அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நேசிக்கிறேன் உன்னை
காலங்களாலே தென்றல் வருக புயலே வரவேண்டாம்
மேகங்களாலே மழையே வருக வெள்ளம் வர வேண்டாம்
சமாதானமே சமாதானமே தழுவுகிறேன் உன்னை
தர்மதேவனே தர்மதேவனே சரணடைந்தேன் உன்னை
வீடுகள்தோறும் ஒளியே வருக இருளே வர வேண்டாம்
நாடுகள்தோறும் உறவே வருக பகையே வர வேண்டாம்
புத்தன் வழியில் அசோகன் சேவை புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடென சொன்னது எதற்காக
சத்திய நெறியைத் தாரணி எங்கும் தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம் தாயே உனக்காக !
உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில்
செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1981ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட அமைதி தினம், உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து, அமைதி நிலவ, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் போட்டி போடுகின்றன.
போட்டி, ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது.
மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.
பயங்கரவாதம் ஒழிய வேண்டியது அவசியம்...:
உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா., வின் அமைதி பரிசு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா., சபை வலியுறுத்துகிறது.
மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒழிய, அமைதியான உலகை உருவாக்க முடியாது
VERY GOOD MORNING !
ReplyDeleteமீண்டும் வருவேன் !!
>>>>>
வணக்கம்
ReplyDeleteஅம்மா
உலகில் அமைதி மலர இறைவனைப் பிராத்திப்போம் நினைவு நாளை நினைவுபடுத்தியமைக்கு மிக நன்றி
படங்கள் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகில் அமைதி நிலவட்டும். நன்றி
ReplyDeleteஉலக சாந்தி தினமா ?
ReplyDelete[அமைதிக்குப்பெயர் தான் ... சாந்தி ;) ]
அமைதிப்புறாவை அழைத்து
நிம்மதியை நேசிக்கிறீர்களா?
சபாஷ்!
கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
இனிய பாடல் வரிகளுடன் ஆரம்பமே அருமையோ அருமையாகத்தான் உள்ளது.
>>>>>
//உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால் அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதியையும் பாதிக்கிறது, ஆபத்தை விளைவிக்கிறது.//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.
இதைத்தான்
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’
என்பார்கள்.
>>>>>
ஐக்கிய நாட்டு சபை பற்றியும், அமைதிக்கான நோபல் பரிசுகள் பற்றியெல்லாம் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteசுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லியுள்ள உங்களுக்கே ஒரு நோபல் பரிசு தரணும் போல எனக்கோர் எழுச்சி ஏற்படுகிறது. ;)
>>>>>
எல்லாப்படங்களுமே அழகோ அழகு.
ReplyDeleteஅதிலும் நேற்று முன்தினம் போலவே அடியில் தொங்கும் மூன்றும் [கீழிருந்து படம்: 1, 2 + 4 ] சூப்பரோ சூப்பர். எக்ஸலெண்ட்!
படத்தேர்வுகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>
இறுதியாக ...... உறுதியாக ......
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்,
நல்வாழ்த்துகள்,
பாராட்டுக்கள்.
Bye Bye !
-oOo-
எல்லோரும் நாட வேண்டியது அமைதியே என்று அருமையாக சொல்லி விட்டீர்கள்... படங்கள் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதாயே உனக்காக பாடல் பகிர்வு அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
உலகம் அமைதி தினத்திற்கு வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் அமைதி பெறட்டும். அமைதி அமைதி அமைதி.
வாழ்க வளமுடன்.
காலங்களாலே தென்றல் வருக!..
ReplyDeleteபுயலே வரவேண்டாம்!..
மேகங்களாலே மழையே வருக!..
வெள்ளம் வரவேண்டாம்!..
கவியரசர் கண்ணதாசனின் காவிய வரிகளுடன் அழகான அருமையான பதிவு!..வாழிய நலம்!..
உலக அமைதி தினம்! உருண்டை உருண்டையான உலக உருண்டை படங்களும் அனைத்து படங்களும் மிக அருமை.
ReplyDeleteஎங்கும் அமைதி நிலவட்டும். மகிழ்ச்சி மலரட்டும். நன்றி அம்மா.
Om Shanthi Shanthi Shanthi
ReplyDeleteஉலக அமைதி தினத்திற்கு ஒன்றாய் கை கோர்ப்போம்.. ! மனிதம் சிறக்கட்டும்!
ReplyDelete
ReplyDeleteஇன்றுமட்டும் அல்ல , என்றும் உலகில் சாந்தி நிலவ வேண்டும் என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு. உலகில் அன்பு தழைக்க என்றும் அமைதி நிலவப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteநல்லதொரு தினத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க.
ReplyDelete
ReplyDeleteஉலக அமைதி தினம் இன்று.
வெளிலே அமைதி இருக்கணும் அப்படின்னா
உள்ளேயும் அமைதி இருக்கணும்.
ஒவ்வொருவருக்கும் தேவை இன்று
அக ஒளி பெருக்கவேண்டும்.
அழுக்காறு அவா வெகுளி, இன்னாச்சொல்
இழுக்கா இயன்றது அறம்
என வள்ளுவன் மொழி உணர்வோம்.
அகத்திலே முதற்கண் அமைதி காண்போம்.
ஆன்மிகம் என்றால்என்ன எனத் தெளிவோம்.
இறை வழி செல் வோம்.
ஈசன் கருணையை
உள்ளத்தில்
ஊறச்செய்வோம்.
எல்லாவற்றையும் செய்ய
ஒரே வழியான
ராஜேஸ்வரி வலைப்பதிவு
தினம் தோறும் படிப்போம்.
பயன் உறுவோம்
சுப்பு தாத்தா.
விதம் விதமான தினன்களைப் பற்றி உணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. உலகம் முழுதும் அமைதி நிலவட்டும்
ReplyDeleteஎங்கெங்கும் அமைதி தவழட்டும்!!
ReplyDelete