வியத்தகு விமான நிலையங்கள்
விமான நிலையங்கள் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி செயல்படும் பாங்கு வியக்கவைத்தது. பகிர்ந்து கொள்ள சில விமான நிலையங்கள் இங்கே காட்சிக்கு...
ஹாங்காங் விமான நிலையம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
நட்சத்திர தங்கும் விடுதியிலிருந்து பார்த்தபோது ஒரே கண்வீச்சில் விமானம் ஏறுவதும் இறங்குவதுமான காட்சியும், அசைந்து செல்லும் கப்பல்களின் ஒளிவெள்ளமும், அதிவிரைவு நவீனரக சாலைப் போக்குவரத்துமாக சொர்க்கலோக சிருஷ்டியாக மயக்கியது.
99 வருட குத்தகை பிரிட்டன வசமிருந்து சீனாவிற்கு மாறியிருக்கிறது. தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் மேல் மாடியில் நிறைய வாஷிங்மிஷின்கள் வைக்கப் பட்டிருந்தன.
நம் துணிகளை சலவை செய்துகொள்ளலாம்.
அதிவிரைவு லிப்ட்கள் இமைக்கும் நேரத்தில் பல மாடிகளைக் கடக்கிறது.
ஹாங்காங்கில் காலடி பதித்தவுடன் நிறைய பேர் கோட், சபாரி என்று துணி செலக்ட் செய்து தைக்க அளவு கொடுத்து சில மணிகளுக்குள் தைத்து கையில் வாங்கிக்கொண்டனர்.
சிங்கப்பூரில் செந்தோசா தீவு முழுக்க பொழுதுபோக்கு,மற்றும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதற்கே பிரத்யோகம்.
விஞ்ச் மூலம் பயணித்தோம்.
டால்பின் காட்சியும், கிளிகளின் சாகசமும் அருமை.
சூதாட்ட விடுதிக்குள் ஆண்கள் ஷூவும் டையும் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
கை நிறைய பணத்தை வைத்துக் கொண்டு அந்த விளையாட்டில் அடிமை ஆன மாதிரி வயது வேறுபாடின்றி லயித்திருந்தனர்.
விஞ்ச் மூலம் பயணித்தோம்.
டால்பின் காட்சியும், கிளிகளின் சாகசமும் அருமை.
சூதாட்ட விடுதிக்குள் ஆண்கள் ஷூவும் டையும் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
கை நிறைய பணத்தை வைத்துக் கொண்டு அந்த விளையாட்டில் அடிமை ஆன மாதிரி வயது வேறுபாடின்றி லயித்திருந்தனர்.
மீன்காட்சிச்சாலையில் நம்மைச்சுற்றி பெரிய பெரிய மீன்கள் நீந்த கண்ணாடிக் குகைக்குள் நீரடியில் இயங்கும் உலகத்தைச் சுறிப்பார்ப்பது வித்தியாசமான அனுபவம்.அந்தமீன்கள் கொடுத்துவைத்தவை. அதன் நீர் ஸ்டெரிலைஸ்செய்து சுத்திகரிக்கப்பட்ட நீராம.
Entering the Kuala Lumpur International Airport
மலேசியவின் பத்துமலை முருகன் தங்கத்தில்
ஜொலிஜொலித்து மனதில் தங்கினார்.
நக்கீரரை ஒரு பூதம் அவர் சிவ பூஜையின் போது மரத்தில்ருந்து உதிர்ந்த இலைக்ளில் தரையில் விழுந்தவை பற்வையாகவும், நீரில் விழுந்தவை மீன்களாகவும் மாற, இரு இலை தரையில் பாதி நீரில்பாதி விழுந்து தரையில் விழுந்தபாகம் பறவையாகிவானில் பறக்க முயற்சிக்க, நீரில் விழுந்த பாகம் மீனாகி நீருக்குள் இழுக்க இந்த விந்தைக் காட்சியில் சிவபூஜை அபசாரம் நிகழ ஏற்கென்வே 999 பேர் இருந்த இடத்தில் நக்கீரர் 1000 வது ஆளாகச் சேர அனைவரும் தங்கள் அவல நிலையைச் சொல்ல அவர் கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடமாட்டேன். அப்பனைப் பாடும் வாயால் பிள்ளை சுப்பனைப் பாடமாட்டேன் என்ற தன் நிலைமாற்றி திருமுருகாற்றுப்படை பாடிய தலமாகக் கருதப்படுகிறது.
தமிழரால் கட்டடப் பட்டதான மாரியம்மன் கோவிலில் திரும்பும் போது கதவைத் தொட்டுவிட்டு வந்தால் மீண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று வழிகாட்டி கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து நீண்ட பயணம் ஆஸ்திரேலியாவிற்கு. பிரிஸ்பேன் விமான நிலையம் சகல வசதிகளுடன் அருமையான அமைப்பு கருத்தைக்கவர்ந்தது.
இரவா பகலா என்ன காட்சி! வெட்டி ஒட்டி கிளிக்கிப் பாருங்கள்.
Check this amazing site: http://61226.com/share/hk.swf
Hong Kong at Dusk:
Place your cursor at the top of the photo.
You will notice the time as 6:10 PM.
Bring the mouse down slowly over the photo without clicking the button on the mouse.
Night time appears as the lights come on and at 7:40 PM it's dark!!
one of the planes at the Brisbane airport
ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப
முன் பக்கத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஏதாவது அழும் குழந்தையோ, அடம் பிடிக்கும் குழந்தையோ கண்ணில் தென்பட்டால் அது இந்தியக் குழந்தையாக மட்டுமே இருந்தது ஆரய்ச்சிக்குரியது.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்டாப் ஓவர் என்று அழைக்கப்படும் தங்கும் நேரம் பன்னிரண்டு மணிநேரமாக இருந்தது. சிட்டி டூர் என்று அழைத்துச் செல்கிறாகள்.
இந்திய அரங்கு ஒன்று நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.
மெகந்தி வைத்து அழகு படுத்தினார்கள்.
நிறைய ஆங்கிலேய பெண்களும், சில ஆண்களும் கூட வியப்புடன் மருதாணி போட்டுக்கொண்டார்கள்.
அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.
டிரேவலேட்டர்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன.
காவேரி உணவகத்தில் சைவ உணவு கிடைக்கிறது.
பில்டர் காபியும்.
மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது.
அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Brisbane Airport Experience Centre to open its doors
one of the planes at the Brisbane airport
ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப
பிரிஸ்பேன் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியது.
சுத்த சைவம் என்பதால் இந்தியாவிலிருந்து செல்லும் போது விமானத்தில் எதுவும் சாப்பிடாதாததால் விமானப் பணிப்பெண் நீங்கள் திரும்பும் போது சைவ உணவு ஏற்பாடு செய்கிறோம் உங்கள் ரிட்டன் பயணச்சீட்டைத்தாருங்கள் இருக்கை எண்ணையும், தேதியையும் குறித்துக் கொள்கிறோம் என்று சொல்லி குறித்துக் கொண்டு , இப்போது அருமையான சைவ உணவு வழங்கினார்கள்.
ஒரு கால் இழந்த வெள்ளைக்காரர் ஒருவர் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல் விமானப் பணிப்பெண்களிடம் கேட்டு பானமும் கொறிப்பதற்கான பண்டங்களும் கேட்டு சாப்பிட்டபடியே இருந்தார்.
முன் பக்கத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஏதாவது அழும் குழந்தையோ, அடம் பிடிக்கும் குழந்தையோ கண்ணில் தென்பட்டால் அது இந்தியக் குழந்தையாக மட்டுமே இருந்தது ஆரய்ச்சிக்குரியது.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஸ்டாப் ஓவர் என்று அழைக்கப்படும் தங்கும் நேரம் பன்னிரண்டு மணிநேரமாக இருந்தது. சிட்டி டூர் என்று அழைத்துச் செல்கிறாகள்.
நான் உலகப்பிரசித்தி பெற்ற , புதுப் பொலிவுடன் இருந்த விமான நிலையத்தையே சுற்றிப்பார்க்க முடிவெடுத்தேன்.
ஏற்கெனவே ஒருமுறை செந்தோசா தீவு மற்றும் பல இடங்களைப் பார்த்துவிட்டதால், விமான நிலையத்தையே சுற்றி வந்தேன்.நாமே நினைத்தாலும் தொலைந்து போக முடியத பாதுகாப்பான இடமல்லவா??
இந்திய அரங்கு ஒன்று நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.
மெகந்தி வைத்து அழகு படுத்தினார்கள்.
நிறைய ஆங்கிலேய பெண்களும், சில ஆண்களும் கூட வியப்புடன் மருதாணி போட்டுக்கொண்டார்கள்.
காதலன் படத்தில் பிரபுதேவா நக்மாவுக்குச் செய்து கொடுத்த கிலுகிலுப்பை போல் பனை ஓலையிலும், ஒயரிலுமாக செய்து அன்பளிப்பாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்கள்.
அதுமட்டுமா? பழ்ங்கால ராந்தல் விளக்கு, பாத்திரங்கள் அடுக்கி கிராமத்து வீடு போல் அலங்கரித்து ,அங்கே அமரவைத்து படம் எடுத்து அப்போதே கையில் படத்தைக் கொடுத்து அசரவைத்தார்கள்.
கண்களையே நம்பமுடியவில்லை கிளிக்கூண்டுடன் ஜோதிடம் பார்க்கிறேன் என்றார்.
இ-மெயிலும், வந்த விமானத்தின் பெயரும் பதிந்து கொண்டு, கிளியைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னார்.
இ-மெயிலும், வந்த விமானத்தின் பெயரும் பதிந்து கொண்டு, கிளியைக் கூப்பிட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னார்.
அது பல அட்டைச் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, என் பெயருக்கான சீட்டை எடுத்துக்கொடுத்தது
அவர் என்னையே படித்துக் கொள்ளச் சொன்னார்.
நம் கிராமத்தில் கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டின் படமும், ஜோசியக்காரர் ராகத்துடன் படிக்கும், பலனும், அதை வாய்பிளந்து கேட்கும் மக்களுமாக சூழ்நிலையே கலக்கலாக இருக்குமே!
இங்கோ !ஆங்கிலத்தில் பலன் எழுதியிருந்த நான்கு வரியைப் படித்ததும் சரியாக் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டார் -
அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.
அவர் சிங்கப்பூரிலேயே பிறந்த இலங்கையைச் சேர்ந்தவராம்.
ஆக்டோபஸ் ஜோதிடம் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை முயற்சிப்பார்களோ என்னவோ.!!
சில கணிணிகளும் அதற்கு மேல் காமிராவுமாக இருந்த இடத்தில் காமிராவைக் கிளிக் செய்துவிட்டு, இ மெயில் தட்டச்சு செய்தால் அடுத்த நொடி புகைப்படம் அந்த மெயிலுக்குச் சென்றடைகிறது.
அங்காங்கு இருந்த கணிணியில் இந்தியவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் சாட் செய்தேன்.
முப்பது நிமிடங்களில் கணிணி தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது.
காத்திருப்பவர் நமக்குப்பிறகு யாரும் இல்லாவிட்டால் மீண்டும் நாமே இயக்கலாம்.
முப்பது நிமிடங்களில் கணிணி தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது.
காத்திருப்பவர் நமக்குப்பிறகு யாரும் இல்லாவிட்டால் மீண்டும் நாமே இயக்கலாம்.
கால் பிடித்துவிடும் இயந்திரம் ஆங்கங்கே இருக்கிறது.
முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.
முப்பது நிமிடங்களுக்கு மேல் இயக்குவது ஆரோக்கியமானதல்ல என்று குறிப்பிடிருக்கிறார்கள்.
சுற்றிச்சுற்றி கால் அசரும் போதெல்லாம் நேரம் செட் செய்துவிட்டு கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் மீண்டும் நடக்க உற்சாகமாக இருக்கிறது.
மசாஜ் நிலையங்களில் மெனிகியூர்,பெடிகியூர், கழுத்து மசாஜ செய்ய கட்டணம் உண்டு. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்றவற்றிற்கு நல்ல ரிலீப் கிடைக்குமாம்.
திரைப்பட அரங்கில் ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருக்க இருக்கையில் சிலர் தூங்கிக் கொன்டிருந்தார்கள்.
அரேபிய உடையுடனும்,பர்தாவுடனும் ஒரு கூட்டம் கடக்க, துபாய் செல்லும் விமானம் கிளம்பத்தயாரானது தெரிகிறது.
சீருடை அணிந்த ஜப்பானிய மாணவர்கள் தங்கள் ஆசிரிய வழிகாட்டியுடன் லண்டன் பயணத்திற்குத் தயாரானார்கள்.
சென்னை செல்லக் காத்திருந்த மாணவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
டிரேவலேட்டர்கள் மிகவும் வசதியாக இருக்கின்றன.
அருமையான இயற்கைச் சூழலிலான பட்டாம்பூச்சி பூங்கா கண்ணயும் கருத்தையும் கவர்ந்தது.
காகடஸ் கார்டனில் கள்ளிச் செடிகளின் அணிவகுப்பு.
கள்ளிக்கேது முள்ளில் வேலி ??
கள்ளிக்கேது முள்ளில் வேலி ??
சூரியகாந்திப் பூங்கா சூர்யப் பிரகாசத்துடன் போட்டியிட்டு மலர்ந்து , முகம் மலர்ச்சியுறச் செய்தது.
காவேரி உணவகத்தில் சைவ உணவு கிடைக்கிறது.
பில்டர் காபியும்.
கண்ணாடிச் சுவர்களின் வெளியே விமானம் இறங்குவதும்,புறப்படுவதுமாக காட்சிப்படுகிறது.
மழை பெய்து சூழலை மேலும் அழகாக்குகிறது.
மழை பெய்து சூழலை மேலும் அழகாக்குகிறது.
விமான நிலயத்தில் வாங்கும் பொருள்களுக்கு சலுகை அறிவிப்புகளோடு கண்கவரும் விற்பனை நிலையங்கள் ஏராளம்.
ஸ்குரூக்கள் என்னும் விமான நிலையப் பணியாளருக்கான சிறிய ஜீப் போன்றும், இருசக்கர வாகனம் போலும் பணித்துக் கொண்டிருந்தன.
அதிநவீன தொலைக்காட்சிப்பெட்டிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பகிக் கொண்டிருக்க, மிக வசதியான இருக்கைகள் அமைத்திருக்கிறார்கள்.
மீன்களோடு குளமும் ,பாலமும், அழகிய இருக்கைகளும், பசுமையான சூழலுமாக மனம் கவர்கிறது.
அந்த மீன் விலை மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன் என்னும் அரவணா மீன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் விளயாட அருமையான விளையாட்டிடத்தில் மகிழ்ச்சியாக பல்வேறு தேசக் குழந்தைகள் விளயாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வண்ண வண்ண கிரையான்களும், காகிதங்களும் உலோக அச்சில் காகிதத்தை வைத்துத் தீட்டினால் உருவங்கள் தோன்ற குதூகலத்துடன் குழந்தைகள் கைவண்ணம் கண்டு மகிழ்கிறாகள்.
உலகின் சிறந்த விமான நிலையத்தில் மறக்க முடியாத நினைவுகள்.
இன்று எங்கள் திருமண நாளில் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா முதலிய இடங்களுக்குச் சுற்றி வந்தோம். மிகவும் சந்தோஷப்பட்டோம். பயண விபரங்கள் தொடர்ந்து வரும். நனறி, நன்றி, நன்றி.
ReplyDeleteகண்ணைக்கவரும் ஹாங்காங் விமான நிலையத்தில் பெருமிதத்துடன் இறங்கி விட்டோம்.
ReplyDeleteநக்ஷத்திரவிடுதியின் மேல் மாடிக்குச்சென்றோம். வாஷ் மெஷினில் துணிகளை சலவை செய்யப் போட்டு விட்டோம்.
அதிவேக லிஃப்டில் இறங்கி விட்டோம்.கோட் சஃபாரிக்கு துணி எடுத்து தைக்கக்கொடுத்து விட்டேன்.
ReplyDeleteசிங்கப்பூர் செந்தேகா தீவில் விஞ்ச் மூலம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
டால்ஃபின் + கிளிகள் யாவும் அடிக்கடி வந்து போகும் உங்களைப்பற்றி மிகவும் விசாரித்தன. டை, ஷூ வாங்கி அணிந்து கொண்டு சூதாட்டம் ஆட ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteகண்ணாடி குகைக்குள் சென்று பெரிய பெரிய படா படா மீன் உலகத்தை காணச்சென்ற எனக்கு கடலுக்குள் மூழ்கியதாக உணர்வு ஏற்பட்டது.
ReplyDeleteவெட்டிங் டேயும் அதுவுமா, இது என்ன சூதாட்டம் ஆடுவதும், மீனைப்போய் பார்ப்பது, போதும்..போதும்.. வாங்கோண்ணா! மலேசியாவுக்குப்போய் அந்த உங்க ஃப்ரண்ட் இராஜராஜேஸ்வரி ஜொலிப்பதாகச்சொன்ன பத்துமலை முருகனையாவது தரிஸித்து வந்தால் போற வழிக்காவது புண்ணியமாப்போகும் என்றாள், என்னவள்.
ReplyDeleteஅப்படியே அந்த மாரியம்மன் கோயிலுக்கும் போய் கதவைத்தொட்டு விட்டு வந்தோம். அப்போ தானே மீண்டும், ஸதாபிஷேகம் முடிந்து மீண்டும் இந்த இடங்களுக்கெல்லாம் வரமுடியும்.
ReplyDeleteஆனால் ஒன்று மேடம்! அந்தத்தொண்டுக்கிழமான நிலையில், நீங்களும் எங்களுடன் அவசியம் துணைக்கு வந்தே ஆகவேண்டும்.
ஒருவழியாக சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா பிரஸ்பேன் விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டோம்.
ReplyDeleteஇரவா பகலா என்றே புரியாமல் மிகவும் குழம்பிப்போய் விட்டோம்.
பிறகு தான் அந்த வெப்-சைட் ஞாபகம் வந்து, மெளஸைக்கையில் பிடித்து, அந்த மணிகாட்டிடும் இடத்தில் வைத்து, கிளிக் செய்யாமல், மேலும் கீழும் இழுத்து இழுத்துப்பார்த்ததில், மீண்டும் பகலும், இரவும் மாறி மாறி வந்து அசர வைத்து விட்டது.
ReplyDeleteஅடடா! மிகவும் அருமையான பதிவு.
காலணா செலவு இல்லாமல், பாஸ்போர்ட் விசா இல்லாமல், மீண்டும் பல்வேறு நாடுகளுக்கு, தேன் நிலவு செல்ல வைத்த உங்களுக்கு எங்கள் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள்.
பிரியமுள்ள
vgk &
Mrs. வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன்
kavitendral panneerselvam to me
ReplyDeleteshow details 9:13 AM (0 minutes ago)
செலவில்லாமல் விமானத்தில் ஓசி பயணம் செய்தது போன்ற பிரமை எனக்குள் !
நன்றி சகோதரி !//
கருத்துரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் sa//
ReplyDeleteஅநேக நமஸ்காரங்கள்.
வரிக்கு வரி தம்பதி சமேதராக அளித்த ஆசீர்வாதங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
மிரமிக்க வைக்கிறது....
ReplyDeleteஅழகிய பதிவு..
பார்க்கக் கிடைக்காத விஷயம் .அருமை.
ReplyDeleteஅற்புதமான படங்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி,,
புதுமையான புரட்சிகரமான கவிதைகளை
ReplyDeleteநவ கவிதை எனச் சொல்லுதல்போல தங்கள் பதிவினை
நவ பதிவு என தாராளமாகச் சொல்லலாம்
ஒவ்வொரு பதிவிலும் பிரமிக்க வைக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
//தமிழரால் கட்டடப் பட்டதான மாரியம்மன் கோவிலில் திரும்பும் போது கதவைத் தொட்டுவிட்டு வந்தால் மீண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று வழிகாட்டி கூறினார்.//
ReplyDeleteவியத்தகு விமான நிலையங்கள் ....
கண்ணை கவருதே காட்சிகள்
ReplyDeleteஅருமையன பதிவு அழகான படங்களுடன்,பிரம்மிக்க வைக்கும் விமானநிலையங்கள்.....இங்கெல்லாம் போக சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை... ஆனால் உங்கள் தயவில் கண்குளிர பார்த்து ரசித்துவிட்டேன்,,
ReplyDeleteஎதைச் செய்தாலும்
ReplyDeleteசிறப்பாகவே செய்ய வேண்டும் என்று
கங்கணம் கட்டி பதிவிடும் உங்களை
என்னவென்று பாராட்டுவது மேடம்
வார்த்தைகள் வற்றி போய்
பிரமிக்கும் பார்வையாளனாய் நான்
நன்றி
ஆகா அழகான கண்ணைக்கவரும் இடங்கள்
ReplyDeleteகவனம் மெதுவாய்ப் பார்த்துப் போங்கள்!...................
அருமையான இடத்திற்கு அழைத்து வந்தமைக்கு
மிக்க நன்றி சகோதரி.............
எப்பவும் போல இன்னிக்கும் அருமை. பதிவும்..படங்களும்.
ReplyDeleteவைகோ சாரின் புதுவிதமான கமெண்ட்ஸ் - ரசிக்க முடிந்தது.
ReplyDeleteFentastic post Rajeswari.
ReplyDeleteI enjoyed every bit.
The photo.
ayya
I enjoyed the day and night .
Thanks Thanks a lot.
viji
எத்தனை எத்தனை விமான நிலையங்கள், ஊர்கள்…. ஒரே நாளில் இத்தனை இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி.
ReplyDeleteவிமான நிலையங்களின் புகைப்படங்கள் அனைத்தும் அருமை! அப்படியே துபாய்க்கும் வந்து பாருங்கள் ராஜேஸ்வரி!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅசத்தலான பதிவு....தொடரட்டும் தங்களின் பயணப் பதிவுகள்!!
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை.
ReplyDeleteநேரே பார்த்த திருப்தி இதுவரை விமானத்திலேயே ஏறாத எனக்கு கிடைத்தது, நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஎல்லா துறைகளிலும் நன்கு எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
விவரம் நல்ல விவரமாகத்தான் இருக்கிறது.நான் இன்னும் தெரிய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன
ReplyDeleteநீங்கள் பதிவைத் தரும் பாணி சிறப்பு. அழகு.
ReplyDeleteபோரடிக்காமல் மனத்தைக் கொள்ளை அடிக்கிறது.
உங்கள் timemanagement talent பார்த்துத் திகைத்து நிற்கிறேன் தோழி.
அருமை.
// ஸ்ரீராம். said...
ReplyDeleteவைகோ சாரின் புதுவிதமான கமெண்ட்ஸ் - ரசிக்க முடிந்தது.
July 3, 2011 2:52 PM//
ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்!
தங்களின் இந்தக் கமெண்டை ஓராண்டுகளுக்குப்பின் இன்று தான் அகஸ்மாத்தாகப் படிக்க நேர்ந்தது.
மிகவும் சந்தோஷமும் நன்றிகளும்.
அன்புடன்
vgk
ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
ReplyDelete==================
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம்
பூயோ பூயோ நமாம்யஹம்!!-1
ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
பீதானாம் பீதி நாசனம்!
த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2
நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!
கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3
இந்தியாவை விட்டு வெளியே போகாத எனக்கு இன்று உங்களின் இந்தப் பதிவு மூலம் உலகம் முழுக்க சுற்றி வந்து வியத்தகு விமான நிலையங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ReplyDeleteஎத்தனை எத்தனை தகவல்கள்!
அருமை, அருமை, அருமை!
690+11+1=702
ReplyDelete;))) ;))))))) ;)) 0 ;) ;)
03 ... 07.... 2 0 1 1
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (07/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE