Sunday, September 8, 2013

உலக எழுத்தறிவு தினம்









உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,‘மூத்தோன் வருக’ என்னாது, 
அவருள்அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,



கற்கை நன்றே கற்கை நன்றே கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு”

உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக உலகம் முழுவதும் உலக எழுத்தறிவு தினமாக 
(World Literacy Day) செப்டம்பர் மாதம்  8ம் தேதி 
கொண்டாடப்பட்டு வருகிறது. -

வித்யாரம்பம்
கல்விக்கு அடிப்படையாக விளங்கும் எழுத்தறிவு  
ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. 

எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு அவசியம். 
எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம்.
கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடிப்பதுடன் முடிந்துவிடுவது அல்ல. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது. -

ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். 
எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.

எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. 
எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். 
எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எனவே  இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 
எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டார்கள்..!.

கடந்த 1965 ஆ ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தெஹ்ரான் நகரில்  நடந்த சர்வதேச கல்வி மந்திரிகள் மாநாட்டில் உலக அளவில் எழுத்தறிவு இன்மையால் ஏற்படக் கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினம் ஆக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.
இதன் அடிப்படையில் 1965 நவம்பர் 17ஆம் தேதி யுனெஸ்கோ நிறுவனம், செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்து.  1966 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது.

எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. 

வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேண்டும். 
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.






21 comments:

  1. உலக எழுத்தறிவு தினத்திற்கு சிறந்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உலக எழுத்தறிவு தினச் செய்திகள் அறிந்தேன் நன்றி
    எழுத்தறிவு பெருகட்டும்

    ReplyDelete
  3. ஹ்துமே அற்புதம்.உலக எழுத்தறிவு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எழுதப் படிக்கத் தெரியாதவன் இயலாதவன் ஆகிறான்

    ReplyDelete
  5. 1]

    ”உலக எழுத்தறிவு தினம்”

    ஆஹா இப்படியொரு தினம் உள்ளது என்று இன்றுதான் ’எண்ணுக்கும் எழுத்துக்கும் அதிபதியான கலைவாணியாகிய’ தங்களின் மூலம் அறிந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  6. 2]

    பூனையையும், ஆந்தையையும், தேனீயையும், குரங்கையும், கரடியையும் கூட படிக்க வைத்துள்ள பெருமை என் அம்பாள் அவர்களையே சாரும்.

    >>>>>

    ReplyDelete

  7. 3]

    படங்கள் எல்லாம் குறிப்பாக அனிமேஷன் படங்கள் எல்லாம் அற்புதமாக உள்ளன.

    எங்கிருந்து தான் பிடிப்பீர்களோ? !!!!!

    என்னுடைய பழைய PC/LAPTOP இல் DESKTOP இல் கஷ்டப்பட்டு, நான் தங்களிடமிருந்து திருடி வைத்திருந்த படங்கள் எல்லாம் ஒரேயடியாகக் காணாமல் போச்சு. ;(((((

    HARD DISK ஐ COPY செய்தும் புதிய PC யில் அவை இடம்பெறாமல் போனது என் துரதிஷ்டமே.

    ஆனால் குறிப்பாக ஏதாவது ஒருசில படங்களை நான் விரும்பி ஆசையாகக் கேட்டால், எனக்காக அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் கொஞ்சூண்டு உள்ளது,

    >>>>>

    ReplyDelete
  8. 4]

    கடைசிபடம் மிகவும் அருமையாக உள்ளது.

    கொடிமின்னலை எப்படித்தான் படமாக எடுத்தார்களோ? !!!!!

    >>>>>

    ReplyDelete
  9. 5]

    கீழிருந்து நான்காவது படத்தைப்பார்த்ததும், எனக்கு என்னதெரியுமா நினைவுக்கு வந்தது?

    சுத்த சோம்பேறியாக பெட் காஃபி அருந்தியபடி படுத்திருக்கும் எனக்கு, தேவதையாகத் தாங்கள் பறந்து வந்து கணினியை என் முன் நீட்டிப்பிடித்து, ”என்னைப்போலவே சுறுசுறுப்பாக தினமும் ஒரு பதிவு கொடுங்கள் ஸ்வாமீ”, என எழுச்சியூட்டுவதாக கற்பனை செய்து மகிழ்ந்தேன். ;)

    >>>>>

    ReplyDelete
  10. 6]


    நான் கற்றது கைமண் அளவே, ஆனால் நான் கல்லாதது ’உ ங் க ள்’ அளவு

    [ என் உலகம் = அறிவாளியான, அதிபுத்திசாலியான, சமத்தோ சமத்தான நீங்கள் மட்டுமே]

    >>>>>

    ReplyDelete
  11. 7]

    அருமையான இன்றைய பதிவுக்கு நன்றியோ நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பிள்ளையாரப்பாவின் பிறந்த நக்ஷத்திரமான ”ஆவணி சித்ரா” இன்று மதியமே தொடங்குகிறது.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    ooooo

    ReplyDelete
  12. கற்கை நன்்றே கற்கை நன்றே. பிழ்ச்சி புகினும் கற்கை நன்றே. நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதில் தங்அளுக்கும் இருக்குமார்வத்தை என்னவென்று சொல்வது.நன்றிமா.

    ReplyDelete
  13. சிறப்பான தினத்திற்கேற்ற பகிர்வு... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  14. எழுத்தறிவு தினத்திர்கேர்ற பதிவு.
    படங்கள் அத்தனையும் அருமை. அதுவம் அந்தக் கரடி படம் மிக மிக அருமை.

    ReplyDelete
  15. உலக எழுத்தறிவு தினத்தைப்பற்றி இதைவிட சிறப்பாக மக்களிடம் எடுத்துச் செல்லமுடியாது. அருமையான பாராட்டுக்குறிய பணி வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவைப் படிக்கக்கூட எழுத்தறிவு தேவை-- ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த அளவில் இப்பணிக்கு உதவலாம்

    ReplyDelete
  16. எழுத்தறிவு தினத்தைக் குறித்த பதிவு - சிறப்பு!..கருத்தாழம் மிக்கது!.. நன்றி!..

    ReplyDelete
  17. மாறுபட்ட சிறப்பு பதிவு. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
    படங்கள் வழக்கம்போல் அருமை.

    ReplyDelete
  18. எழுத்தறிவு தினத்தை ஒட்டிய பதிவு மிக அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  19. இதுவரை தெரியாத தினம் இது. இன்றைய பதிவில் கண்ணாடி போட்டுக்கொண்டு படிக்கும் பூனையார், அணிலார், ஆந்தையார், தேனீயார் - நானும் படிக்கப் போகிறேன்!
    உங்கள் பதிவுகளில் படங்கள் எல்லாமே அசத்தல்!

    ReplyDelete