ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் வினோதப் பறவை லயர்’
லயர்’பறவைக்கு வைத்திருக்கும் பெயரான லயர்’ (Lyre) என்பது ஒரு பழமையான இசைக்கருவி.Lyre என்றால் யாழ்
லயர்’ பறவையின் தோகை போன்ற வால் சிறகுகள் ‘லயர்’ என்ற இசைக் கருவியினைப் போல் இருப்பதால் ‘லயர் பேர்ட்’ என்ற பெயர் வந்தது.
(Lyre birds) பல குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம்.
மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் பல குரலில் (மிமிகிரி) செய்யும் ஆற்றல் படைத்தது.
மயிலின் தோகை போன்றும் குயிலின் உடல் போன்றும் காட்சிப்படுகின்றன.
மக்கிய மரப் பாகங்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக்கொள்கின்றன..
பல குரல் பாடும் சக்தி ஆண் லயர்’ பறவைக்கு மட்டுமே உள்ளது.
தனது பெண் இனத்தினைக் கவருவதற்காக இந்த பல குரல் விநோதம் செய்கிறது.
தோகை பதினாறு இறகுகள் கொண்டது. நடு இரண்டு இறகுகள் கம்பி போன்று நீண்டவை. வெளி இரண்டு இறகுகளும் சிறிது அகலமானவை. அவற்றின் நிறம் மிக அழகாக இருக்கும். மற்ற பன்னிரண்டு இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போன்று இருக்கும்.
லயர் பறவைபல பறவைகளின் குரல்களையும் ஒலித்துக் காட்டுவதோடு மனிதர்கள் எழுப்பும் எந்த ஒலியினையும் இசைத்துக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்..
ஆஸ்திரேலிய நாணயங்களிலும் , தபால் தலைகளிலும் லயர் பறவை இடம் பெற்றிருக்கிறது ...
The Australian 10 cent coin features a Superb lyrebird on one side
யாழிசைப் பறவை - லயர் பேர்டி’ன் குரல் வளத்தினையும் நடனத்தின் நளினத்தினையும் இந்ததளத்தில் ரசிக்கலாம்
http://www.youtube.com/watch?v=VjE0Kdfos4Y
படங்கள் அருமை... யாழிசைப் பறவையின் சிறப்பான தகவல்களுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteபடிக்க சந்தோஷமான தகவல்கள்!
ReplyDeleteபார்க்க சந்தோஷமான படங்கள்!
அழகான தகவல்கள்
ReplyDeleteமிகவும் ரசிக்கவைக்கின்ற அழகான அற்புதமான
ReplyDeleteபறவை இனமாக இருக்கின்றதே!...
இங்கே படங்களுடன் ’யாழ்’ தந்தி வாத்தியத்தையும் காண்பித்ததும் நான் எம் ஊரான யாழ்ப்பாணத்திற்கே சென்றுவிட்டேன் சகோதரி...
எமது யாழ் மண்ணின் அடையாளம் இவ்வாத்தியம்...
பழைய நினைவுகள் மனதை வருடி நெருடுகிறது....:’(
அறியாத பல தகவல்களுடன் நல்ல பகிர்வு!
என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
யாழ் தமிழர்களின் பழங்கால இசைக் கருகி.
ReplyDeleteயாழிசைப் பறவை யாழ் இசைக் கருவி போலவே உள்ளது.
சிறப்பான தகவல்கள். மிக்க நன்றி
’யாழிசைப்பறவை’ என்ற தங்களின் இன்றைய படைப்பு மிகவும் அருமையாக அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
தகவல்கள் எல்லாமே கேட்க அதிசயமாகத்தான் உள்ளன.
ReplyDeleteஇறைவன் படைப்பினில் தான் எத்தனை எத்தனை அதிசயங்கள் ! விசித்திரங்கள் !!
ஒவ்வொன்றும் மிக மிக வியப்பாகவே உள்ளன.
>>>>>
அனிமேஷன் படங்களின் அல்லி [தர்பார்] ராணியான தாங்கள் இன்று கொடுத்துள்ள அனிமேஷன் படங்கள் மிகக்குறைவே ஆனாலும் மனதுக்கு நிறைவோ நிறைவாக உள்ளன.
ReplyDeleteகடைசியில் இசைக்கருவியை மீட்டும் பூனை தான் எல்லாவற்றையும் விட டாப் ! எக்ஸலண்ட். ;)))))
அதை 10 நிமிடங்கள் தொடர்சியாகப்பார்த்த என் கழுத்தே சுளுக்கிக்கொண்டதுபோல உள்ளது.
என் கழுத்துச்சுளுக்குக்கு தாங்கள் தான் முழுப்பொறுப்பு ஏற்று உடனடியாக ஆயின்மெண்ட் ஏதாவது அனுப்பி வைத்து உதவ வேண்டும். சொல்லிட்டேன். ;)))))
>>>>>
ReplyDeleteலயர் பறவையின் தோகை போலவே நீண்ட அகலமான ஆழமான அபூர்வத்தகவல்களை அள்ளி அள்ளி அளித்துள்ளதுள்ளதால், இந்தத்தங்களின் பதிவும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போலவே ஜொலிக்கிறது. ;)))))
>>>>>
//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் விநோதம் செய்கிறது//
ReplyDeleteஎந்த இனமானால் என்ன ..... எந்தப் பறவை, விலங்கு, உயிரினமானால் தான் என்ன .... ஆண்கள் பாடு எப்போதுமே மஹா மஹா அவஸ்தை தான்.
மனிதனோ மிருகமோ பறவையோ ..... ஆணாய் பிறந்த ஒவ்வொன்றும், பெண் இனத்தைக்கவர, நாய் படாத பாடு பட வேண்டியுள்ளது என்பதே உண்மை. அதே போன்றே இந்த லயர் பறவையும் போலிருக்கு .... பாவம்.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகாக உள்ள இந்தப்பதிவு மிக வித்யாசமாக அருமையாக அற்புதமாக அமைந்துள்ளது.
ReplyDeleteஎன் மனம் நிறைந்த அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
நீடூழி வாழ்க !
-oOo-
//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் விநோதம் செய்கிறது//
ReplyDeleteஎந்தப்பிறவியே ஆனாலும், எந்தப் பறவை, விலங்கு, உயிரினமே ஆனாலும், ஆண்கள் பாடு எப்போதுமே மஹா மஹா அவஸ்தை தான்.
’போதும் இந்த ஆண் ஜென்மம்’ என்று சொல்லத்தான் தோன்றுகிறது.
ஆண் மயிலுக்கு அழகிய தோகை. சேவலுக்கு [ஆண் கோழிக்கு] அழகிய கொண்டை என்பது போல இந்த லயர் பறவைகளுக்கு மிமிக்ரி செய்யும் ஆற்றல் அளித்துள்ள ஆண்டவனுக்கு நன்றிகள்.
யாழிசைப் பறவைப் பற்றிய செய்திகள் படங்கள்
ReplyDeleteஎல்லாம் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
யாழிசைப் பறவையின் அழகிய படங்களோடு அற்புதமான தகவல்களும் தந்து அசத்தலானப் பதிவிட்டத் தங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் மேடம்.
ReplyDeleteஅருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவையைப் பற்றி விரிவாக அறியத் தந்தீர்கள்!.. நன்றி!..
ReplyDeleteஅருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவையைப் பற்றி விரிவாக அறியத் தந்தீர்கள்!.. நன்றி!..
ReplyDeleteபுதியதோர் பறவையினம் பற்றி தெரிந்து கொண்டேன்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ரசித்தேன். இதன் குரலை கேட்க ஏதாவது யூட்யூப் விடியோ உள்ளதா?
ReplyDeleteவியப்பான பறவை; அதைவிட வியப்பான தகவல்கள்! பல பறவைகளைப்போலவும், மனிதர்களைப் போலவும் குரல் எழுப்பும் என்பது வியப்பை அளிக்கிறது.
ReplyDeleteயாழிசைப் பறவை என்று பெயரிலேயே சங்கீதத்தை வைத்துக் கொண்டுள்ள பறவை கண்ணுக்கும் அழகாக இருக்கிறது.
லயர் அழகிய பறவை. படங்களுடன் விரிவாக தந்துள்ளீர்கள்.
ReplyDeleteபூனைக் குட்டியார் சூப்பர்.
இதுவரை கேள்விப்பட்டிராத அரிய செய்தி படங்களும் சூப்பர் ..மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ..
ReplyDeleteயாழ் பற்றித் தேடிய போது இப்பதிவும் வந்தது.
ReplyDeleteமிக மிக அருமை.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.