பிறை ஊரும் சடையான் – எம் பெருமான் ஆரூர்
“துடையூரும்” தொழ, இடர்கள் தொடரா அன்றே!!
தென்முக தெய்வமாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை ஞானக் கடவுள் என்று புராணங்கள்போற்றுகின்றன.
சனகாதி முனிவர்களுக்கு மௌன உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வி- ஞானம் பெருகும் என்கின்றன ஞானநூல்கள்.
வீணையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசிப்பது விசேஷம்!
ஸ்ரீராமன், தனது அம்பால் அசுரன் மாரீசனின் துடையைத் துளைத்த தலம் ஆதலால், துடையூர் என்று பெயராம்.
துடையூரில் இருக்கும் ஈசன் விஷமங்களேசுவரர் என அருள்கிறார்..
இந்த ஊரில் யாரையும் பாம்பு தீண்டுவதில்லையாம்.
விஷப்பூச்சிகள் கூடக் கடிப்பதில்லை என்று சொல்கிறார்கள்.
காவிரி- கொள்ளிட நதிகளுக்கு நடுவே அழகுற அமைந்திருக்கும் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில், வீணையுடன் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
இவரை, 'திகிசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி' என்கின்றனர்.
ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள், நல்ல வேலைக்காக காத்திருப்போர், உத்தியோகத்தில் சிக்கல்கள் நீங்கவும் கல்வியில் மந்த நிலை மாறவும் விரும்புவோர் இவரை வழிபட்டு பலன் பெறலாம் ..
செவ்வாய், வியாழன், ஞாயிறு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் மனோரஞ்சித மலர்களால் ஆன மாலை சார்த்தி, தேன் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
அபிஷேகத் தேனை வாங்கி வந்து, அதிகாலை வேளையில் வீணா தட்சிணாமூர்த்தி' மனதில் தியானித்தபடி பருகினால், பிரார்த்தனைகள் யாவும் பலிக்கும் என்பது நம்பிக்கை.
மனம் ஒருமுகப்பட்டு படிப்பதற்கும், சிந்தனையில் தெளிவு வேண்டியும்... மாணவ- மாணவியர் ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு வந்து ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தியை மனமுருக வழிபட்டுச் செல்வர்களின் வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றுகிறார் ஞானக் கடவுள்!
கருவறையின் வெளிச்சுவரில் ஆலமர்ச் செல்வன் தட்சிணாமூர்த்தி வழக்கமாக ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பவர் இங்கே நின்று கொண்டிருக்கிறார்.
வழக்கமாக ஏடு பிடிக்கும் கையில் வழக்கத்திற்கு மாறாக வீணையில் ஒரேயொரு நரம்பு. இந்த வீணைக்குத் திகிசண்டளா வீணையென்று பெயராம். திகிசண்டளா என்பது உடம்பில் உள்ள ஏதோவொரு பெரிய நரம்பின் பெயராம்.
ஓசை-ஒலி எல்லாம் ஆனாய் நீயே எனப்போற்றப்படும் இறைவன்
திகி சந்தள வீணை வைத்திருப்பதாகவும் பொருள் கொள்ளலாம் ../
திகி என்றால் திக்கு (அஷ்ட திக்)
இப்படி, பல திக்குகளிலும் ஒலிக்கும் வீணை - திகி சந்தள வீணை!
ஓசை வரும் திசையை வைத்து இடத்தைக் கண்டு பிடிக்கலாம்!
அங்கு இங்கு எனாதபடிக்கு, எங்கும் பிரகாசமாய் திக்குகளையே ஆடையாய் அணிந்த இறைவன் வீணை வாசிப்பும் பல திக்குகளில் ஓசை எழுவதால்
திகி சந்தளம் என ஒலிக்கிறது..
வீணாதர தட்சிணாமூர்த்தி திகழும் சுவரிலேயே ஒரு கலைமகள் சிலையிலும் வழக்கத்திற்கு கையில் வீணையில்லை. ஓலைச்சுவடியும் யோகமாலையும் கையில் உள்ளது.
தட்சிணாமூர்த்திக்கும் கலைமகளுக்கும் தேன்அபிஷேகம் செய்து அந்தத் தேனை குழந்தைகள் நாற்பது நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் படிப்பு நன்றாக வருமாம்.
இந்த தேன்முழுக்கை செவ்வாய், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்ய வேண்டுமாம்.
ஆலயத்தின் கிழக்கே எழுந்தருளியுள்ள வாத முனீஸ்வரர், நரம்பு மற்றும் வாத சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் அற்புத சக்தி வாய்ந்தவராக வழிபடப்படுகிறார். அவ்வாறு நோயுற்றவர்கள் கோயில் முகப்பிற்கு எதிரேயுள்ள இவரை வழிபட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்கின்றனர். செவ்வாய், சனி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வாத முனிக்கு தைல அபிஷேகம் நடக்கிறது.
வாத முனிக் கல்லில் நல்லெண்ணெய் முழுக்கு செய்தால் அந்த எண்ணெய் மருந்தாகுமாம். அந்த நல்லெண்ணெய்யை சாப்பாட்டில் நேரடியாகக் கலந்து சாப்பிடுவது நல்லதாம்.
பிரசாதமான அபிஷேகத் தைலம் தினமும் கோயிலில் கிடைக்கும்.
துடையூர், திருச்சி-சேலம் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சி- நாமக்கல் செல்லும் பாதையில், சுமார் 15 கி.மீ. தொலைவில்... குணசீலத்துக்கு முன்னதாக வரும் ஊர் துடையூர்.
புராணச் சிறப்புகள் நிறைந்த திருத்தலம்.
துன்பங்கள் துடைத்து இன்பங்கள் அருளும் தலம் ..!
சென்னை கபாலீஸ்வரர் ஆலய கோபுரத்தில் தட்சிணாமூர்த்தி//
ஞானக்கடவுள் ஸ்ரீவீணா தக்ஷிணா மூர்த்திக்கு, அடியேனின் வந்தனங்கள்.
ReplyDeleteஎங்கள் ஊர் திருச்சி அருகே உள்ள இந்த ஸ்தலத்தினைப்பற்றிய விபரங்கள், தேனாக இனிக்கின்றன.
ReplyDelete>>>>>
தக்ஷிணாமூர்த்திக்கும், கலைமகளுக்கும் அபிஷேகம் செய்த அந்தத்தேனை வெறும் வயிற்றில் 40 நாட்களுக்கு அருகே உள்ள சேலம் / நாமக்கல் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்திருப்பார்கள்.
ReplyDeleteஅதனால் தான் நாமக்கல் கல்வி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மல்கோவா மாம்பழமாகப் பிறந்து, நாமக்கல் கல்லூரியில் படித்தவர்கள் அதிபுத்திசாலியாக இருக்கிறார்கள். ;))))
>>>>>
மேலிருந்து கீழ் 2, 3, 4 படங்கள் திறக்கவே இல்லை.
ReplyDeleteமொத்தம் 10 படங்கள் மட்டுமே.
அதிலும் 7 தான் தெரிகிறது.
>>>>
கடைசியில் காட்டியுள்ள படம் கல்கண்டாக இனிக்கிறது.
ReplyDeleteஎனக்கு என் மனதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.
என் கேள்விகளுக்கு ஞானக்கடவுளாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியோ, கலைவாணியோ தகுந்த பதில்கள் அளித்து, மனதுக்கு ஆறுதல் தருவார்களா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.
>>>>>
அழகானதொரு மிகச்சிறிய பதிவாகக் கொடுத்துள்ளதற்கு நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இனிய நல்வாழ்த்துகள்.
மனம் திறந்தால் அதாவது படங்கள் திறந்தால் தரிஸித்து விட்டு மீண்டும் வருவேன்.
-oOo-
காலையில் கணினிமுன் அமர்ந்ததும் காணும் முதல் பதிவு தங்களுடையதுதான். தெய்வீகப் பதிவு .நன்றி
ReplyDeleteGurubhyO namaha
ReplyDeletesubbu thatha.
www.vazhvuneri.blogspot.com
ஆஆஆஆஆஆஆ சொல்ல மறந்துட்டேன்.
ReplyDeleteஇன்று வியாழக்கிழமைக்கு [குருவாரம்] ஏற்ற நல்லதொரு பதிவு.
இன்னும் மனம் திறக்கவில்லையே. அதாவது படங்கள் மூன்றும் திறக்கவில்லை. பார்த்து ஏதாவது செய்யுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
மாரிசனின் துடையைத் துளைத்ததால் துடையூர் என்று பெயர் வந்தது என்ற விவரம் திருச்சிக்காரனான எனக்கு இப்பதிவைப் படித்தபிறகுதான் தெரிந்தது. நன்றி
ReplyDeleteஅருமை... நன்றி அம்மா...
ReplyDeleteஞானக் கடவுளான வீணா தக்ஷணாமூர்த்தியைப் பற்றி அரிய நல்ல தகவல்களுடன் படங்களும் பதிவும் அருமை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கல்லால் கீழமர்ந்திருக்கும் தட்சிணாமூர்திக்குப் பின்புறம் கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி
ReplyDeleteநின்ற கோலத்தில் அழகுறக் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனிச்சிலா உருவம் உள்ளது.அருகிலேயே துர்கை.மஹாலக்ஷ்மி சுதை சிற்பமாக பெரிய உருவுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
அருமையான தகவல்களுக்கு நன்றி அம்மா!
வீணா தட்சணாமூர்த்தி அருள்புரியும் துடையூர் பற்றி அறிந்துகொண்டேன். தகவல்கள்,படங்கள் அருமை.நன்றி.
ReplyDeleteஅருமையான பகிர்வு. நன்றி.
ReplyDeleteசிறு வயதில் ஒரு பரிகாரதிர்க்காக தக்ஷிணாமூர்த்தி சுவாமியை வாரம் ஒரு முறை தரிசித்து, அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்லியதும், அதை நிறைவேற்ற சென்றதும் என்று எனது மனதில் விரிகிறது. பகிர்வுக்கு நன்றி !
ReplyDelete
ReplyDeleteபதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
இரண்டாவது படம் மட்டும் இப்போ காட்சியளிக்குது.
ReplyDeleteதிகிசண்டளா வீணா தக்ஷிணாமூர்த்தி புது மஞ்சள் வஸ்திரத்துடன் காட்சியளிக்கிறார். மயில்கண் போல மேலே சிகப்பு கீழே பச்சைக்கரை.
BUT STILL I AM WAITING, FOR THE REST OF THE EXPECTED ITEMS.
ஸ்ரீ வீணாதர தக்ஷிணாமூர்த்தி வீற்றிருக்கும் துடையூர் பற்றி அறியத் தந்தீர்கள்..! வாழ்க.. வளர்க!..
ReplyDeleteஇப்போ எல்லாப்படங்களுமே தெரிகின்றன. சந்தோஷம்.
ReplyDeleteபடம் 2ல் நடுவே சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில், பிள்ளையார் + முருகன் இரு ஓரமும் கூடிய கோயில் கோபுரம்.
படம் 4ல் புதிதாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ள கருவறை விமானம்.
திருப்தியாகி விட்டது. BYE !
அருமையான பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவீணை தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் படங்களும் தகவல்களும் அருமை. வியாழனன்று குருவின் தரிசனம் ஆயிற்று. நன்றி உங்களுக்கு.
ReplyDeleteஓம் குருவே நமக! அருமையான தரிசனம்!
ReplyDeleteவீணை தக்ஷிணாமூர்த்தியும் வாத முநீஸ்வரரும்
ReplyDeleteஅருமையாகக் காட்சித் தருகின்றனர். இங்கிருந்தே
தரிசித்து அருள் பெற விழைந்தேன். அருமை.
திருச்சிக்கு அருகே திரு ஈங்கோய் மலை செல்லவிருக்கிறோம்.
அப்போது ஆண்டவன் அருளிருந்தால் நேரில் தரிசிப்போம்.
திரு ஈங்கோய் மலை பற்றி ஏதாவது முடிந்தால் சொல்லவும்.
நன்றி !
கடைசி புகைப்படம் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது போல மிகவும் அழகு!
ReplyDeleteஅழகான தரிசனம் படங்களுடன்...
ReplyDeleteஅழகிய படங்களுடன் அரிய தகவல்கள்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteமயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு பல முறை சென்றாலும் கோயில் கோபுர அழகை முழுமையாக பார்க்க முடிவதில்லை ஆனால் பதிவின் இறுதியில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயில்கோபுரம் படம் மனதை கவர்கிறது.
ReplyDeletegood information about thudayur thanks for sharing
ReplyDelete