Tuesday, September 10, 2013

யோகங்கள் அருளும் ஸ்ரீ யோகவிநாயகர்




கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 
கணபதி என்றிடக் காலனும் கைகொழும் 
கணபதி என்றிட கருமமாதலால் கணபதி 
என்றிடக் கவலைகள் தீருமே

களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்
லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்
சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்


கோவை மாநகரில்  யோகவிநாயகர் தலம் பிரசித்தி பெற்றது..!  

 கோவை குனியமுத்தூரில் யோகவிநாயகர் கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றார். 

 குனியமுத்தூரில் விநாயகர் கோயில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தவுடன் அரிதாக உள்ள விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய எண்ணி யோக விநாயகரை தேர்வு செய்து, அதற்கான விபரங்களை சேகரிக்கும் பொருட்டு ஆன்மீக அறிஞர்களையும், ஆதினங்களையும் சந்தித்து அவர்களின் அறிவுரைப்படியும் சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் யோக விநாயகர் சிலையை உருவாக்கினர்.

கோயிலின் நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மேற்குப் பக்கம் புற்றும், ராகுவின் திருமேனியும் உள்ளது. 

கோயில் உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர்  காட்சி தருகின்றனர். 

 விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சங்கடஹர
சதுர்த்தி நாட்களில் சிறப்பு அர்ச்சனையும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகளும் நடைகிறது.

குழந்தைப்பேறு, தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், யோகா, தியானத்தில் சிறந்து விளங்கவும்  யோகவிநாயகரை வழிபடுகின்றனர்.

 விநாயகர், சபரிமலை ஐயப்பனைப்போல யோக நிலையில், யோக பட்டம் தரித்துக் கொண்டு இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு தன் நான்கு கரங்களில் பாசம், அக்ஷமாலை, யோகதண்டம், கரும்பு ஆகிய யோக அம்சங்களுடன் வேறெங்கும் காணமுடியாதபடி கோயில்கொண்டுள்ளார். 

யம, நியமம், ஆசனம், பிராணாயாமம், பிர்தயாஹாரம், தாரணம், தியானம், அமைதி ஆகிய அஷ்டாங்க யோக லட்சனங்களோடு தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர் தான் யோக விநாயகர். 

இந்த யோகவிநாயகரை தரிசிப்பதால் யோகம் எட்டும் உடனே கிட்டும். 

தினமும் கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றப்படுகிது. 

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர்.

கோவை உக்கடத்தில் இருந்து நாலரை கி.மீ. தூரத்தில் பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் வழியில் நிர்மலா மாதா பள்ளி அருகில் ஆலயம் அமைந்துள்ளது..!.

YOGA VINAYAGAR, Before Installation







23 comments:

  1. சிறப்பான தகவல்கள் + படங்கள்.... நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. யோகங்கள் அருளும் ஸ்ரீ யோக விநாயகருக்கு அடியேனின் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete

  3. கோயமுத்தூர் + குனியமுத்தூர் ஆஹா என்னப்பொருத்தம்!

    வாழ்ந்தால் கோயம்பத்தூரில் வாழ வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்துகிறது, தங்களின் அன்றாடப் பதிவுகள்.

    >>>>>

    ReplyDelete
  4. ஊஞ்சலில் ஆடும் விநாயகரைப் பார்க்க மனதுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது.

    கீழ்ப்பலகை சற்றே வளைந்தது போல உள்ளது.

    ஆடும் + ஆட்டிப்படைக்கும் ஆசாமியின் வெயிட் என்ன சாதாரண வெயிட்டா என்ன?

    மிகவும் வெயிட்டான பதிவர் + வெயிட்டான பதிவு. ;)

    >>>>>

    ReplyDelete
  5. நேற்றைய பிரஸாதங்களே இன்றுமா?

    இருப்பினும் FRESH ஆக அப்படியே சுவையாக, சுத்தமாக, சுகாதாரமாக என்றும் பளிச்சென்று தான் உள்ளது.

    புனர்பூஜையல்லவா இன்று, அதனால் இருக்கக்கூடும்.

    பிரஸாதம் எடுத்துக்கொண்டேன், அதன் சுவையோ சுவை. மிக்க நன்றி.

    >>>>>

    ReplyDelete
  6. எத்தனை முறை எத்தனைத்தலைப்புக்களில், எத்தனை எத்தனை விநாயகர்களை நீங்க காட்டினாலும், எனக்கு அலுக்கவே அலுக்காத ’பிள்ளையாரப்பா’ தான் எனக்கு மிகவும் பிடித்தமான இஷ்ட தெய்வம்.

    பிள்ளையாருடனான என் அனுபவங்களை ஒருசில பதிவுகளில் எழுதியிருந்ததாக ஞாபகம். அதில் ஒருசில இணைப்புகள் இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html

    http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html

    >>>>>

    ReplyDelete
  7. நேற்று நான் கஷ்டப்பட்டு எழுதிய ஓர் மிகப்பெரிய பின்னூட்டம் எங்கோ வெளியிடப்படாமல் காணாமல் போய் உள்ளது. ;(((((

    பெரிச்சாளி கடித்துத் தூக்கிச் சென்றிருக்கும் போலத் தெரிகிறது.

    இன்றாவது எல்லாம் வெளியிடப்பட வேண்டுமே என ஒரே கவலையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. சிறப்பான இந்தப்பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ’ஆனந்தம் .... ஆனந்தம் ..... ஆனந்தமே’ என நர்த்தனம் ஆடும் அந்தக்கடைசி பிள்ளையாரைப் பார்த்தால், கோப தாபங்கள் எல்லாம் பறந்து போய், பரம ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது.

    மிகவும் சந்தோஷம்.

    oOo

    ReplyDelete
  9. மேலிருந்து கீழ் 2 + 4 வரிசைப்படங்கள் இன்னும் திறக்கவே இல்லை. தினமும் இதுபோல ஆகிறது. ;(

    ஏதோ காட்டியவரை, பார்த்து ரஸித்தவரை சந்தோஷமே.

    ReplyDelete
  10. மகிழ்வான நற் செய்தி .யோக விநாயகர் ஆலயம் பற்றியும் அவரை
    வழிபடுவதனால் கிட்டும் நன்மைகள் பற்றியும் சிறப்பாகப் பதிவிட்டுள்ளீர்கள்
    தோழி .விநாயகப் பெருமான் தங்களுக்கும் எல்லா நலனும் வளமும் அருள
    என் இனிய வாழ்த்துக்கள் .பகிர்வு அருமை!

    ReplyDelete
  11. யோகவிநாயகர் பற்றிய‌ தகவல்கள்,அழகான பிள்ளையார் படங்கள்.அருமையான பகிர்வு.நன்றிகள்.

    ReplyDelete
  12. யோக விநாயகர் தகவல் - படங்கள் அருமை.
    மகிழ்ச்சி. பாராட்டுகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. யோக விநாயகரைப்பற்றிய பல தகவல்களைப் படங்களுடன் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நேரில் சென்று தரிசிக்க முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவின் மூலமாக தரிசனம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. யோக விநாயகர்! பெயரே யோகமாக இருக்கின்றது.
    படங்களும் பதிவும் எப்பவும்போலவே அற்புதந்தான்!

    மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  15. sure i will visit this Ganapathy during my next visit.
    viji

    ReplyDelete
  16. யோக விநாயகரைப் பற்றிய அருமையான தகவல்களுடன் சிறப்பான பதிவு!..

    ReplyDelete
  17. விநாயகர் ஸ்பெசல்...! படங்கள் பளிச்...!

    ReplyDelete
  18. அற்புதமான படங்கள். சுலபமாக மனனம் செய்யக் கூடிய தோத்திரங்கள்.
    யோக விநாயகர் எல்லோருக்கும் வளங்களை வழங்குவார்.
    மிக நன்றி இராஜராஜேஸ்வரி. பிரசதங்கள் சுவையுடன் இருக்கின்றன.

    ReplyDelete
  19. அடுத்தமுறை கோவை போகும் போது யோக விநாயகரை பார்த்துவிட வேண்டும். யோக விநாயகர் பற்றிய செய்திகளுக்கு நன்றி.
    அழகான படங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  21. இப்போ எல்லாப்படங்களும் ஜோராகக் காட்சியளிக்கின்றன.

    இனி இப்போதைக்குக்கவலையில்லை தான்.

    அப்பப்பா, மீண்டும் பார்ப்போமா என்று ஒரே விசாரமாப்போச்சு.

    ReplyDelete
  22. உங்கள் பதிவுகளின் ஹை லைட் புகைப்படங்கள் தான். ஒவ்வொன்றும் அதி அற்புதமாக இருக்கின்றன.
    யோக விநாயகரின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete