ஓம் சிவசிவ ஓம் ஓம் ஸ்ரீம் மகா கணபதயே நமஹ
ஸ்ரீம் கணபதி உலகெலாம் உன் வசமானது போல்
எம் வசமாக ஸ்வாஹா’
கண்பதி என்றால் நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானைக் குறிக்கும். அதுவே கணபதி என்று வந்திருத்தல் வேண்டும்.
சிவன் சக்தியோடு இணைந்து காட்சி தரும்போதுதான் பிரயோகப் பிழம்பாக விளங்குகிறான்.
எனவேதான் பாலகணபதியும் சிவசக்தி வடிவில் காட்சி தருகின்றார்.
என்பதை கணபதி மந்திரம் உணர்த்தி நிற்கும்.
பாலவிநாயகர் Sree Bala Ganapathy
பாலவிநாயகருக்கு ஏற்ற நைவேத்யம் மோதகம், வெண்பொங்கல்.
உடல் சோர்வு, பசியின்மை, உடல் உபாதைகள் நீங்க பால கணபதிக்கு தொடர்ந்து 48 நாட்கள் திங்கட் கிழமைகளில் விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை நெற்றியில் இட்டு, உணவுடன் உட்கொண்டுவர நலம் உண்டாகும்.
பால விநாயகர் நூதன லட்சணங்களுடன் மகாசக்தி பெற்று கிழக்கு நோக்கி மூஷிக வாகனத்தில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பால விநாயகரின் துதிக்கைகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ இல்லாமல் ஆசிவாதம் செய்வது போன்று அமைந்திருக்கிறது.
பாலகணபதி ஈஸ்வரன் அம்சத்தையும், சக்தி அம்சத்தையும் பெற்றிருப்பதால் நெற்றிக் கண்ணும், வலது கையில் சின்முத்திரையும், இடது கையில் பூமி உருண்டையும் வைத்திருப்பது போலவும் கிரீடத்தில் சூலமும் அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் அத்தனையும் அருமை
ReplyDeleteபாலகணபதி படங்கள் செய்திகள் அருமை.
ReplyDeleteபாலகணபதி நோய் தீர்க்கும் கணப்தியாக இருப்பது புது செய்தி. விபூதி அர்ச்சனையைச் சொல்கிறேன். மிக மிக நன்றி மா. படங்களும் விளக்கங்களும் மிக அருமை.
ReplyDeleteமிகவும் சிறப்பான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅத்தனை ஓவியங்களும் அருமையாக...
ReplyDeleteவிபூதி அர்ச்சனையும் அதன் பலன்களும் இன்றே தெரிந்துகொண்டேன். படங்களும் விளக்கமும் சிறப்புங்க. பால கணபதிக்கு ஏற்ற படங்கள்.
ReplyDeleteபலம் தரும் பாலவிநாயகரைப்பற்றிய பதிவில் பல விநாயகர்களை படங்களாக அறிமுகம் செய்துவிட்டீர்களே நன்றி
ReplyDeleteநல்ல தகவல்களுடன் கண்ணையும் கருத்தையும், கவரும் பதிவு!.. வாழ்க.. வளர்க!..
ReplyDeleteநல்ல பதிவு,
ReplyDeleteவிநாயகரை பல தொன்மையான சிறுவர் விளையாடுகளில் Partner ஆக சேர்த்துக் கொள்ளும் மரபும், கன்னிப் பெண்கள் தங்கள் தோழனாக சேர்த்துக் கொள்ளும் Fantasyம் இருக்கின்ற கடவுள் வேறெங்கும் இல்லை
விநாயகர் எத்தனை விநாயகர்.. என்று பாடத்தோன்றுகிறது படைப்பாளிகளின் கற்பனைக்கு விநாயகர் எப்பொழுதும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமே.. அவ்வளவையும் திரட்டி தந்திருக்கிறீர்கள் நன்றி இன்றுதான் முதல் முதல் உங்கள் வலைப்பூவுக்கு வருகிறேன் பிள்ளையார் சுழி போல் இந்த பதிவு
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி 32 விநாயகர் ரூபங்களை பற்றிய பதிவுகள் அருமை.
ReplyDeletethanks for sharing info about bala ganapathy
ReplyDelete”பலம் தரும் பால விநாயகர்” என்ற தலைப்பில் இந்தப்பதிவும் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteகடைசிபடத்தில் உள்ள கஷ்மு முஷ்கு கொழுக்கட்டைப்போன்ற அழுத்தம் திருத்தமான அநியாய அழுத்தமான பிள்ளையாரப்பா என்னைப்பார்த்து கண்ணடிக்கிறாரே!
நினைத்தாலே இனிக்கிறது. ;)))))
மிக்க நன்றி, பதிவுக்கும் பகிர்வுக்கும்.
”பலம் தரும் பால விநாயகர்” என்ற தலைப்பில் இந்தப்பதிவும் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteகடைசிபடத்தில் உள்ள கஷ்மு முஷ்கு கொழுக்கட்டைப்போன்ற அழுத்தம் திருத்தமான அநியாய அழுத்தமான பிள்ளையாரப்பா என்னைப்பார்த்து கண்ணடிக்கிறாரே!
நினைத்தாலே இனிக்கிறது. ;)))))
மிக்க நன்றி, பதிவுக்கும் பகிர்வுக்கும்.