Sunday, July 31, 2011

ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்




படிமம்:Mandurai temple.jpg

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
காவல் தெய்வமான கருப்பண்ணசாமித் தலத்தில் உள்ள
 பெருமகுதிரைவீரன் சிலை






































Deer.gif Animated Animals image by Keefers_
"
நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலு நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணைநாளும் கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.:

வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம். 

-எனப்பல வகைகளாக உணர்ந்து தொழுது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ,திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் மாந்துறையும் ஒன்று. 


ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார்.
இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.
 துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள்.
இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

பிரகாரத்தில்அருணகிரியார் திருப்புகழில் பாடிய சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். 



தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்

[Gal1]

மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.
 
 அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.
  .  
  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.  
 தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக பேரழகு கொண்ட சமுக்யா தேவி பிறந்தாள்.  அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.

நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள்.

அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள்.

அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள்.

(சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி).

பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள்.

விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.

தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார்.

அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார்.

பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை: மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம்.

இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  
தல வரலாறு:
 
இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். 

அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.
ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.
சிவனை வணங்கும் மான்
[Gal1]
இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது.

நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது.

சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். 

தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். 

சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. 

அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
.[Gal1]
யானை சிலைகள்                          மாமரம்
[Gal1]
கோயில் பிரகாரம்

திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்

முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர்.

தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. 

இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது
தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன.

இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது
படிமம்:Ambraneswara.JPG
கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது).

மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு.

அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு). 
அருள்மிகு வாலாம்பிகாவின் திருவுரு
08:09, 6 சூலை 2010 -ல் இருந்த பதிப்பின் சிறு தோற்றம்
சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.

இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது.

கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்:

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து 
ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறிஆர்ந்துள 

கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று 
கிடையோடேஊங்கிருமல் வந்து வீங்குகுடல் 

நொந்து ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்ஓங்குமயில் 
வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே

வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த 
வேந்திழையி னின்ப மணவாளாவேண்டுமவர் 

தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த 

வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற 
மாந்துறை யமர்ந்த பெருமாளே.

மாந்துறை அஞ்சல்
லால்குடி S.O.
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621703 



[Image1]

24 comments:

  1. நல்ல பதிவு. படங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. காலை வணக்கம் தோழி...

    தெளிவான பதிவு.. ஆண்டவனுடைய அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்..

    ReplyDelete
  3. உங்கள் ஒவ்வொரு பதிவும் பிரமிப்பூட்டுகிறது.

    ReplyDelete
  4. தங்களின் இந்தப்பதிவுக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    என்னிடம் உள்ள தலவரலாறு புஸ்தகத்தை தங்களை என்றாவது சந்திக்கும் போது தர வேண்டும்; முடிந்தால் உங்களை அந்தக் கோயிலுக்கும் சென்று தரிஸிக்கச்செய்ய வேண்டும், என்றெல்லாம் என் உள்மனதில் ஓர் ஆசை இருந்தது.

    அதனாலேயே தங்களின் சமீபத்திய குதிரை பற்றிய பதிவினில் லேசாக hint செய்திருந்தேன்.

    நீங்கள் எப்படியும் என்றாவது ஒரு நாள் இது பற்றி எழுதக்கூடும் என்று என் உள்மனது சொல்லிற்று.

    இவ்வளவு சீக்கரமாக இவ்வளவு விபரமாக, என் குலதெய்வங்களில் ஒன்றான [கிராம தேவதை] ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஆம்ரவனேஸ்வரரையும், காவல் தெய்வமான கருப்பரையும் அவரின் 2 மாபெரும் குதிரைகளையும் என் கண்முன் கொண்டுவந்து இப்படி நிறுத்தி அசத்திவிடுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை.

    மெய்சிலிர்த்துப்போய் உள்ளேன். நீங்கள் நேரில் சென்று எழுதினீர்களா அல்லது தகவல்கள் திரட்டி எழுதினீர்களா என்று எனக்கு ஒன்றும் புரியாமல் பிரமிப்பாக உள்ளது.

    என் வேண்டுகோளின்படி என் குலதெய்வங்களான (1) குணசீலம் பெருமாள் (2) மாந்துறை (3) சமயபுரம் ஆகியவறில் (2) & (3) ஐ, நிறைவேற்றிக்கொடுத்து விட்டீர்கள்.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    இந்தத் தகவல்கள் எப்படி தயார் செய்தீர்கள் என்று மட்டும் எனக்கு மெயில் மூலம் தெரிவித்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

    [ஒருவேளை நேரில் அந்தக் கோயிலுக்கு வந்திருந்தீர்களானால் அதுபற்றிய தகவல் எனக்குக் கொடுக்காததற்கு நிச்சயம் உங்கள் மேல் மிகவும் கோபம் கொள்வேன்.]

