Saturday, September 14, 2013

விஸ்வரூப நவீன ஆஞ்சநேயர்












ராம பிரான் இருக்கிறார் ராம பிரான் இருக்கிறார்
அனுமன் நெஞ்சத்தின் கூட்டுக்குள் ராம பிரான் இருக்கிறார்

இடைவிடாது நினைத்ததால் அனுமனுள்ளே புகுந்தவர்
கோடிமுறை சொன்னாலும் ராம நாமம் சலித்திடுமோ 

ராமபக்தியெனும் நல்லமுதை  இதயத்தில் ஊற்றி இனிக்க இனிக்க 
ஶ்ரீராமர் புகழ்பாடும் அனுமனுக்கு  அனந்தகோடி நம்ஸ்காரங்கள்....



டில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ‘சங்கட மோக்ஷன் தாம்’ கோவில்  நூதனமானது..

தலைநகர் டில்லியில்  108 அடி  உயர ஆஞ்சநேயருடன்  அற்புதமாக உருவாகிய ஆலயம் கருத்தைக் கவருகிறது..

பறக்கும் மெட்ரோ ரயில் பாதை அருகே போக்குவரத்து நெரிசல் நிரம்பிய கரோல் பாக் பகுதியில் பிரம்ம்மாண்ட உருவத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் அனுமன் விஸ்வரூப தோற்றத்தில் காட்சிப்பட்டு ஆச்சரியம் அளிக்கிறார்..!
 35 அடி அஸ்திவாரத்துடன் அமைந்த பெரிய அனுமன்  தன் இதயத்தில் ராமபிரானை நெஞ்சைத்திறந்து காட்டுகிறார்..!

ரோம ரோமமு ராம நாமமே என்று  அனுமனின் வாலில்  இருக்கும் ஒவ்வொரு ரோமமும் ராமநாமம் சொல்வதால், வாலுக்குள் மந்திர சக்தி வெகுவாக பரவியிருக்கிறது. 
அனுமனது வாலிலுள்ள ரோமங்கள் சொல்லும் ராமநாமமே எண்ணிக்கையற்றதாகும்.
சிரஞ்சீவியான அனுமன் இருதயத்தில் எப்போதும சீதா ராமன் குடி கொண்டிருக்கிறார்கள்  ..

தன் இதய தெய்வத்தை மக்களுக்கு  உணர்த்தும் வண்ணம் நெஞ்சைத் திறந்து காட்டும் வகையில் எலெக்ட்ரானிக் முறையால் இயக்கப்படும் இந்த அதி நவீன ஆஞ்சநேயரைக் காண மக்கள் கூடி நிற்பது வியப்பளிக்கிறது..!

வாரம் இருமுறை அனுமன் நெஞ்சைத் திறக்க, ராமரும் சீதையும் வெளியே தோன்றும் போது பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுகிறார்கள். ஒலிபெருக்கி மூலமும் ராம நாமம் ஒலிக்கிறது.

jay Hanuman
 தினமும் வெல்லம், உளுந்து, எள், கடுகு எண்ணை, கருப்புத் துணி, இரும்புப் பொருட்கள், பூ, பழம் ஆகியன கொண்டு வந்து வணங்குகிறார்கள்..








27 comments:

  1. பிரமிப்பூட்டும் ஆஞ்சநேயர். நன்றி

    ReplyDelete
  2. இத்தனை ஜன நெரிசல் உள்ள பகுதியில் இவ்வளவு பெரிய ஆஞ்சநேயர் கோவிலா.... அனுமன் வாலுக்கும் சக்தி சேர்ந்த காரணம் சிறப்பு....

    ReplyDelete
  3. டெல்லிக்கு போகும் போது போய் பார்க்க வேண்டும்.
    படங்கள் எல்லாம் அற்புதம்.

    ReplyDelete
  4. விஸ்வரூப தரிசனம் கிடைத்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  5. ஜெய் ஸ்ரீராம்.
    ஆஞ்சநேயன் புகழை அழகாய் வெளியிட்டிருக்கிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  6. ரோம் ரோமமு ராம நாம மு

    ஒவ்வொரு மயிர்க்காலிலுமே ராமன் நாமம் தானே

    என ரோம் என்பதை இந்திமொழி யிலே படித்தாலும்

    roam roam ராம நாமம்

    எங்கு சுற்றினாலும் ராம நாமமும் என்றும்

    உணர முடிகிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. தலைநகருக்கே சென்று தரிசித்த உணர்வு!.. ஸ்ரீ ஆஞ்சநேயர் எல்லாருக்கும் நன்மைகளை அருள்வாராக!..

    ReplyDelete
  8. தலைநகருக்கே சென்று தரிசித்த உணர்வு!.. ஸ்ரீ ஆஞ்சநேயர் எல்லாருக்கும் நன்மைகளை அருள்வாராக!..

    ReplyDelete
  9. 2
    ஸ்ரீராமஜயம்.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    >>>>>

    ReplyDelete
  10. இதுவரை கொடுத்துள்ள ஹனுமன் பதிவுகளிலேயே, இன்று கொடுத்துள்ள ’விஸ்வரூப நவீன ஆஞ்சநேயர்’ முற்றிலும் மாறுபட்ட அழகான வித்யாசமான பகிர்வாக உள்ளது.

    நவீன நாகரீக டெக்னாலஜி அல்லவா அதனால் இருக்கக்கூடும்.

    >>>>>

    ReplyDelete
  11. அட எங்க ஊரு ஆஞ்சனேயர். எனது வீட்டின் மிக அருகில் இருக்கும் கோவில் இது. மிகவும் பழமையான கோவில்......

    நானே இது பற்றி எழுத நினைத்ததுண்டு..... ஆனால் இதுவரை எழுதவில்லை. இப்ப நீங்க எழுதியாச்சு!

    ReplyDelete
  12. இன்று சனிக்கிழமைக்கு [ஸ்திர வாரத்திற்கு] ஏற்ற நல்ல பதிவு.

    >>>>>

    ReplyDelete
  13. இன்று சனிக்கிழமைக்கு [ஸ்திர வாரத்திற்கு] ஏற்ற நல்ல பதிவு.

    >>>>>

    ReplyDelete
  14. யார் மனஸுலே யார் இருக்கிறார்களோ!

    ஆனால் ஹனுமன் மனதிலே எப்போதும் ஸீதா ராமர் மட்டுமே, என்பது நிச்சயமாகத் தெரிகிறது. சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  15. படங்கள் ஒவ்வொன்றும் பிரும்மாண்டமாக உள்ளது.;)

    தகவல்கள் யாவும் சுவையாகக் கொடுத்துள்ளீர்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  16. பறக்கும் மெட்ரோ ரெயில்களுக்கு, சக்தியளிப்பதே இந்த பறக்கும் வாயுபுத்திரனான ஹனுமனாகத்தான் இருக்க வேண்டும் ;) என நினைக்கத்தோன்றுகிறது !!!!!

    >>>>>

    ReplyDelete
  17. அற்புதமான பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நன்றியோ நன்றிகள்.

    இத்துடன் இன்று நான் Bye Bye !

    ஹனுமன் என் பயணத்தை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைத்துக்கொடுக்கட்டும்.

    பிராப்தம் இருந்தால், நாளை நள்ளிரவோ அல்லது நாளை மறுதினமோ மீண்டும் தங்கள் பதிவின் பின்னூட்டப்பகுதியில் சந்திப்பேன்.

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !


    -oOo-

    ReplyDelete
  18. ராம சீத ஆஞ்சநேய! ஸ்ரீ ராம ஜெயம்! நல்ல தரிசனம்.

    ReplyDelete
  19. எங்க ஊர் ஹனுமான்ஜி... பஜ்ரங்பலி...

    இந்தக் கோவிலை கடந்து போகும் போதெல்லாம் ரோஷ்ணிகிட்ட, கோவில் உள்ளே போனதும் ராக்ஷஸன் வாயை மூடிடுவான்ன்னு சொல்வேன். ஐயோ! நான் வரவில்லை... என்று சொல்வாள்....:))

    ReplyDelete

  20. 1994-ம் வருடம் கட்டிய கோயிலைப் பற்றி தகவல் இருக்கவில்லை. அதற்குப் பிறகு இரண்டுமுறை டெல்லிக்குப் போயிருக்கிறோம். “ வாரம் இரண்டுமுறை அனுமார் தன் நெஞ்சைத் திறந்து காட்ட....” வீடியோவில் பார்க்கலாம் என்றால் அதுவும் சரியாக வருவதில்லை. . பகிர்வுக்கு நன்றி. மீண்டும் வீடியோ பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  21. அருமையான ஆஞ்சநேயரை தேடிப்பிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! சிறப்பான படங்கள் அழகு சேர்த்தன!

    ReplyDelete
  22. உண்மையிலேயே அதி நவீன ஆஞ்சநேயர் தான்!
    தகவலுக்கு நன்றி! பார்க்க வேண்டிய லிஸ்ட் பெரிதாகிக்கொண்டே போகிறது!

    ReplyDelete
  23. அற்புதமான பகிர்வு இராஜிம்மா.. இந்த கோயிலுக்கு நான் ஒரு முறை போயிருக்கிறேன்... பிரமிப்பு என்னவென்றால் ரோட் முழுக்க கஜ கஜன்னு இருக்கும் ரஷ்.. ஆனால் இங்கே கோயிலுக்குள் சென்றால் சுவற்றில் பெயிண்ட்டில் கூட மிக அழகிய படங்களை காணலாம்... மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா..ராமசீதா படத்தை நெஞ்சை பிளந்து காட்டும் படம் மிக அற்புதம்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    ReplyDelete
  24. அசரவைக்கும் உயரம். ஆஞ்சநேய நமக.

    ReplyDelete
  25. அப்பப்பா! என்னே பிரமிப்பு! அசர வைக்கும் ஆஞ்சநேயரை அழகாக படத்துடன் பதிந்து அசத்தி விட்டீர்கள். ம்ம்ம் தில்லி எல்லாம் எப்பப் போகப்போறேன் இப்படியேப் படத்துப் பாத்து கும்பிட்டுக்க வேண்டியது தான். பகிர்வுக்கு நன்றிங்க சகோதரி.

    ReplyDelete
  26. தலைநகரில் அருளும் அதிஅற்புத
    அதி நவீன அனுமன் பற்றிய
    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete