படும் புடலங்காய் பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்கும்இதன் நிழலில்தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
மஹாளய பட்சத்தின் பதினான்கு திதிகளிலும், பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களுக்காக பித்ருக்களின் தேவதையான ஸ்ரீமந்நாராயணனே சோமனாகிய சந்திரனையும் ஆதித்யனாகிய சூரியனையும் இயங்க வைத்து, யதி மண்டலத்தைத் தோற்றுத்து பித்ருக்களுடைய ஜீவசக்தியை இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.
சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடம் சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
காகத்திற்கு அன்னமிடலும் பசுவுக்கு புல், பழம் கொடுத்தலும் சிறப்பு ..!
முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம்.
பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யும்
எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அமாவாசைதோறும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர்.

பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர்.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.
தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்குவதற்கும் மகாளய அமாவாசை சரியான நாளாகும்.
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்ப்பணப்புரி என்னும் செதலபதி முக்தீஸ்வரர்,ஆலயத்தில் . தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் ராமன் பிதுர்கடன் செய்ததாக தலபுராணம் கூறுகிறது.
எள் தர்ப்பணம் செய்து, நான்கு பிண்டங்கள் வைத்து ராமர் கண்ணை மூடி சிவபெருமானை வழிபாடு செய்து கண் விழித்துப் பார்த்த போது நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாக மாறி இருந்தன.
சிவபெருமானே ஸ்ரீராமர் முன் நேரில் தோன்றி, ""தந்தைக்கு பிதுர்கடன் செய்யும் ராமா! இனி இந்த தலத்திற்கு வந்து யார் பிண்டம் இட்டு தர்ப்பணம் செய்தாலும் பாவங்கள் நீங்கி வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகட்டும் என்று அருள்புரிந்தார்.
ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீராமர் அமர்ந்த நிலையில் தர்ப்பணம் செய்யும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
ராமனும், பிதுர்லிங்கங்கள் நான்கும் தனிசன்னதியில் காட்சி தருகின்றனர்.
சிவனை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் போற்றியுள்ளார்.
ராமனும், பிதுர்லிங்கங்கள் நான்கும் தனிசன்னதியில் காட்சி தருகின்றனர்.
சிவனை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் போற்றியுள்ளார்.

கோயிலுக்கு வெளியே மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆதிவிநாயகராக மனிதமுகத்தோடு விளங்கும் நரமுககணபதி இருப்பது செதலபதி தலத்தின் தனிச்சிறப்பு
ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் மனித முக விநாயகர்


மகாளய பட்சத்தில் வரும் அஷ்டமி, திரயோதசி திதிகளில் செய்யும் வழிபாடுகள் மிகவும் நலம் பயக்கும் என்பது ஐதீகம்.

மகாளய பட்ச நாட்களில் புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பு.
சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம்.
ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் செய்யலாம்.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.
பல்வேறு சிறப்புகள் மிக்க மகாளய பட்ச காலத்தில் முன்னோரை நினைத்து வழிபடுவதால் அவர்களது பரிபூரண ஆசியால் பாவ, தோஷங்கள், தடை, தடங்கல்கள் நீங்கப் பெற்று சுபிட்சமான வாழ்வு பெறலாம் ..!.
சிரார்த்த காரியம் செய்யும் பொழுது விஸ்வேஸ்வரனையும் விஷ்ணு வையும் காலபைரவரையும் ஆராதனை செய்தல் மிகவும் உத்தமம்.

நமது முன்னோர்களான மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது, பித்ரு தேவதைகளின் பரிபூரண ஆசிகளும் சகல விதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு, துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள்.
காலபைரவரின் அஷ்டோத்திரம் கூறுவதால் சகல நன்மைகளும் அடைந்து நல்வாழ்வு கிட்டும் ,,
தகுதி வாய்ந்த பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தத்தை சிரத்தையுடன் செவ்வனே செய்தல் வேண்டும்.
வஸ்திரம், அன்னம், உத்திராட்சம், துளசி மாலை, பஞ்ச பாத்திரம், உத்திரணி, கிண்டி, பசு, பூமி, குடை, பாதரட்சை போன்றவற்றை தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

வில்வத்தை கையில் ஏந்தி தியானம் செய்து ஆற்றில் விடுவதும் உத்தமாகும்.

உத்திரவாகினியாக ஓடும் நதிகளில் சிரார்த்தம் செய்வது சிறப்பானது.
மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கமமாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடுவதுவே உத்திரவாகினியாகும்.

கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத் தையொட்டி, காவிரி நதி உத்திரவாகினியாக ஓடுகிறது.
காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார்.
ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோட்ச ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது
காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார்.
ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோட்ச ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது

![[mahalaya_paksha_tharpanam%255B4%255D.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0wQIgwR-pk5BkWmukNH-KvSy1wClJLWtsjS2Zf0Nnz0j0gQ8ce8THo8ZPW3V_NccuUbVT0EKgGTBgpFLj6vAPLA18RfCW6Is_PwvYDaswv24bCQc5irD-pY8RQqqHjl8m1exI4Hup5E/s200/mahalaya_paksha_tharpanam%25255B4%25255D.jpg)
மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

இந்திரன் முதலிய தேவர்கள் விண்ணில் ஏற முயற்சிக்கிறார்கள். என்றாலும் அவர்கள் புண்ணியத்தை அனுபவித்து முடிந்த பிறகு மீண்டும் மனிதர்களாகவோ புழு பூச்சிகளாகவோ பிறக்கிறார்கள்.
அம்மா! மணிகர்ணிகா தேவியே எவர்கள் உங்கள் தீர்த்தத்தில் மூழ்குகிறார்களோ, அந்த மனிதர்கள் மாசற்றவர்கள் ஆவார்கள்.
அம்மா! மணிகர்ணிகா தேவியே எவர்கள் உங்கள் தீர்த்தத்தில் மூழ்குகிறார்களோ, அந்த மனிதர்கள் மாசற்றவர்கள் ஆவார்கள்.

நல்ல பதவி கிடைத்து கிரீடமும் கௌஸ்துபமும் அணிந்த நாராயண் சொரூபத்தை அடைவார்கள் என்பதாகும்.

நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தையும் நலனையும் தேவர்களாலும் கூறிட பல நூற்றாண்டுகள் போதாது


திருக்குளமாக உள்ள தேவியை வழிபடுவதன் பலனாக
சந்திரசேகர சிவன், நாராயணர், மகிழ்ந்து நோய்களை நீக்கி அருள்கிறார்.
இவ்வாறு மணிகர்ணிகையின் பெருமை பற்றி அஷ்டகமாக துதியகத் கூறியுள்ள ஆதி சங்கரர் மகாளய பட்ச தர்ப்பண பூஜையின் மகத்துவத்தையும் கூறினார்.

கங்கே தங்கேதி யோப் ரூயாத் யோஜநாநாம் சாதரபி
முச்யதே ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி!!
கங்கை கங்கை என்று நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து சொல்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு அருளை அடைகிறான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது.

பித்ருக்களின் உலகிற்குத் தலைவனான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ரு பூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது.



