Tuesday, September 17, 2013

திருவருள் தரும் திருஈங்கோய்மலை




அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

என தேவாரம் போற்றும் அருமையான தலம் ஈங்கோய்மலை..
Image
Image
"திருஈங்கோய்மலை இறைவனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர் " என்று  முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்திருஞானசம்பந்தர் ..!

சங்ககாலப் புலவர் நக்கீரர்  இறைவன் மீது ஈங்கோய் எழுபது என்ற பாமாலை பாடியுள்ளார்.

சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருக்கும் கோவில்கள் மிகக்குறைவு. அவற்றில்  திருச்சி மாவட்டம் காவிரி வடகரைத் தலமான ஈங்கோய்மலை ஒன்று... 
அகத்தியர் ஈ உருவத்தில்  இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. 
Image
அம்பாள் இறைவனை வழிபட்ட இடமாதலின்  சிவசக்திமலை என்றும் பெயருண்டு. .

சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக 
உமைக்கு உறுதியளித்த தலம்..!

சிவபெருமான தவம் செய்த  பெருமையும் கொண்டது .. தவம் செய்த ஈசன் ஈவடிவில் மலர்களில் இருந்த தேனை ஸ்வீகரிதுக்கொண்டதாலும் ஈங்கோய்மலை என்று பெயர் வந்திருக்கலாம்..!

மூலவர் மரகதாலேஸ்வரர்  மரகதம் போன்று பச்சை நிறத்தில் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.

சிவபெருமானின் சந்நிதியில் உள்ள தீபம் காற்று பட்டாலும் அசையாத கொழுந்துடன் விளங்குகிறது. அதனால் சுவாமிக்கு அசல ஈசுவரர் என்ற பெயரும் உண்டு.

சிவராத்திரி நாளின் முனபின் நாடகளில் சூரிய ஒளி இறைவன் மீது படும் சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிக்கிறது..!

காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கிநாதர் எனும் கூற்றுப்படி, ஒரேநாளில் காலையில் கடம்பவனேஸ்வரரையும், மதியம் அய்யர்மலையிலுள்ள ரத்தினகிரீஸ்வரரையும், மாலையில் திருஈங்கோய்மலை மரகதாஜலேஸ்வரரையும் ஒரே நாளில் நடந்து சென்று  தரிசித்தால் 108 சிவாலயங்களை தரிசித்த பயன் நிச்சயம் உண்டு. -

கார்த்திகை மாதத்து திங்கட் கிழமைகளில் வழிபடுதல் மிகவும் விஷேசம் ..

தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் ...மலை ஏறும் படிகள் சுமாராக அமைந்திருப்பதாலும், வழியில் இளைப்பாற ஒரேஒரு மண்டபத்தைத் தவிர வேறு வசதி இல்லாததாலும்,சற்றே சிரமம் த்ருகிறது..

மலை அடிவாரத்தில் கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கல் விளக்குத் தூண்  காணப்படுகிறது.

 அடிவாரத்தில் போக முனிவர் சந்நிதி உண்டு..~

கோயிலுள்  தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண முடிகிறது.

அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள், கொடிமரங்கள் உள்ளன. 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. 

மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது.

கருவறை சுற்றுப்பிரஹாரத்தில்  மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர்.

 ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று
Image
தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட வந்தபோது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார்.

மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்று மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார்.

பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார்.

அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.

சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
பிரகாரத்தில் ஒரு தட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி என வித்தியாசமான வடிவங்களில்  குரு பகவானை தரிசிக்கலாம் ..!
Image
ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்ட சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. 

அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில் என்பர்.

இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார்.

மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

இவருக்கு "திரணத்ஜோதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
Image
 மணமேடு
தொட்டியம் வட்டம்
திருச்சி மாவட்டம், 621209

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளி - நாமக்கல் பேருந்து வழியில் அகண்ட காவிரியின் வடகரையிலுள்ளது.
ImageImageImage
Image

24 comments:

  1. வணக்கம்
    அம்மா

    பதிவு பற்றி விளக்கம் மிக அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. என் வேண்டுகோளை ஏற்று இந்த சிறப்புப் பதிவு தந்தமைக்கு
    என் கோடானு கோடி நன்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
    ஸ்தல வரலாறு மற்றும் படங்கள் கண்டு இன்புற்றேன் .
    மரகத லிங்கம் , ஸ்படிக லிங்கம் தரிசனம் சிறப்பல்லவா.
    அங்கு செல்லும் போது இந்த தகவல்கள் எல்லாம் நினைவுக்கு வரும் .
    நல்லது. நன்றி.

    ReplyDelete
  3. ஈங்கோய்மலை அறியாதன அறிந்தேன் நன்றி

    ReplyDelete
  4. ”தென்னாடுடை சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” பழம் பெரும் தல சிறப்புகளுடன் ...கலையம்சம் கொண்ட படங்களுடன் நேர்த்தியானதொரு பகிர்வு... தொடருங்கள் ....வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. படங்களைப் பார்க்கையிலே நாங்களே அங்கே சென்றது போன்ற உணர்வு!! நன்றி அம்மா..

    ReplyDelete
  6. எழில் மிகுந்த அழகான தெய்வீக மலை. நல்ல தகவல்கள். நன்றி அம்மா.

    ReplyDelete
  7. மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த திரு ஈங்கோய் மலை ஈஸ்வரைரைப் பற்றி அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி. அதுவும் மரகத லிஞ்கம் என்றால் தரிசனம் செய்ய ஆவல் மேலிடுகிறது.
    அற்புதமான படங்கள். சேலம் திருச்சி போகும் சாலையில் இந்த மலையைப் பார்த்த நினைவு .தவறாய் இருக்கலாம்.
    மிக நன்றிமா.

    ReplyDelete
  8. I was longing to go this place and not yet done. Thanks Rajeswari..
    I had seen from my home through you.
    Nice post.
    viji

    ReplyDelete
  9. 'திருவருள் தரும் திருஈங்கோய்மலை' பற்றிய பதிவினைப் படித்தேன்.

    பெயர்க்காரணங்கள் பலவும் ஆச்சர்யமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete

  10. படங்களும், தேனாக இனிக்கும் விளக்கங்களும் வழக்கம் போல அருமை.

    >>>>>

    ReplyDelete

  11. திருச்சி - நாமக்கல் வழித்தடத்தில், திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் அகண்ட காவிரிக்கரையில் கோயில் அமைந்துள்ள இடமான மணமேடு, அதன் விபரங்கள், கோயில் திறந்திருக்கும் நேரம், மொத்தமுள்ள படிகள், நடுவில் இளைப்பாற வசதியின்மை என ஒன்றுவிடாமல் சிறப்பாக எழுதியுள்ளது, இந்த ஸ்தலத்திற்குச் செல்ல விரும்புவோருக்கு மிகவும் பயனளிக்கக்கூடும்.

    தொட்டியத்தில் ருசியான ரஸ்தாளி வாழைப் பழங்களை, சீப்புசீப்பாகவும், சீப்பாகவும் [ Cheap ] கூட, பஸ் ஸ்டாண்டிலேயே கூவிக்கூவி விற்பார்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. மலை ஸ்தலத்தில் பாடல் பெற்றுள்ள ஸ்தலங்களே மிகக்குறைவு அதில் இதுவும் ஒன்று;

    ஒரே இடத்தில் டபுள் ஆக்ட் போல இரண்டு துர்க்கைகள்;

    பச்சை நிறத்தில் மரகதத்தால் ஆன சுயம்பு லிங்கம்;

    கிருத்திகா ஸோமவார தரிஸன விசேஷம்;

    தீபாராதனை ஜோதி லிங்கத்தில் பிரதிபலிப்பது

    என பல விஷயங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  13. தல யாத்திரை செய்த திருப்தி!.. மிக்க நன்றி!..

    ReplyDelete
  14. பெங்களூரிலிருந்து காரில் திருச்சி போகும் வழியில் இந்த மலையைப் பார்ப்பதுண்டு. ஒருமுறை ஏறி இறைவனை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். முடியுமா?

    ReplyDelete
  15. thanks for sharing about thirueengoi malai

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றி...... திரு ஈங்கோய் மலை சென்றதில்லை.

    ReplyDelete
  17. ஈங்கோய் மலை அசல் மரகதலிங்கம் களவு போய்விட்டது. இப்போது இருப்பது நகல்தான்.

    மலை அடிவாரத்தில் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம் உள்ளது.அத‌னை பெண்துறவியர் அமைப்பு நடத்துகின்றது. ஸ்ரீ லலிதாம்பிகை வழிபடுதெய்வம்.
    பலரும் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை இங்கே நடத்திக் கொள்கின்றனர். சன்யாசினிகளே ஹோமம் செய்து நடத்திக் கொடுக்கின்றனர். சுவாமி சிவானந்தரிடம் தீட்சை பெற்ற மூத்த சன்னியாசினி உள்ளார்.

    ReplyDelete
  18. சூப்பர் பதிவு.. அருமையான தொகுப்பு, கடசியில் இருக்கும் பிள்ளையார்.. ஓவரா கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டார்போல் இருக்கூஊஊஊஊ:).

    ReplyDelete
  19. ஈங்கோய்மலை போக வேண்டும் என்பது வெகு நாள் ஆசை. உடலில் பலம் இருக்கும் போதே ஏறி தரிசனம் செய்து விட வேண்டும்.
    அய்யர்மலை மட்டும் போய் வந்தேன் அதுவே படிகள் அதிகமாய் இருப்பதால் ஏற சிரமம் பட்டோம். ரத்தினகிரீஸ்வரர் தான் பலத்தை தந்தார்.
    ஈங்கோய்மலை பற்றிய விவரங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. அழகிய படங்களும்
    பயனுள்ள தகவல்களும் அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ஈ---போன்ற முக்கிய தகவல்கள் அறிந்தது மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. ஈங்கோய்மலை பற்றிய பல தகவல்களை படங்களுடன் பதிவிட்டிருக்கிறீர்கள்.அருமை

    ReplyDelete
  23. any one rsk tiruchi reading this message this is sujatha 1984 batch pass out friend of prabha and indu
    sujatha

    ReplyDelete