மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ஏழூர் அம்மன் கோயிலுக்கு பக்கத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.! ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழும் இந்த ஆலயத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட கொடிமரம், அரசமரத்தடியில் நாகர் விக்கிரகம், அருகில் கோசாலை என ரம்மியமாக அமைந்துள்ளது.
இங்கு சிறிய பீடம் ஒன்றில் அமைந்துள்ள பிரார்த்தனைச் சக்கரம் வெகு பிரசித்தம்.
பெருமாளின் கையில் உள்ள சக்கரம் என்று இதைப் போற்றுகின்றனர்,
இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தைத் தொட்டு வணங்கினால்,
தீராத நோய் மற்றும் பிரச்னைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.
பெருமாளின் கையில் உள்ள சக்கரம் என்று இதைப் போற்றுகின்றனர்,
இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தைத் தொட்டு வணங்கினால்,
தீராத நோய் மற்றும் பிரச்னைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தைக் காண முடியும். தேர் வடிவத்தில் அமைந்துள்ள சந்நிதியில், பதினாறு திருக்கரங்களும் பதினாறு ஆயுதங்களுமாகத் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு, சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்கிறார்!
பள்ளிகொண்ட பெருமாள் அலங்காரம்
பள்ளிகொண்ட பெருமாள் அலங்காரம்
ஸ்ரீசுதர்சனர் எனப்படும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்குப் பின்னே எப்போதும் போலவே ஸ்ரீநரசிம்மரின் அற்புதத் தரிசனம்! ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருவது, அரிதான ஒன்று எனப் போற்றுகின்றனர். கைகளில் நான்கு வேதங்கள் மற்றும் நான்கு சக்கரங்களில் நான்கு வேதங்கள் மற்றும் நான்கு சக்கரங்களுடன் காட்சி தருவதாக ஐதீகம்!
அஷ்ட லட்சுமியரும் இவர் சந்நிதியில் உறைந்து அருள்பாலிப்பதாகச் சொல்கிறார்கள். எனவே ஸ்ரீநரசிம்மர் மற்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி பிராகாரமாகச் சுற்றி வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
புதன்கிழமை வலம் வந்தால் பதினாறு வகைச் செல்வம் கிடைக்கும். சனிக்கிழமையில் வலம் வந்தால், கிரக தோஷம் நீங்கும்! தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையில், ஸ்ரீலட்சுமி மற்றும் ஸ்ரீநரசிம்மர் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தருவர். அதைத் தரிசித்து, மாங்கல்யச் சரடு பிரசாதத்தை வாங்கிக் கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாள்
வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு
.
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாள்
வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு
.
அத்தனையும்அருமை
ReplyDeleteநல்ல தரிசனம், நன்றி அம்மா.
ReplyDeleteஆகா... சிறப்பு... அருமையான விளக்கங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeletedo any one have the experience visiting kattu mariamman koil near thirupatur? Please give details. can you also give detail about temples & slogans to remove marriage obstacles,as it would be beneficial to all.
ReplyDelete’சாந்நித்யம் தரும் ஸ்ரீ சக்ரத்தாழ்வார்’ என்ற தலைப்பும் பதிவும் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDelete>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteஅதிலும் கடைசியிலிருந்து படம்-2, படம்-3 ஆகியவற்றில் வாகனமாகிய வெள்ளைக்குதிரைக்கும் நாமம் இட்டுள்ளது மனதைக்கொள்ளை கொண்டு போவதாக உள்ளது.
>>>>>
முதல் படமும் கடைசி படமும் அருமையோ அருமை. திவ்யமான தரிஸனம்.
ReplyDelete>>>>>
விளக்கங்கள் யாவும் வழக்கம்போல தெளிவானவை.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
-oOo-
சக்கரத்தாழ்வார் பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeletechakrathu aazvaar presentation beautiful.
ReplyDeletesubbu rathinam.
பார்க்காத கோவில், பார்க்கும் ஆசையை தூண்டும் படங்கள் .
ReplyDeleteசக்கரத்தாழ்வார் தரிசனம் புதன் கிழமையில் கிடைத்தது மகிழ்ச்சி.
நன்றி.
நல்ல தரிசனம்
ReplyDeleteசக்கரத்தாழ்வார் தரிசனம் மிக அருமை. புதன் கிழமை மிக விசேஷம். படங்களோடு நீங்கள் அளித்த பகிர்வு மிகவும் புண்ணியம்
ReplyDeleteஅதியற்புத படங்கள், விளக்கங்கள்... நன்றி!
ReplyDeleteநான் எப்போது ஸ்ரீரங்கம் சென்றாலும் முதலில் தரிசிப்பது கருடாழ்வார் அடுத்து சக்கரத்தாழ்வார். தங்கள் படங்களின் மூலம் வலைப்பதிவில் சக்கரத்தாழ்வார் தரிசனம். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசக்ரத்தாழ்வாரைப் பற்றிய அழகிய தகவல் படங்களுடன் அருமையான பதிவு!..
ReplyDeleteசக்கரத்தாழ்வார் படங்கள் அருமை.....
ReplyDeleteதிருவரங்கத்திலுள்ள சக்கரத்தாழ்வார் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். இங்கே தில்லியிலும் லோதி காலனியில் உள்ள ராமர் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உண்டு!
அற்புத தரிசனம்.
ReplyDeleteபவழந்தாங்கள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையும், சக்கரத்தாழ்வாரையும் சேவித்து மகிழ்ந்தோம்
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE