Friday, July 22, 2011

அகலாதருளும் அலர்மேல்மங்கை தாயார்

அகலாதருளும் அலர்மேல்மங்கை தாயார்
1



அகலகில்லேன் இறையுமென்று திருவேங்கடமுடையானின் திருமார்பில் தங்கி தயா தேவியாக அருள்பவள் திருமகளான அலர்மேல்மங்கை தாயார்.

யாதேவீ சர்வபூதேஷு லக்ஷ்மீ ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தத்யை நமஸ்தத்யை நமஸ்தத்யை நமோந்நமஹ [[

என்று அருளியபடி செல்வவளம் செழிக்கச்செய்பவள்.

திருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கும் மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் அருள்கிறார் ...

"அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை. 
"அலர்' என்றால், "தாமரை!' "மேலு' என்றால், "வீற்றிருப்பவள்!' 
இதையே, "பத்மாவதி' என்கின்றனர்.
 "பத்மம்' என்றாலும், "தாமரை!' "வதி' என்றால், "வசிப்பவள்!' 
ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.



 பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருக.  குறைக்க, இறைவன் பூமியில் அவதாரம் எடுக்க வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில், முனிவர்கள் யாகம் தொடங்கினர்.

யாகத்தை காண வந்த நாரதர், "யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?' என்று முனிவர்களைக் கேட்டார்.
இவ்வுலகிலேயே சாந்தமான தெய்வம் யாரோ, அவருக்கு யாக பலனைத் தருவதென்று முடிவு செய்தனர்.

சாந்தமானவரை தேடி, பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். 
திருமால், பிருகு முனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவரது மார்பில் முனிவர் எட்டி உதைத்தார். 
திருமால், கோபம் கொள்ளவில்லை; உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே, யாக பலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.

பெருமாளின் மார்பிலேயே லட்சுமி வாசம் செய்கிறாள். 
பிருகு முனிவர், பெருமாளை மிதிக்கும்போது, அவரது பாதங்கள் லட்சுமியின் மீதும் பட்டன. 
எனவே, அவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல, திருமால் மறுத்து விட்டார். 
இதனால், திருமகள் கோபம் கொண்டு, பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து, தவத்தில் ஆழ்ந்தாள்.


திருமகளைத் தேடி, திருமால் அந்தணராக மாறி, பூவுலகத்தைச் சுற்றி அலைந்து, வேங்கடமலையில் வந்து ஒரு புற்றுக்குள்அமர்ந்தவருக்கு பசியெடுத்தது பற்றி, தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார் நாரதர்.

கணவர் மீது கோபமிருந்தாலும், அவர் பசியுடன் இருப்பது குறித்து லட்சுமி வருத்தமடைந்தாள்.  


 திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார் நாரதர். அதன்படி,

பிரம்மாவும், சிவனும் பசுவாகவும், கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்கச் சென்றாள்.

மன்னன் வாங்கிய பசு, மேய்ச்சலுக்குச் செல்லும்போது, சீனிவாசன் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.

அதைக் குடித்து சீனிவாசன் பசியாறினார்.

பசுவை மேய்த்த இடையன், பசுவின் பின்னால் சென்று, புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான்.

கோடரி தவறி, புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு, ரத்தம் சிந்தியது.

தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆசிரமம் ஒன்றைக் கண்டார். அது வராஹ மூர்த்தி ஆசிரமம்.

அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன், பாசத்தில் மூழ்கினாள்.

திருமாலும், அன்புடன் வகுளாதேவியை, "அம்மா' என்று அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு, "ஸ்ரீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள். 
 சந்திரகிரி என்ற பகுதியை ஆண்ட ஆகாசராஜன், பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுக முனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, நாள் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு, "பத்மாவதி' என்று பெயரிட்டான். 
PADMAVATI
,ராமாவதாரத்தின் போது வேதவதி எனும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி, தவம் செய்தாள். 
ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்ததன்படியே, வேதவதி, பத்மாவதியாகப் பிறந்து, ஆகாசராஜனின் மகளானாள். 
சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது.
Parinayam
பத்மாவதி, திருச்சானூரில் அருளாட்சி செய்கிறாள். 
சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்து தங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. 
திருச்சானூரில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில், தாயார் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.
 
Sight to behold: Priests on elephant-back carrying the ‘Padi' from 
Tirumala Sri Venkateswara temple to Tiruchanur Padmavathi temple 
ahead of the ‘Panchami Theertham' conducted on Friday, 
as part of Kartheeka Brahmotsavams. 

Holy occasion: Devotees brave incessant rain to witness the 
‘Swarna Rathotsavam’ at Tiruchanur Padmavati Ammavari temple 

SEA OF DEVOUT TURNED OUT FOR TIRUCHANOOR PANCHAMI TEERTHAM




தவப்புதல்வனான அன்புமகனின் வலைப்பூ...
தங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்கள் வேண்டி...
பின்னுட்டமிடுபவர்கள் அனைவரும் உலகத்தமிழ் சமூகத்தின் பார்வையில் தங்கள் வலைப் பதிவுகளை அறிமுகப்படுத்திக்கொள்ள அரிய வாய்ப்பு....

Aravind Kumar Jaghamani

URL:http://ajaravind.wordpress.com
 Aravind Kumar Jaghamani

Aravind Kumar Jaghamani

G’day bloggers..
Me, myself, ARAVIND, an M.E. student at Nathan Campus, Griffith University, Australia, would like to accompany you to the journey of my life at Griffith.

It all begins here !

I had a dream coming to Australia….
No No No…
My story began a long time ago. In a land called Attayampatti in Salem in India. When my mom was a girl. She had a vision about Australia. How life would be in that foreign land, Australia which was separated from India.
Amazed by the fancy of God’s drama, she started her journey by learning the facts about Australia. Married to a businessman, with the responsibility of a Home maker, she brought her kids up with love and care digging her Vision deep inside her heart.
Besides, that businessman, my beloved Father had a vision to study master’s degree.. But a committed husband, a devoted father & a philanthropist, had to give up his education to bring forth his family with children…
Their offspring had vision as dream and that’s the way how my journey began…

Griffith University

Griffith – The name shall be renowned well as an University, but a part of my life. Landing here wasn’t a just dream but a struggle. Not for me but to the businessman who dedicated his life to my mother & family….
I bring to you the rare sight of my University under the blessing of nature…

The Journey goes on…

As an International Ambassador

When I first came to the University as a International Student, I never had dreamed that I’d become a proud International Ambassador. I thank James Aspin, the gentleman standing in the middle, for believing in me…


As a Griffith International Mate

Helping the International students has never been so much fun…
I am fortunate to find myself as a part of this wondrous group. Didn’t even realize that something I did could make me feel so noble without me knowing it…
If there was a job that could make everyone remember how they were when they came in first as an International student, then that would be GI Mate.








51 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் புதல்வனின் தளத்தை எனது பேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  2. @ Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் புதல்வனின் தளத்தை எனது பேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள் அம்மா.//

    மிகவும் நன்றி ஐயா. தங்களைப்போல் பெரியோர்களின் ஆசி மனம் நிறைக்கிறது.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம்,

    அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை.

    முதலில் இதை உணர்த்திணீர்கள் பாருங்கள் - அருமை..

    தொடரட்டும் தங்கள் பயணம்..

    எப்படித்தான் இப்படிப்பட்ட போட்டாவை பிடிக்கறீகளோ ?

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  4. அல்ரமேலு மங்கை தாயார்... அழகான புகைப்படங்களுடன், அரிய தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  5. ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அலர்மேல் மங்கை தாயாரை தரிஸிக்க வைத்த தங்களுக்கு என் நன்றிகள்.

    திருச்சானூருக்கு ஓரிரு முறை சென்று பத்மாவதி தாயாரை தரிஸித்து வந்ததும், அவளின் அருள் பிரஸாதமாக ஒரு ஸ்பூன் தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டதும், அரைத்த பசுமஞ்சளை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டதும், என் மனைவி உள்பட அனைத்துப்ப்பெண்ம்ணிகளும் தங்கள் திருமாங்கல்யத்தில் அந்த மஞ்சளை பயபக்தியுடன் வைத்துக்கொண்டதும் நினைவுக்கு வந்தது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. 21 படங்களுமே அருமையோ அருமை.

    1 இல் தாயார் அருமை

    2 இல் சுழலும் தங்க டாலர்களில் பெருமாளும் தாயாரும் அருமையோ அருமை.

    3 இல் புறப்பாட்டு அம்மன் அழகு

    5 இல் நுழைவாயில் சூப்பர்

    6 இல் தங்க கோபுரம் ஆஹாஹா!

    10 இல் தாயாருடன் ஸ்ரீ சுதர்சன சக்ரம், மனோ தைர்யம் அளிக்கும் விதமாக

    11 இல் ஸர்வ அலங்கார பூஜிதமாக பவனி வரும் தாயார் - காணக்கண்கோடி வேண்டும்!

    15 இல் யானை ஊர்வலம் அழகு

    16 இல் கொட்டும் மழையில் அருள் கொட்டும் தங்க ரதப்புறப்பாடு

    அனைத்துமே அருமையோ அருமை - பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள் - நன்றிகள்.

    ReplyDelete
  7. 22 ஆவது படத்தில் 22 வயது வாலிபன் அரவிந்தன் அழகோ அழகு.

    ரோஜா படத்தில் வந்த அரவிந்தசாமியை ஞாபகப்படுத்தியது, அவரின் இளமைத்தோற்றம்.

    அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    ”இவன் தாய் தந்தை என்னோற்றார்க்ள் கொல் எனும் சொல்” என்று நினைத்து மகிழ்ந்தேன். வாழ்க! வழ்க!! வாழ்க!!!

    vgk

    ReplyDelete
  8. 22 ஆவது படத்தில் 22 வயது வாலிபன் அரவிந்தன் அழகோ அழகு.

    ரோஜா படத்தில் வந்த அரவிந்தசாமியை ஞாபகப்படுத்தியது, அவரின் இளமைத்தோற்றம்.

    அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    ”இவன் தாய் தந்தை என்னோற்றார்க்ள் கொல் எனும் சொல்” என்று நினைத்து மகிழ்ந்தேன். வாழ்க! வழ்க!! வாழ்க!!!

    vgk

    ReplyDelete
  9. படங்களும் பதிவும் அருமை
    தங்கள் மைந்தனின் புகைப்படங்கள் கண்டேன்
    மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்
    வாழ்த்துக்களை பதிவு செய்ததில்
    பெருமிதம் கொண்டேன்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @சிவ.சி.மா. ஜானகிராமன் said//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. @ தமிழ் உதயம் said...
    அல்ரமேலு மங்கை தாயார்... அழகான புகைப்படங்களுடன், அரிய தகவல்கள். நன்றி.//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//

    அருமையான ஆழ்ந்த கருத்துரைகளுக்கும், வாழ்த்துரைகளுக்கும், ஆசியுரைகளுக்கும் ,மகனின் தளத்திற்குச்சென்று உற்சாகமூட்டிய உயர்ந்த மனத்திற்கும் மனம்நிறைந்த நன்றி. நமஸ்காரங்கள்

    ReplyDelete
  13. @Ramani said...
    படங்களும் பதிவும் அருமை
    தங்கள் மைந்தனின் புகைப்படங்கள் கண்டேன்
    மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்
    வாழ்த்துக்களை பதிவு செய்ததில்
    பெருமிதம் கொண்டேன்.தொடர வாழ்த்துக்கள்//

    பெருமிதமான கருத்துரைகளுக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  14. ஆடியில் அமர்க்களப்படுத்துங்கள்...

    ReplyDelete
  15. அன்பு சகோதரி
    அலர்மேலு தாயாரின்
    அருள்கிடைக்கச் செய்த
    அருமையான பதிவு.
    உங்கள் புதல்வரின் வலைப்பூ முகவரியை
    நான் குறித்துக்கொண்டேன்
    நிச்சயம் அங்கெ கருத்திடுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  16. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
    ஆடியில் அமர்க்களப்படுத்துங்கள்//

    அமர்க்களக் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @ மகேந்திரன் said...//

    கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  18. ஆடி வெள்ளிப் பதிவு.

    அப்....பா....டி....! நானும் சென்று பார்த்துள்ள ஒரு கோவில் பற்றிப் பதிவு! மூலம் எங்கிருந்து தொடங்குகிறது என்று நினைவில் வைக்க முடியாத நம் புராணக் கதைகள் ஒரு பொக்கிஷம்.

    உங்கள் மகன் அரவிந்குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே,
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பார்கள். மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்.உங்கள் கடன் முடிகிறது. இனி, உங்கள் மகன் கடன் துவங்கு கிறது. ஆண்டவன் அருளட்டும். அவரது பதிவில் கருத்திட முயன்று எங்கோ தவறு செய்து விட்டேன் போலும்.

    ReplyDelete
  20. ஆடி வெள்ளியான இன்று அலர்மேல் மங்கை தாயாரை தரிசித்தேன் .

    படங்கள் அருமை .
    நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  21. தாமரையில் வீற்றிருப்பவளின் தரிசனம் தாராளமாக பெற்றேன்.... ஆடி மாத அலர்மேல்மங்கை அம்மன் அருள் அனைவருக்கும் அருளட்டும்.... ஆடியில் ஆன்மீகத்தில் அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஆடி வெள்ளி ஸ்பெசல் ..
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அருமையான பதிவு, தலபுராணம் மற்றும் படங்கள் மிக அழகு..
    உங்க மகனுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. தல புராணம் பற்றிய தளமா உங்களுடையது? அருமை... பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  25. //அகலகில்லேன் இறையுமென்று திருவேங்கடமுடையானின் திருமார்பில் தங்கி தயா தேவியாக அருள்பவள் திருமகளான அலர்மேல்மங்கை தாயார்.//

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
    வெள்ளீக்கிழமையில் அலர்மேல்மங்கை தாயாரின் தெய்வீக தரிசனம்
    மனதை மகிழ வைத்தது. நன்றி

    ReplyDelete
  26. @ஸ்ரீராம். said...
    ஆடி வெள்ளிப் பதிவு.

    அப்....பா....டி....! நானும் சென்று பார்த்துள்ள ஒரு கோவில் பற்றிப் பதிவு! மூலம் எங்கிருந்து தொடங்குகிறது என்று நினைவில் வைக்க முடியாத நம் புராணக் கதைகள் ஒரு பொக்கிஷம்.

    உங்கள் மகன் அரவிந்குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்//
    பொக்கிஷமாய் கிடைத்த தஙகள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. @ G.M Balasubramaniam said...//

    அனுபவம் நிறைந்த தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  28. @M.R said...
    ஆடி வெள்ளியான இன்று அலர்மேல் மங்கை தாயாரை தரிசித்தேன் .

    படங்கள் அருமை .
    நன்றி பகிர்வுக்கு//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  29. @மாய உலகம் said...//

    அசத்தலான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆடி வெள்ளி ஸ்பெசல் ..
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  31. @ கவி அழகன் said...
    அருமை//

    நன்றி.

    ReplyDelete
  32. @RAMVI said...
    அருமையான பதிவு, தலபுராணம் மற்றும் படங்கள் மிக அழகு..
    உங்க மகனுக்கு என் வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  33. @ சாதாரணமானவள் said...
    தல புராணம் பற்றிய தளமா உங்களுடையது? அருமை... பகிர்வுக்கு நன்றிகள்//

    கருத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  34. @ A.R.ராஜகோபாலன் said...//

    மனம் மகிழவைக்கும் கருத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  35. பதிவுலகில் தாயின் பெருமையைக் காக்க வந்த தங்களின்
    மைந்தனின் வரவுகண்டு மகிழ்ந்தது என் உள்ளம். மீனின்
    குஞ்சுக்கு நீச்சல்வேறு கற்றுக்கொடுக்கவும் வேண்டுமா!..
    வாழ்த்துகள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்னையைப்போல்
    அழகான அருமையான பதிவுகளைத் தொடர்ச்சியாக இட்டு
    இந்த வலைத்தளத்தில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகின்றேன்...

    நன்றி சகோதரி இன்றைய உங்களின் பகிர்வுக்கு............

    ReplyDelete
  36. @ FOOD said...
    ஆடி வெள்ளி, அம்மன் அருளா?//

    ஆடி வெள்ளி, அம்மன் அருளே... நன்றி..

    ReplyDelete
  37. @அம்பாளடியாள் said...//

    நன்றி ச்கோதரி. தங்கள் வாழ்த்துக்களுக்கும், பகிர்ந்த கருத்துரைகளுக்கும்.

    ReplyDelete
  38. பதிவும் படங்களும் அருமை

    ReplyDelete
  39. பகிர்வும் படங்களும் அருமை.தங்கள் புதல்வனுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. @மதுரன் said...
    பதிவும் படங்களும் அருமை//

    நன்றி..

    ReplyDelete
  41. @ shanmugavel said...
    பகிர்வும் படங்களும் அருமை.தங்கள் புதல்வனுக்கும் வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  42. ஆடி வெள்ளியன்று,மங்களகரமாகத் தாயார் பற்றிய பதிவு.கோடி பெறும்!

    ReplyDelete
  43. படங்கள் பார்த்து அம்மா தாயே என்று வாயில் தன்பாட்டில் வருகிறது தோழி.உங்கள் மகனுக்கும் என் வாழ்த்து !

    ReplyDelete
  44. @சென்னை பித்தன் said...
    ஆடி வெள்ளியன்று,மங்களகரமாகத் தாயார் பற்றிய பதிவு.கோடி பெறும்!//

    தங்கள் வாழ்த்து கோடிபெறும். நன்றி.

    ReplyDelete
  45. @ ஹேமா said...
    படங்கள் பார்த்து அம்மா தாயே என்று வாயில் தன்பாட்டில் வருகிறது தோழி.உங்கள் மகனுக்கும் என் வாழ்த்து !//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  46. நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் சொல்லி விட்டார்கள். எப்படியோ உங்கள் அன்பு மகனார்க்கு என்சார்பிலும் வாழ்த்துக்கள். தொடரட்டும் அவரது வலை பணி

    ReplyDelete
  47. உங்கள் மகனுடைய வலைபூவுக்கும் சென்று வாழ்த்திவிட்டு வருகிறேன் .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  48. அலர்மேல்மங்கை அருமை.

    உங்கள் மகன் அரவிந்குமாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. அச்யுதாநந்த கோவிந்த

    நாமோச்சாரண பேஷஜாத்!

    நஸ்யந்தி ஸகலா ரோகாஸ்

    ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!!-7


    ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்ய

    முத்ருத்ய புஜமுச்யதே!

    வேதாசாஸ்த்ரம் பரம் நாஸ்தி

    நதைவம் கேசவாத்பரம்!!-8


    ஸரீரே ஜர்ஜரீபூதே

    வ்யாதிக்ரஸ்தே களேபரே!

    ஒளஷதம் ஜாஹ்நவீதோயம்

    வைத்யோ நாராயணோ ஹரி:!!-9


    ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி

    விசார்ய ச புந: புந:!

    இதமேகம் ஸுநிஷ்பந்நம்

    த்யேயோ நாராயணோ ஹரி:!!-10

    -oOo-

    ReplyDelete
  50. 785+5+1=791 ;)))))

    தங்களின் பதில் மிகவும் மகிழ்வளித்தது. நன்றி. ;)))))

    ReplyDelete