சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். , இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்;
மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார்.
ஈசன் அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை.
எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்..!
சிவபெருமானது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகத்திகழும்
இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
கயிலையில் உள்ள மகா சதாசிவ மூர்த்தியச் சுற்றி, இருபத்தி ஐந்து மூர்த்திகளும் இருப்பதாகவும், ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் வணங்கக்கூடியவராகவும் அருள்புரிகிறார்..
மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் அனுக்கிரக மூர்த்தி என்றேவணங்கப்படுகிறார்..
இன்ன உருவம் தான் எனக் கூற முடியாதவாறு அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தும் உள்ளடக்கிய வடிவம், ‘மகா சதாசிவர்’.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மகா சதாசிவ மூர்த்தியை கோயிலுள்
காண முடியாது.
சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும்.
பல கோயில் விமானங்களில் தரிசிக்க முடியும்.
25 முகங்களையும் 50 திருக்கரங்களையும் உடைய மகா சதாசிவ வடிவினை திருநல்லூர் திருத்தலத்தில் சிவன் கோயிலின் ராஜகோபுரத்தில் தரிசிக்கலாம்.
மகா சதாசிவ மூர்த்திய வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால்
மகா சதாசிவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் நம்பிக்கை..!
ரசித்தேன்.
ReplyDeleteThanks for sharing.. Nice information..
ReplyDeleteகருவூரார் என்று தஞ்சைக் கோவிலில் இருப்பவர் கருவூரை சார்ந்தவர் என நினைத்தது தவறு போலும்.
ReplyDeleteகரு ஊறார் என்பதில் ஒரு பொருள் பொதிந்து உள்ளது.
மேலும் இது பற்றி படிக்க தூண்டும் பதிவு இது.
சுப்பு தாத்தா.
விஸ்வரூப மகா சதாசிவ மூர்த்தி.... புதியதாய் ஒரு தகவல் தெரிந்து கொண்டேன்.....
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகருவூறார் என்ற சொல்லுக்கு மீண்டும் பிறக்க மாட்டார் என்ற பொருள் என்பதை இப்பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி
ReplyDeleteஆஹா, அத்தனைப்படங்களும் விஸ்வரூபமாகக் காட்சியளிக்கின்றன. ;)
ReplyDeleteபார்த்ததும் பிரமித்துப்போனேன்.
>>>>>
எப்படி எப்படி எப்படி ?????
ReplyDeleteஇப்படி இப்படி இப்படி ப்படங்களை அளிக்க முடிகிறது?
உங்கள் ஸ்பெஷாலிடியே இதுபோன்ற பிரமிக்க வைக்கும் படங்கள் தான். ;)
>>>>>
கருவூறார் விளக்கம் அருமையோ அருமை.
ReplyDeleteமஹா ஸதாசிவ மூர்த்தி .... [விஸ்வரூப]
மெகா தொடர்போன்ற தலைப்பூஊஊஊஊ ! ;)
>>>>>
கீழிருந்து மூன்றாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பியூட்டிஃஃபுல் கவரேஜ்.
ReplyDeleteபடம் எடுத்த திருக்கரங்களுக்கும் பதிவிட்ட தங்களுக்கும் என் அன்பான ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>
கருப்பஞ்சாறாக இனிக்கும் பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
நீடூழி வாழ்க !
-oOo-
உண்மையில் விஸ்வரூபம் என்றால் இப்படித்தான் இருக்குமா ? முதலில் இப்போதே இம்மாதிரி படங்களை காண்கிறேன். மெய்மறந்து நின்றேன்.
ReplyDeleteமஹா சதாசிவ மூர்த்தி! விளக்கமும் படங்களும் மிகவும் அருமை! நன்றி!
ReplyDeleteதகவல்களும், புகைப்படங்களும் புதிதாய் இருக்கின்றன.
ReplyDeleteமகாசதாசிவ மூர்த்தி தர்சனம். படங்களும் விளக்கமும் அருமை.
ReplyDeleteமிகவும் அருமை!.. மகாசதாசிவ மூர்த்தி அனைவருக்கும் நல்லருள் புரிவாராக!..
ReplyDeleteவியக்கத்தக்க படங்கள். விபரமான பதிவு. விஸ்வரூப மகா சதாசிவமூர்த்தியின் தரிசனம் வெகு அருமை. கண்கொள்ளா காட்சி. நன்றி அம்மா.
ReplyDeletewow worshipping lord sadasiva will bring siva darshan - excellent information thanks for sharing
ReplyDelete'இம்மகுலேட் கன்செப்ஷன்' என்பது எல்லா மதங்களிலும் உள்ளது.கருவில் ஊற மாட்டார் என்பது அதுதான்.கருவூர் தேவர் அல்லது கருவூர் சித்தர் என்பது
ReplyDeleteஅவர் ஊர் மூலமாகவே அடையாளப் படுத்தப் படுகிறார் என்பதும் சரியே.
புராணங்கள் குமார சம்பவத்தைப் பேசினாலும், 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்'தானே!
இந்த விஸ்வரூபம் என்ற படிமமும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டத்தை ஒவியம், சிற்பமாக உருவகிக்கும் முயற்சியே. விஷ்ணுவிற்கும் விஸ்வரூபம் காட்டும் ஓவியங்கள் உண்டல்லவா!?
என்னை மஹாசதாசிவரின் விஸ்வரூபக் காட்சி கவர்வது அதன் அமைப்பால்தான்.9,7,5,3,1 என்று 25 திருமுகங்களும் ஒரு மலை போல் அடுக்கியுள்ள நேர்த்தி ...அடடா! இந்த சிற்பத்தை உள் வாங்கிக்கொண்டு
கைலாய மலை முன்னால் போய் நின்றால் அந்த மலை முழுவதுமே மஹாசாதசிவராக நமக்குத்தெரியும். அந்தப் படிமத்தை நமக்குள் உருவக்குவதே சிற்பியின் நோக்கம்.
"பேஷ்! பேஷ்! இது இது இதைத் தான் நான் எதிர் பார்த்தேன்"என்று சொல்ல வைத்த பதிவு. சபாஷ்! பாராட்டுக்கள்.
கீழிருந்து மூன்றாவது படமும், மேலிருந்து 2 வது படமும் தோன்றவில்லை. திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமிகள் ஆலய கோபுரத்ஹ்டிலும் இருப்பதகா கேள்விப்பட்டிருக்கின்றேனே. நல்லுர் கோயில் கோபுரத்தில் இருப்பது 1980 தான் அமைக்கப்பல்டது. மகாலிங்க ஸ்வாமிகள் சொபுடர சிற்பம்தான் அதற்கு ஆதாரம் என்றும் படித்திருக்கின்றேன்
ReplyDeleteராஜன் yesyesor@yahoo.com
கீழிருந்து நாலாவது படம் என்னது? அது சதா சிவமூர்த்தி அல்ல போலிருக்கிறதே. சதாசிவமூர்த்தி சிற்பம் நல்லுற் கோபுரம் மட்டும் அடையாளம் காட முடிகிறது. மற்றவகைகள் எநத கோயில் சிற்பம். திருவிடைமருதூர் ஆலயம் கோபுரத்திலும் ஒன்று இருப்பதாக அறிகிறேன். உங்களுக்கு தெரியுமா?
ReplyDeleteராஜன்