Sunday, September 15, 2013

பொன் ஓணக் கொண்டாட்டங்கள்





ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி  பெருமாள் வாமன அவதாரம் எடுத்து  மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு  படுத்தும் வகையில் ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ஓணம் திருவிழா கொண்டாடப்படும். 

திருவோணம் திருநாளன்று பாதாள உலகத்தில் இருந்து மகாபலி மன்னன் மலையாள மக்களை காண வருகிறார் என்பது ஐதீகம். 

தங்களை காண வரும் மன்னனை வரவேற்க வீடுகளை அலங்கரித்தும், அத்தப்பூ கோலமிட்டும், பலவகை காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே பூக்கோலத்தின் நோக்கம். 
கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப்பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.


ஓணம் திருவிழாவை மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம்' நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 10 நாட்களும் பத்து விதமான அலங்காரங்களுடன் ஓணம் களை கட்டும். .

காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடேனும்' என்று மலையாள மக்களிடையே பழமொழி புழக்கத்தில் உள்ளது. 

இன்றைய ஓண சதய எனப்படும் விருந்தில் அடை, அவியல், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், துவரம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புலி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய் என விருந்துக்கு பிறகு பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். 

தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமானதால், ஓணம்  புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடப் படுகிறது..!


ஓண ஊஞ்சல்’ . ‘கை கொட்டிக்களி’  ஓணம் பாட்டுக்களைப் பாடி கும்மி அடித்து ஆடுவது. அத்தப் பூ கோலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, வாமன அவதாரத்தைப் போற்றியும், கேரள நாட்டை வர்ணித்தும் ஆடிப்பாடி மகிழ்வர். 
பின்னணியில் கேரள ஜன்டை வாத்தியங்கள் முழங்கும்போது, நடனத்தின் வேகமும் அதிகரிக்கும்.

ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.

. ஓணத்துக்காக ஆரன்முளாவில் நடைபெறும்‘வல்லக் களி’ எனப்படும் படகு விளையாட்டுகளும் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும்









[athapookalam-themes-2011%255B2%255D.jpg]






Free Onam Festival Kerala In India, computer desktop wallpapers, pictures, imagesFree Onam Festival Kerala In India, computer desktop wallpapers, pictures, images
கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைஅணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாகத்திகழ்கிறது ..! 

யானையின் நெற்றியை தங்கத்தட்டினால் ஆன முக படாம் அழகு செய்யும். 

பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட் மெட்டல் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள் வைக்கப்படும். கேரளாவில்  நடக்கும் மரத்தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன.




26 comments:

  1. வணக்கம்
    அம்மா
    ஓணம் திருவிழாபற்றிய விளக்கம் சிறப்பு .
    படங்களும் சிறப்பு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஓணம் பற்றிய செய்திகளை மிகச்சிறப்பான முறையில் பதிந்து பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றி சகோதரி. ஓணம் பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி மனதில். தங்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். விழாவைப் போற்றுவோம். மகிழ்ச்சி காண்போம்.

    ReplyDelete
  3. ஓணம் பற்றிய விளக்கங்கள் அறிந்தேன். மிக்க நன்றி.
    கோலங்கள் அழகு கொஞ்சுகின்றன.
    அன்புடன் பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள் அக்கா. மிக்க நன்றி.

    ReplyDelete

  5. கேரளத்தில் பாரம்பரியக் கலைகளை வெளிக்கொணரும் ஒரு திருவிழாவாகவே ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு. ஓணம் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. இன்றே ஓணத்தின் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது தங்களின் பகிர்வு பார்த்து இராஜிம்மா...

    மனம் நிறைகிறது.. பூக்களின் அலங்காரமும், யானைகளின் அணிவகுப்பும், ரங்கோலிக்கோலமும், புராணக்கதை வரலாறு, ஆனா இத்தனையும் ரசித்துக்கொண்டே வந்தால் விருந்தும் உண்டு.. போஜனம் எல்லா காய்களும் சேர்த்து பார்க்கவே அற்புதம்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு இராஜிம்மா...

    ReplyDelete
  8. ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஒணத்திருநாள் பற்றிய தகவல்களுடன், பூக்களங்கள், விருந்து சாப்பாடு என்று படங்களும் போட்டு அமர்க்களப் பதிவு போட்டிருக்கிறீர்கள்.
    இனிய ஓணத் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அழகிய படங்களுடன் ஓணம் கொண்டாட்டம்.

    ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. யானைகளின் அணிவகுப்பு அற்புதம். மீண்டும் மலையாள தேசத்தைச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி!..அனைவருக்கும் ஓணத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. யானைகளின் அணிவகுப்பு அற்புதம். மீண்டும் மலையாள தேசத்தை சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி.. அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  13. அடடா ஓணத் திருவிழாவை நேரில் பார்த்ததுபோல் ஒரு உணர்வு வந்து விட்டது. எப்படித்தான் தபாவல்கலயும் படங்கலயும் சேகரிக்கிறீர்களோ

    ReplyDelete
  14. ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் மிக் அருமை.
    வாழ்த்துக்கள்.
    ஓணப்பண்டிகை கொண்டாடிய மகிழ்ச்சி கிடைத்து விட்டது.

    ReplyDelete
  15. பொன் ஓணம் வாழ்த்துகள்....

    ReplyDelete
  16. மலையாள‌ப்பொன்மொழி இதுவரைக் கேள்விப்படாதது! அருமை!

    ReplyDelete
  17. ஒணம் குறித்து மிக அழகாக படங்களுடன் விளக்கிய விதம் அருமை அம்மா...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ’பொன் ஓணக்கொண்டாட்டங்கள்’ மிகவும் சிறப்பான பதிவாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  19. படங்கள் அத்தனையும் வழக்கம் போல அழகோ அழகு.

    கடைசி ஆறு படங்கள் அற்புதமாக உள்ளன.

    அலங்கரிக்கப்பட்ட யானைகள், புலிவேஷம், படகு ஓட்டுதல் வளமான கேரளத் தென்னைமரங்கள் ஆகியன கண் கொள்ளாக்காட்சியாக உள்ளன. மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  20. பூக்கோலங்கள் யாவும் மனதைக்கவர்வதாக உள்ளன.

    உள்ளத்திலும் இல்லத்திலும் பக்தி மணம் கமழட்டும். ;)

    >>>>>

    ReplyDelete
  21. இலைபோட்டு அன்புடன் தடபுடலாகப் பரிமாறியுள்ள அடை,பால் பாயஸம், அப்பளம் முதலியவற்றை கொஞ்சூண்டு டேஸ்ட் செய்து மகிழ்ந்தேன். சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  22. ஓணம் பண்டிகையின் சிறப்பு பற்றியும், மஹாபலிச் சக்ரவர்த்தியின் கதைகளும், வாமனாவதாரத்தின் நோக்கமும் எவ்வளவு முறை நீங்கள் சொன்னாலும், நாங்கள் கேட்டாலும், அலுக்கவே அலுக்காது.

    >>>>>

    ReplyDelete
  23. அனைத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

    அன்பான இனிய நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

    ooOoo

    ReplyDelete
  24. திருவோணத் திருவிழா நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete