






மாதவனே கேசவனே மதுசூதனா கோவிந்தா கோபாலா
வாமனனே நாராயணனே திருவேங்கடவனே வைகுந்தா
ஸ்ரீனிவாசா வேங்கடேசா ஸ்ரீதரனே ஜெய் கிருஷ்ணா - என்று
என்ன சொல்லி அழைத்தாலும் எங்கிருந்து நினைத்தாலும்
பக்தி ஒன்றே போதுமென்று பரிவுடனே வந்தருளும் திருமலை தெய்வம்..!

நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்னும் விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம்,
வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்கள் உள்ளன


விஷ்ணு காயத்ரிமந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.

புரட்டாசி சனியன்று இந்த எளிய மந்திரங்களை மனச்சுத்தத்துடன்
சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு, வெங்கடாஜலபதியாக, புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திர நன்னாளில் அவதரித்தார். ஏழுமலையான் அவதரித்த மாதமான புரட்டாசி விஷ்ணு வழிபாட்டிற்கு உரியதாக போற்றப்படுகிறது.


சத்தியலோகத்தில் இருந்து பிரம்மா, பூலோகம் வந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார். இதற்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்ஸவம் என்று பெயர்.
காலை,மாலையில் வெவ்வேறு அலங்காரத்துடன் திருப்பதியிலுள்ள உற்சவர் மலையப்ப சுவாமி பவனி வருவார்.
திருப்பதி வெங்கடாஜலபதி மட்டும் தன் திருக்கரத்தை கீழ்நோக்கி காட்டியபடி, ""பக்தர்களே! கலியுகத்தில் உய்வதற்குரிய ஒரே வழி என் திருவடியை பற்றிக் கொள்வது மட்டுமே!'' என்று உணர்த்தியபடி இருக்கிறார்.
தன்னை சரணடைந்தவர்களை கையால் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடது கை உணர்த்துகிறது.
பன்னிரு ஆழ்வார்களும், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களும் வெங்கடாஜலபதியைச் சரணடைந்து வாழ்வில் நற்கதி அடைந்தனர்.
திருப்பதியை "வேங்கடம்' என்கிறோம்..
"வேங்கடம்' என்றால் "பாவம் பொசுங்கும் இடம்' என்று பொருள்.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.

சந்திரதோஷத்தால் திருமணத்தடை, பணப்பிரச்னை, நோயால் அவதி, கல்வித்தடை உள்ளவர்கள், திருவோண விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும்.
புரட்டாசியில், சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தவை. புண்ணியம் மிக்க புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானைச் சரணடைந்து புண்ணியம் பெறலாம்.

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மலையப்பனாக எழுந்தருளுவார்.





பாவங்களை பொசுக்குபவன் - வேங்கடவன் நமது பாவங்களை எல்லாம் பொசுக்கி, காத்தருளட்டும்....
ReplyDeleteபுரட்டாசி சனிக்கிழமையில் காலையில் வேங்கடவன் தரிசனம். நன்றி.
சிறப்பான தரிசனம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....
ReplyDeleteபுரட்டாசி சனிக்கிழமை பதிவு! வழக்கம் போல படங்கள் சிறப்பானவை!
ReplyDeleteசிறீனிவாச வெங்கடேசாவின் மறு பெயர்கள் முதல் பதிகத்தில் 2 வரியை நிறைத்தது.
ReplyDeleteபடங்களும் பதிவும் மனம் கவர்ந்தது.
நன்றியுடன் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Heartening to sing in praise of Lord Venkatesa on PURATTASI SANI KIZHAMI.thanks a lot.
ReplyDeleteYOU MAY LISTEN TO THE HYMN HERE.
www.menakasury.blogspot.com
subbu thatha.
அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
ReplyDeleteதிருப்பதி திருமலை சென்று வந்த உணர்வை தந்தன அணைத்து படங்களும். வழக்கம்போல மிக அழகான பகிர்வு. நன்றி.
ReplyDeleteதரிசித்தும் மகிழ்ந்தோம்
ReplyDeleteஅறியாதன அறிந்தும் தெளிந்தோம்
புரட்டாசி சனி சிறப்புப் பதிவு
வெகு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
அற்புதமான அழகிய பதிவு சகோதரி!
ReplyDeleteமாதவனை மனதால் நினைத்தாலே பாவம் அகன்றிடுமென்றால் அதைவிட வேறேன்ன வேண்டும்...
பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
”ஸ்ரீநிவாஸா, வேங்கடேசா” என்ற தலைப்பினில் இன்று புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற மிகச்சிறப்பான பதிவு.
ReplyDeleteமனம் நிறைந்த மகிழ்ச்சிகள்.
>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
ReplyDeleteமேலிருந்து மூன்றும், கீழிருந்து 2 முதல் 5 வரையிலும் சும்மா ஜொலிக்கின்றன.
தங்களின் பதிவுகள் அல்லவா!
ஜொலிக்காமால் இருக்குமா?
தரிஸிக்க சந்தோஷமாக உள்ளது.
>>>>>
ReplyDeleteபெருமாளின் இடது திருக்கரத்தின் விளக்கங்கள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.
அதனாலேயே நானும், ’உன்னை அல்லால் வேறு தெய்வமில்லை’ என டோட்டல் சரண்டர் ஆகிவிட்டேன். ;)))))
ஸ்ரீதேவியுடன் பூதேவியும் சேர்ந்து காத்தருள்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏதோ நாட்களை நகர்த்தி வருகிறேன்.
>>>>>
கடைசி படத்தில் கொசுக்கூட்டங்கள் போல எத்தனை ஜனங்கள் !!!!!
ReplyDeleteவெரி வெரி பியூட்டிஃபுல் கவரேஜ்.
>>>>>
நாராயண, வாஸுதேவ விஷ்ணு மந்த்ரங்கள் அடங்கிய காயத்ரியுடன் இந்தப்பதிவு மிக அருமையாக, தன்வந்திரியின் அமிர்த கலச ஒளஷதம் போன்று சுவையோ சுவையாக உள்ளது.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க !
-oOo-
பரந்தாமனைப் பற்றி - பரவசமான பதிவு!.. நாராயண!..
ReplyDeleteநீங்கள் இயற்றி இருக்கும் பாடலை திரு சுப்பு ரத்தினம் பாடி அதையும் கேட்டு மகிழ்ந்தோம்.
ReplyDeleteபுரட்டாசி சனிக்கிழமை வேங்கடவன் தரிசனம். வேறு என்ன வேண்டும்?
நன்றி!
அற்புதமான படங்களுடன் இன்றைய பகிர்வும் அருமை.
ReplyDeleteபுரட்டாசி சனிக்கிழமை இன்று! தரிசனம் கண்டு மகிழ்ந்தோம்,
ReplyDeleteஎனது வருகை தாமதமாக இருந்தாலும் பாருங்கள் இன்று புரட்டாசி சனிக்கிழமை. அழகான தரிசனம். அழகான காட்சிகள். தாங்கள் கண்டு மகிழ்ந்த காட்சிகளை மற்றவருக்கும் பகிர்ந்த தங்களுக்கு இறைவனின் இறையருள் என்றும் உண்டு. பக்தி மனம் கமழும் பதிவுக்கு நன்றீங்க அம்மா..
ReplyDeleteதிருவேங்கடவன் தரிசனம் அருமை
ReplyDeleteஎம்பெருமான் பற்றிய படமும் பகிர்வும் அருமை....
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
ஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
ReplyDeleteஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.
ReplyDelete