ஆஸ்திரேலியாவின் பிரசித்தி பெற்ற சவுத் பேங்க் என்னும் செயற்கைக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றிருந்தோம்.
பிரிஸ்பேன் நகரம் (Brisbane City)
பிரிஸ்பேன் நகரம் மிகச் சில தெருக்களால் ஆனது. வணிகக் கட்டிடங்கள், கசினோ, திரை அரங்குகள், குவீன் தெரு பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் என எப்போதும் பரபரப்பில் இருப்பது.
. over the South BankParklands man-made beach in Brisbane
Bathing Boxes, Middle Brighton Beach, Melbourne,
தென்கரை (South Bank)
பிரிஸ்பேன் நதிக்கரையின் மறுபுறம் உள்ள பகுதி தென்கரை. பன்முகப் பண்பாட்டை உணர சிறந்த இடம் இது. ஐமேக்ஸ் திரையரங்கம், உலக உணவகங்கள், தேனீர் கடைகள், செயற்கை-கடற்கரை, பூங்காக்கள் என கலகலப்பூட்டும் பகுதி இது. வெள்ளி இரவுகளில், தெரு நடனங்களும், ஒளி விளக்குகளும் இந்தப் பகுதியை அலங்கரிக்கும்.
இந்த பிரிஸ்பேன்ஆறுமே மனம் விரும்பும் மாதிரி வளைந்து நெளிந்து அழகு காட்டிக் கவர்ந்தது,,
பத்துத் திசைகளிலும் எதாவது காட்சி அமைத்திருக்கிறார்கள்..
ஆறு கடந்தா ஊரு வருமே என்று கடக்கஅங்கங்கே பாலங்கள். ரயில் போக, வண்டிகள் போக, சைக்கிளும் பாதசாரிகளும் போக என்று பல பாலங்கள்.
குழந்தைகள் விளையாட அனைத்துப் பகுதிகளிலும் பூங்காக்கள் அமைத்துள்ளது பிரிஸ்பேன் நகராட்சி. கிரிக்கெட் மைதானங்களும், டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் அரங்குகளும் பல பகுதிகளில் அமைந்துள்ளன.
குவீன்ஸ்லாந்து தமிழ் சங்கம் மற்றும் தமிழ் பள்ளிகள் அவ்வப்போது விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பார்கள்.
மாஜிக் நிகழ்ச்சிகள், கயிற்றில் சைக்கிள் ஓட்டுதல், நெருப்பு விளையட்டு, மூன்று கத்திகளை உயரத்தூக்கிப்போட்டுப் பிடிப்பது போன்ற நிகழ்சிகளில் கூட்டம் கூட்டம் கூட்டமாக நின்று ரசிக்கிறார்க்ள்.
சிலை போல் அசையமல் நின்று வேடிக்கை காட்டியவருக்கு முன்னால் இருந்த பெட்டியில் டாலர்கள் அன்பளிப்பாக விழுந்த வண்ணமிருந்தது.
சிலை போல் அசையமல் நின்று வேடிக்கை காட்டியவருக்கு முன்னால் இருந்த பெட்டியில் டாலர்கள் அன்பளிப்பாக விழுந்த வண்ணமிருந்தது.
விக்டோரியா பாலமும் குட்வில்பாலமும் தென் கரைப்பகுதியை நகரோடு இணைக்கிறது
வடை மாதிரியான உணவுப்பொருளில் பட்டைப் பொடியும் சர்க்கரைப்பொடியும் கலந்து தூவி குச்சியில் பொருத்திக் கொடுத்தார்கள்.
அது என்ன பொடி என்று கேட்டேன். பீச் மணல்தான்... வேறொன்றுமில்லை என்றார் கடைக்காரர்!
மக்காச்சோளம்தணலில் வாட்டி விற்பனையாகிறது.
ஆர்ட் கேலரியில் வரைந்த படங்கள் அருமையாக காட்சிப்பட்டன.
Southgate Arts & Leisure Precinct
உயர மக்குகளில் குளிருக்கு இதமாக பீர் குடித்துக் கொண்ருந்தார்கள்.
காபி குடிக்கலாம் என்றால் 60 டிகிரி சூட்டில் தான் தருவார்களாம். அதைக்குடிப்பதற்கு குடிக்காமல் இருந்தாலே நல்லது.
அருமையான வசதிகளோடு உடை மாற்றும் அறைகள் அமைத்திருக்கிறார்கள்.
பிரிஸ்பேன் நதியின் நீரைச் சுத்திகரித்து நீராட அமைத்திருக்கிறார்கள். செயற்கை அலைகளும், கண்காணிப்புக்கோபுரங்களும் கடற்கரையைக் கண்முன் கொண்டுவந்தது.
மணல் கொண்டுவந்து கொட்டியிருந்தார்கள். மணல் வெள்ளைவெளேரென்று கருத்தைக் கவர்ந்தது.
நிறைய குழந்தைகள் நீச்சலுடையில் குதித்துக்கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
என் நீல வண்ணச்சுடிதார் உடை அவர்களைக் கவர என்னுடன் படம் எடுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் பாடப்பகுதியில் பலநாட்டு உடை என்று சொல்லிக் கொடுத்த பகுதியில் இதே உடை இந்திய உடையாக காட்சியாகி இருந்ததாம்.
கேஸினோக்குள் நுழைந்தோம்.
வெளியே பெரிய உலோக உருண்டைகள் அலங்காரத்துக்கு வைக்கப்ப்ட்டு சேதி சொன்னது.
அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
சில பாட்டிகள் கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வைத்துக்கொண்டு அடிக்ட் ஆன மாதிரி உலகை மற்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
Bottle Tree--Artists Statement, South Bank, Brisbane
The vibrant South Bank markets in Brisbane.
மக்களுக்குப் பொழுது போக இசைநிகழ்ச்சியும் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தது..
Hundreds of revellers enjoyed the sizzling temperatures as South Bank exploded with Australia Day
fever and the Cage's Prawn Star with r and the Cage's Prawn Star madness.
அட பாருங்க ..
ReplyDeleteநானும் 2 நாள் முன்னாடி தென்திசையின்
பெருமை னு ஆக்கம் தந்திருந்தேன்..
நீங்களும் இன்று
தென்கரைத் தெம்மாங்கு
உண்மையிலேயே உலகத்திலேயே தென்திசை தான் சிறந்தது..
போட்டாவையெல்லாம் பார்க்க பார்க்க
ஆசையா இருக்கு ?
ம்ம்... இப்படி போட்டாவில் பார்த்தாவது சந்தோசப்பட்டுக்கிறோம்.
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஒரு வாட்டி ஆஸ்தராலியா போகனும். படங்கள் சூப்பர்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நன்று.
ReplyDeleteஅழகான புகைப்படங்கள். அருமையான பகிர்வு.
ReplyDeleteபடங்களும்,பதிவும் மிக அருமை.
ReplyDeleteஒருநாள் பாம்பேல இருக்கீங்க ஒருநாள் பிரிஸ்பேன்ல இருக்க்கீங்க, உலகம் சுற்றும் வாலிபராக இருக்கீங்க மேடம்..
படங்கள் ஒவ்வொன்றும் கண்கொள்ளா காட்சி .அருமை .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மேடம் .
அருமை .நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மேடம்!
ReplyDeleteஉலகம் சுற்றும் வாலிபியாகிய தங்களுக்கு வணக்கங்கள். படங்கள் யாவும் அருமையோ அருமை. கண்ணைப் பறிக்கின்றன. கருத்தைக் கவர்கின்றன. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//வடை மாதிரியான உணவுப்பொருளில் பட்டைப் பொடியும் சர்க்கரைப்பொடியும் கலந்து தூவி குச்சியில் பொருத்திக் கொடுத்தார்கள். அது என்ன பொடி என்று கேட்டேன். பீச் மணல்தான்... வேறொன்றுமில்லை என்றார் கடைக்காரர்!//
ReplyDeleteபீச் மணலுக்கே அவ்வளவு ருசியா?
காசைக்கரியாக்காதே என்பார்கள் இங்கே!
மணலை காசாக்குகிறர்களோ
அங்கே!!
இங்கேயே நம் ஆட்கள் லாரி லாரியாக ஆற்று மணலைக் கடத்தி காசாக்குகிறார்களே; அங்கே கேட்கவும் வேண்டுமா?
நல்ல தகவல்கள் தான்.
"தென்கரைத் தெம்மாங்கு" அருமையான தலைப்பு. தலைப்பு கொடுப்பதில் தலைவி என்றும் தலைவிதான்.
ReplyDeleteமேலிருந்து கீழாக படம் எண்கள் 11 & 21 ரொம்ப ரொம்ப நல்லா இருக்குதுங்க.
[அதாவது கீழிருந்து 4 வது படம் நல்ல CLARITY
கீழிருந்து 14 ஆவது படம் நல்ல
VERY BEAUTIFUL DESIGN]
அழகழகான பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@ kavitendral panneerselvam //Important mainly because it was sent directly to
ReplyDeleteநான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன் ! எதற்குத் தெரியுமா ?
என்னை இலவசமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதற்கு.//
நன்றி..
அருமையான பதிவு.
ReplyDeleteநிறைய செய்திகள்.
வாழ்த்துக்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணத்தை வாழ்வின் லட்சியமாகவே கொண்டுள்ளேன். எப்போது பார்க்கபோகிறேன் என்று தெரியவில்லை. தங்கள் பதிவு ஆவலைத்தூண்டுகிறது.
ReplyDeleteதென்கரைத் தெம்மாங்கு - என்றவுடன் கிராமத்து தெம்மாங்கு பாடல் தான் பாடப்போகிறீரகள் என சபையில் அமர்ந்தால் உட்காராதே வா என்று ஆஸ்திரேலியாவின் சவுத் பாங்கை சுற்றி காண்பித்துவிட்டீர்கள்.... கர்னாட்டிக் மியூசிக்கையும் வெஸ்டர்னையும் கலந்த அடித்த கலக்கல் பாடல் ஒன்றை பீச் மனலை சாப்பிட்டவாறே கேட்டதுபோல் இருக்கிறது.... கலக்கிவிட்டீர்கள் போங்கள்
ReplyDeleteபயண அனுபவங்கள் அருமை.என்ன கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது..
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை
ReplyDeleteவை.கோ சார் குறிப்பிட்டுள்ள படங்கள் உண்மையில் மிக மிக அருமை
நானும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
@ kavitendral panneerselvam //Important mainly because it was sent directly to
ReplyDeleteநான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன் ! எதற்குத் தெரியுமா ?
என்னை இலவசமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதற்கு.//
நானும் உங்களிடம் கடமைப்பட்டுள்ளேன் சகோதரி. இலவசமா தென்திசையைச் சுற்றிக் காட்டியுள்ளீர்கள் நன்றி நன்றி மிக்க
நன்றி சகோதரி.....
அதிசயம்.ஆச்சர்யம்,அற்புதம்,அழகு எல்லாமே எல்லாமே எப்பவும் உங்கள் பதிவுகளில் !
ReplyDeletenaane sendradhu pola ulladhu
ReplyDeleteபோனதில்லை... இப்ப போயே ஆகணும்னு தோணிப்போச்சு.
ReplyDeleteராமாய ராமபத்ராய
ReplyDeleteராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: பதயே நம:!!-4
அக்ரத: ப்ருஷ்டதச்சைவ
பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!
ஆகர்ண பூர்ணதந்வாநெள
ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5
ஸந்நத்த: கவசீ கட்கீ
சாபபாணதரோ யுவா!
கச்சந் மமாக்ரதோ நித்யம்
ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6
777+4+1=782 ;)
ReplyDelete