அகத்தடிமை செய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்.
மிகத் தளர் வெய்திக் குடத்தையும் முடி மேல் விழுந்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற்படியும் வரும் என்று ஒரு காவினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனிரே
மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டிய புகழ்த்துணையாரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும்
அரிசிற்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான்.
மிகத் தளர் வெய்திக் குடத்தையும் முடி மேல் விழுந்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற்படியும் வரும் என்று ஒரு காவினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனிரே
மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டிய புகழ்த்துணையாரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும்
தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார் சிவபெருமான்..!
புகழ்த்துணை நாயனார், தன் மனைவி லட்சுமியுடன்,
சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார்.
சுந்தரர், மனைவி பரவை நாச்சியாருடன் இருக்கிறார்.
தனிச்சன்னதியில் இருக்கும் . சொர்ணவிநாயகரை வணங்கியபின்பே, சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.
மூலவர் சன்னதியின் மேல் 3 நிலைகளைக் கொண்ட கோபுரம் திகழ்கிறது....
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
மூலவர் படிக்காசுநாதர் --------- அழகம்மை
பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.
பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை
அழகாபுத்தூர் முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
ஓராறு முகமும், ஈராரு கரமும் கொண்டு,
முக்கண்ணன் புதல்வனாய்,
நான் முகனுக்கருளியவனாய்,
ஐங்கரன் சோதரனாய்,
ஷண்முகனாய்,
ஏழேழ் பிறவிக்கும், இம்மைக்கும், தேனமுதாய்,
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் ஓம் காரப் பொருளாய்
அழகே வடிவாய், வள்ளி, தெய்வானையருடன்
இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகன் , "கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்' என்று அழைக்கப்படுகிறார்.
திருவாட்சி "ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம்.
அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது.
திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும்,
அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது.
இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம்.
இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது.
முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள்
நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும்,
நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள்.
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரமதை
இரு செவிமீதிலும் பகர் குருநாதனாக முருகன்,
தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த
சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்,
திருஅரிசிற்கரைப்புத்தூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
அழகாபுத்தூர் - 612 401,
அழகிய கோவில் கோபுரத்துக்கும், கர்பக்கிரஹத்துக்கும் இடையே இடைவெளி ஆகாயம் பார்த்த இடமாதலால் அருமையான காற்று உடலையும், உள்ளத்தையும் ஆனந்தப்படுத்துகிறது.!
ரசித்தேன்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறப்பான படங்களுடன் தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகிய படங்களுடன் அரிய பல தகவல்களுடன் இப்பதிவைப் படித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகாபுத்தூருக்கு நான் சென்றதில்லை. இந்த கோவிலைப் பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன்.
ReplyDeleteதஞ்சைக்கு செல்லும்பொழுது பார்க்கவேண்டும்.
அழகன் ஆறுமுகன்
மனதை கொள்ளை கொள்கிறான்.
சுப்பு தாத்தா.
’ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் ஸ்வர்ணபுரீஸ்வரர்’ என்ற இந்தப்பதிவும் மிகவும் அழகான பதிவாகத்தான் உள்ளது.
ReplyDelete>>>>>
படங்கள் எல்லாம் வழக்கம் போல நல்லாவே இருக்கு.
ReplyDeleteகடைசி படத்தில் உள்ள மயில்தோகை பேக்ரவுண்ட் சூப்பர்.
>>>>>
அழகாபுத்தூரில் உள்ள இந்தக் கோயிலைப்பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அருமையோ அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
இரட்டை பைரவர்கள் + நால்வர் [அதிலும் சுந்தரர் அருகில் உள்ள பரவை நாச்சியார்] என விசேஷ அமைப்புகள் உள்ளதொரு கோயிலைப்பற்றியும், கூறியுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
-oOo-
superb murugan picture
ReplyDeleteஅருமையான தரிசனம் அம்மா. படிக்காசு நாதர் பற்றிப் படித்திருக்கிறேன்.
ReplyDeleteபடங்கள் அற்புதமாக இருக்கின்றன. ஸ்வர்ண பைரவரும்,மஹாலக்ஷ்மியும் அனைவருக்கும் ஒருகுறையும் இல்லாமல் ஐஸ்வர்யத்தையும் வழங்கட்டும்.
சங்கு சக்கரம் தாங்கிய திருக்குமரன் - வரப்ரசாதி!.. நல்ல விஷயங்கலுடன் அருமையான பதிவு!.. வாழ்க.. வளர்க!..
ReplyDeleteஇந்த முறை இந்தியாவுக்கு செல்லும்போது இந்த கோயில் இதே தான்பா சொர்ணபுரீஸ்வ்ரர் கோயிலுக்கு செல்ல எத்தனை பேரை இங்கிருந்துஅழைத்து ரூட் கேட்டு இடம் கேட்டு அலைந்தோம்.. இங்கே ஆனந்தமாய் அருள் பாலிக்கிறார்... இனிமே கோயிலுக்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் இங்கே இராஜிம்மா வலைப்பூவுக்கு வந்து பார்த்தால் போதும்...
ReplyDeleteஇங்கு வந்து வேண்டிக்கொண்டால் நினைத்தது எல்லாம் வெற்றியாகும் என்று கேட்டதுண்டு...
அழகிய படங்கள்.... கோயிலுக்கே போய் வந்த மனத்திருப்தி தருகிறதுப்பா..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா பகிர்வுக்கு...
படிக்காசு நாதர் கோயில் பற்றிய தெளிவான விளக்கமும் அழகான படங்களும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteசொர்ணபுரீஸ்வரரின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDeleteஅழகாபுத்தூர் படிக்காசு நாதரைப் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteஇன்று மறுபடியும் உங்கள் பதிவில் தரிசித்து விட்டேன்.
சொர்ணபுரீஸ்வர் அனைவரையும் உடல் ஆரோக்கியமாகவும், , உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்கட்டும் என்றும்..
அருமையான பதிவைக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.