    அன்புடன் vgk

    ReplyDelete
  5. தெளிவான பதிவு
    படங்களும் அருமை
    சாயாதேவியின் கதையை மிக
    அழகாக ச் சொல்லியுள்ளமைக்கு வாழ்த்து
    தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புதிய ஒரு தளத்தை பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ......அந்த மான்கள் அருமை

    ReplyDelete
  7. இந்தக் கோவிலைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.. அடுத்த முறை போய்வர வேண்டியது தான். நன்றி மேடம்

    ReplyDelete
  8. கருத்தில் எழுத்துப் பிழை வந்து விட்டது மன்னிக்கவும். புதிய ஒரு தலத்தைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ......அந்த மான்கள் அருமை

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நிசமா கலக்கலா இருக்கு

    ReplyDelete
  11. அருமையான ஆன்மீக பகிர்வு.. நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபல்ம். திருச்சியிலிருந்து நிறைய பேர் செல்வார்கள்.

    ReplyDelete
  13. நல்ல பதிவு மிக்க நன்றி

    ReplyDelete
  14. சகோதரி
    தேடிப் பிடித்த படங்களும்
    தெய்வ வரலா றுகளும்
    பாடித் துதித்த பக்தர்களும்
    பாடிய அவர்தம் பாக்களும்
    நாடி அனைவரும் கண்டிடவே
    நாளும் நீங்கள் விண்டிடவே
    கோடிப் புண்ணியம் பெறுவிரே
    குறையின்றி வாழ்ந்து வருவிரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சாகம்பரி said...
    //மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபல்ம். திருச்சியிலிருந்து நிறைய பேர் செல்வார்கள்.//

    ஆஹா, எங்கள் குலதெய்வ கிராமதேவதைக் கோயில் பற்றியும், அங்குள்ள கருப்பண்ண சாமி கோயிலில் ஒரு காலத்தில் ரொம்பப்பிரபலமாக இருந்த அருள்வாக்கு பற்றியும், உங்களுக்கும் தெரிந்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் தந்தை சொல்லி நானும் கேள்விப்பட்டுள்ளேன். அங்குள்ள பூசாரிக்கு அடிக்கடி அருள் வருமாம். அவ்வாறு அருள் வரும் போது உடுக்கு அடித்து மிக உயரமாகத் துள்ளிக் குதிப்பாராம். சொன்னால் சொன்ன படி நடக்குமாம். கடைசியாக 1966 இல் என் தந்தை ஒரு விஷயமாக போய் கேட்டு வந்தாராம். இரவு கனவில் வெள்ளைக்குதிரையை வந்து கட்டுவேன் என்று சொன்னாராம். அதே போல கனவில் வெள்ளைக்குதிரை அன்று வந்ததாம். இதையெல்லாம் அவர் 1966 இல் என்னிடம் சொல்லும்போது எனக்கு 16 வயது.
    11th Std. SSLC படித்து முடித்த நேரம். நான் இந்தச் சம்பவத்தையெல்லாம் கேட்டு அப்போதெல்லாம் மிகவும் பயப்படுவேன். இப்போது அதைப்பற்றி நினைத்தாலும் பயம் ஏற்படுவதுண்டு.

    இப்போதெல்லாம் அந்த சக்திவாய்ந்த பூசாரி அங்கு இல்லை. அவருடைய வாரிசு தான் பூசாரியாக இருக்கிறார். அவரை ’கிளி’ என்ற பெயரில் நாங்கள் அழைத்து வருகிறோம். இப்போதெல்லாம் உடுக்கடிக்கப்படுவதாகவும் தெரியவில்லை.

    அன்புடன் vgk

    ReplyDelete
  16. Presented very beautifully. Having grown up at Lalgudi, nearby town, your apt presentation of temple revives the memories. I happened to see this blog now only. Thank you for bringing glory of this temple to outside world in a wonderful way.
    N.Paramasivam

    ReplyDelete

  17. 830+3+1=834 ;))))))))))))))))))))))))

    ’குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன்.’

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  18. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/4.html

    ReplyDelete
  19. வலைச்சர அறிமுகம் பார்த்து இந்த பதிவுக்கு வந்தேன். எங்கேந்து தான் இவ்வளவு விபரங்களும் பொருத்த மான படங்களும் சேகரிக்கிரீங்களோ? பிரமிக்க வைக்குரீங்க.

    ReplyDelete
  20. அற்புதமான விஷயங்கள் நிறைந்த இந்த பதிவுக்கு நிறைந்த அன்பு நன்றிகள்பா.. இம்முறை இந்தியா வரும்போது கும்பகோணம் செல்லவேண்டும் என்று யோசித்திருக்கிறோம். அப்போது இந்த கோயிலையும் சென்று தரிசிக்க இயலுமா என்று பார்க்கிறேன்...

    ReplyDelete