சின்மயமானந்த சிவ மனோகரி
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் .....
ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.
மகேசனின் மீது மலர்க்கணை எய்த மன்மதன் சினம் கொண்ட சிவனின் கோபக்கனலால் பொசுகங்கி குவிந்து கிடந்த சாம்பலைக் கண்டு குதூகலித்த குட்டி விநாயகர், அழகிய சிலையாக்க சிலையின் அழகைக் கண்டு வியந்த அன்னை பார்வதி, சிலைக்கு உயிர் கொடுத்தால் விநாயகனுக்கு விளையாட்டுத் துணையாய் இருக்குமே என்று நினைத்தாள்.
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் .....
ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம் பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் | ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.
முக்காலமும் அறிந்த முக்கண்ணன் அன்னையின் மனம் உணர்ந்து சிலையை தன் தாமரைக் கண்களால் நோக்க அரனின் அமுதமயமான பார்வை பட்டு சிலை சிலிர்த்து உயிர் கொண்டது.
தன் கோபத்தால் உண்டான சாம்பல் எனவே உயிர் பெற்ற அந்த சிலைக்கு பண்டாசுரன் என்று பெயரிட்டார் ஈசன்.
தன் சக்தியால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பரமனின் மனம் குளிர தவமியற்றினால் வேண்டும் வரம் யாவும் கிட்டும் என்று சக்தி பெறும் சூத்திரத்தை நண்பனான பண்டாசுரனுக்கு சொன்னார் வேழமுகத்து விநாயகர்...!
கடுந்தவமிருந்து, மும்மூர்த்திகள் தன் வசமாவது, சாகாவரம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் வரமாகப்பெர்று மகிழ்ந்தான் பண்டாசுரன் ..!
தனது லட்சியத்தில் வென்ற ஆனந்தத்தில் அன்னை பார்வதி தேவியிடம் சென்று நடந்ததை எல்லாம் சொன்னான், பண்டாசுரன்.
அதைக் கேட்டு கலக்கமடைந்த உமை, தேவர்களோடு அவன் எப்போதும் பகை கொள்ளக் கூடாது என்று அறிவுரை கூறினாள்.
பண்டாசுரன் பாதாள லோகத்திற்கு அரசனானான். மூவுலகையும் ஆளப் பிறந்தவன் என்று கர்வத்தீயை வளர்ந்து மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் போர் துவங்கினான் பண்டாசுரன்.
போரை உக்கிரமாக்கி கயிலாயம் சென்று நண்பனென்றும் பாராமல் விநாயகரையும் விரட்ட ஆரம்பித்தான்.
வெகுண்டெழுந்த வேழமுகன் பண்டாசுரனின் படையை சிதறடித்தார்.
உக்கிரமாய் போர் தொடுத்தாள். பண்டாசுரன் கணேசனைத் தாக்கக் கண்டு மகனுக்கு உதவ அன்னையும் ஆவேசம் கொண்டவளாய் பண்டாசுரனை விரட்டியடித்தாள், அன்னை.
ராஜராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி ஆங்கிரஸர் கூற, மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தந்திர முறைப்படி மகாயாகம் செய்தார்கள்.
தேவர்களின் யாகத்தின் பயனாய் கொழுந்து விட்டெறியும் யாகத்தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றினாள்.
பண்டாசுரனின் கணக்கை முடித்து தேவர்களின் துயர் துடைத்தாள் அன்னை.
தேவர்களின் யாகத்தீயிலிருந்து எழுந்ததைப் போலவே இந்த கலியுகத்திலும் அன்னை யாகத்திலிருந்து தோன்றி ராஜராஜேஸ்வரியாக கோயில் கொண்டுள்ளாள்.
சென்னை- நங்கநல்லூரில், தில்லை கங்காநகர் 16வது தெருவில், ஸர்வ மங்கள ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டுள்ளாள் அன்னை.
பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு ஆஸ்ரமமாகவே திகழ்கிறது அருமையான கோவில்..
தன் பால வயதிலிருந்தே ஸ்ரீவித்யா உபாசகராக விளங்கிய ராஜகோபால சுவாமிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் செய்த ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது, தகதகவென்று தீயிலிருந்து தோன்றினாள், அன்னை.
ராஜகோபால சுவாமிகள் அதை தாம்பாளத் தட்டில் ஏந்தியெடுத்து காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு செல்ல ‘‘இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள் சித்துகள்’’ என்று சொன்னார்.
தீயிலிருந்து தோன்றிய தேவிஅன்னையின் உத்தரவுப்படி ஆஸ்ரமம் அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார்.
கோயில் அலுவலகத்தில் குங்குமமும் வழிபாட்டுக்குத் தேவையான கற்கண்டும் விற்பனைக்கு உள்ளன.
கோயிலுக்கு வெளியிலிருந்து பழம், தேங்காய், குங்குமம் என்று எந்த பொருளையும் வாங்கி வரக்கூடாது.
அம்பாளின் அர்ச்சனைக்கு கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம் செய்யப்படுகிறது.
அம்பாளுக்கு அர்ப்பணிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் முன்னரே அம்பாள் உத்தரவுப்படி மந்திர சுத்தி செய்ய வேண்டியிருப்பதனாலேயே வெளியிலிருந்து எடுத்துவரும் பொருட்களை கோயிலினுள் அனுமதிப்பதில்லை.
மகா கணபதி, துர்க்கை. தன்வந்திரி பகவானையும்,தரிசிக்கலாம் ..!
தன்வந்திரி தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும் மாமருந்து என்கிறார்கள் பலனடைந்தவர்கள்.
கொடிமரம். அடுத்து பலிபீடம், சிம்மம். பக்கத்தில் தங்கமென தகதகவென மின்னுகின்றன பதினாறு படிகள். இங்கே ஒரு பெட்டி இருக்கிறது.
இதில் அன்றைய திதி மற்றும் திதி தேவியின் பெயரைச் சொல்லி, கோயிலில் பணம் செலுத்தி வாங்கி வந்த குங்குமப் பொட்டலத்தைப் போட வேண்டும்.
அன்று நள்ளிரவு ராஜகோபால சுவாமிகள் இந்த குங்குமத்தை பயன்படுத்தி அன்னைக்கு அர்ச்சனை செய்வார். அதனால் பக்தர்களின் தோஷங்கள் அனைத்தும் தீரும் என்கிறார்கள்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே அர்ச்சனையாகச் செய்யாமல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே செய்யவேண்டும் என்கிறார்கள்.
பதினாறு படிகள் ஒவ்வொரு படியும் ஒரு திதியைக் குறிக்கிறது.
முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி பற்றி அகத்திய மாமுனிவர் எழுதிய பாட்டை கல்லில் பொறித்து சுவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திருவுருவங்களும் படிக்கு இருபுறங்களிலும் சுவரில் எழுந்தருளச் செய்ய வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி பற்றி அகத்திய மாமுனிவர் எழுதிய பாட்டை கல்லில் பொறித்து சுவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திருவுருவங்களும் படிக்கு இருபுறங்களிலும் சுவரில் எழுந்தருளச் செய்ய வைக்கப்பட்டிருக்கின்றன.
தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங்களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு.
இதேபோல இரண்டாம் படியில் சுக்ல த்விதீயைக்கும், கிருஷ்ண சதுர்த்தசிக்கும், பகமாலிநீ, நித்யா கொலுவீற்றிருக்கிறாள்.
மூன்றாம் படியில் நித்யக்லின்னாநித்யா.
நான்காம் படியில் பேருண்டா,
ஐந்தில் வஹ்னிவாசினீ
ஆறில் மஹாவஜ்ரேஸ்வரி,
ஏழில் சிவதூதீ
அடுத்தடுத்து த்வரிதா, குலசுந்தரி, நித்யா, நீலபதாகா, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினீ, நிறைவாக சுக்ல பஞ்சதசீயிலும், கிருஷ்ண பிரதமையிலும் சித்ரா நித்யா பதினைந்தாவது படியில் கொலுவிருக்கிறாள்.
பதினாறாவது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள்.
அன்னை மரகத பச்சை நிறத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறாள்.
அன்னை அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான், தீயில் பிறந்த தெய்வம்.
இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நதி கொண்டருள்கின்றனர்.
நாம் இடப்பக்கமாக ஏறும் போது பிறை நிலவில் தொடங்கி முழுநிலவாய் அன்னையை தரிசித்த திருப்தியும் இறங்கும்போது துயரமெல்லாம் மெல்ல கரைந்து காணாமல் போவது போன்ற உணர்வும் மேலோங்குகிறது.
அன்னையின் உத்தரவுப்படி ஆலயத்தின் அருகே சத்யநாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அவரையும் வணங்கி வர பல நலன்கள் விளையும் என்பது நம்பிக்கை.
தேவர்களின் துயரைத் துடைத்து ராஜ வாழ்வை மீட்டுத் தந்த அன்னை ராஜராஜேஸ்வரி, தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அனைத்து வளங்களையும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இதமாக இருக்கும்.
ReplyDeleteகலங்கிய நீர் தெளிவது போல,
கலங்கிய கண்களும் நற்பார்வை பெறும் .
அருமையான பதிவு.
சுப்பு தாத்தா.
மனதுக்கு இதமான இனிய கருத்துரைக்கு
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..!
அருமை... அருமை... மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான கருத்துரைக்கு
Deleteஇனிய நன்றிகள்..
ஆஸ்சிரமமாகத்தோன்றும் கோவில்தகவல்கள்,ராஜராஜேஸ்வரி அம்மனின் படங்கள் எல்லாம் அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும்
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள்..
ராஜராஜேஸ்வரியின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteதிவ்யமான கருத்துரைக்கு
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள்
பிறை நிலவு பற்றிய விளக்கமும் ... அழகான படங்களும் வெகு சிறப்பு.
ReplyDeleteதென்றலின் அழகான கருத்துரைக்கு
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள்
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகருத்துரைக்கு மனம் நிறைந்த
Deleteஇனிய நன்றிகள் ஐயா..!
Very fine post. We used to go there for navarathiri days.
ReplyDeleteVery nice you had mention about this temple.
viji
நவராத்திரி நாட்களில் சிறப்பான ஹோமங்களும்
Deleteஅன்னையின் அருமையான அலங்காரங்களும்
கோலாகலமாய் மனதை நிறைக்கும்..
கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
1]
ReplyDeleteசகல யோகம் அருளும் ஸ்ரீ சக்ர நாயகிக்கு அடியேனின் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
>>>>>
2]
ReplyDelete//” இவள் சத்தியமாக ஸ்ரீ இராஜராஜேஸ்வரியே - இத்துடன் உருவான மணிகள் சித்துக்கள் “
- ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் அருளிய செய்திகள்.//
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி - பெயரிலேயே ஒரு தனித்தன்மையும் கம்பீரமும் உணர முடிகிறதே.
எனக்கே சொக்குப்பொடி போட்டதோர் பெயரல்லவா!
வாழ்க ! வளர்க !!
>>>>>
3]
ReplyDeleteகடைசி படம் முற்றிலும் புதிதாக வித்யாஸமாக மிகச்சிறப்பாக உள்ளது.
கைகள் இரண்டிலும் இதழ் விரிந்த செந்தாமரைகள்.
மேலும் இரு கைகள் அபயஹஸ்தமாக !
ராஜ சிம்ஹாசனம். பணிப்பெண்கள் கைகளில் மங்கலமான பொருட்கள்.
’அடி என் ராஜாத்தியாக’ ஒய்யாரமாக வீற்றிருக்கும் என் அம்பாள் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ! ;)
அனைத்தும் அழகோ அழகு.
>>>>>
4]
ReplyDeleteஇன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அருமையான பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo
பாராட்டுகளுக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகளுக்கும்
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
அதிகமாகப் போனதில்லை அன்னையைத் தரிசிக்க.
ReplyDeleteமிக நன்றி இராஜராஜேஸ்வரி. எப்பொழுதும் போல அழகான அற்புதமான படங்களும் விளக்கங்களும்.
கோவில் அனுஷ்டானங்களைப் பற்றி எடுத்துரைத்திருப்பது மிகவும் பயனுள்ளது.
மனதிற்கினிய வெள்ளித் திருநாள். மிக நன்றி.
ஒவ்வொரு கோவிலுக்கும் உரிய தனித்துவமான அனுஷ்டானங்களை அறிந்து சென்றால் சிறப்பான நிறைவான தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் ..
Deleteவெள்ளித்திருநாளில்
தெள்ளிய கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!
அன்னையின் அழகில் அகமகிழ்ந்து
ReplyDeleteபதிவைப் பதித்தேன் மனதில்...
மிக மிக அருமையான பகிர்வு சகோதரி!
என் நன்றியும் வாழ்த்துக்களும்!
அகமகிழ்ந்த அருமையான கருத்துரைகளுக்கு
Deleteமனம் நிறைந்த இனிய நன்றிகள்
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி!.. அழகிய படங்கள்.. பயனுள்ள விவரங்கள்!..மனம் நிறைவான பதிவு!..
ReplyDeleteமன நிறைவான இனிய கருத்துரைகளுக்கு
Deleteமிகவும் நன்றிகள் ஐயா..!
இந்த 2013ம் ஆண்டின் வெற்றிகரமான தங்களின் 250 ஆவது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநாளை மலர இருக்கும் 1025 ஆவது பதிவுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் சிறப்பான அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்
Deleteஉங்கள் ஸ்ரீ சக்ரநாயகி படிக்கும்போது, ஸ்ரீ மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் 'ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசநேச்வரி, ஸ்ரீ லலிதாம்பிகையே' பாடல் காதில் ஒலிப்பது போல ஒரு பிரமை!
ReplyDeleteஅருமையான பாடல் ஒலிக்கவைத்த
Deleteகருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
excellent post
ReplyDeleteகருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
Deleteவெள்ளிக் கிழமையன்று அருமையான தெய்வீகப்பதிவு!
ReplyDeleteகருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்
DeleteI am blessed. We are blessed. By chance I opened the blog and there our Matha is giving Dharshan. Grateful for the publication.
ReplyDeleteஅகிலம் துதிக்கும் அன்னையவளை வணங்கி நிற்கின்றோம்.
ReplyDelete