Wednesday, August 31, 2011

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர்





முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்
 



விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் முக்கியமான கோயில் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் - 628 802.

அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.

வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் விநாயகர் பார்த்துக்கொள்வார்.
தலபெருமை:
ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் "கணேச பஞ்சரத்தினம்' பாடி, பின் திருச்செந்தூர் சென்று "சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

ஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். 

முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. 

பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. 

பிறகு கோயில் விரிவடைந்தது. 

திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. 

சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட என்ற தகவல் புதுமையானதாகவே உள்ளது. 

மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். 

ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். 

எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. 

அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர். 


கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான்.

ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளர்.

பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்ததன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். 

யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.

 



கணபதியின் கண் பாருங்கள்......

44 comments:

  1. அன்பு சகோதரி
    எங்க ஊர் பக்கம் உள்ள கோவிலை
    பதிவாக பார்த்ததும் மனதுக்கு ரொம்ப சந்தோசம்....
    இந்த கோவிலுக்கு நான் அடிக்கடி போயிருக்கேன்.
    கோவிலின் அமைதி மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

    அட...
    விநாயகர் கண்ணை சிமிட்டுகிறாரே கடைசிப் படத்தில்
    அருள் கிடைத்தது சகோதரி
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. //முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
    கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் //

    ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்தினத்தில் ஆரம்பித்துள்ள இந்தப்பதிவும் மிக அருமையாக உள்ளது.

    பக்தி விஷயத்தில் பஞ்சத்தில் உள்ள எங்கள் எல்லோரையும், பஞ்ச (ஐந்து) தினங்களாக, அருமையான பதிவுகளின் மூலம், அந்த முழுமுதற் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகும்படிச் செய்து வரும் தங்களின் ஆன்மீகப்பணி மிகவும் பாராட்டத்தக்கது.

    மனமார்ந்த நன்றிகள்.vgk

    ReplyDelete
  3. மகேந்திரன் said...//


    கருத்துரைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    ரத்தினமாய் ஒளிவீசும் தங்கள் அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வழக்கம் போல பதிவும் படங்களும் அருமைனு சொல்லுவதே வழக்கம் என்பதாலே படித்துவிட்டு சென்றுவிடுவேன்.ஆன்மீகப் பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  6. யார் பிள்ளை யார் பிள்ளை என்று சொன்ன போது பிள்ளையார் என்ற பெயர் வந்ததிங்கு

    ReplyDelete
  7. சகோதரி!
    எதிர் வரும் சதுர்த்திக்கு
    முன்னதாகவே வந்த தங்கள் சதுர்த்தி
    கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து.
    அதிலும் ஆலிலை விநாயகர்
    அருமை.
    கடந் மூன்று தினங்களாக
    கடுமையான முதுகு வலி எனவே
    கவிதையோ பிறர் வலைகண்டு
    எழுதவோ கால தாமதம்.
    மற்றும் வலைச்சரம் மூலம்
    என்னைப் பெருமைப் படுத்திய
    தங்களையோ, அருமை அன்பர்
    இரமணி அவர்களையோ, முனைவர்
    குணசீலன் அவர்களையோ யார்
    மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்
    நம்மை மறந்தாரை நாம் மறக்க
    மாட்டோமால்-இதை, கற்றவன்
    என்பது மட்டுமல்ல, கற்றுத் தந்தவனும் ஆவேன்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்ற கருத்தை சொன்ன பாங்கு அருமை .
    கடைசி படம் வினாயகர் என்னை அருகில் வா என்று அழைக்கிறார்.

    சென்றேன் ஆசி கிடைத்தது

    ReplyDelete
  9. அருமை அருமை
    கண்சிமிட்டும் பிள்ளையாரை
    பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையெல்லாம்
    கூப்பிட்டுக் காட்டினேன்
    எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்
    பிள்ளையாரும் கண்ணனும்தானே
    நமக்கு மகிழ்ச்சியாக காட்சி தருகிற
    தெய்வங்கள்
    சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. koodal bala said...
    அட்டகாசம் !/

    நன்றி.

    ReplyDelete
  11. thirumathi bs sridhar said...
    வழக்கம் போல பதிவும் படங்களும் அருமைனு சொல்லுவதே வழக்கம் என்பதாலே படித்துவிட்டு சென்றுவிடுவேன்.ஆன்மீகப் பதிவுகள் தொடரட்டும்.//

    தங்களின்
    ஒரே வார்த்தை
    ஓஹோவென்று
    உற்சாகம் தருமே!

    நன்றி. நன்றி.

    ReplyDelete
  12. கவி அழகன் said...
    யார் பிள்ளை யார் பிள்ளை என்று சொன்ன போது பிள்ளையார் என்ற பெயர் வந்ததிங்கு//

    அழகாய் கருத்துரை வழங்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  13. நம்மை மறந்தாரை நாம் மறக்க
    மாட்டோமால்-இதை, கற்றவன்
    என்பது மட்டுமல்ல, கற்றுத் தந்தவனும் ஆவேன்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்//

    கற்றுத்தந்த இனத்தோன்றலின் நன்றியறிதலுக்கு நிரைந்த நன்றிகள்.

    ஆரோக்கியத்தை பேணிக்கொள்ளுங்கள் ஐயா. வலையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
    சுவர் இருந்தால்தான் சித்திரம் என்று தங்களுக்கு நானா சொல்லவேண்டும்! அனைத்து அறிந்து கற்றுக் கொடுப்பவராயிற்றே!!
    ஒருபோதும் தவறாக எண்ணமாட்டோம்.

    ReplyDelete
  14. M.R said...
    பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்ற கருத்தை சொன்ன பாங்கு அருமை .
    கடைசி படம் வினாயகர் என்னை அருகில் வா என்று அழைக்கிறார்.

    சென்றேன் ஆசி கிடைத்தது//

    தங்களின் கருத்துரை ஆசியும் கிடைத்ததே. நன்றி.

    ReplyDelete
  15. Ramani said...
    அருமை அருமை
    கண்சிமிட்டும் பிள்ளையாரை
    பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையெல்லாம்
    கூப்பிட்டுக் காட்டினேன்
    எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்
    பிள்ளையாரும் கண்ணனும்தானே
    நமக்கு மகிழ்ச்சியாக காட்சி தருகிற
    தெய்வங்கள்
    சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த உற்சாகமான மகிழ்ச்சியான சதுர்த்தி தின வாழ்த்துக்கள் உரித்தாக்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நல்ல அருமையான பதிவு.. சகோ..
    படங்கள் அருமை..
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. நாளும் நல்ல படங்களுடன் விரிவான செய்திகளுடன் இடுககளைதரும் உங்களுக்கு உள பூர்வமான பரட்டுகளும் நன்றிகளும்

    ReplyDelete
  19. விநா...யகர் வா......ரம் கொண்டாடுகிறீர்கள். கண் சிமிட்டும் விநாயகர் உட்பட எல்லாப் படங்களும் டாப்.

    ReplyDelete
  20. கணேச பஞ்சரத்னம் பாடப்பட்ட தலமா.பக்தி மணம் கமழும் பதிவுக்கும் ,பரவசமூட்டும் படங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  21. சதூர்த்தி தின வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  23. ராஜா MVS said...
    நல்ல அருமையான பதிவு.. சகோ..
    படங்கள் அருமை..
    வாழ்த்துகள்..//

    வாழ்த்துகளுக்கும், கருத்துரைக்கும் நன்றிக்ள்

    ReplyDelete
  24. நாளும் நல்ல படங்களுடன் விரிவான செய்திகளுடன் இடுககளைதரும் உங்களுக்கு உள பூர்வமான பரட்டுகளும் நன்றிகளும்//

    பாரட்டுகளுக்கும், கருத்துரைக்கும் நன்றிக்ள்

    ReplyDelete
  25. ஸ்ரீராம். said...
    விநா...யகர் வா......ரம் கொண்டாடுகிறீர்கள். கண் சிமிட்டும் விநாயகர் உட்பட எல்லாப் படங்களும் டாப்.//

    விநா...யகர் வா......ரத்திற்கு வந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. சென்னை பித்தன் said...
    கணேச பஞ்சரத்னம் பாடப்பட்ட தலமா.பக்தி மணம் கமழும் பதிவுக்கும் ,பரவசமூட்டும் படங்களுக்கும் நன்றி!//

    பரவசமூட்டும் அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மாய உலகம் said...
    சதூர்த்தி தின வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//

    கருத்துரைக்கு நன்றி.

    சதூர்த்தி தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. ஒரே வார்த்தை - அருமை!

    ReplyDelete
  29. middleclassmadhavi has left a new comment on your post "ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர்":

    ஒரே வார்த்தை - அருமை! //

    நன்றி!

    ReplyDelete
  30. பழமையான கோயில் போல! பயன்கள் உள்பட நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  31. அரிய தகவல்கள் - இராஜ இராஜேஸ்வரி - எத்தனை படங்கள் - எவ்வளவு விளக்கங்க்ள் - அருமஒ அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. அருமை..... அறியாத கோவில்...

    ஒவ்வொரு பதிவிலும் வரும் படங்களும் அழகாய் இருக்கிறது....

    ReplyDelete
  33. அருமை...
    விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. அருமையான தகவல்கள் அழகிய படங்கள் .விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  35. படங்கள் கலக்கல் கடவுளை பற்றிய உங்கள் இடுகைகள் அருமை

    ReplyDelete
  36. படங்கள் அதனுடன் அருமையான கட்டுரை, போகும் தூரம் இல்லை என்றாலும் போக முடியாது என்ற சூழலில் கோவிலுக்கே போய் வந்தது போன்ற உணர்வு....

    கண் சிமிட்டு தகடு சேட் ஹல்வா கணபதி புனே தானே ?

    அழகு அழகு..

    அன்பு நன்றிகள் ராஜீ பகிர்வுக்கு...

    ReplyDelete
  37. நர்த்தன விநாயகர் படம் அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  38. ;)
    புத்திர் பலம் யசோ தைர்யம்
    நிர்ப்பயத்வ - மரோகதா

    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

    ReplyDelete
  39. நல்ல தகவல் . தொடருட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  40. 958+2+1=963 ;)

    பதிலுக்கு மிக்க நன்றி. [அதுவும் ரத்தினமாய் ஒளி வீசுது]

    ReplyDelete