பறவாத தும்பி கருகாத வெங்கரி பண் புரண்டே
இறுகாத தந்தி உருகாத, மாதங்கம் இந்து நுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும், சுனையில்
பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”
தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன. அவற்றை அழகாக பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீர் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.
காவிரித்தாய் திருவலஞ்சுழித்தலம் வந்தவுடன் இறைவனை வலமாகச் சுற்றி வந்து அதன் மேல் செல்லாமல் ஆதிசேஷன் வெளிபட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துவிட்டாள்.
முற்றும் துறந்த முனிவரொருவர் பாதாளத்துள் குதித்து தம்மை பலியிட்டுக் கொண்டால் காவேரி வெளிப்படும்.என்ற அசரீரி வாக்குப்படி ஏரண்ட முனிவர்
தம்மையே தியாகம் செய்ய பாதாளத்தினுள் இறங்க அடுத்த கணம் காவேரி வலஞ்சுழிந்து மேலே வந்ததன் காரணமாகவே திருவலஞ்சுழி என்றானது.
ஏரண்ட முனிவர் சிலை வடிவத்தில் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீசுவேதவிநாயகர் - விநாயகரின் ராஜதானி (தலைநகரம்) என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் . வலமாக சுழிந்த தும்பிக்கையினை உடைய விநாயகரையும், வெள்ளை நுரை விநாயகரையும் தரிசிக்கலாம்.
பாற்கடலில் தேவாசுரர்கள் அமுதம் கடைந்தனர். வாசுகி பாம்பு, தனது கொடிய விஷத்தை கக்கியது. அதன் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பும் விநாயகரை வழிபட வேண்டும். எனவே விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார்.
உடனே தேவர்கள் பாற்கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவம் செய்து வழிபட்டதன்பின் பாற்கடலை கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர்.
தேவர்களால் செய்யப்பட்ட விநாயகர் குடியிருக்கும் இடம் என்பதால், இது விநாயகரின் தலைநகரம் ஆயிற்று.
சிவத்தலங்களிலேயே விநாயகருக்குறிய க்ஷேத்ரமாக திருவலஞ்சுழி கூறப்படுகிறது.
உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.
பாற்கடலில் உள்ள நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.
தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் எந்த இடத்தில்இருந்து நினைத்தாலும் அருள்பாலிக்கும் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாகத் அற்புதமாகத் திகழ்கிறார்..
சுமார் 10 அங்குல உயரமே உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள்.
பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, விநாயகரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி ஆவார்.
விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.
சிறிய உருவம். "மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு", என்ற வழக்கு இவருக்குத்தான் மிகப் பொருந்தும்.
வஸ்திரம், சந்தனம், புஷ்பம் ஆகியவைகளும் சாத்தப்படுவதில்லை.
இவரை கருங்கல் பலகணி வழியாக தரிசிக்கலாம்.
தத்துவங்கள் பல சொல்லும் கருங்கல் பலகணி
சுவேத விநாயகர் சந்நதியின் முன் உள்ள சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியது.
இது 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண கூடங்களும்,
10 யாளிகளையும் கொண்டது.
மூன்று பாகங்களாக குறுக்குவாட்டில் ஒரே கல்லினாலும், நெடுக்குவாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டுள்ளது.
நெடுக்குவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், மூன்று தத்துவங்களையும், 4 தூண்கள் 4 யுகங்களையும்,
24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஷ்வ்ர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும் குறிப்பதாக உள்ளன.
111 கண்கள் மந்திரங்களை குறிப்பன.
10 யாளிகள் எட்டு திசைகளுடன் பாதாளம் மற்றும் ஆகாசம் என 10 திக்கு நாயகர்களையும்,
49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும் குறிப்பதாய் அமைக்கப்பட்டுள்ளன.
இக் கருங்கல் பலகனியின் வழியே ஸ்ரீவாணி கமலாம்பிகா சமேத ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமானை தரிசிக்க சகல மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியங்கள் வந்து சேரும்.
மகாபாரதம் எழும் பொருட்டு எழுத்தாணியாகவும்,
கஜமுகாசுரனை அழித்திடும் பொருட்டு ஆயுதமாகவும்
தனது ஒரு தந்தத்தை ஒடித்து கொள்ளும் முன்னதாக,
தனது இரு அழகியமுழுமையான தந்தங்களுடன்
அற்புத மூர்த்தியாய் காட்சி தரும் திருக்கோலம் கண்கொள்ளாக்காட்சி..!
இரட்டை விநாயகருக்கு சந்நிதி உள்ளது.
விநாயகருக்குரிய படைவீடுகளில் இதுவும் ஒன்று என்பது சிறப்பு.
திருவலஞ்சுழி ஒரு சிவாலயம். பிரகன்நாயகி என்னும் பெரியநாயகியுடன் கபர்தீஸ்வரர் என்ற சடைமுடிநாதர் அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும்,
பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்திதேவியாகிய வாணியையும் திருவலஞ்சுழித்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் தடைபடுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால், எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.
தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர்.
அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் கட்டிய கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த ஸ்வேத விநாயகர் மூர்த்தி
அருள் பாலிக்கிறார்.
இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் சந்நதியினை அடுத்துள்ள சுவாமி சந்நதியின் நுழைவு வாயிலான சங்கரநாராயணன் திருவாயில்.
சிவ தலமாகிய இது மஹாவிஷ்ணுவால் வழிபடப்பட்டு சைவமும், வைணவமும் ஒன்றே என்ற பெரும் தத்துவத்தினை உணர்த்துவதை. விளக்கும் வண்ணம், இடது பாகம் விஷ்ணுவாகவும், வலது பாகம் சங்கரனாகவும் கொண்ட சங்கரநாராயணனின் சுதைச் சிற்பம் வாயிலில் காணப்படுகின்றது.
விநாயக சதுர்த்தியின் போது சுவேத விநாயகருக்கு பத்து நாள் பிரம்மோற்சவம் நடக்கிறது. இந்த விழாக் கோலம் கபர்தீஸ்வரருக்குக் கூட கிடையாது
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் திருவலஞ்சுழி திருத்தலம் உள்ளது.
வெள்ளை விநாயகர், சித்தி, புத்தி, வால்பாறை,
படங்களும் பகிர்வும் மிக அருமை.
ReplyDeleteவிநாயகர் புராணம் தொடரட்டும். படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteவெள்ளை விநாயகரையும் கருங்கல் பலகணியையும் இனிதே
ReplyDeleteதரிசித்து மகிழ்ந்தோம்.
கதை சொல்லும் படங்கள் கண்ணுக்குள் நிற்கின்றது தோழி !!
ReplyDeleteவாழ்த்துக்கள் .
விநாயக சதுர்த்தியை எதிர் கொள்ளும் சிறப்பான பதிவு
ReplyDeleteவெள்ளை விநாயகர் வீற்றிருந்தருளும் திருவலஞ்சுழி - திருத்தலத்தினைப் பற்றிய நல்ல பதிவு!.. பெருமானின் திருவருள் பொங்கிப் பெருகுவதாக!..
ReplyDeleteபடங்களும் பதிவும் மெய்சிலிர்க்க வைக்குது.
ReplyDeleteவளம் வர்ஷிக்கும் ஸ்வேத விநாயகருக்கு வந்தனங்கள்.
ReplyDeleteமிகவும் அழகான பதிவு. அற்புதமான படங்கள்.
பிள்ளையாரப்பா!
கடந்த 4 நாட்களுக்குப்பிறகு நான் அளிக்கும் முதல் பின்னூட்டம் இதுதான். அதுவும் நம் இல்லத்தில் புத்தம் புதிதாக இன்று வந்து இறங்கியுள்ள மிகப்பெரிய 22” திரை அளவுள்ள கணினியிலிருந்து தட்டும் முதல் பின்னூட்டம் ... என் பிள்ளையாரப்பாவுக்கு மட்டுமே.
பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
புதுக்கணினியிலிருந்து அருமையான முதல் பின்னூட்டம் ...!
Deleteமகிழ்ச்சியான நன்றிகள்...!
thanks for sharing info about thiruvalanchuli
ReplyDeleteமூன்று நாளில் மூன்று பிள்ளையார் பதிவா! எங்கிருந்து பிடிக்கிறீங்களோ!
ReplyDeleteபிள்ளையாரின் ராஜதானி - புதுத் தகவல். தஞ்சையில் அத்தனை பிள்ளையார் கோவில்களா!
அருமையான பகிர்வு .பிள்ளையார் சதுர்த்தி விழா நடப்பதால் தினம் பிள்ளையார் பகிர்வு என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅத்தனையும் அருமை.
வலம் சுழித்த தும்பிக்கை உடைய விநாயகர் இருப்பதால் திருவலஞ்சுழி என்றல்லவா நினைத்திருந்தேன். இப்படி ஓர் பெயர் காரணம் இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி. (இது விநாயக சதுர்த்தி வாரமா? வருசையாக பிள்ளையார் பற்றிய பதிவுகளாக வருகின்றனவே கொண்டாடுங்கள் அருமை)
ReplyDeleteசுவேதவிநாயகர்,திருவலஞ்சுழி தகவல்கள் அருமை.பிள்ளையார் அனைத்துப்படங்களும் கொள்ளை அழகு. அதுவும் வெள்ளைப்பிள்ளையார் கூடுதல் அழகு.நன்றி.
ReplyDeleteதிருவலஞ்சுழி பெயர் காரணம் தெரிந்து கொண்டேன். கருங்கல் பலகணி இந்த நூற்றாண்டின் அதிசயம். விரிவான விளக்கங்கள் அருமை!
ReplyDelete