வணக்கம்
ReplyDeleteஅம்மா
பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
தொடருகிறேன் பதிவை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மஹாளய அமாவாசையின் மகத்துவத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள். அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்குப் படையலிட்டு, காகத்திற்கு சாதம் இட்டு, பிறகே சாப்பிடுகிறேன்.
ReplyDeleteமஹாளயச் சிறப்பு குறித்து
ReplyDeleteஅறியாதன் எல்லாம் அறிந்தோம்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
கங்கா மாதாவுக்கு ஜே!
ReplyDeleteநோய்களை அகற்றி நற்பயன்களை தரும் மணிகர்ணிகையின் பெருமை அருமை.
படங்கள் எல்லாம் மிக அருமை.
விளக்கங்களும் படங்களும் மிகவும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபதிவு விளக்கமாய், வழக்கம் போல் அருமையான படங்களோடு உள்ளது, (எனக்கு) புதிய தகவல்களுக்கு நன்றி!!
ReplyDelete1]
ReplyDelete’மஹிமை மிக்க மஹாளய பக்ஷம்’ என்ற இந்தப்பதிவு மிகச்சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.
நாளை 20.09.2013 முதல் 05.10.2013 வரை மஹாளய பக்ஷம் ஆகும்.
>>>>>
2]
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகு.
அதுவும் கீழே அடியில் தொங்கும் மூன்றும் சூப்பர்.
அதாவது கீழிருந்து மேலே படம் 1, 2 மற்றும் 4 பியூட்டிஃஃபுல் கவரேஜ், என்று சொல்கிறேன்.
>>>>>
ReplyDelete3]
புடலங்காய் பற்றி சொல்லியுள்ளது சிறப்பாக உள்ளது.
திலதர்ப்பணபுரி என்னும் செதலபதி பற்றி விசேஷமாகச் சொல்லியுள்ளது அருமை.
நரமுக கணபதி ;) பிள்ளையாரப்பா உனக்கு இங்கு இப்படி ஒரு பெயரா ! ;)) சந்தோஷம். ;)))
>>>>>
4]
ReplyDeleteகஜேந்திர மோட்ச ஸ்தலம் பற்றிச்சொல்லியுள்ளது தனிச்சிறப்பாகும்.
கணக்கில் அடங்காத கருணையுள்ளம் கொண்ட காருண்ய பித்ருக்கள் பற்றி விபரம் கூறியுள்ளது மிகச்சிறப்பு தான்.
>>>>>
5]
ReplyDeleteமாதாமாதம் தமிழ் மாதப்பிறப்பு அன்றும், அமாவாசையன்றும் நாம் பொதுவாகச் செய்யும் தர்ப்பணம், நம் தந்தை வழி மற்றும் தாய்வழி முன்னோர்களுக்கு மட்டுமே
ஆனால் மஹாளய பக்ஷத்தில் நாம் செய்யும் தர்ப்பணம், மேலே சொன்ன இருவழி மூதாதையர்கள் தவிர, மறைந்துபோன நம் நண்பர்கள், உறவினர்கள், குரு, பிரியமானவர்கள் முதலான ஆண்கள் + பெண்கள் அனைவருக்கும் செய்வதாகும்.
>>>>>
6]
ReplyDeleteஅகால மரணம் அடைந்தோர், துர்மரணம் அடைந்தோர், விபத்தில் மரணம் அடைந்தோர், எதிர்பாராத மரணம் அடைந்தோர் என அனைவருக்குமே செய்யப்படக்கூடிய விசேஷ தர்ப்பணங்கள் ஆகும்.
‘தத் தத் கோத்ரானாம் தத் தத் ஸர்மனாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவஸிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்யர்த்தம்’ என்று சொல்லப்படுவதே இதில் உள்ள சிறப்பானதோர் கூடுதல் மந்திரமாகும்.
அதாவது எந்த கோத்திரத்தில் பிறந்தவராயினும், எந்தப்பெயரில் அழைக்கப்பட்டவராயினும், அவர் எப்படி இறந்திருப்பினும் அவருக்காக நான் இன்று எள் + தண்ணீர் மூலம் தர்ப்பணம் செய்கிறேன்.
சிரத்தையுடன் நான் இன்று செய்யும் இந்தத் தர்ப்பணத்தால் அவருக்கு மனம் குளிர்ந்து, அவர் கருணையினால் என்னை ரக்ஷிக்கட்டும் என்பதே இந்தத்தர்ப்பணத்தின் தாத்பர்யம்.
>>>>>
7]
ReplyDeleteபதினைந்து நாட்களுமே ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு, மிகவும் சிரத்தையாக ஸ்ராத்தமாகச் செய்பவர்களும் உண்டு.
பதினைந்து நாட்களும் தினமும் தர்ப்பணம் மட்டும் செய்பவர்களும் உண்டு.
ஏதாவது ஒரு நாள் மட்டும் செய்பவர்களும் உண்டு.
அவரவர்கள் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தவாறு தான தர்மங்கள் செய்து, எள்+தண்ணீருடன், இந்த மஹாளய பக்ஷமாகிய பதினைந்து நாட்களில், ஏதாவது ஒரு நாளாவது, மிகவும் சிரத்தையாக நீர்க்கடன் செலுத்திச் செய்வது உத்தமம்.
இதனால் நமக்கு நல்ல சிரேயஸ் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.
>>>>>
Yes sir you are right.என்னுடைய சொந்த ஊ ர் திலதர்பனபுரி என்கிற செதலபதி . என் அப்பா 15 நாட்களும் தர்ப்பணம் செய்து மற்றும் ஸ்ரார்தம் (தவசம் ) செய்வார் .
Delete8]
ReplyDeleteஎனக்குள்ள மனநிலையில் இன்று, பின்னூட்டம் ஏதும் கொடுக்கக்கூடாது என்று தான் மனதுக்குள் நான் நினைத்திருந்தேன்.
இருந்தாலும் இந்தப்பதிவு என்னை சுண்டி இழுத்து வந்து கருத்துக்கள் கூற வைத்துவிட்டது. அதுதான் உங்களின் தனிச்சிறப்பு. அதற்குத் தலை வணங்குகிறேன்.
மிகச்சிறப்பான பதிவு தந்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
பா ரா ட் டு க் க ள்.
வாழ்க !
ooOoo
சிறப்பான பகிர்வு. விளக்கங்கள் அருமை.
ReplyDeleteஇது வரை தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். வியக்க வைக்கும் பகிர்வுகள்.
ReplyDeleteநல்லதோர் பதிவு..அழகிய படங்களுடன்..நன்றி!..
ReplyDeleteமஹாளய பட்சம் பற்றி விரிவான தகவலுடன் பிதுர் கடன் நீக்கும் தலங்கள் பற்றியும் சிறப்பாக பகிர்ந்தது அருமை! நன்றி!
ReplyDeleteநன்றி அம்மா ...
ReplyDeleteNice information. என்னுடைய சொந்த ஊ ர் திலதர்பனபுரி என்கிற செதலபதி. Happy to read about மஹாலய பட்சம் . என் அப்பா 15 நாட்களும் தர்ப்பணம் செய்து மற்றும் ஸ்ரார்தம் (தவசம் ) செய்வார் .
ReplyDeleteஅறிய தகவல்கள் நன்றி அம்மா
ReplyDeleteசிறப்பான பல தகவல்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteChellappa Yagyaswamy
ReplyDelete10:04 PM
மஹாளயபட்சத்தின் பெருமைகளை இவ்வளவு சிறப்பாக விளக்கி எழுதி, ஏராளமான அன்பர்களை தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றில் ஈடுபட வைப்பதன் மூலம் அனைவரது முன்னோர்களின் ஆசிகளும் இராஜராஜேஸ்வரி ஒருவருக்கே போய்விடுமே என்பது தான் எனது கவலை.
மஹாளய அமாவாசையின் சிறப்பினைப் பகிர்ந்தமை அருகை சகோதரியாரே நன்றி
ReplyDeleteUtharavahini Cavuery is my native Village (sivaramapuram, near kathiramangalam). Here Rama and Kasi Viswanathar temple is there. In between these two temple the river cauvery runs from South to North for about 100 meters. Kanchi Mahaperiva have done here. This was recorded by Bharanidharan of Vikatan some years ago too.
ReplyDeleteThanks for mentioning this.