உத்கீத ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய ஸர்வம் போதய போதய -
- ஹயக்ரீவர் மூலமந்திரம்
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத் -ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே
நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:
வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே
ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:
கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் வீட்டுப்பூஜையறையில் இந்த ஸ்லோகத்தை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ஞானமயமாக விளங்கும் ஹயக்ரீவர் சகல வித்தைகளுக்கும் (கல்வி)ஆதாரமாகத் திகழ்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோயிலில் வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் அவதரித்த தினம்
ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தியாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது..!
யோக ஹயக்ரீவருக்கு விஸ்வரூப தரிசனம், திருவாராதனம் திருமஞ்சனம், ஆகியவை தரிசிக்கலாம்..!
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க யோகஹயக்ரீவரை வணங்கிப் பயன்பெறலாம்..!
கல்வியில் உயர்வு, கலைகளில் திறமை, தெளிந்த ஞானம், தொலைநோக்குப் பார்வை, எதிலும் வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என்ற வேகமும், விவேகமும் பெற, வழிபட வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர்.
கல்வி தெய்வம் கலைமகளுக்கு குருவாகத் திகழ்பவர் ஹயக்ரீவர்.
சென்னை-திண்டிவனம் சாலையில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்தில்
யோக ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
சின்ன காஞ்சிபுரம், விளக்கொளிப் பெருமாள் கோயில், தேசிகன் ஸ்வாமி சந்நதியில் லட்சுமி ஹயக்ரீவர் சேவை சாதிக்கிறார்.
வரதராஜப் பெருமாள் கோயிலிலும் ஹயக்ரீவரை சேவித்திடலாம்.
ஆரணி, ஸ்ரீரங்கம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள திருஇந்தளூர், தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள மாமணிக்கோயில், புன்னைநல்லூர், சென்னைக்கு அருகில் வில்லிவாக்கம், மேடவாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மாம்பலம், மயிலாப்பூர் ஆகிய இடங்களிலும் ஹயக்ரீவர் சந்நதி உள்ள பெருமாள் கோயில்கள் உள்ளன.
தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு, தடையின்றி வெற்றிகளை அளிப்பதோடு அபார ஞானத்தையும் அள்ளித் தருபவராக திகழ்கிறார் ஹயக்ரீவர்.
ஹயக்ரீவர் பற்றி மேலும் தகவல்கள் இந்த பதிவில் பெறலாம்..கிளிக்குக....
VERY GOOD MORNING !
ReplyDeleteபடித்துவிட்டு மீண்டும் வருவேன்.
>>>>>
வணக்கம்
ReplyDeleteஅம்மா
நாங்கள் வேறு நாட்டில் இருப்பதால் இந்தியாவில் உள்ள ஆலயங்களை தரிசிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல இருந்தாலும் உங்கள் வலைப்பூ வழியாக எங்கே எங்கே பிரபலமான ஆலயங்கள் உள்ளது என்பதை பதிவின் மூலம் பார்க்கும் பாக்கியம் கிடைததுள்ளது
பதிவும் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அபார ஞானம் அள்ளித்தரும் ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி ’ என்னும் தங்களின் பதிவினைப்படிக்கும் பாக்யம் இன்று மீண்டும் பெற்றேன்.
ReplyDelete>>>>>
தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள பழைய இணைப்புக்கு மீண்டும் சென்று படித்துப்பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteமொத்தப்பின்னூட்டங்கள் 27 இல் அடியேனுடையது மட்டும் மூன்றில் ஒரு பாகமாக உள்ளது. [9/27]
’நினைத்தாலே இனிக்கும்’ என்பதுபோல ஒருசில பழைய சம்பவங்கள் மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது.
>>>>>
ஹய்க்ரீவர் மூலமந்திரம், ஹயக்ரீவர் காயத்ரி என ஆரம்பித்து, நிறைய படங்களையும் காட்டி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கே குருவானவர் ஹயக்ரீவர் என அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஇதுபோன்ற ஆன்மிக விஷயங்களைப் பதிவாக்கி அள்ளித் தருவதில் தாங்களே இன்று ஹயக்ரீவராகவும், தக்ஷிணாமூர்த்தியாகவும், கலைவாணியாகவும் எங்கள் கண்களுக்குக் காட்சியளித்து வருகிறீர்கள்.
>>>>>
ஹயக்ரீவருக்கான கோயில்கள் அமைந்துள்ள இடங்களைத் தொகுத்துச் சொல்லியுள்ளது சிறப்பாக பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteசெட்டிப் புண்ணிய தலத்தினைப்பற்றி, உங்கள் புண்ணியத்தால் அறிய முடிந்தது.
சமீபத்தில் சென்னை சென்று காரில் திரும்பும் போது, திண்டிவனம் அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயிலை காரில் பயணித்தவாறே பார்க்க முடிந்தது.
>>>>>
குதிரை முகமும், குதிரையுடன் சம்பந்தமும் கொண்டுள்ள ஹயக்ரீவருக்காகவே கடைசியில் பேரெழுச்சியுடன் மூன்று வெள்ளைக் குதிரைகளைக் காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஆனால் எனக்கு உங்களின் அபார குதிரை சக்தியுடன் கூடிய [Horse Power] கடின உழைப்பும், வெற்றிமேல் வெற்றிகளுமே ஞாபகத்திற்கு வந்து என்னை மகிழ்விக்கிறது.
முதல் குதிரை உற்சாகமாக ஓடிஓடி 1000 மைல்களை [பதிவுகளை] கடந்து வந்து சூரிய ஒளியில், சூர்யகோடிப் பிரகாசமாக விளங்குகிறது. ;)
>>>>>
அடுத்த குதிரை ’1000 எம்மாத்திரம் - என் இலக்கு இன்னும் அதிகமாக்கும்’ என மீண்டும் துள்ளி ஓடத் துவங்கி விட்டது.
ReplyDeleteஇன்றைய நிலவரப்படி 1036 ஆவது மைலில் வெற்றி நடை போட்டு ஓடுகிறது. ;)
>>>>>
மூன்றாவது குதிரை சூப்பர். பின் இரு கால்களால் மட்டுமே நின்று கொண்டு, முன் இரு கால்களை ஒரே தூக்காகத்தூக்கி பேரெழுச்சியுடன் ’இந்த [பதிவுலகம் என்ற] கடலையே ஒரே தாண்டாகத் தாண்டி வெற்றிநடை போடுவேனாக்கும் இந்த ராஜாத்தி’ என தன் குதிரைவாலையும் தூக்கிக் கொக்கரிப்பதாகத் தோன்றுகிறது. ;)))))
ReplyDeleteவெற்றி மேல் வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
-oOo-
ரசித்தேன்.
ReplyDeleteஅருமை அம்மா... வைகோ ஐயாவின் கருத்துக்களும் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteதிரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு, வணக்கம்.
ReplyDelete//வைகோ ஐயாவின் கருத்துக்களும் மிகவும் அருமை//
மிக்க நன்றி நண்பரே !
அன்புடன் VGK
thanks for sharing information about hayagreevar
ReplyDeleteஹயக்ரீவர் பற்றிய பதிவு சிறப்புடைத்து.
ReplyDeleteஹயக்ரீவ உபாசனை மேன்மேலும் கல்வி அறிவு பெறுவது மட்டுமன்றி , நாம் அதிகம் படித்து விட்டோம், நமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு ஆணவத்தையும் அகங்காரத்தையும் போக்க வல்லது, என்றும் சொல்லப்படுகிறது.
நிகமாந்த மகா தேசிகன் ஹயக்ரீவ ஸ்துதி இன்னும் பல விஷயங்கள் சொல்லும்.
சுப்பு தாத்தா.
எந்த எந்த ஊரில் எல்லாம் அருள் கிடைக்கும் என்பதை அழகாக தெளிவாக சொன்னீர்கள். படங்களும் சிறப்பு.
ReplyDeleteபதிவு சிறப்பு.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பரி முகத்துப் பரமனைக் குறித்த பதிவும் அருமை!.. பதிவின் படங்களும் அருமை!..
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக அருமை.
ReplyDeleteவெள்ளைக் குதிரை உள்ளம் கொள்ளை கொள்கிறது.
மயிலாடுதுறையில் திருஇந்தளூரில் இருக்கும், ஹயக்ரீவரைதரிசித்து இருக்கிறேன். கோவையில் வடவள்ளியில் தரிசனம் செய்து இருக்கிறேன்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.